மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 09 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1 மணிநேரமாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய மனைவியை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த கணவன்!!

தம்புள்ளையில்..

தம்புள்ளையில் வீடொன்றில் நேற்று இரவு பெண் ஒருவர் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உ.யி.ரிழந்துள்ளார். கணவருக்கும்,

மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வா.க்.குவாதத்தை அடுத்து, கணவரே இந்தக் கொ.லை.யை.ச் செ.ய்.துள்ளதாக முதற்கட்ட வி.சா.ரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

க.ழு.த்.தை அ.று.த்.து.வி.ட்.டு அந்த நபரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், வெளியேறும்போது அவரும் தூ.க்.கி.ட்.டு உ.யி.ரை மா.ய்.க்கவுள்ளதாக கூறியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் கடந்த 31ஆம் திகதியே நாடு திரும்பிய நிலையில் இந்த கொ.லை ச.ம்பவம் இடம்பெற்றுள்ளது பெண்ணை கொ.ன்.று.வி.ட்.டு த.ப்பியோடிய கணவரை,

தே.டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது : வெளியானது புதிய விலைகளின் விபரம்!!

எரிவாயு விலை..

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள.

இந்த நிலையில் குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலைகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4551 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1827 ரூபா என்பதுடன், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 848 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையற்ற நட்பால் தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஸ்ரீரங்கத்தில்..

ஸ்ரீரங்கத்தில் தகாத உறவு தொடர்பாக போலீசார் மிரட்டியதாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு, சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சரவண செல்வன் அதே பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் சரவணன் செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் பணம் செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் திடீரென்று தனலட்சுமியுடன் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் தனலட்சுமி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரவண செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது .

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சரவண செல்வனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவண செல்வன் இரவு வீட்டின் அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறிவிட்டுஅறைக்கு சென்றவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் காலையில் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அறைக்கு சென்று பார்த்தபோது சரவண செல்வன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு மனைவி லாவண்யா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உறவினர்கள் சரவண செல்வன் அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம்.

தனலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினர்தான் என் மரணத்திற்கு முழு பொறுப்பு. இவர்களுடன் காவல் துறையில் பணியாற்றும் திருமூர்த்தி, ரைட்டர் முத்துசாமி , ஸ்ரீ ட்ரெய்லர் கடையில் வேலை செய்யும் செல்வி மகன் லிஷாந்த், மகள் ஜோசிகா தனலட்சுமி ஆகியோர் பொறுப்பு என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவண செல்வனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

என்று கூறி சரவணசெல்வனின் உடலை வாங்க மறுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடனர். இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

புதுச்சேரியில்..

பள்ளி மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை சக மாணவியின் தாய் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.nபுதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

ரேஷன் கடையில் வேலை செய்யும் இவருக்கு, பால மணிகண்டன்(13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதன் பின்னர், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி கலந்துகொண்டு சிறுவன் வீட்டிற்கு வந்த பின் தனது தாயிடம், என்ன குளிர்பானம் கொடுத்தீங்க? அதை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக வருகிறது என பாலமணிகண்டன் கூறியுள்ளான்.

இதற்கு தாய் அதிர்ச்சியடைந்து நான் கொடுக்கவில்லை என கூற, சிறிது நேரத்தில் சிறுவன் பாலமணிகண்டன் வாந்தி எடுத்து மயங்கியுள்ளான். பின், அவசரமாக மாலதி தனது மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் விசாரணையில், குளிர்பானத்தை தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த, மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து விசாரித்ததில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதன்பின், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் விளங்கி வந்துள்ளார்.

இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனால் போலீசார் மாணவியின் தாயாரை கைது செய்துள்ளது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

ராமநகரில்..

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை.!!
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹொசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா(வயது 30). விவசாயியான லோகேஷ், மாகடி தாலுகாவின் விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர்களுக்கு ஹர்ஷிதா(6), ஸ்பூர்தி(4) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் ரூபாவுக்கும், லோகேசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த ரூபா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி உணவில் பூச்சிக்கொல்லி மருந்து(விஷம்) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த உணவை சாப்பிட்டுவிட்டார்.

இதில் விஷம் தலைக்கேறிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 3 பேரும் வீட்டிலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோழியின் கணவருடன் ஏற்பட்ட நட்பால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

தீபாலியில்..

