இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி விம்லேஷ் என்பவர் வருமான வரி துறையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இறப்பு சான்றிதழ் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் குடும்பத்தார் இறுதிச்சடங்குக்கு தயார் செய்தனர், சில மணி நேரம் கழித்து உயிரிழந்த விம்லேஷுக்கு உயிர் வந்துவிட்டது என தெரிவித்தனர். பின்னர் அவர் கோமாவில் உயிருடன் இருப்பதாக கருதி சடலத்தை துணியால் போர்த்தி வைத்திருக்கின்றனர்.
தற்போது இந்த விடயம் வெளியில் தெரிந்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினார்கள். அப்போது விம்லேஷின் தந்தை பொலிசாரிடம், ஏப்ரல் 2021 இல், என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு நாடித் துடிப்பு இருந்ததையும், இதயத் துடிப்பும் இருந்ததையும் நாங்கள் கவனித்தோம் எனவே நாங்கள் அவரை எரிக்கவில்லை.
என் மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று கூறி அதிர வைத்துள்ளார். பின்னர் பொலிசாரும், மருத்துவர்களும் விம்லேஷ் குடும்பத்தாரிடம் நிலைமையை எடுத்து கூறிய நிலையில் சடலத்தை தகனம் செய்ய ஒப்பு கொண்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன.
அதில் சில விஷயங்கள் அதனை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும். ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல மணி நேரம் கடந்தால் கூட, அது நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் என்பது சிறிதளவு கூட குறையாமல் அப்படியே இருக்கும்.
அப்படி வைரலாகும் விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், மிகவும் எமோஷனல் ஆகவும் பலரை உணர வைக்கும். இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.
பொதுவாக, திருமணம் என்றாலே மிகவும் ஸ்பெஷலான ஒரு தருணமாகும். மணமக்கள் இருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்த தினம் பார்க்கப்படும் நிலையில், பலரும் இந்த நாளை இன்னும் ஸ்பெஷலாக்க அசத்தலான சில விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படி தனது திருமணத்திற்கு மணப்பெண் செய்த காரியம் தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் நடனமாடி கொண்டிருக்கும் போது, மணப்பெண்ணாக இருக்கும் லவுரா என்பவர், திடீரென அங்கிருந்து பதுங்கி வெளியேறி, மீண்டும் வரும் போது அவரது பாட்டி ஒரு நிமிடம் அப்படியே வாயடைத்து போகிறார்.
இதற்கு காரணம், வெளியே சென்ற மணப்பெண் லவுரா, பல ஆண்டுகளுக்கு முன் தனது பாட்டி, அவரின் திருமணத்திற்கு அணிந்திருந்த கவுனை அணிந்த படி வரவேற்பு அறையில் என்ட்ரி கொடுத்தது தான்.
இதனைக் கண்டதும் அவரது பாட்டி, அங்கிருக்கும் அனைவரிடமும் உணர்ச்சி பொங்க அது என்னுடைய கவுன் என திரும்ப திரும்ப கூறுகிறார். புதிது புதிதாக ஆடைகளை இன்றைய காலத்தில் மணமக்கள் அணிந்து கொள்ளும் வேளையில், பல ஆண்டுகளுக்கு முன் பாட்டி அணிந்த திருமண கவுனை பேத்தி அணிந்ததும், அதற்கு பாட்டி கொடுத்த ரியாக்ஷனும் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
நடிகை மைனாவின் கணவர் யோகேஷை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி.
இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் செம பேமஸ். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோவால் நெட்டிசன்கள் இவரை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏனெனில், மிகவும் ஆபத்தான ரம்மி விளையாட்டை விளையாட சொல்லி ப்ரோமோட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டனர். யோகி நடித்த அந்த விளம்பரம் 1 வருடம் முன்னர் எடுக்கப்பட்டது.
திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்ற விவகாரம் குறித்து முதல் முறை மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டி மனம் திறந்து பேசியுள்ளார்.
அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரக்சனா நாராயணன்குட்டி என்பவர் மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதா நாயகியாகவும் வளம் வருகின்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ‘அய்ன்’ என்கிற மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரக்சனா நாராயணன்குட்டி அறிமுகமானர். கடந்த 2011 பெப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது.
திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா ராவத்திற்கும்(30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக் மூலம் தேவர்துவின் முன்னாள் காதலியான நிகிதா (32) தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் தங்கள் பழைய காதல் குறித்து பேசி வந்துள்ளனர். நாளடைவில் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
நிகிதாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், முன்னாள் காதலரை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பிரியங்கா ராவத்திற்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேலும் நிகிதா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கு சென்ற பிரியங்கா அவருடன் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக தேவர்து மற்றும் நிகிதா பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
எனினும் காதலரை மறக்க முடியாத நிகிதா, அவரது மனைவி பிரியங்காவை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். தேவர்துவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி பன்வெல் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பிரியங்காவை, கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், நிகிதா மற்றும் தேவர்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 28 வயதான சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கருணாகரன் சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்ட சத்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இதை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சத்யா இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுக்குறித்து கருணாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு தென்னியன்குளத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளமை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் நீண்டகால நோயினால் பதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதகாலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடந்த புலமை பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளை பெற்று சிறப்பாக கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு கிரமாத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 21 நிலக்கரிக் கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நிலக்கரி கிடைக்காவிட்டால் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் கூறியுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாலும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரட்சியான காலநிலை நிலவுவதாலும், மின்சார விநியோகத்தில் தீவிரமான நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது.
ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா (29). இவர், வாய்தா தமிழ் திரைப்படத்தில், கதா நாயகியாக நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக , விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி அன்று , வீட்டில் இருந்த தீபா தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீபாவின் ஐ போன் மாயமாகி இருந்தது. அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை கைப்பற்றியதில், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை.
ஐ போன் கால் ஹிஸ்ட்ரி எடுத்தபோது, தயாரிப்பாளர் சிராஜூதீனிடம் , சம்பவத்தன்று தீபா பேசியதும், பின் வாக்கு வாதம் முற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிராஜூதினை விசாரிக்க திட்டமிட்டனர். தீபா கடைசியாக எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிராய் காதலித்தேன், காதல் கை கூடவில்லை .
அதனால் தற்கொலை செய்துக்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், காரைக்குடியில் படவேலையில் இருப்பதாக கூறிய சிராஜூதின் வீடு வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இன்று வரை ஆஜராகவில்லை. அதன் மர்மம் என்ன என தெரியவில்லை.
இந்த நிலையில், மாயமான ஐ-போன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிராஜுதீன் , தீபாவுக்கு கொடுத்த காதல் பரிசு தான் அந்த ஐ-போன் , தற்போது அது போலீசார் கையில் உள்ளது. அதை ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. ஆனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆறு நாட்கள் கழித்து, அந்த ஐ-போன் , ஆண் நண்பர் பிரபாகரனிடம் இருந்து மீட்கபப்ட்டுள்ளது. இவர் தான் தீபா தற்கொலை குறித்த தகவலை கோயம்பேடு போலீசாருக்கு தெரிவித்தார். அதன் பிறகு தான் ஐ போன் மாயமானது. ஆரம்பத்தில், தீபா இரு செல்போன்கள் பயன்படுத்தியதாக கருதினர்.
ஐ போன் விவகாரம் பிரபாகரன், சிராஜூதினுக்கும் மட்டும் தெரிந்த விஷயம். தீபா தற்கொலை செய்த இடத்தில் இருந்து, பிரபாகரன் ஐ போனை எடுத்து, சிராஜூதினுக்கு ஆதரவாக ஆதாரங்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜூதின் ஆஜராகாமல் டிமிக்கி தருவதால், தீபா தற்கொலை வழக்கில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது.
மயிலாடுதுறை அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், கணவரது வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து அவர் உள்ளே சென்றது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன் – பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மாமனார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார்.
மேலும், தான் வீடு திரும்பும் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் பிரவீனா, அங்கிருந்த கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். இதனால் அந்த கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,”திருமணமாகி நான் இந்த வீட்டில் தான் வசித்துவந்தேன். சமீபத்தில் எனது மாமனார் மற்றும் அவரது சகோதரர் எனக்கு என்னுடைய பெற்றோர் வழங்கிய நகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், என்னை தாக்கி வெளியேற்றினர்.
நான் எனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். இந்நிலையில் கணவர் வீட்டுக்கு நான் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்” என்றார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் நடராஜன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி போராடிய மனைவி, கணவர் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வடக்கு தொடருந்து பாதையில் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளன.
இந்தியாவின் நிதியுதவியுடன் வடக்கு தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.
எனினும் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் இருந்து ஓமந்தை வரை செல்லும் பயணிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஓமந்தை தொடருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை தொடருந்து சேவைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
மூளைச்சாவு அடைந்த 16 வயது சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் ரக்ஷீதா கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காகப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரக்ஷீதா மூளைச்சாவு அடைத்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பிறகு உடனே அவர்கள் தங்களது மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ரக்ஷிதாவின் உடலிலிருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் அகற்றப்பட்டது.
