இலங்கையில் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை : வெளியானது அறிவிப்பு!!

அரசாங்க விடுமுறை..

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி உத்தரவு வழங்கியிருந்தார். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்த நபர் யார்? வியக்க வைத்த காரணம்!!

கென்யாவில்..

15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.

இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது.

இதில் மட்டும் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார்.

மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.

டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்த நபர் : இப்படி ஒரு காரணமா?

சத்தீஸ்கரில்..

21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார்.

இதற்காக, அவர் 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்துள்ளார். மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

இதனைத்தொடர்ந்து, குப்தா முதன்முறையாக கடந்த ஆண்டு தனது தாடியை ஷேவ் செய்துக்கொண்டார். இருந்தாலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது.

இதனை அறிந்து, குப்தா மீண்டும் ஒரு வருடமாக தாடியை வெட்டவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்க அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். தீர்மானம் நிறைவேறியதும், அவர் தனது தாடியை சவரம் செய்து கொண்டுள்ளார்.

குழந்தை பிறந்து 14வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : அனாதையான ஆண் குழந்தை!!

ஒசூரில்..

ஒசூரில் திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் கணவன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடால் ஷாலினி 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மீண்டும் சானசந்திரம் கிராமத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

இதற்கிடையில் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை கணவன் வீட்டுக்கு வந்த 14வது நாளில் ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அந்த தகவலின் பேரில் ஓசூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஓசூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழியும் விசாரித்து வருகிறார்.

காணாமல் போன பிரபல YOUTUBER சிறுமி.. தேடும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்த பெற்றோர்!!

மகாராஷ்டிராவில்..

பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய யூடியூபர் சிறுமி மீட்கப்பட்ட காட்சி அவரது யூடியூப் பக்கத்திலே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் காவியா யாதவ். 16 வயது சிறுமியான இவர், சொந்தமாக ‘Bindass Kavya’ என்ற Youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். சுமார் 44 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த சேனலை காவ்யாவின் தாயார் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் சண்டையிட்டு காவ்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அவர்கள் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மனம் கேட்காத பெற்றோர்கள் ஒரு பக்கம் காவ்யாவை தேடி வந்தனர். மேலும் காவ்யாவின் Youtube சேனலில் தங்கள் மகள் காணவில்லை என்றும், யாராவது பார்த்தல் உடனே தகவல் தெரிவிக்குமாறும் பெற்றோர்கள் கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.

அதோடு அவர்கள் தேடும்போது தங்களது Youtube தளத்தில் அதனை நேரடி ஒளிபரப்பும் செய்தனர். ஒரு பக்கம் பெற்றோர்கள் தேட, மறுபக்கம் காவல்துறையினர் இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று வலைவீசி தேடி வந்தனர்.

அப்போது மத்திய பிரதேச மாநிலம் இதர்சி பகுதியிலுள்ள இரயில் நிலையத்திற்கு வந்த ஒரு இரயிலில் காவ்யா இறங்கியுள்ளார். இதனை கண்ட இரயில்வே காவல்துறையினர் உடனே அவரை பிடித்து தங்களது காவலில் வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையறிந்த பெற்றோர்கள் உடனே தங்கள் மகளை மீட்பதற்காக அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சுமார் 500 கி.மீ., பயணித்து தங்கள் மகளை மீட்டனர். இந்த காட்சிகளை தங்கள் Youtube பக்கத்தில் பெற்றோர்கள் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

பரபரப்பான இந்த காட்சிகள் Youtube பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை சுமார் 44 லட்ச பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகளை மீட்க சென்றுள்ளதை நேரலையில் பார்த்த இணையவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு மாமனாருக்கு போன் போட்டு சொன்ன மருமகன்… மனைவி அழகாக இருந்தது ஒரு குற்றமா?

நிஜாமாபாத்தில்..

மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.

மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு அத்தனை பொருத்தங்கள் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போனால் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீர்குலைந்து விடும் என்பது அனுபவ மொழி.

