“ஒழுங்கா படிக்க மாட்டியா”.. தலைக்கு ஏறிய கோபம்.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்!!

ஒடிசா..

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகனான பிஸ்வமோகன் எம்பிஏ படித்து முடித்துவிட்டு, வங்கித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார். இளைய மகனான ராஜ்மோகன், மேற்படிப்பு படிப்பதற்காக புவனேஸ்வரில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா

இதனிடையே, ராஜ்மோகன் வீட்டைவிட்டு சென்று நண்பர்களுடன் தங்கியதில் இருந்து, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் அவர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனது தந்தைக்கு அடிக்கடி ஃபோன் செய்து தனக்கு பணம் அனுப்பிவிடுமாறும் கூறி ராஜ்மோகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்படி தராவிட்டால், வீட்டுக்கே சென்று தந்தையின் ஏடிஎம் கார்டை கொண்டு சென்று விடுவாராம்.

இதனால் தனது மூத்த மகன் பிஸ்வமோகனிடம், ராஜ்மோகனின் செயல்களை கூறி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் தந்தை விஜய் போத்ரா. இதையடுத்து, தனது தம்பி ராஜ்மோகனை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோனில் தொடர்புகொண்ட பிஸ்வமோகன், “ஏன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறாய்” என அவர் கேட்டுள்ளார். மேலும், “இனி அப்பாவை தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு” என அவர் கூறியிருக்கிறார்.

ஆனாலும், தனது சேஷ்டைகளை ராஜ்மோகன் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து, தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டும், கல்லூரிக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டும் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிஸ்வமோகன், நேற்று மதியம் தனது தம்பி ராஜ்மோகனுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று இரவு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஏன் இப்படி போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாய் என ராஜ்மோகனிடம் அண்ணன் பிஸ்வமோகன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில், வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து தம்பி ராஜ்மோகனை பிஸ்வமோகன் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, பிஸ்வமோகனை கைது செய்தனர்.

குழந்தையை தத்துக்கொடுக்க மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் குடும்பத்தோடு கணவர் செய்த கொடூரம்!!

மும்பையில்..

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை அருகிலுள்ள கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் இல்லாததால் முக்கிய ரயில் நிலையங்கங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை வைத்தனர். எனினும் ஒரு வருடம் கடந்த பின்னரும் இந்த விவகாரத்தில் போலிஸாருக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சானியா என்ற பெண்ணைக் காணவில்லை என்று கூறி அவர் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு முன்னர் கிடைத்த சடலத்தின் புகைப்படத்தை வைத்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பியபோது அந்த பெண் அவரை போல இருப்பதாக கூறியுள்ளனர்.

அதன் பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், சானியாவின் கணவர் ஆசிப் தாங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும். சானியா யாருடனோ ஓடிப்போய்விட்டதாகவும், ஓராண்டாகக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னர் அந்த சடலத்தின் DNA-வோடு சானியாவின் மகள் DNA-வை வைத்து சோதனை நடத்தியதில் அந்த சடலம் சானியாவுடையது என்பது தெரியவந்தது. இதனால் போலிஸாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளது.

விசாரணையில், கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தங்கள் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சானியா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் சானியாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கை கால்களை கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் சானியாவின் கழுத்தை அவரது மாமனார் அறுத்து போலிஸ் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக தலையில் இருந்த முடியை அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி மைத்துனர் உதவியுடன் ஆசிப் மனைவியின் உடலை சூட்கேஸில் அடைந்து கடற்கரையில் வீசி தலையை கடலில் வீசியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவையில்..

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் துடியலூர் போலீசார் 174 சந்தேக மரண வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எட்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 கேமராக்களை ஆய்வு செய்து 150 தொழிற் கூடங்களிலும், 15 மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொண்டனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பிரபு என்பவர் கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை எனவும் இது தொடர்பாக 18ஆம் தேதி கோவை மாநகர காவல் துறையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. பிரபுவின் வீட்டுக்கு சென்று ஆய்வு எடுக்கப்பட்ட 7 கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலூரில் கிடைத்த கையின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

தொடர்ந்து பிரபு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்ததாகவும் அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் அமுல், திவாகர், கார்த்திக், ஆகியோர் பிரபுவை காந்திமா நகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது; 8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

சினிமா பாணியை விட தலையை கண்டுபிடிக்கும் முன்பே கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டோம். காணாமல் போனவர்களின் தகவல்களை எடுத்து கைரேகைகளை சேகரித்து இறந்தவர் விவரங்களை தேடினோம்.

காட்டூர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் புகாரில் வந்த பிரபுவின் விவரம் மற்றும் அவரின் கைரேகையை அவரது வீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்ததை சேகரித்து மர்மமாக கிடைத்த கையை வைத்து இறந்தவர் பிரபு என்பதை உறுதிப்படுத்தினோம். பிரபு வீட்டிற்கு இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்றனர். அதன் சிசிடிவி இருந்தது.

