மகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தை : தாய் மூலம் வெளிவந்த உண்மை!!

கர்நாடகாவில்..

மாற்றுசமுகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் மகளை கால்வாயில் தள்ளி ஆணவக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா.

இவரின் கல்லூரி படித்துவரு மகள் மாற்றுசமுக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் ஓம்காருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தனது மகளிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் தந்தையின் சொல்லை கேட்காமல் அவர் மகள் தொடர்ந்து அந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

இதன் காரணமாக மகள் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த ஓம்கார் தனது மகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி மகளை அழைத்துக்கொண்டு சினிமாவுக்குச் சென்றுள்ளார். பின்னர் சினிமா முடிந்த நிலையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு மகளுடன் சென்று மகள் அணிந்திருந்த தங்கநகைகளை கழட்டி தரக்கூறியுள்ளார்.

அதன்படி மகள் தந்ததும் கால்வாய்க்கு சென்று விட்டு அப்படியே வீட்டுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். தந்தையின் பேச்சை நம்பிய மகளும் கால்வாய்க்கு மகளோடு சென்றபோது மகளை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரின் மகள் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகள் இறந்தபின்னர் ஓம்கார் அங்கிருந்து தப்பி திருப்பதிக்கு சென்றுள்ளார். மகளும், கணவரும் வீடு திரும்பாத நிலையில்,ஓம்காரின் மனைவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு மாலையில் ஓம்கார் வீட்டுக்கு திரும்பிய நிலையில், இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது மகளை ஆணவக்கொலை செய்தது குறித்து உண்மையை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் ஓம்கரை கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ட கனவால் பெற்ற மகளை நரபலி கொடுத்த கொடூரத் தாய்.. மூடநம்பிக்கையால் நேர்ந்த பரிதாபம்!!

ராஜஸ்தானில்..

மகனுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை சரி செய்ய மகளை கொல்ல வேண்டும் என்றும் தனக்கு கனவு வந்ததால் பெற்ற தாயே மகளை கொன்றுள்ள சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை சரி செய்ய மகளை கொல்ல வேண்டும் என்றும் தனக்கு கனவு வந்ததால் பெற்ற தாயே மகளை கொன்றுள்ள சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, 12 வயது மகளை இவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதனை இவரது மகன் தெரிவிக்க, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேகாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரேகா, தனது மகனுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை போக்க வேண்டுமென்றால் தனது மகளை நரபலி கொடுக்க வேண்டும் என்று தனக்கு கனவு வந்ததாகவும், அதனால் தான் தனது மகளை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தொடர்ந்து ரேகாவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேகாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஏற்கனவே அவரது கணவரை கொல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது.

அதோடு சம்பவத்தன்று தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மகன் மற்றும் மகள் இருவரையும் கொல்ல முயற்சித்ததும், அதில் மகன் தப்பியோடி அக்கம்பக்கத்தினரிடம் சம்பவத்தை கூறியதும், இதனிடையே தான் அவர் மகளை கழுத்தை நெரித்து கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரேகா மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவருக்கு சில நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உதார்விட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல் வைத்திய பீட 3ம் ஆண்டு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

சச்சினி கலப்பத்தி..

வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில் சச்சினி கலப்பத்தி எனும் 23 வயதான மாணவி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மேலும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தற்போது குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த மூன்று மாணவிகளும் பல்கலைக்கழகத்திலிருந்து ஹில்டா ஒபேசேகரவிலுள்ள தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

பெங்களூருவில்…

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் மோஹின், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நாகவாலா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளான்.

அங்கு 14வது மாடியில் இருந்து குதித்தார். மாடியில் உள்ள சுவற்றில் சிக்கிக்கொண்டு மோஹின் தொங்கிக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவனை காப்பாற்ற குடியிருப்பில் வசித்துவருபவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றனர்.