ரித்திகாவின் நண்பர் விபுல் அகர்வாலின் மனைவி தீபாலி. ஜூன் 24 அன்று, ஃபேஷன் டிசைனர் ரித்திகா சிங், கைராட்டி தோலாவில் ஓம்ஸ்ரீ பிளாட்டினம் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் கீழே வீசப்பட்டிருந்தார். கழுத்தில் துணி கயிறும் இருந்தது. ஷிகோஹாபாத் படா பஜாரில் வசிக்கும் தனது நண்பரான விபுல் அகர்வாலுடன் அவர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

ரித்திகாவின் கணவர் ஆகாஷ் கவுதம், காஜல், குசுமா ஆகியோரை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நடவடிக்கையில் ரித்திகாவின் தந்தை சுரேந்திர சிங் மற்றும் தாயார் திருப்தி அடையவில்லை.

இந்த கொலையில் விபுலின் மனைவி டாக்டர் தீபாலி அகர்வால் மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து ரித்திகாவின் தந்தை மண்டல ஏடிஜி ராஜீவ் கிருஷ்ணாவிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் தீபாலி அகர்வாலை சிறையில் அடைத்தனர். தீபாலி அகர்வாலின் குடும்பத்தினர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. விபுலின் மனைவி தீபாலி மற்றும் ரித்திகாவின் கணவர் ஆகாஷ் கெளதம் ஆகியோரின் நோக்கம் ஒன்றுதான் என்று இன்ஸ்பெக்டர் பூபேந்திர பல்யன் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பூபேந்திர பல்யான் கூறுகையில், ரித்திகாவுக்கும், விபுலுக்கும் இடையே இருந்த உறவால் இருவரது குடும்பத்திலும் விரிசல் ஏற்பட்டது. எப்படியும் இந்த உறவை முறித்துக் கொள்ள இருவரும் விரும்பினர்.

கொலைக்கு முன்பும் பின்பும் தீபாலி அகர்வாலுடன் ஆகாஷ் கெளதம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் அடிப்படையில் தீபாலி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீபாலி குற்றச் சதியில் ஈடுபட்டதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். கொலை நடந்த அன்று ஆகாஷ் வந்த பைக் தீபாலியின் குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ளது. இருவரையும் இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு நான் காரணமா? மனவேதனையில் பிரபல நடிகை!!

நடிகை..

நட்சத்திர தம்பதிகளான நளினி- ராமராஜன் விவாகரத்து பெற்றதற்கு தான் காரணம் என வதந்தி பரவியதால் மனவேதனையில் தவித்ததாக தெரிவித்துள்ளார் விக்ரம் பட நடிகையான அபிதா.

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த படம் சேது, இந்த படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் அபிதா. தொடர்ந்து தமிழ், மலையாளம் என தென்னிந்திய படங்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது திருமதி செல்வம் சீரியல் தான், தொடர்ந்து குழந்தைகளுடன் செட்டிலான அபிதா, மாரி என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு தான் காரணம் என வெளியான தகவல்களால் மன உளைச்சலில் தவித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 2001-ம் ஆண்டு வெளியான சீறிவரும் காளை படத்தில் நாயகியாக நடித்தேன்.

படப்பிடிப்பின் போது யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பேன், அப்படி இருந்தும் ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு நான் காரணம் என தகவல்கள் வெளியானது. நான் நளினி மேடமை பார்த்தது கூட கிடையாது, அந்த தகவலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன், இதனால் பல மாதங்கள் கஷ்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் இரு பெண்களுக்கு குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற திருமணம்!!

கனடாவில்..

கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணிற்கும், மற்றொரு பெண்ணிற்கும் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் சென்னை நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண், வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை குடும்பத்தார் சம்மதத்துடன் பாரம்பரிய முறையில் சென்னையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுபிக்க்ஷா சுப்பிரமணி பிறப்பால் பெண்ணாக இருந்தார். ஆனால், தனது 19 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் bisexual (இரு பால் ஈர்ப்பு) கொண்டவர் என்பதை உணரத் தொடங்கினார்.

சுபிக்க்ஷா கனடாவில் உள்ள கால்கேரியில் வசித்து வருகிறார். அதே போல வங்கதேசத்து பாரம்பரிய இந்துக் குடும்பத்தை சேர்ந்தவர் டினா தாஸ். சுபிக்‌ஷா பெற்றோர் கனடாவில் செட்டில், ஆன நிலையில் டினாவின் பெற்றோரும் 2003ல் கனடாவில் செட்டில் ஆனார்கள்.