இதில் இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9வயது சிறுவனுக்குப் பொருத்துவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுயின் உடல் உறுப்புதானம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் உடல் உறுப்புதானத்தில் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்து கூறும் விதமாகவும் அமைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த திருமணத்தை புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு தனது புது வாழ்க்கையை தொடங்கி வாழ்ந்து வந்துள்ளார் தனபால். அப்படி இருக்கையில், திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து தனபாலுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இதற்கு காரணம், புது பெண்ணான சந்தியா வீட்டில் இருந்து மாயமானது தான்.
தொடர்ந்து, மனைவியின் செல்போன் எண்ணிற்கு தனபால் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், வீட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் திருமண புடவைகள் மாயமாகி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, சந்தியாவின் உறவினர் மற்றும் புரோக்கர் உள்ளிட்டோரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக, இது பற்றி பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் தனபால் அளித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்த போது, மீண்டும் சந்தியாவின் புகைப்படம், புரோக்கர் ஒருவரிடம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த தனபால், திட்டம் போட்டு மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்துள்ளார். அதன் படி, திருமணத்தை நடத்துவது போல செட் செய்து, சந்தியா உள்ளிட்டோரை திருச்செங்கோடு வர வைத்துள்ளார் தனபால்.
தொடர்ந்து, சந்தியா உள்ளிட்டோர் அங்கு திருமணத்திற்காக வந்ததும் அவர்களை சுற்றி வளைத்த தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர், அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக நடந்த போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது. புரோக்கர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளும் சந்தியா, ஒரு சில தினங்கள் மட்டுமே அவர்களுடன் இருந்து விட்டு, கடைசியில் கிடைக்கும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களுடன் தப்பி விடுவதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்கள் நடந்துள்ளதாகவும், 6 ஆவது திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் 7 ஆவது திருமணம் செய்ய வந்த போது வசமாக சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சந்தியா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் தன் உயிரை இழந்தாலும், அடுத்தவர் வாழ்வில் ஒளியாய் மறையும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கின்றது.அந்த வகையில், குறித்த இளைஞரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரலகங்வில, கல்தலாவ பகுதியைச் சேர்ந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞரொருவர் கடந்த 19ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மூன்று நோயாளிகளுக்கு உயிர் கொடுக்க முடியும் எனவும், உறவினர் விரும்பினால் மாத்திரம் இதனை செய்ய முடியும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய நிலையில் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஏனைய விசேட வைத்தியர்களும் இணைந்து இந்த இளைஞரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பெற்று மூவருக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
இதன்போது விபத்தில் உயிரிழந்த இளைஞர் அடுத்த மாதம் வெளிநாடு செல்ல தயாரான நிலையில், தனக்கு ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமென விபத்திற்கு முதல் நாள் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்ததாகவும் உயிரிழந்த இளைஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் உடற்பாகங்களால் மூன்று உயிர்களை வாழ வைத்த குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன், உயிரிழந்த இளைஞருக்கு பலரும் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல்(45). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
அவருக்கு லிப்ட் கொடுத்ததும், சிறிது தூரம் செல்லும்போது, ஜமீல் முதுகில் அந்த நபர் ஊசி போட்டுள்ளார். அப்போது அதை உணர்ந்த அவர் உடனே வண்டியை நிறுத்த அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, பதறிபோய் தனக்கு ஊசி போட்டதை மனைவியிட போன் செய்து தெரியப்படுத்தியுள்ளார். உடனே அதற்கு அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
அதற்குள் அவருக்கு தலை சுற்றல் ஏற்பட அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆனால், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், அவர் ஷேக் ஜமால் சாயபு என்பதும் இவருக்கு ஷேக் இமாம் பீ என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது தெரிய வந்தது.
இவர்கள் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனிடையே, மனைவி இமாம் பீ-க்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இதனால் மனைவி இமாம் அவருடன் தனிமையில் இருந்த போது கணவர் கண்டதால் ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என ப்ளான் போட்ட மனைவி காதலனுடன் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.
இரண்டு விஷ ஊசியை மனைவி ஒன்றும், காதலன் ஒன்றும் வைத்துள்ளனர். மனைவியால் அந்த விஷ ஊசியை கணவருக்கு செலுத்த முடியாத நிலையால், தனது மகள் வீட்டிற்கு சென்று மனைவி தன்னை அழைத்து செல்ல வரும் படி கூறியுள்ளார்.
அதற்காக வாகனத்தில் வரும்போது தான், காதலனான மோகன் ராவ் நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி காத்திருந்துள்ளனர்.
அப்போது தான் லிப்ட் கேட்டு விஷ ஊசியை போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது.
இதன் பின்னர், மனைவி காதலன் உட்பட அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் சினிமா பாணியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.