அப்போது அவர்கள் மோஹினின் கையை பிடிக்க சென்ற நிலையில், உடனடியாக தனது கையை சுவற்றில் இருந்து விடுவித்து மோஹின் கீழே விழுந்தான். பிறகு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை குறித்து சம்பிஹேவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மாணவன் மொஹின் ஏன் சென்றான் ? எவ்வாறு சென்றான் ? ஆசிரியர் கண்டித்தது தான் முக்கியமான காரணமா ? போன்றவற்றை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து ஏமாற்றிய காதலன் : கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

கேரளாவில் வசித்து வரும் க்ரீஷ்மா என்ற இளம்பெண், தனது காதலன் ஷாரோன் ராஜுக்கு க.ஷாயத்தில் வி.ஷத்தை க.லந்துகொடுத்து தானும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட.து பெரும் ப.ரபரப்பையும், சோ.கத்தையும் ஏற்படுத்தியது.

இந்த ப.ரபரப்பு அடங்குவதற்குள், லவ்ஜிகாத் காரணமாக ஹிந்து பெ.ண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். சமீபகாலமாக கேரளாவில் மதமாற்றம் என்பது உச்சத்தில் இருந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

லவ்ஜிகாத் மூலம் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்களை க.ட.த்.தி ம.த மா.ற்றம் செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். ப.ய.ங்.க.ர.வா.தி.க.ளு.க்.கு அ.டி.மை.க.ளா.க வி.ற்று விடுவதாக ர.கசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 32,000 பெ.ண்கள் மா.ய.மா.கி இ.ருக்கலாம். இச்சம்பவங்களின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் லவ்ஜிகாத்தால் ஹிந்து மாணவி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டிருப்பது பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஷுகைப். நந்தாவும், அப்துல் ஷுகைப்பும் ஒரே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இருவருடைய நட்பு நாளடைவில் காதல் வலையில் வீ.ழ்ந்தது. இருவரும் நெ.ருக்கமாக இருந்த சமயங்களில் அப்துல் ஷுகைப் அவற்றை போட்டோக்கள் எடுத்து பத்திரப்படுத்தியிருந்தான்.

இவரை தொடர்ந்து மற்றொரு பெ.ண்ணையும் அப்துல் ஷூகைப் லவ்ஜிகாத்தில் வீ.ழ்த்திய பிறகு நந்தாவிடமிருந்து விலக முயற்சி செய்தான். நந்தாவோ, கா.தலை மு.றித்துக்கொள்ள விரும்பாததால் அப்துல் ஷுகைப்புக்கு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெ.ஞ்சி இருக்கிறார்.

கண்டுகொள்ளாமல் பிளாக் லிஸ்டில் போட்ட பிறகு உறவினர்கள், நண்பர்கள் எண் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் நந்தா. இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி வீடியோ காலில் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா.

அதற்கு, தன்னை விட்டு விலகாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருக்கும் பு.கை.ப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளான் அப்துல் ஷுகைப்.

இ.தனால், அ.திர்ச்சியடைந்த நந்தா, வீட்டின் மாடியிலுள்ள அ.றை.யி.ல் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து நந்தாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர். சாட்சியாக நந்தா கடைசியாக அப்துல் ஷுகைப்புடன் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அப்துல் ஷுகைப்பை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க காவல்துறையினர் கை.து செ.ய்தனர். தற்போது 15 நாள் நீதிமன்றக்காவலில் சி.றையில் அ.டைக்கப்பட்டிருக்கிறான்.

இந்த கு.ற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சி.றை த.ண்டனை கிடைக்கும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இது போன்ற த.ற்.கொ.லை.க.ள் அ.திகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து தமிழக பெண் படைத்த சாதனை!!

தமிழ்நாட்டில்..

ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

தானத்தில் சிறந்த தானம், ‘அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு தானம் என்பதையும் கடந்து தற்போது ‘தாய்ப்பால் தானம்’ என்று உருமாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலமுடன் வாழ வழிவகை செய்ய முடிகிறது.

எனவே பெண்கள் தங்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பிற குழந்தைகளும் நலம் பெற வேண்டும் என்று எண்ணி அதனை சிலர் தானமாக செய்து வருகின்றனர். மேலும் இதற்காக தாய்ப்பால் தானம் குழுக்களும் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் தாய்ப்பால் தானம் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை தானமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அளித்து வருகிறார். கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா.

