கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் சிக்கிய மர்மம்!!

கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் இருந்து பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டதாாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை புத்தல பொலிஸார் புத்தல நகரில் சோதனையிட்டனர்.

119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ​​ஒரு சிறுவனின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தில் இருந்த சிறுவனின் தந்தையும், கஞ்சாவின் உரிமையாளருமான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பலஹருவா, குடா ஓயா பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராகும். சந்தேக நபருடன் வழக்குப் பொருட்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன.

புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.ஜே. பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

2026இல் உலகை அதிரவைக்க போகும் கணிப்பு : பாபா வாங்கா போல் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம்!!

மறைந்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகளுக்குப் பிறகு, அனைவரும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் படி வரப்போகிற ஆண்டில் என்னென்ன நடக்கபோகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் உலகப்புகழ் பெற்றவர் என்றால் நோஸ்ட்ராடாமஸ்தான்.

புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பு தற்போது வைரலாகி வருவதால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வரப்போகிற ஆண்டு என்னென்ன நிகழ்வுகளைக் கொண்டுவரப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.

தேனீக்களின் பெரும் கூட்டம்

நோஸ்ட்ராடாமஸின் கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பின் படி “தேனீக்களின் பெரும் கூட்டம் எழும். இரவில் பதுங்கியிருந்து.” இது முற்றிலும் திகிலூட்டும் கணிப்பாகும், ஆனால் நிபுணர்கள் இதன் அர்த்தம் தேனீக்களின் கூட்டம் நம்மைத் தாக்கப் போகிறது என்று கூறவில்லை.

பண்டைய எகிப்திலும் நெப்போலியனின் ஏகாதிபத்திய சின்னத்திலும் காணப்படுவது போல், தேனீக்கள் சில நேரங்களில் ஒரு அரசியல் சின்னமாகவும், முடியாட்சி மற்றும் அரசாட்சியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே உலகளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம்.

செவ்வாய் வானத்தை ஆளும் மற்றும் கிழக்கிலிருந்து மூன்று நெருப்புகள் எழும்

செவ்வாய் போர், மோதல் மற்றும் நெருப்பின் கிரகம் என்று கூறப்படுகிறது, எனவே இது ‘மனித இரத்தம்’ என்று குறிப்பிடப்படுவதைப் போல மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக அடிவானத்தில் இருக்கக்கூடும் என்ற பிற கணிப்புகளுடன் இணைக்கிறது.

இதற்கிடையில், ‘கிழக்கு பக்கங்களிலிருந்து மூன்று நெருப்புகள் எழுகின்றன’ என்பது கிழக்கிலிருந்து வரும் புதிய சக்திகளான சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்றவை வளர்ச்சி அடையும்.

மேலும் ‘மேற்கு அதன் ஒளியை இழப்பது’ என்பது மேற்கத்திய உலகின் வெளிப்படையான வீழ்ச்சியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

ஏழு மாதங்கள், பெரும் போர்

2026 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய மற்றொரு குவாட்ரெய்ன்: “ஏழு மாதங்கள் பெரும் போர், தீமையால் இறந்த மக்கள் / ரூவன், எவ்ரூக்ஸ் மன்னர் தோல்வியடைய மாட்டார்.”

சில நிபுணர்கள் இதை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் இதை மூன்றாம் உலகப் போருடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.

டிசினோவுக்கான எச்சரிக்கை

டிசினோ சுவிட்சர்லாந்தின் தெற்கே உள்ள மண்டலமாகும், இதில் காடுகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த பெரிய பகுதி உள்ளது.

இந்த கணிப்பில் இந்த மண்டலத்தைப் பற்றி ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை, ஆனால் இது மிகவும் ஆபத்தான கணிப்பாகும்.

 

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை வெட்டுப்புள்ளிகள்!!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்ப்பதற்கான பள்ளி வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk பார்க்க முடியும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே, தரம் 06 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோர விபத்தில் பெண் உயிரிழப்பு : நால்வர் மருத்துவமனையில்!!