அதை வைத்து விசாரணையை தீவிர படுத்தினோம்.அதேபோல பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளிகளை தேடினோம். அப்போது, கவிதா, திவாகர் ஆகியோரது செல்போன் ஒரே நேரத்தில் காந்திமாநகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது. அதை தொடர்ந்து அவர் மீது எழுந்த சந்தேகத்தில் கைது செய்தோம்.

இறந்தவரின் 8 உறுப்புகளை கண்டெடுத்துள்ளோம். காவல்துறை சோதனை பகுதியை பார்த்து குற்றவாளிகள் கையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆகவே சோதனை என்பது காவல்துறைக்கு முக்கியமானதாக உள்ளது.

கவிதாக்கு பிரபுவுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. காந்திமாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை நடைபெற்றுள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பிரபு மிரட்டியதால் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

ஒரு வாரமாக திட்டம் தீட்டி கொலை நடைபெற்றது. தலை திருப்பூர் அருகே உள்ள கிணற்றில் இருந்தது. கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம். இந்த சம்பவத்தில் மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைதான கவிதா, அமுல் திவாகர் , கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

குளிப்பதற்கு சுடுதண்ணீர் வைத்த தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம்!!

கோவையில்..

கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மகள் அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல அர்ச்சனா கல்லூரிக்கு செல்ல குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை வைத்து சுவிட்சை ஆன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகியுள்ளது.

அதன்பின்னர் சுவிட்சை ஆப் செய்த அர்ச்சனா அவசரத்தில், வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீது, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அர்ச்சனா அலறித்துடித்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவரது தாயார் கார்த்திகா ஓடி வந்து மகளை காப்பாற்ற அவரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் ஒரே இடத்தில் தாய்,மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா (72). இவர் தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார்.

சந்திரா அடிக்கடி சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு செல்வார். வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்த நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது இதையடுத்து அங்கு வந்த வடிவேலு மற்றும் உறவினர்கள் உயிரிழந்தது சந்திரா என தெரிவித்தனர்.

ஏனெனில் இறந்த பெண்ணின் உருவம் அப்படியே சந்திரா போலவே இருந்தது. இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சந்திராவின் உடலுக்கு, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு மாலை இறுதி மரியாதை உடன் தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நிலையில் சிலர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த பொலிசார் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வேறொரு பெண்ணின் உடலை தனது தாயுடையது என்று மகன் தவறாக அடையாளம் காட்டியதே இவ்வளவு கூத்துக்கும் காரணம் என்று புரிந்தது. இந்த நிலையில், இறுதிச் சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் யாருடையது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

கோதுமை மாவின் விலை குறைகிறது : புதிய விலை தொடர்பான அறிவிப்பு!!

கோதுமை மா..

அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலைவயில் நேற்று முன்தினம் இரவு குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மாணவன் தங்கியிருந்த அறையில் சிறிய கடிதம் ஒன்றும் அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் “தற்போது நேரம் 8 மணியாகின்றது. இடையில் குறுக்கீடு இல்லை என்றால், அரை மணி நேரத்திற்குள் நான் மகாவலி ஆற்றில் இருப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் காணாமல் போன தினத்தன்று இரவு 7 மணியளவில் அவரது தாயார் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என குறிப்பிட்டதாக உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. நீரில் மூழ்கிய போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்தியர் சிவ சுப்ரமணியம் உறுதி செய்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி அஞ்சன குலதுங்க என்ற 23 வயதுடைய மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்டது அவரது சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் உளவியல் படித்த உளவியல் சங்கத்தின் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிரிச்சியளிப்பதாக அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : வியக்க வைத்த காரணம்!!

திருப்பதியில்..

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், விமலா சில நாட்களாகவே கவலையுடன் இருந்து வந்துள்ளார்.

இதற்கு காரணம் என்ன என கணவர் கல்யாண் கேட்க, அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார். திருமணத்திற்கு முன்பு கல்யாணும், நித்யாஸ்ரீ என்பவரும் டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளனர்.

அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். அதன் பின் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

ஆனால், திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார்.இது குறித்து விமலாவிடம் காதல் விவரத்தை கூறி, அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள்.

அதற்கு எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். தொடர்ந்து, விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார்.

ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். இதனிடையே, கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை.

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 603,399 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் : ஒருவர் படுகாயம்!!

பட்டானிச்சூர் பகுதியில்..

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகநிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (22.09) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த குறித்த இளைஞர் பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றிற்கு இன்றையதினம் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு கூடிநின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியை பறிமுதல் செய்து,மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து அப் பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததனர். குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ்தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிடச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன்,

அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்ப்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

பலமுறை திருமணம் செய்துண்ட பெண்… புது மாப்பிள்ளையா மாற இருந்தவர் எடுத்த அதிரடி முடிவு!!

கரூரில்..

கரூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்த நிலையில், அவரிடம் விசாரித்த போது வெளியான தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்தில் வசித்து வந்தவர் சவுமியா என்ற சபரி. இதற்கிடையே ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பம் கொண்டிருந்த சவுமியா, அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரின் பெற்றோர்களுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோரை பிரிந்த அவர், ராமநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். அப்போது போலீஸ்காரர் ஒருவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து மோசடி வேலையில் இறங்க முடிவு செய்துள்ளார் சவுமியா. அதன்படி, தனது கணவர் பெயரை வைத்து அவருக்கு மேலிடத்தில் நல்ல பழக்கம் இருப்பதாக கூறி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பலரையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார் சவுமியா.

பலரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சவுமியா, தனது கணவரை பிரிந்து வந்துள்ளார். இதற்கு மத்தியில், மோசடி புகாரில் ராமநாதபுரம் போலீசார் அவரை கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சவுமியா.

இதன் பின்னர், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்த சவுமியா, அவருடன் சில மாதம் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கரூர் மாவட்டம் வந்த சவுமியா, தான் வங்கியில் உதவி மேலாளராக இருப்பதாக பலரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், அமைச்சர் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் என்றும் பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளார் சவுமியா.

இதனிடையே, வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சம்மந்தப்பட்ட நபர்களை அவர் மிரட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கடுத்து, பல பேரை திருமணம் செய்து கொண்ட சவுமியா, அடுத்ததாக ஒருவரையும் திருமணம் செய்ய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமண ஏற்பாடுகளும் நடைபெற இருந்த சமயத்தில் தான் சவுமியா குறித்த தகவல், மாப்பிள்ளையின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

பண மோசடி செய்ததால், பகல் நேரத்தில் அதிகம் நேரம் வீட்டில் இருக்காத சவுமியா, சமீபத்தில் வீட்டில் இருக்கும் தகவல் பணம் கொடுத்து ஏமாந்த நபர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் பின்னர், சவுமியா வீட்டிற்கு வந்த நபர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவரிடம் விசாரித்த போது, ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டதும், பண மோசடி செய்ததும் உறுதியானது. இன்னும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சவுமியா ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் உயிரை குடித்த வங்கி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார்(Aji Kumar). இவர் வீடு கட்டுவதற்காக, ரூ.11 லட்சம் ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தால் அஜி குமார் வேலையை இழந்ததால் அந்த கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆனாலும், கடந்த மார்ச் மாதம் ரூ.1.5 லட்சம் ரூபாய் வங்கிக்கு கொடுத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர் வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அஜி குமாரின் மகள் அபிராமி(வயது 20) கல்லூரியில் இருந்து வந்தபோது நோட்டீஸ் ஒட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அபிராமி(Abhirami) கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிராமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அபிராமியின் மரணத்திற்கு காரணம் வங்கி அதிகாரிகள் தான் என குற்றம்சாட்டி உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் : அதிபரின் நெகிழ்ச்சியான செயல்!!

அதிபரின் நெகிழ்ச்சியான செயல்..

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் அதிபர் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளார்.

நமடகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் உணவின்றி வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாடசாலை அதிபர் முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய, உணவின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பாடசாலையில் உணவு வங்கியை நடத்தி வருகின்றனர்.

இங்கு தினசரி பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் மேலதிகமாக கொண்டுவரப்படும் 3 உணவு பொதிகள் அந்த உணவு வங்கியில் வைக்கப்படுகின்றது. அதற்கமைய, உணவின்றி வரும் மாணவர்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ள உணவு பக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பாடசாலைக்கு வரும் பல மாணவர்கள் பாடசாலையில் இடம்பெறும் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுவதை அடுத்து அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் விபரீத முடிவு : வேதனையில் மாமியார் தூக்கிட்டு தற்கொலை!!

புதுச்சேரியில்யில்..

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வேதனையில் மாமியாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர்களை அவ்வப்போது ஆனந்த் சமாதானம் செய்து வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு கணவர் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். மனைவி பிரிந்து சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத அவரும், அதே அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த தாய் அன்னக்கிளி அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருமகள் இறந்த துக்கம் தாங்காமலும், மகனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தாலும் மனமுடைந்து போன அன்னக்கிளியும் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மருமகள், மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சன்னியாசிகுப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மொபைல் போனில் கேம் விளையாடி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!!

சிறுவன்..

இளைஞர் ஒருவர் மொபைல் போனில் விளையாடி பைத்தியமாகியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று சிறியவர் முதல் பெரியவர் என அனைவரது கையில் சர்வ சாதாரணமாக மொபைல் போன் நடமாடி வருகின்றது. இதனால் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாட்டில் மூழ்கியதோடு, நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் சிந்தனை அந்த போனுக்குள் அடங்கியதோடு, பைத்தியம் போன்றும் மாறி விடுகின்றனர். இதனை விளக்கும் காட்சியினை இங்கு காணலாம்.

இங்கு மொபைல் போன் விளையாடியதால் சிறுவன் பைத்த்தியமாகியுள்ளதாக போடப்பட்டு காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இதனை அவதானித்த பெரும்பாலான மக்கள் இது ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

வேலைக்கு சென்ற இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

இரண்டு பிள்ளைகளின் தாய்..

அத்தனகல்லை – ஹெலபனாகந்த பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலுக்கு சென்ற பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிய போது தாக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த தாயார் சிகிற்சை பலனின்றி வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 37 வயதான பெண், வத்துப்பிட்டிவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் 45 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.