பொறியியல் பட்டதாரியான இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்த குழந்தை முதலில் ஃபார்முலா மில்க்தான் உட்கொண்டது. எனவே குழந்தைக்கு சிந்து பம்ப் மூலம் பால் கொடுத்துள்ளார்.

இதையடுத்தே இவருக்கு தான், தாய்ப்பால் தானம் செய்யலாம் என்ற சிந்தனை உதிர்த்துள்ளது. அதனை தனது கணவரிடம் கூற, அவருடன் சிந்துவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். சிந்துவுக்கு குழந்தை பிறந்து தற்போது 19 மாதங்கள் ஆகிறது.

இவர் குழந்தை பிறந்த 100-வது நாள் முதல் தனது தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார். அதன்படி ‘அமிர்தம் தாய்ப்பால் குழு’ என்பது மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். தொடர்ந்து தனது குழந்தைக்கு போக தாய்ப்பாலை தானமாக அளித்து வரும் இவருக்கு அவரது குடும்பமே ஆதரவு அளித்துள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், தங்கள் குழந்தைக்கு சில நேரங்களில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அப்போது இது போன்ற தாய்ப்பாலை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தி வந்துள்ளது. இவரது இந்த பெரும் சாதனையால் தற்போது வரை அவர் ஒரு ஆண்டில் மட்டுமே சுமார் 55,000 மி.லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.

மேலும் இதன்மூல 1,500 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இவரது இந்த செயலை சாதனையை அங்கீகரிக்கும் விதமாக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவரை கெளரவித்துள்ளது.

இவரது சாதனையை குறித்து சிந்து பேசுகையில், “பலரும் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்தாலும், அதற்கான பை கூட வாங்க முடியாத சூழலில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு தாய்ப்பால் தானம் செய்வதற்கான பேக் வாங்கித் தரலாம் என்றும் எண்ணியுள்ளேன்.

தாய்ப்பாலின் அருமை அது கிடைக்கப்பெறுபவர்களைவிட, கிடைக்கப்பெறாத குழந்தைகளின் அம்மாக்களுக்குத்தான் தெரியும். தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறப்புகூட நடக்கிறது. தாய்ப்பால் தானம் மூலம் அவற்றைத் தடுக்க முடியும். இரண்டாவது குழந்தை பிறந்தாலும், என்னால் முடிந்தவரை தாய்ப்பால் தானம் செய்வேன்” என்றார்.

காதல் திருமணம் முடிந்து 10வது நாள் தாய் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்த நிவேதா என்ற இளம்பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வினித் மற்றும் நிவேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் உருவான நிலையில் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலும் மலர்ந்துள்ளது.

வினித் – நிவேதா காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர் வினித் மற்றும் நிவேதா ஜோடி.

அதன்படி வினித் மற்றும் நிவேதா ஆகியோர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணமும் செய்து கொண்டுள்ளனர். காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், வினித் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் மறுவீடு அழைப்பிற்காக வாணியம்பாடியில் உள்ள காமராஜ்புரம் பகுதியில் இருக்கும் நிவேதாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது தான் யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனியாக இருந்து நிவேதா, விபரீத முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இளம்பெண் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமான 10 தினங்களிலேயே காதல் திருமணம் செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையிலும் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்.. வசமாக சிக்கியது எப்படி?

செங்கல்பட்டில்..

சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தத போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசுக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக ரஞ்சித்குமார் இறுதி சடங்குகளை செய்ய முயற்சித்துள்ளார்.

செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுதாமதி (25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் மற்றும் 2 வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தத போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசுக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக ரஞ்சித்குமார் இறுதி சடங்குகளை செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால், இதற்கு சுதாமதியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சுதாமதியின் அண்ணன் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதாமதி தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். ரஞ்சித் குமார் வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது, சுதாமதி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

இதனால், சந்தேகம் அடைந்த தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சுதாமதியின் தலையில் பலமாக தாக்கியதில் படுகாயமடைந்து மயங்கினார். இதனையடுத்து, அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கியதில் சுதாமதி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள்… பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் : நடந்த விபரீதம்!!

