பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!!

இலங்கை அணி வெற்றி..

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய பானுக ராஜபக்ச மற்றும் தசுன் ஷானக ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர்.

பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர், ஆனால் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சு போட்டியை இந்தியாவின் பக்கம் திரும்ப உதவியது. ஆனால் ராஜபக்ச மற்றும் ஷானக ஆகியோர் காரணமாக வெற்றி இலங்கைக்கு கிடைத்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்தது. ரோஹித் சர்மா 41 பந்துகளில் 72 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில், தில்ஷான் மதுஷங்க (3/24), சமிக கருணாரத்ன (2/27), தசுன் ஷானக (2/26) ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணியின் அதிரடி வெற்றி காரணமாக இந்தியா அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. இலங்கை மற்றும் பாக். அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் அதற்கு முன் பாக்.அணியுடன் இலங்கை ஒரு போட்டியில் விளையாடவேண்டியுள்ளது.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா – 2022!!

பாரதி முன்பள்ளி..

வவுனிய எல்லப்பர் மருதங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா முன்பள்ளி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. முன்பள்ளி ஆசிரியை விஜயகுமார் பேபிசர்மிளா தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவின் பிரதம விருந்தினராக முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் வி.பரஞ்சோதி அவர்களும் சிறப்பு விருந்தினராக கிராம சேவையாளர் எஸ்.ஜெயபிரகாஷ்,

அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.திவ்யா, சமூர்த்தி உத்தியோகத்தர் கே.திருநிறைச்செல்வி , ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன் , நகரம்2 இணைப்பாளர் கே.செல்வராணி மற்றும்,

கௌரவ விருந்தினராக எஸ்.கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையுடன் மேலும் முன்பள்ளி மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஒழும்பிக் தீபம் ஏற்றுதலுடன் மாணவர்களின் நடனம் , விளையாட்டு போட்டிகள் , வினோத உடைப்போட்டி போன்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றன.

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

அருள்குமார்..

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர். பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பதாக அவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.

சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (03) அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீட்டிற்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (05.09.2022) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்பு தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இலங்கையில் பாரிய வீழ்ச்சி!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்!!

தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்..

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது மிரிஸ்வெவ பகுதியில் வைத்து நேற்று (05.09.2022) காலை இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை அன்புவெளிபுரம்- அண்ணா வீதியில் வசித்து வரும் கிரீஸ்கந்ததேவன் சஞ்சீவதரன (32 வயது) என்பவருடைய மோட்டார் சைக்கிளே தீப்பற்றியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த அனர்த்தம் தொடர்பில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் தீ பற்றியதற்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாணின் விலை : தலைசுற்ற வைக்கும் புதிய விலை!!

பாணின் விலை..

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது.

எதற்காக இறந்தோம் என தெரியாமலேயே இறந்துபோன சிறுவனின் உடல் நல்லடக்கம் : கொடூர பெண் சிறையிலடைப்பு!!

காரைக்காலில்..

புதுச்சேரியின் காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாலமணிகண்டன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பானவனாகவும் பள்ளியில் வலம் வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரின் தாய் சகாயராணி விக்டோரியா, என்பவர் கூல்ட்ரிங்ஸ் மூலம் விஷம் கலந்து கொடுத்து மணிகண்டனை கொன்றது தெரியவந்தது.

பாலமணிகண்டனுக்கும், அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் ‘வகுப்பில் முதலிடம் பெறுவது யார்?’ என்பதில் போட்டி இருந்ததாகவும், இதனால் பாலமணிகண்டன் மீது அம்மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா மோதல் போக்கை கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தே மாணவனை கொலை செய்துள்ளார்.பாலமணிகண்டனின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டதில் எலி மருந்து கலந்த குளிர்பானம் அருந்தியதால்தான் இறந்தது உறுதியானது.

விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்கு பதிவு செய்து , அவரைக் காரைக்கால் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதனிடையில் உயிரிழந்த சிறுவனின் உடல் கூர் ஆய்வை, வீடியோ பதிவுடன் ஜிப்மர் மருத்துவ குழு முடித்துள்ளது. சிறுவனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன்,

மாணவனின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. எதற்காக இறந்தோம் என தெரியாமலேயே அந்த சிறுவன் இறந்துபோனது தான் பெருஞ்சோகம்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்… கணவன் செய்த கொடூரம் : போலீசையே கலங்கவைத்த பயங்கரம்!!

தமிழ்நாட்டில்..

ஆற்காடு ரத்தினகிரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொ.டூ.ர.மா.க கொ.ன்.று வீட்டின் உள்ளே கி.ணற்றில் மூ.ட்டையாக கட்டி வீசிய க.ணவரை போலீசார் கை.து செய்து வி.சாரணை செய்து வருகின்றனர்..