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே எது வேண்டுமானாலும் வரலாம் சந்தேகம் மட்டும் வரக்கூடாது, அது வந்துவிட்டால் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீரழிந்து விடும் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணம் ஆன சில வருடங்கள் இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஆனால் மனைவி பாத்திமா மிகவும் அழகானவர் என்பதால் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதன் பேரில் அடிக்கடி மனைவியை அவர் துன்புறுத்தி வந்தார், அதே நேரத்தில் மாமியாருடடுனும் சலீம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஒருகட்டத்தில் கணவனின் சந்தேகத்தால் சோர்வடைந்த மனைவி அனீஸ் பாத்திமா, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் நிஜாமாபாத் மூன்றாவது டவுனுக்கு உட்பட்ட பேங்க் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். மனைவி தனியாக வீடு எடுத்தது கணவனுக்கு சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் சையது சுல்தான் தனது மாமனாருக்கு போன் செய்து குழந்தைகளை பார்க்கச் செல்வதாக கூறினார், அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து, உங்கள் மகளை கொன்று விட்டேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமாவின் தந்தை மற்றும் தாய் பாத்திமா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர், அப்போது அங்கு பாத்திமா கழுத்து அறுக்கட்டப்பட்ட நிலையில் அலங்கோலமாக கிடந்தார், பின்னர் அது குறித்து நகரின் மூன்றாவது டவுன் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தனது மருமகனால் மகள் சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், மருமகன் தன் மகளை கழுத்து அறுத்து கொன்றதாகவும் போலீசில் புகார் செய்தார், அதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சையது சுல்தானை தேடிவருகின்றனர்.

செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம்.. வெடித்து சிதறியதில் பெண் பரிதாபமாக பலி!!

டெல்லியில்..

ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் வைத்திருப்பவர்களை கண்டால் ஆச்சரியமாக பார்ப்பது உண்டு, ஆனால் தற்போது செல்போன் இல்லாதவர்களை பார்ப்பது தான் ஆச்சரியம். மின்சார வசதியே இல்லாத கிராமங்களில் இருப்பவர்கள் கூட இப்போது செல்போன் வைத்திருக்கின்றனர்.

அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உள்ளது.

வாரத்திற்கு ஒரு தொழில்நுட்பத்தில் செல்போன்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேநேரத்தில் செல்போன்கள் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன, பைக் ஓட்டும்போது செல்போன் வெடித்தது.

சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்தது, போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன, போன் வெடிப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன் மீது ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் 20க்கும் அதிகமான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது மகன் தாயை சந்திக்க வந்தபோது, அவர் கருகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது மருமகன் மஞ்சித், தனது அத்தை உயிரிழந்தது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு என் அத்தை இறந்துவிட்டார், அவர் redmi 6A பயன்படுத்தியிருந்தார்.

இரவில் உறங்கச் செல்லும் போது தலைமாட்டில் வைத்துக்கொண்டு உறங்கினார், அப்போது நள்ளிரவில் செல்போன் வெடித்து சிதறியது, அதில் பலத்த காயம் ஏற்பட்டு என் அத்தை உயிரிழந்துள்ளார்.

இது எங்களுக்கு மிகவும் சோகமான நேரம், எங்கள் குடும்பத்திற்கு ஸ்மார்ட்போன் நிறுவனம் உதவ முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளதுடன், மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த தனது அத்தையின் புகைப்படங்கள் மற்றும் வெடித்துச் சிதறிய செல்போன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெகுநேரமாக திறக்காத மனைவி, குழந்தைகளின் அறைக்கதவு : கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார்.

லேத் பட்டறை நடத்தி வரும் இவர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குமார் வீட்டின் கூடத்திலும், அவரது மனைவி ஷகிராபானு பிள்ளைகளுடன் தனி அறையிலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குமார் அறையின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு குமார் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர். மூவரின் உடல்களையும் மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று மாதங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோகம்!!

களுத்துறையில்..

இலங்கையில் தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் திடீரென மரணமடைந்தார்.

இந்நிலையில் மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி அகம்பொடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் காதலிக்காக பேருந்தை கடத்திய பதின்ம வயது சிறுவன்!!

பிலியந்தலை..

பிலியந்தலை பேருந்து நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்று (11.09.2022) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துகளின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​ பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்த போதும், பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இதனையடுத்து . பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டன.

நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்திள்ளனர்.

அப்போதுதான் அது ​​கடத்தப்பட்ட பேருந்துதான் என்பதை பொலிஸார் உறுதி செய்த நிலையில், தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர். பேருந்தை எடுத்துச்சென்று தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோதே பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.

மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது பேருந்துகள் இல்லாததால் செய்வதறியாது தான் தவித்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

அதேவேளை கைதான சிறுவன் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதி தீப்பிடித்து முற்றாக சேதம்!!