விருதுநகரில்..

விருதுநகர் அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார்.

கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் சந்திரமணி அருகில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பும், சித்தார்த் நான்காம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் சகோதரர்கள் இருவரும் அருகிலுள்ள பாப்பாவி குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பள்ளி முடிந்தும் நீண்ட நேரம் ஆகியும் பிள்ளைகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது குளத்தில் சித்தார்த் சடலமாக மிதப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும், போலிஸாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரது உடலும் சடலமாக மீட்கப்பட்டது. தங்கள் குழந்தைகள் இறந்த உடலைப்பார்த்துப் பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கடித்தது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் : கோப்பைகளை பார்த்து கதறி அழுத காதலி!!

கேரளா..

காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மா தான் படிக்கும் காலத்தில் வென்ற கோப்பைகள், பரிசுகளை பார்த்து கதறி அழுதுள்ளார்.

காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மா தான் படிக்கும் காலத்தில் வென்ற கோப்பைகள், பரிசுகளை பார்த்து கதறி அழுதுள்ளார்.

தமிழ்நாடு – கேரள எல்லையில் பாறசாலை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு அவரை காதலித்து வந்த பெண்தான் காரணம் என கூறி ஷாரோன் ராஜின் பெற்றோர்கள் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போலிஸார் காதலி களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

கிரீஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், ‘பெண்ணின் முதல் கணவன் உயிரிழந்து விடுவார். இரண்டாவது கணவருடன் மட்டும் தான் அவரால் வாழ முடியும்’ என கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவும் அவரது குடும்பத்தினரும் நம்பியுள்ளனர்.

மேலும் கிரிஷ்மா இளைஞர் ஒருவரை காதலித்து வருவதை அறிந்த பெற்றோர், ஜோதிடர் கூறியதை அடுத்த தனது காதலனை கொல்ல குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று ஷாரோன் ராஜை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாமனார் வீட்டில் கஷாயம் ஒன்று கொடுக்கப்பட்டது.

பின்னர் அது விஷம் என அறியாமல் குடித்த இளைஞர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேலும் அவரிடம் விசாரிக்கையில் காவல்துறையிடம் சிக்காமல் எப்படி கொலை செய்வது என்று கூகுளில் தேடி பார்த்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது இந்த வழக்குதொடர்பாக கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று எப்படி கொலை செய்தார் என்பதை செய்துகாட்டும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது கிரீஷ்மா மீது யாரேனும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அவரது வீட்டிற்கு சென்றபோது, தான் படிக்கும்போது விளையாட்டு, படிப்பு என்று பலவற்றிலும் வென்ற ட்ராபிகளை கையிலெடுத்து பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் ‘தப்பு செய்து விட்டேனே..” என்றும் கதறியுள்ளார்.

மேலும் தான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று கூறி அழுது புரண்டுள்ளார். பின்னர் தான் தனது காதலனுக்கு விஷம் கொடுத்தது எப்படி என்பது போன்று நடித்தும் காட்டினார். இதையடுத்து அவரை காவல்துறையினர் மீண்டும் சிறைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

கனடா செல்லும் ஆசையில் நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள் : அடையாளம் காணும் பணிகள் ஆரம்பம்!!

நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள்..

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதன்போது கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளனர். மேலும் படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் இவ்வாறு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

யாழில் சிறுமி குளிப்பதை வீடியோ பதிவு செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில்..

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞரொருவர் அப் பகுதி மக்களால் ம.டக்கி பி.டித்து பொலிஸாரிடம் ஒ.ப்படைக்கப்பட்டுள்ளார்.

சி.றுமி ஒருவர் குளிப்பதனை இளைஞரொருவர் தனது தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். இதனை அவதானித்த சி.றுமி உடனடியாக கூ.க்குரலிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞர் அயலவர்களால் ம.டக்கி பி.டிக்கப்பட்டு நை.யப்புடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சந்தேக நபர் கோப்பாய் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிராமத்தில் ஆடு மாடு மேய்த்தவர் இப்போது ஜேர்மனியில் விஞ்ஞானி : தன்னம்பிக்கையூட்டும் கதை!!