குழந்தை இல்லாத நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொ.லை செ.ய்து நா.டகமாடிய கணவனை போலீசார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் குடும்ப வ.ன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வ.ரதட்சணை கொ.டுமையால் மனைவியை கொ.லை செ.ய்வது மற்றும் அதையொட்டி நடக்கும் த.ற்.கொ.லை ச.ம்பங்கள் என வரும் செய்திகள் நமக்கு அ.திர்ச்சியை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட ச.ண்டையும், ந.டத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கொ.லை செ.ய்.து தண்ணீர் தொட்டிக்குள் வீசிய க.ணவனின் செயல் மிகுந்த ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமு – சரிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை.

இந்த நிலையில், இருவரும் பெருமுகை பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். குழந்தையின்மை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல்வேறு நேரங்களில் ச.ண்.டையிட்டு வ.ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி ராமு ரத்தினகிரி காவல் நிலையத்தில் சென்று தனது மனைவி சரிதா கா.ணவில்லை என புகார் அளித்தார். பின்னர் பு.கா.ர் தெரிவித்த நிலையில் ராமு கே.ஜிஎப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ராமு குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ரத்தினகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ரத்தினகிரி போலீசார் ராமுவின் வீட்டிற்கு சென்று கதவைத் திறந்து பார்த்ததும் வீட்டினுள் தரை கிணறு அமைக்கப்பட்டு இருப்பதிலிருந்து து.=ர்நாற்றம் வீசப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரை கொண்டு கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்த போது சரிதாவின் உ.ட.ல் துணிகளால் சுத்தப்பட்டு கயிறுகளால் கட்டியபடி கி.ணற்றில் ச.டலமாக கி.டப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சரிதாவின் உ.ட.ல் மீ.ட்.ட போலீசார் வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு பிரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இது சம்பந்தமாக கேஜிஎஃப் பகுதியில் இருந்த ராமுவை தற்போது ரத்தினகிரி காவல்துறையினர் போனில் மூலம் வரவழைத்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து துணியால் மூட்டையாக கட்டி கிணற்றில் வீ.சி.ய ச.ம்பவம் ரத்தினகிரி பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாளில் திருமணம்… வீட்டில் நடந்த விபரீதம்… பரிதவிக்கும் பெண்ணின் குடும்பம்!!

திருச்சியில்..

திருச்சி அருகே திருமணம் நடக்க இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மணப்பெண்ணின் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளைபோன சம்பவம் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கருமண்டபம், RMS காலனி, அசோக்நகர், மேற்கு விஸ்தரிப்பில் வசித்து வருபவர் நாகலட்சுமி (வயது 57). இவர் ரெயில்வே ஊழியர். இவரது தங்கை மகளுக்கு வரும் புதன்கிழமை 7-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், நாகலட்சுமி மற்றும் அவரது தாயார் நேற்று காலை திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக திருச்சி சின்னக் கடைவீதிக்கு வந்து விட்டு மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் களவு போனது தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டது. திருமணத்திற்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் மணப்பெண்ணின் நகைகள் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆட்டோவில் பயணித்த நாகலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்துள்ள நகைகள், பட்டுப்புடவைகள், வெள்ளி பாத்திரங்கள் குறித்து சிலாகித்து பேசிக் கொண்டிருந்ததாகவும்,

அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என கூறினர். இதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு தடையாக இருந்த கணவன்… ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்!!

மண்டியாவில்..

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு வயது 30 ஆகும். இவருக்கும் 27 வயதான ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஷில்பாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்து வந்துள்ளார் என்றும், கணவருக்கு தெரியாமல் அவருடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இந்த விவகாரம் கணவர் மகேசுக்கு தெரியவர, இருவருக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. மனைவி ஷில்பா அவர் என்னுடைய நண்பர் தான், எங்களுக்குள் தவறாக எந்தவிஷயமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் மகேஷ் ஓரளவு சமாதானம் அடைந்தாலும், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் மனைவி ஷில்பா ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்.

அதன்படி, கடந்த 2 ஆம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து ஷில்பா கொலை செய்துள்ளார். பின்னர், வலிப்பு நோயால் கணவர் உயிரிழந்துவிட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.கார் மூலம் சடலத்தை மண்டியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பெற்றோர் வந்து பார்த்த போது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மண்டியா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீசார் மகேஷின் மனைவி ஷில்பாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ‘திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் பிறகு மகேஷை திருமணம் செய்து வைத்ததாகவும், அவருடன் வாழ விரும்பாததால் காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஷில்பாவையும், அவளது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தலை முடியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் விமான நிலைய பணியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிகாரிகளை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ளது நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச விமான நிலையம்.

இங்கே பொருட்களை பேக்கேஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார் ஜெர்மானி தாம்சன். 26 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார் ஜெர்மானி தாம்சன்.