இருவரும் கனடாவில் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமாகி பழகி, தற்போது திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் சுபிக்‌ஷா குடும்ப பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

சுபிக்‌ஷா கூறுகையில், நான்பிறந்தது மதுரையில் கத்தார்நாட்டில் வளர்ந்தேன். 19 வயதில் என் உடலில் பெண் தன்மை மறைந்து ஆண் தன்மை வந்ததைப் பார்த்தபின், கனடாவுக்கு குடிபெயர்ந்தேன்.

என் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை என் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை, பின்னர் அவர்களுக்கு முறைப்படி கவுன்சிலிங் அளித்தபின் புரிந்தனர் என்றார். சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ண் புஷ்கலா கூறுகையில், சுபிக்ஸாவின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது, இந்தியாவில் உள்ள எங்களின் குடும்பத்தினர் எங்கள் தொடர்பை துண்டித்துவிடுவார்களே என்று அச்சப்பட்டோம்.

2வதாக இந்தச் சமூகத்தில் சுபிக்ஸா எவ்வாறு வாழப்போகிறார், தாய்மையை எவ்வாறு அடைவார் என்ற அச்சமும் இருந்தது. என் குடும்பத்தின் ஒற்றுமை முக்கியம், மகளின் மகிழ்ச்சி முக்கியம் என்று எண்ணினேன் எனத் கூறியுள்ளார்.

டினா தாஸ் கூறுகையில், திருமணம் செய்து 4 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தபின் தன்னை ஒரு லெஸ்பியன் என்று உணர்ந்தார். இதனால் கணவரைவிட்டு பிரிந்தார்.

இந்த பிரிவுக்கு பின்னர் டினாவின் சகோதரி அவரை விட்டு ஒதுங்கியுள்ளார். கனடாவில் திருமணத்தை இந்த தம்பதிகள் பதிவு செய்துள்ளனர். மீண்டும் கனடாவுக்கு செல்லும் முன்னர் தப்போது தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணிக்க உள்ளனர்.

படவாய்ப்பு இல்லை… இலங்கைப் பெண் லொஸ்லியா இப்போது என்ன செய்கின்றார் தெரியுமா?

விஜய் டிவியில்..

நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் தனது அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார். பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் நடித்த எந்த படமும் சொல்லும் அளவுக்கு ஹிட்டாக வில்லை.

இதனால் சிறு சிறு விளம்பரப்படங்களில் நடித்து வருகின்றார். அதே சமயம் இன்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகலடகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றார்.

ஹோட்டல் அறைக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி.. அறையை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கர்நாடகாவில்..

21 வயது பொறியியல் கல்லூரி மாணவியை, ஹோட்டல் அறையில் வைத்து காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் இன்ஜினியரிங் மாணவி ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார்.

காதலனை போலீசார் கைது செய்தனர். மைசூர் ஹுன்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி. இவருக்கு வயது 21 ஆகும்.

அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் அபூர்வா. விஜயநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை புக் செய்துள்ளனர்.

 

செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற ஆஷி, பல மணிநேரம் கடந்தும் திரும்பாததால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர். அவர்கள் உடனே இண்டர்காம் மூலம் அறையைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால், பதில் வராததால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வந்து அறையை திறந்து பார்த்தபோது, ​​அபூர்வா சடலமாக கிடந்தார்.

கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனை தொடர்ந்து, ஆஷி வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். அபூர்வா மற்றும் ஆஷி இடையேயான காதல் உறவை அறிந்த அபூர்வாவின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

ஆனால், குடும்பத்தை மீறி ஒருவரை ஒருவர் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை முடிந்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவி நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகள் நிஷா (18) கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கறுப்புச் சந்தையில் 25000 ரூபாய் வரை உயர்ந்த கோதுமை மாவின் விலை!!

கோதுமை மா..

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்னையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் டொலர் பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்த டுபாய் மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் 700 மில்லியன் டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளதால், டொலரில் கைப்பணம் செலுத்தி மாவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், அந்த நாட்டின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 50kg கோதுமை மா 8000 – 9000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கறுப்புச் சந்தையில் 25000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அந்த விலையில் உற்பத்தி செய்தால் பாண் ஒன்றின் விலை 350 ரூபாவைத் தாண்டும். தின்பண்டங்கள் விலை 150 ரூபாவைத் தாண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் மஞ்சள் கொண்டு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

மஞ்சள்..