ஜேர்மனியில்..

ஜேர்மனியில் குடியேறும் வாய்ப்பிருந்தும், அனைத்து வசதிகளையும் சம்பாதித்த பிறகும் அந்த இளைஞர் இப்போது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஜேர்மனியில் இருந்து இந்தியா திரும்பிய அவர் தற்போது 170 கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறார்.

‘கனவை அமைத்தால், அதை அடைய வழி கிடைக்கும்’ என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜேர்மனியில் ரசாயன விஞ்ஞானியாகி, இந்தியாவில் தனது கிராமத்தை பெருமைப்படுத்திய சேஷாதேவ் கிசான் ஒடிசா இளைஞருக்கு இந்த வார்த்தை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கிராமத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதில் தொடங்கி ஜேர்மனியின் கோட்டிங்கனில் உள்ள புகழ்பெற்ற ஜார்ஜ்-ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பதவி பெறுவது வரை, அவரது பயணம் உண்மையில் ஊக்கமளிக்கிறது.

ஆனால் அவரது கதையில் இன்னும் ஊக்கமளிக்கும் விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் குடியேறும் வாய்ப்பிலிருந்து வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் சம்பாதித்தாலும், அந்நாட்டிலேயே தனது காதல் தேடுவது வரை சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சேஷா இப்போது இந்தியாவில் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

ஒரு காலத்தில் சோறு கிடைக்காமல் கஷ்டப்பட்ட இவர், தற்போது தான் பிறந்த ஊரான சம்பல்பூரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை வைத்துள்ளார். சேஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

OTV உடனான ஒரு நேர்காணனில் பேசிய சேஷா தனது எதிர்கால திட்டங்களைப் பற்றி கூறினார். சம்பல்பூரின் நதிதேயுலா கிராமத்தைச் சேர்ந்த சேஷா, ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார், மேலும் அவரது 18-வது வயதில் தந்தையும் இறந்துவிட்டார்.

பெற்றோரை இழந்த பிறகும் பெரிய கனவுகளுடன் இருந்த அவர் தனது படிப்பை கைவிடவில்லை. கால்நடைகளை மேய்ப்பதைத் தவிர, விடுமுறையில் கூலி வேலை செய்யத் தொடங்கினார், அதன்மூலம் அவர் தனது குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு அவரது கல்விச் செலவுகளையும் பார்த்துக்கொண்டார்.

ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NISER) தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஜார்ஜ்-ஆகஸ்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் சயின்ஸில் (GAUSS) பேராசிரியர் ஸ்வென் ஷ்னீடரின் கீழ் ஆராய்ச்சி செய்தார்.

2018-ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு செல்வதற்கு முன் முதல்வர் நவீன் பட்நாயக்கால் பாராட்டப்பட்ட சேஷாதேவ், தனக்கு இப்போது வாழ்க்கையின் எல்லா வசதிகளும் இருந்தாலும், அவற்றை அனுபவிக்கத் தனக்குப் பக்கத்தில் பெற்றோர் இல்லை என்று வருந்துகிறார்.

ஜேர்மனியில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து, “நான் 170 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். என்னைத் தவிர, சில ஆசிரியர்களும் அவர்களுக்குக் கற்பிக்க நியமித்துள்ளேன்.

நான் அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்கையும் போதுமான அளவு கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் படிக்க எனது பழைய வீட்டை அவர்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிக்குச் செல்வதற்கு முன்பு, நான் மீடியாக்களிடம் திரும்பி வருவேன் என்றும் எனது தாய்நாடான ஒடிசாவுக்கு முக்கியமான ஒன்றைச் செய்ய விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தேன். நான் என் வார்த்தைகளைக் காப்பாற்றினேன். என்னிடம் நீண்ட திட்டங்கள் உள்ளன. சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன். அது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும்” என்றார்.

சூடு வைத்து கொடுமை… குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி!!