அப்போது துரதிருஷ்டவசமாக அவரது தலைமுடி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த அவர் அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. இதன் காரணமாக அவர் படுகாயமடைந்திருக்கிறார்.

அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அருகில் இருந்த விமான நிலைய பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் காயம் காரணமாக ஜெர்மானி தாம்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையமே சோகத்தில் மூழ்கியது.

இதுபற்றி கண்ணீருடன் பேசிய அவரது தாயார் ஏஞ்செலா டார்சி,”என்னால் இப்போதும் கூட அவள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசியாக பணிக்குச் செல்லும்போது “வீட்டிற்கு வந்ததும் உன்னை சந்திக்கிறேன்” என கூறிவிட்டு சென்றார்.

மிகவும் அன்பான பெண் அவர். என்னுடைய ஒரே மகள் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்தார். ஜெர்மானி தாம்சன் கன்சாஸில் உள்ள ஹெஸ்டன் கல்லூரி மற்றும் மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள டூகலூ கல்லூரியில் சோசியாலஜி முடித்திருக்கிறார்.

ஜெர்மானியின் மரணம் குறித்து பேசிய GAT ஏர்லைன் கிரவுண்ட் சப்போர்ட் நிறுவனத்தின் CEO, மைக் ஹக்,” ஜெர்மானியின் மரண செய்தி கேட்டு பணியாளர்களின் இதயம் நொறுங்கிப்போனது. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர் போன்றவர்.

அனைவரிடத்திலும் அன்பாக பேசக்கூடியவர். அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது” என்றார். இது விமான நிலையத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாருமே கவனிக்காத சுஜாதாவின் இறப்பு : இலங்கையில் பிறந்த தமிழ் நடிகை மேல் இறுதிவரை இருந்த சுமை!!

சுஜாதா..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் இலங்கையில் பிறந்த சுஜாதா. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் பலராலும் அது கவனிக்கப்படவில்லை.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக சுஜாதா வலம் வந்தார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையின் கலேவில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார்.

இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.

கே.பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் கதாநாயாகியாக வலம் வந்தவர், பின்னர் உறுதுணை கதாப்பாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர்.

சுஜாதா. முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார், இரு குழந்தைகள் பிறந்தன. திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்படுகிறது.

எப்படி? யாரால்? அந்த வேலியை மீறி சுஜாதாவால் ஏன் வர முடியவில்லை? இதற்கெல்லாம் சுஜாதாவின் மரணம் வரை பதில் கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை.

ஒருகட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும், ஷூட்டிங் விஷயங்களைத் தெரிவிப்பதுமே பெரிய சவாலாக இருந்திருக்கிறது. இவரின் இருப்பே அடிக்கடி மர்மமாகிவிடும் அந்த அளவுக்கு இவரிடம் எளிதில் பேசுவதும் நெருங்குவதும் சினிமா துறையினருக்கே சவாலான காரியமாகியிருக்கிறது.

ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறார் எனவும் அவர் மீது சுமை உள்ளது என பலருக்கும் தெரிந்தது. ஆனாலும் அவரின் சுமையை இறக்கிவைக்கும் வடிகாலாக யாராலும் இருக்க முடியவில்லை. அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

2011-ம் ஆண்டு அவர் காலமான சமயத்தில் தமிழகச் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால், சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா தொடர்கதையாகவே முடிந்துவிட்டது தான் சோகம்.

கண்டங்கள் தாண்டி ஜெயித்த காதல்… தமிழ் இளைஞனை காதலித்து திருமணம் செய்த பிரான்ஸ் பெண்!!

காரைக்குடியில்..

பிரான்சு நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இரு வீட்டார் சம்மதப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

மனிதகுலம் கடல்தாண்டி பயணிக்க துவங்கிய போதே, காதலும் அந்த பயணத்தில் இணைந்துவிட்டது. வேறுபாடுகளை கடந்து மனங்களை ஒன்றிணைக்கும் காதல் எந்த சட்டகத்திற்குள்ளும் அடங்குவதில்லை. இது மீண்டும் மீண்டும் உலகில் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் காரைக்குடியை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரை சேர்ந்தவர் தங்கராசு. விவசாய குடும்பத்தில் பிறந்த தங்கராசு மாணிக்கவள்ளி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கலை ராஜன் என்ற மகன் இருக்கிறார். பிரான்சில் பணிபுரிந்து வரும் தங்கராசு அங்கே தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய மகன் கலை ராஜன் அங்குள்ள கல்லூரி ஒன்றில் கம்பியூட்டர் சைன்ஸ் படித்து வந்தார்.

அப்போது கயல் என்னும் இளம் பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது காதலாகவும் மலர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது வீட்டில் இதுகுறித்து பேசியுள்ளனர்.

இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இதனையடுத்து, மணமகன் கலை ராஜனின் சொந்த ஊரான அமராவதி புதூரில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக மணமகள் கயலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து காரைக்குடி வந்திருக்கின்றனர்.