ஏ9 வீதியில் மஞ்சள் கொண்டு சென்ற வாகனம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஏ9 வீதியில் குளிரூட்டப்பட்ட வாகனத்தில் மஞ்சள் கொண்டு செல்லப்படுவதாக ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த பொலிசார் பெருந்தொகை பச்சை மஞ்சளினை மீட்டதுடன், அதனை கொண்டு சென்ற இருவரையும் தடுத்து வைத்து விசாரித்தனர்.

இதன்போது குறித்த பச்சை மஞ்ள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவில்லை என்பது பொலிசாருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்துடன் மஞ்சள் விடுவிக்கப்பட்டதுடன், தடுத்து வைத்த இருவரையும் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா இராசேந்திரங்குளம் மயானத்தின் அபிவிருத்திப் பணியின் போது குழப்ப நிலை!!

குழப்ப நிலை,,

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை இன்று (04.09) முன்னெடுக்கப்பட்ட போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதியில் இந்துக்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிரதேச சபையின் அனுமதி பெற்று குறித்த மயானத்தை தனிநபர் ஒருவரின் நிதிப் பங்களிப்பில் தூய்மைப்படுத்தி சுற்றிவர நிழல் மரங்கள் நாட்டி, தகன கொட்டகை மற்றும் நீர்தாங்கி என்பவற்றை நிர்மாணிப்பதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த மயானத்தை உழவு இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நீண்ட காலத்திற்கு முன் கிறிஸ்தவர்களின் உடல் புதைக்கப்பட்டு அடையாளமின்றி காணப்பட்ட சில இடங்களும் உழவு இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரும், கிறிஸ்தவ மக்களும் தமது உறவினர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,

சுத்தம் செய்தமையால் அவற்றின் இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்தும் அங்கு நின்ற அபிவிருத்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டனர். அவர் நிலமையை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இருப்பினும், அதனை ஏற்க மறுத்த கிறிஸ்தவ மதகுரு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக மக்களை அழைத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையினை அறிந்து அதனை கிறிஸ்தவ மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன்,

கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உடல்கள் புதைக்கப்பட்டு அடையாளமின்றி இருந்தமையால் உழவு இயந்திரம் மூலம் சில இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இடங்களை அடையாளம் தெரியும்படி மண் போட்டு உயர்த்தி விடுமாறு மக்களிடம் பொலிசார் தெரிவித்தனர். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

கிறிஸ்தவ, இந்து முரண்பாடுகளை ஏற்படாத வகையில் பொலிசார் செயற்பட்டிருந்தனர். இதன்பின் அங்கு அமைதி நிலை ஏற்பட்டு தொடர்ந்தும் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் கடையுடைத்து திருட முயற்சி தோல்வி : இறுதியில் தண்ணீரை அருந்திவிட்டுச் சென்ற திருடன்!!

பெண்கள் அழகு நிலையத்தில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியிலுள்ள பெண்கள் அழகு நிலையத்தில் (BEAUTY CARE) நேற்று முன்தினம் (02.09.2022) இரவு 11 மணியளவில் திருட்டுச்சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்கள் அழகு நிலையத்தினை வழமை போன்று நேற்று இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதன் போது இரவு 11.00 மணியளவில் நபர் ஒருவர் வர்த்தக நிலையத்தின் இடதுபக்கத்திற்கு சென்று முதலில் வெளிப்புறமாக ஒளி ர்ந்து கொண்டிருந்த மின்குமிழை அடித்து நொருக்கியதுடன் வர்த்தக நிலையத்தின் பின்பகுதி கதவினை திறப்பதற்கு முயன்ற போதிலும் கதவினை திறக்க முடியவில்லை.

அதன் பின்னர் அருகேயிருந்த யன்னல் கதவினை திறந்து வர்த்தக நிலையத்தினுள் இருந்த கதிரையினை யன்னல் ஊடாக எடுப்பதற்கு முயன்று அது பயனளிக்கவில்லை என்றதையடுத்து வேறு பொருட்கள் உள்ளதா எனவும் கையினால் தேடியுள்ளதுடன்,

எவையும் கிடைக்காதமையினையடுத்து குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் யன்னல் ஓரத்தில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தி விட்டு அப்போத்தலையும் எடுத்து செல்கின்றார் .

எவை தொடர்பிலான காணொளிகள் வர்த்தக நிலையத்தில் பூட்டப்பட்டிருந்த சி.சி.ரி.வி மூலம் பதிவாகியுள்ளமையுடன் வர்த்தக நிலைய உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.