திருப்பூரில்..

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் – கெளரி தம்பதியினர். கூலி தொழில் செய்து வரும் இவர்களுக்கு ஷிவானி என்று 4 வயது குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கே இருக்கும் அந்த குறும்பு நிறைந்த சிறுமியாக இருக்கும் ஷிவானி, தனது உறவினர்கள் அனைவரிடமும் ஜாலியாக இருந்து வருவார்.

மல்லிகா என்ற பெண்ணின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இவர்கள், அடிக்கடி வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் மல்லிகாவின் உறவினரான வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார் – கீர்த்திகா தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவை காண வீட்டிற்கு வருவர். அப்படி வருகையில் கீர்த்திகாவுக்கு, வாடகை வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் குழந்தை ஷிவானியை மிகவும் பிடித்துள்ளது.

குழந்தை இல்லாத கீர்த்திகா, ஷிவானியை காண, அவருடன் விளையாடவே அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி கடந்த 20-ம் தேதி மல்லிகா வீட்டிற்கு வந்த கீர்த்திகா, ஷிவானியை தனது ஊருக்கு எங்களுடன் அனுப்பி வைக்குமாறு பிரகாஷ் – கெளரியிடம் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய அவர்கள், பத்திரமாக பார்த்துக்கொள்வதாக அளித்த வாக்குறுதியால் நம்பிக்கை வைத்து கீர்த்திகாவுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

சிறிது நாள் தங்குவதற்காக தங்கள் மகளை கீர்த்திகாவுடன் அனுப்பிய பிரகாஷ், மகளின் பிரிவால் வருத்தமுற்று இருந்துள்ளனர்.. இருப்பினும் தங்கள் மகள் அங்கே மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணியிருந்த இவர்களுக்கு கடந்த 2-ம் தேதி கீர்த்திகா போன் மூலம் தொடர்பு கொண்டு, ஷிவானி வழுக்கி வீழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு விரைந்து சென்றனர். அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்கள், தடம் உள்ளிட்டவற்றை கண்டுள்ளனர். இதையடுத்து சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்து, குடும்பத்தாரிடம் கூறினர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பிரகாஷ் – கெளரி தம்பதியினர் காவல்துறையில் ராஜேஷ்குமார் – கீர்த்திகா மீது புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிறுமி தங்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அதிக சேட்டை செய்ததாகவும், முதலில் அமைதியாக கூறினாலும் கூட கேட்காமல் சேட்டை செய்துகொண்டிருந்ததால் அடித்ததும் தெரியவந்தது. மேலும் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் சிறுமிக்கு சூடு வைத்ததும் தெரியவந்தது.

அதோடு சம்பவத்தன்று, சிறுமி வீட்டிற்குள் உபாதை கழித்ததால் ஆத்திரமடைந்த கீர்த்திகா, ஷிவானியை பிடித்து தள்ளியுள்ளார். இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார் சிறுமி. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கீர்த்திகா – ராஜேஷ்குமார் மீது சிறுமியை அடித்து துன்புறுத்தி கொன்றதாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை தாய்க்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்த அவலம்!!

யாழில்..

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார். பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட்ஸப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார். இருப்பினும், அந்த பெண் இறந்துவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கிறாரா, அவர்கள் இருக்கும் இடம் எங்கு என்ற எந்த விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல் : ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியை!!

ராஜஸ்தானில்..

 ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது மாணவி கல்பனாவை அவதானித்த மீராவிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதாம். மேலும் மாணவியை திருமணம் செய்வதற்காக குறித்த ஆசிரியை பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார்.

மேலும் தனது பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றியதோடு, குறித்த மாணவியையும் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி கூறுகையில் ஆரம்பத்தில் இருந்தே அவரை விரும்பியதாகவும்,

பாலின அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தாலும் அவரை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துடன், அவரது அறுவை சிகிச்சையின் போது குறித்த மாணவி அவருடன் இருந்துள்ளாராம்.

இதில் மற்றொரு ஹைலைட் என்னவெனில், இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் தரப்பும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளது தான்.