தீவிபத்து..

வவுனியா மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் மகா நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் வீதி அபிவிருத்தி பணிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இன்று (12.09.2022) காலை 10.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனை அவதானித்த மக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த உரிய தரப்பினரின் முயற்சியினால் விடுதியில் ஏற்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

எனினும் தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த விடுதியில் 30 ஊழியர்கள் தங்கியிருப்பதுடன் அவர்கள் விடுமுறையில் சென்றுள்ளமையினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் பல உடமைகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் பட்டா ரக வாகனம் – மோட்டார் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (12.09) மாலை பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூங்கா வீதியூடாக பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா – மன்னார் பிரதான வீதிக்கு ஏறமுற்பட்ட சமயத்தில்,

காமினி வித்தியாலயத்திற்கு முன்பாக வவுனியா – மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனத்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

அம்மாவால் பலவற்றை இழந்த அர்ச்சனாவின் மகள் : அர்ச்சனா வேதனை!!

தொகுப்பாளினி..

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் விஜே அர்ச்சனா.

திருமணமாகி சாரா என்ற மகளையும் விஜேவாக சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் இனைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு சர்ச்சையிலும் சிக்கி விஜய் தொலைக்காட்சி விஜேவாக பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பறந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரைத்துறையில் நான் இருப்பதால் சாராவிற்கு நண்பர்களே கிடையாது. சுக துக்களில் பகிர்ந்து வாழ நண்பர்கள் அவளுக்கு இல்லாமல் போனது தான் துர்பாக்யமாக அவளுக்கு இருப்பதாகவும் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதற்கு சாரா, எனக்கு எல்லாம் என் அம்மா தான் எனக்கு சிறந்த நண்பன். அவங்க தோல் மீது சாய்ந்தாலே போதும்.

இதை கேட்டு அர்ச்சனா கண்கலங்கியுள்ளார். சாராவை கண்டபடியான வார்த்தையை கூறி கேவலப்படுத்தினார்கள். இதற்கு சாராவும் பதிலடி கொடுத்தது சமீபத்தில் நடந்த ஒன்று.

காதல் திருமணம் செய்த 3ம் நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மகள் கெளசல்யாவுக்கு அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கார்த்திக் வீட்டிற்கு வந்த பார்க்கும்போது மின்விசிறியில் கௌசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் தனது மனைவி கெளசல்யாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கௌசல்யா உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீசார் வழக்குபதிவு திருமணம் ஆன சில நாளிலே புதுப்பெண் தூக்கிலிட்டு உயிரிழந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

7 வயதில் அப்பா இறந்துட்விட்டார்… வீட்டில் 3 பெண்கள்… வெறியுடன் படித்த மாணவி : உருகிய சிவகுமார், கார்த்தி!!

திரைத்துறையில்..

திரைத்துறையில் நடிகர் சிவகுமாரின் குடும்பம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்ந்த சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சிவக்குமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, மாணவர்கள் கையில் எளிதில் போதைப்பொருள் கிடைப்பதால் அவர்கள் வழிமாறி செல்வதாகவும், அதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டுமென்றும், அரசு இதை கவனித்து சரிசெய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாணவி ஒருவர் தன் வறுமையான வாழ்க்கை பற்றியும், கல்வி நிலை பற்றியும், தந்தையை இழந்தது குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், “அனைவருக்கும் வணக்கம்.. என் பெயர் பிருந்தா. விழுப்புரத்தில் இருந்து வருகிறேன். நான் 6-வது முதல் 11-ஆம் வகுப்பு வரை விழுப்புரம் பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். 7-வது படிக்கும் பொழுது ஒரு நாள் இரவு ஃபோன் வந்தது. அப்பாவுக்கு சாலை விபத்து ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள்.

அதன் பிறகு 2 நாட்கள் அவரை மருத்துவமனையில் வைத்துவிட்டு மூன்றாவது நாள், அவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கூறினார்கள். எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் மூன்று பெருமே பெண்கள் என்பதால் அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அப்பா கோயில் அர்ச்சகராக இருந்தார்.

அம்மாவோ குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதன் பிறகு பள்ளி ஆசிரியர்கள்தான் எங்களுடைய பள்ளி செலவுகளை பார்த்துக் கொண்டார்கள். நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது விழுப்புரத்தில் அரசு மாதிரி பள்ளி என்று ஒன்று திறந்தார்கள்.