இன்று (21) காலை ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ். பருத்தித்துறையில் உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன், துவிச்சக்கர வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

தற்போது குறித்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொல்லை தாங்க முடியவில்லை : கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு விபரீத முடிவு!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்–மலர் தம்பதியினரின் மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

பள்ளி நாட்களிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்ற இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் திருமணம் பேசத் தொடங்கிய நிலையில், வினிஷ்கா காதலை கைவிட்டதாகவும் தெரிகிறது

இதன் பின்னர் விரக்தியடைந்த மாதேஷ், அடிக்கடி வினிஷ்காவின் வீட்டருகே வந்து தொல்லை கொடுத்து ‘லவ் டார்ச்சர்’ செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினிஷ்கா,

15ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட் உண்டதால் உணர்விழந்தார். உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இன்று உயிரிழந்தார்.

இளம்பெண் மரணத்திற்கு காரணமான மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய உறவினர்கள், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கலைக்கப்பட்டது.

நடிகை அதிதி முகர்ஜி விபத்தில் உயிரிழப்பு!!

பிரபல மராத்தி மற்றும் இந்தி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை அதிதி முகர்ஜி, விபத்தில் உயிரிழந்தார்.

மேடை நாடகங்களில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை அதிதி முகர்ஜி, குறுகிய காலத்தில் தனது திறமையால் நாடகத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமானார்.

தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், இயல்பான நடிப்பாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தார்.

திறமையுடனும் நாடக மேடை அனுபவங்களில் இருந்து திரைத்துறைக்கு வந்திருந்த அதிதி, தியேட்டர் நிறுவனத்தின் சிறந்த மாணவியாகவும் இருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் நொய்டா–கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இவர்களது கார் விபத்திற்குள்ளானது.

உடனடியாக அதிதி முகர்ஜியை மீட்டு, சாரதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கிரேட்டர் நொய்டாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்தம் பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் போராடியும் நடிகை அதிதி முகர்ஜி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

நாடக இயக்குநர் அரவிந்த் கவுர் நடிகை அதிதி முகர்ஜியின் இறப்பை துக்கத்துடன் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிதி ஒரு மிகுந்த திறமையுடனும், உற்சாகமுடனும் நடிக்கக்கூடிய நடிகை.

அவர் விரைவில் புகழ் வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பினோம்; ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அகன்றுள்ளார்” என்று பதிவேற்றியுள்ளார்.

 

சாரி மம்மி அவங்கள சும்மா விடாதீங்க.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 16 வயது மாணவர், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலான சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு பள்ளிக்குச் சென்ற மாணவர், அதே காலை 2-வது பிளாட்ஃபார்மில் இருந்து குதித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதியம் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தகவல் வழங்கியதும் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மரணத்திற்கு முன், தனது புத்தகப்பையில் மாணவர் ஒரு தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்தார். “சாரி மம்மி.. நான் பலமுறை உங்கள் இதயத்தை உடைத்துவிட்டேன்; இறுதியாக இதை செய்வதற்கு என்னை மன்னிக்கவும்.

என்னைப்போல் வேறு எந்த மாணவனும் இப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே என் கடைசி ஆசை.

என் உடல் பாகங்கள் ஏதாவது பயனுள்ளதாக இருந்தால், அவற்றைத் தேவையுடையோருக்கு தானம் செய்யுங்கள்” என்று அவர் எழுதியிருந்தது.

இந்த மாணவர் மீது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களும், முதல்வரும் நீண்டகாலமாக உளவியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

நாடகப் பயிற்சியின்போது “ஓவரா நடிக்கிற” என்று இழிவுபடுத்தியதாகவும், அப்போது முதல்வர் இருந்தும் தடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேர்வுகள் நெருங்கி வருவதால், எழுதிவிட்டுப் பிறகு வேறு பள்ளியில் மாற்றிவிடுவோம் என்று பெற்றோர் சமாதானப்படுத்தியிருந்தும்,

அண்மையில் ஒரு ஆசிரியர் “பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவேன், இடமாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவேன்” என்று மிரட்டியதால் மாணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது.

பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் மாணவனின் தந்தை புகார் அளித்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!!