இந்த திருமணத்தில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மணமகன் வீட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உங்கள் கனவு, இலட்சியம் சட்டத்துறையில் சட்டவல்லுனர் ஆவதா? இதோ அரிய சந்தர்ப்பம்

சட்டத்துறையில் சட்டவல்லுனர் ஆவதா?

சட்டத்தொழில் வாண்மை (Legal Professionals) என்பது சட்டத்துறையில் வெற்றியின் உச்சத்தினை எட்டுகின்ற படிக்கலாகும். உலகில் உள்ள தொழில்துறைகளில் கௌரவமும் பலமிக்க தொழில்துறையாகவும் சட்டத்துறை காணப்படுகின்றது. இதனால் பலரும் சட்டத்தொழிலில் நுழைவதற்கு முயற்சி செய்கின்றனர்.

சட்டக்கல்லூரியை அடைவதற்கான இறுதியான அரிய வாய்ப்பு சட்டத்தரணியாகும் உங்கள் கனவை நனவாக்கிக்கொள்ள உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை IDM Nations Campus வழங்குகின்றது.

LLB ( Hons)UK – இக்கற்கை நெறியினை A/L பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெறாதவர்களும், பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் இவ் சட்டமாணி கற்கை நெறியை தொடர முடியும்.

இக்கற்கை நெறியானது முழு நேரமாகவும், வார இறுதி நாட்களில் பகுதி நேரமாகவும் இடம்பெறும். மாணவர்கள் நேரடியாக இணைய முடியாதவர்கள் Online இணைய வழியினூடகவும் வகுப்புக்களை தொடர முடியும்.

IDM Nations Campus ஆனது 10வருடங்களுக்கு மேலாக சட்டமாணி கற்கை நெறிக்கான கடந்த காலங்களில் ,இவ் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பெற்றவர்கள் சட்டக்கல்லூரியில் சித்தி பெறுபவர்கள் 100% வீதத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவுரையாளர்கள் கற்பதற்கு இலகுவான முறையில் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் Sri Lanka Law College அங்கீகாரம் பெற்ற Buckinghamshire New University UK சர்வதேச பல்கலைகழகத்தில் LLB(Hons)UK பட்டப்படிப்பினை இலங்கை மாணவர்களுக்கு IDM Nations Campus வழங்குகின்றது

சட்டமாணி கற்கைநெறி யாருக்காக A/L பரீட்சையை பூர்த்தி செய்தவர்கள் , Law College இற்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் , சமாதான நீதவான்கள் (JP) , அரச ஊழியர்கள் , அதிகாரசபைகள் , கூட்டுத்தாபனங்கள் , சபைகள் போன்ற நிறுவன ஊழியர்கள் , தனியார் நிறுவன ஊழியர்கள் , ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சட்ட ஆலோசகர்கள் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , விசா ஆலோசகர்கள் , சட்டத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் , கிராம சேவையாளர்கள் , அரசியல் ஆலோசகர்கள் , அரசியல் பேச்சாளர்கள் , நிறுவன யாப்பு உருவாக்குபவர்கள் , அரசியல்வாதிகளின் பிரத்தியேக செயலாளர்கள் , மொழி பெயர்ப்பாளர்கள் ஆகியோருக்காக ஆகும்

இவ்வாறானதொரு பெறுமதியான சட்டமாணி கற்கை நெறியினை கற்க ஆர்வமுடையவர்கள் , சட்டத்தரணியாக வேண்டும் என்று இலக்கமைத்தவர்கள் உங்களது பதிவுகளை மேற்கொண்டு இணைந்துகொள்ள முடியும். உங்கள் பதிவுகளை இன்றே மேற்கொள்ளுங்கள். பதிவு/மேலதிக விபரங்களுக்கு 076-0970955 , 076-0970952 , 024-2222313

இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வவுனியாவில் BCS சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தை – 2022

BCS சர்வதேச பாடசாலை

வவுனியா மாவட்டத்தில் பிரபலமான பாடசாலையான IDM நிறுவனத்தின் கீழ் இயங்கும் BCS சர்வதேச பாடசாலையின் மாணவர்களின் திறனை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு சிறுவர் சந்தை ஒன்று இடம்பெற்றது.

பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஏ.எஸ். அன்று அனஸ்லி அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், பழைய மாணவர்கள், ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் ஒழுங்கு செய்த பெற்றோர்கள் , நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் அனைவருக்கும் BCS சர்வதேச பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா இல்லையா? இன்று தீர்மானம்!!

பாணின் விலை..

ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா, இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வர்த்தக அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதன்போது கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களுக்கான தேவை ஏற்கெனவே 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, பேக்கரி பொருட்களின் விலையை மேலும் உயர்த்தினால், தொழில்துறை வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை சந்தையில் கோதுமை மாவின் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.