நான் அங்கு தேர்வாகி படித்தேன். எது நடந்தாலும் நன்றாக படிக்க வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது அப்பாவின் கனவு. அதனால் நல்லா படித்து போன வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 593 மதிப்பெண்கள் எடுத்தேன். நான்கு சப்ஜெக்ட்டில் நூற்றுக்கு நூறு எடுத்தேன்.

அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கலந்தாய்வில் முதல் ரேங்க் ஸ்கெட்யூல் செய்தேன். 467 மதிப்பெண்கள் நீட் தேர்விலும் எடுத்தேன். எங்களுடைய முதல் அக்கா சிஏ படிக்கிறார். எங்களுடைய அனைத்து செலவுகளையும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

நான் படித்த அரசு மாதிரி பள்ளியில் விடுதி இருக்கிறது. எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கினார்கள். அங்கு ஸ்டேட் போர்டு சிலபஸ் மட்டுமல்லாமல் சிறப்பு பொதுத் தேர்வுகளுக்கான எல்லா பயிற்சியும் எனக்கு கொடுக்கப்பட்டது.

அதனால்தான் என்னால் இவை அனைத்தையுமே படிக்க முடிந்தது. இதன் பிறகு நான் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். என் அப்பாவை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த மாதிரி வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதால் நான் மருத்துவம் படித்து, டாக்டராகி, ஒரு அரசு மருத்துவமனையில் சென்று நான் சேவை செய்வேன்.

என்னுடைய அப்பா பெயர் பாலன். அம்மா பெயர் விஜயலட்சுமி. அவர்களுடைய மகன் என்பதை நான் இந்த இடத்தில் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். அகரம் பவுண்டேஷனில் என்னை அழைத்து இங்கு வரவழைத்ததற்கு நன்றி.” என்று முழு வீச்சில், சில இடங்களில் தழுதழுத்த குரலிலும் தன்னம்பிக்கையுடன் பேசி முடித்தார். இந்த மாணவி பேசியதை பார்த்து நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் கார்த்தி இருவருமே எமோஷனல் ஆகினர்.

காதலியை பங்குபோட நடந்த பிரச்சினை… ஆட்டோ ஓட்டுநர் கொலை : நெஞ்சை உலுக்கும் பயங்கரம்!!

கடலூரில்..

கணவனை பிரிந்து கள்ளக்காதலில் இரண்டு வாலிபர்களை வீழ்த்திய பெண்ணால் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் விவாரத்தில் பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் நண்பர் உட்பட நான்கு பேர் கைது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் மற்றும் களத்துமேடு பகுதி சேர்ந்த சுமன் ஆகியோர் நண்பர்கள்.

செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பூமிகா. இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் நடவடிக்கை பிடிக்காமல் பூமிகாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், பூமிகா மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார்.

வேலை நேரம் போக பூமிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுகொண்டு பரவசமாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் அடிக்கடி ஆட்டோவில் சவாரி செல்லும்போது பூமிகாவுக்கு சுமனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலர்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், சுமனின் நண்பன் சக்திவேலுவுடன் பூமிகா பழகியுள்ளார். பின்னர் சக்திவேலுவையும் காதல் வலையில் பூமிகா வீழ்த்தியுள்ளார். சக்திவேலுவுடன் நெருங்கி பழக்க தொடங்கிய பூமிகா சுமனுடன் பேசுவதையும், பழகிவிதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட சுமன் ஆத்திரமடைந்து சில தினங்களுக்கு முன்பு சக்திவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக உருவாகியது. இதை அடுத்து கடந்த 9ம் தேதி அன்று இரவு சமாதானம் பேசுவதாக சக்திவேலை சுமன் வரவழைத்துள்ளார்.

சுமன் பேச்சை நம்பி சக்திவேல் தட்டாஞ்சாவடி காளி கோயில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பாதையில் சந்தித்துள்ளனர். அப்போது, சக்திவேல் மற்றும் சுமன் உட்பட மூன்று நண்பர்கள் மது போதையில் இருந்தபோது பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என்று சுமன் கண்டித்துள்ளார்.

அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் சுமன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலை கொடூரமான முறையில் தலை, கை பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து வந்து புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்திவேல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், களத்துமேடு சுமன் , சுமன் நண்பர்கள் கொக்குப்பாளையம் குணா (வயது 21) ரித்திஷ் (எ) வசந்தகுமார் (வயது 19) பட்டிஸ்டா (எ) குணா (வயது 21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.