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதுநடவடிக்கை நேற்று (19.11.2025) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்ப்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டநிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சபையில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிய இளங்குமரன் மற்றும் அர்ச்சுனா : நாடாளுமன்றில் சலசலப்பு!!

நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் கமராக்கு பின்னால் தமிழர்களை கொன்றவர்களிடம் கைகோர்த்து பழகுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த நபர் பரீட்சையில் எழுத தெரியாமலேயே சித்தியடைந்து விட்டு நாடாளுமன்ற கமராக்கு முன்னாள் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழரின் கலாசாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கூட நிறுவ முடியாதவரே அவர் எனக் கூறியுள்ளார்.

முகநூலில் ஒழுங்காக தமிழில் கூட எழுத முடியாதவர் தான், நான் சிங்களத்தில் கதைக்கும் போது விட்ட பிழையை பெரிதாகக் கூறினார் என தெரிவித்தார்.

அத்துடன், யாரை திருமணம் செய்துள்ளேன் என கூற முடியாத ஒருவர் எப்படி தமிழ் கலாசாரத்தை மேலோங்க செய்வார் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, இன்று மின்சாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இளங்குமரன் எம்.பி சம்பந்தமில்லாமல் பேசியதை யாரும் நிறுத்தவில்லை எனக் கூறினார்.

அத்துடன், தான் தமிழன், எனக்கு இனவாதம் இல்லை எனவும் தான் சிங்கள மக்களை காதலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, அர்ச்சுனா எம்.பியின் ஒலிவாங்கி நிறுத்தப்பட, நாடாளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து நடத்துனர் தவறி விழுந்து பரிதாபமாக மரணம்!!

திருகோணமலை- தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாலம்போட்டாறு கண்டி திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பேருந்தில் ஓடி சென்று ஏறிய போது தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது தலை அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

இவ்வாறு உயிரிழந்த பேருந்து நடத்துனர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார வயது (41) குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் தாய் : இலங்கையில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட தந்தை!!

மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத் நிஷாந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளவி தாக்குதலில் இருந்து தனது மகனை பாதுகாக்க தந்தை தனது சட்டையைக் கழற்றி தனது மகனை சுற்றிக் கட்டியுள்ளார்.

ஏராளமான குளவி கொட்டுதல்களால் காயமடைந்த தந்தையை உள்ளூர்வாசிகள் மிஹிந்தலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 11 வயது மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில், மகனும் உயிரிழந்த தந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து திரும்பிய யாழ் இளைஞனுக்கு நள்ளிரவில் நடந்தது என்ன?

பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் நள்ளிவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்து இளைஞனை பதிவு திருமணம் செய்து சென்ற நிலையில், இளைஞன் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து இளைஞன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் புதன்கிழமை வீட்டிற்கு சற்று தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் இளைஞன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞனின் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் நள்ளிரவில் அரங்கேறிய இச்சம்பவம் யாழ்ப்பாணம் அம்மகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப் எண்களை பயன்படுத்தி பெரும் மோசடி : சிக்கிய தம்பதியினர்!!

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் நண்பர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தி, ரூ.300,000க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமான தம்பதியினரே நேற்று (19) குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் மற்றவர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி நைஜீரிய நாட்டவருக்கு விற்றதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டவர் மீது முன்னர் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.

நைஜீரிய நாட்டவரைக் கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட கொழும்பு தலைமை நீதிபதி, சந்தேகநபரை தலா ரூ.500,000 பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது. நேற்று (19) நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

ஜீவனின் பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகளின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்கு திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை மணமகள் ரா. சீதைஸ்ரீ நாச்சியாரும், ஜீவன் தொண்டமானும் ஒரே வைத்தியசாலையில் 07 வருட இடைவெளியில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது.

வட மாகாணத்தில் உச்சம் தொடும் இணையவழி குற்றங்கள்!!

வடக்கு மாகாணத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதன்படி வடக்கு மாகாணத்தில் பதிவான சைபர் குற்றங்களில் 2020: 24 குற்றங்களும், 2021: 577 குற்றங்களும், 2022: 654 குற்றங்களும், 2023: 472 குற்றங்களும், 2024: 1,539 குற்றங்களும், மேலும், 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.