மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!!

மகிழ்ச்சியான தகவல்..

மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த வாரத்தில் 1 மணித்தியால மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த மூன்றாம் திகதி முதல் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே என கூறியுள்ளார்.

மேலும் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை. தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான சாதாகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மின் உற்பத்திக்கான நிலக்கரி பிரச்சினை ஏற்படவில்லை எனில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு கூட முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின் உற்பத்திக்கு தேவையான நீர் மட்டம் மற்றும் நிலக்கரி போதியளவு இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்காது என அவர் மேலும் கூறியுள்ளார்.

திருமணம் முடிந்து 5 நாட்களில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அப்பெண் அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி(23) என்பது தெரியவந்தது. இசக்கி செல்விக்கு கடந்த 1ம் தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார். உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளைஞரை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு 2 வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், தான் அவர் மறுநாள் ஓடையில் கொலைசெய்யப்பட்ட பிணமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நேற்றுமாலை இசக்கி செல்வியை ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரியவந்தது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயியாக மாறிய ஐடி ஊழியர்… கோடிகளில் கிடைக்கும் இலாபம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார்.

தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும்,

பழங்களை சாகுபடி செய்து, அவற்றை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார். ஐடி வேலையை விட்டுவிட்டு வந்த இவர், தற்போது வெற்றிகரமான விவசாயியாக மாறியுள்ளார்.

ஒரே நாளில் மாறிய ஏழையின் வாழ்க்கை : 60 வயது முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

கேரளாவில்..

60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவரின் வாழ்க்கையை அப்பகுதி போட்டோகிராபர் மாற்றி உள்ளார். இவரின் தோற்றத்தைப் பார்த்த போட்டோகிராபர் அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார்.

முதலில் இதற்கு மம்மிக்கா மறுத்துள்ளார். ஆனால் தான் எடுத்த போட்டோக்களை காட்டி மம்மிக்காவை போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனை அடுத்து மம்மிக்காவிற்கு கோட் சூட், மேக் அப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தினை பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் பகிர ஆரம்பித்துள்ளனர். ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்து வருகின்றார்.

ஒரு கழிவறைக்குள் இரு கோப்பைகள் : இப்படியும் ஓர் வினோதம்!!

கழிவறையில்..

கோவை மாநகராட்சியின் சார்பில் அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்ட கழிவறையில் இரு டாய்லெட் கோப்பைகளை ஒரே அறைக்குள் வைத்து அமைத்துள்ளதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரே கழிவறைக்குள் இரண்டு டாய்லெட் கோப்பைகளை மிகவும் நெருக்கமாக வைத்து, அதுவும் இடையில் தடுப்புச்சுவர்கள்கூட இல்லாமல் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான கழிவறையைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.

இலங்கையின் பிரபல நடிகை தமிதா கைது!!

தமிதா அபேரத்ன..

இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்துவ சந்தி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கெதிராக ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் புதிய நடைமுறை : கல்வி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பாடசாலைகளில்..

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் இனி பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹெரோயினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் சட்டவிரோத செயல் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். அத்துடன், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல பாடசாலை வகுப்பறையில் மதுபானம் அருந்திய மாணவிகள் : பெற்றோர்கள் அதிர்ச்சி!!

பாடசாலை வகுப்பறையில்..

பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது.

காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே இவ்வாறு வீட்டிலிருந்து பீர் எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே மாணவிகள் பீர் அருந்திய விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி பாடசாலைக்கு எவ்வாறு பியர் எடுத்து வந்தார், அதை பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என பிள்ளைகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இளைஞனின் வெறிச்செயலுக்கு பலியான மூன்று சகோதரர்கள் : சம்பவத்தில் முக்கிய திருப்பம்!!

அயர்லாந்தில்..

அயர்லாந்தின் Tallaght பகுதியில் சொந்த சகோதரர்கள் மூவரை கொடூரமாக கொலை செய்துள்ள 24 வயது இளைஞரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த நபர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையில் கொலை தொடர்பில் கருத்துக் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டப்ளின் நகரின் Tallaght பகுதியில் நாட்டையே உலுக்கும் கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. இரவோடு இரவாக 18 வயதான Lisa Cash, அவரது 8 வயது இரட்டை சகோதரர்கள் Christy மற்றும் Chelsea Cawley ஆகியோரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் 24 வயதேயான Andy Cash.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைதான Andy Cash மீது பொலிசார் திங்களன்று மதியத்திற்கு மேல், கொலை வழக்கு பதிந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில், கொலை தொடர்பில் தாம் கருதேதும் தெரிவிக்க விரும்பவில்லை என Andy Cash கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூன்று கொலை வழக்கு தொடர்பாக தனித்தனியாக குற்றப்பத்திரிகை நகலை அவருக்கு வழங்கியுள்ளனர். மேலும், கொலை வழக்குகளுக்கு மாவட்ட நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க முடியாது என்பதால், உயர் நீதிமன்றத்தை நாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, வழக்கு விசாரணையின் பொருட்டு, காவலில் வைத்திருக்க பொலிசார் அனுமதி கோரப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கறுப்பின பெண்ணிற்கு தாலி கட்டிய தமிழர் : பட்டுப் புடவையில் ஜொலித்த மணப்பெண்!!

தமிழகத்தில்..

நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து பாரம்பரிய முறையில் தமிழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தின் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் திருமால்பிரசாத் (28). இவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வருகிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நைஜீரியவுக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அந்த நாட்டிலுள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதாகும் பட்ரிசியா இஃயின் எஜே என்ற இளம் பெண் மீது காதல் வசப்பட்டார்.

பட்ரிசியாவின் தோற்றமும் அழகும் நொடி நொடிக்கு மூச்சுக்காற்றாய் இதயத்தை உரசியதால், திருமால்பிரசாத் ஒருநாள் அவரிடம் சென்று மனம் திறந்து தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பட்ரிசியாவுக்கும் திருமால்பிரசாத்தைப் பிடித்து போக இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் அளவுக்கு காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஜேர்மனியில் பணிபுரிவதற்காக திருமால்பிரசாத் சென்றுவிட்டார். ஆனாலும், அவர்களுக்கு இடையேயான காதலும், அன்பும் கொஞ்சம்கூட குறையவில்லை.

திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ முடிவெடுத்த இருவரும், அது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி புரிய வைத்தனர். அவர்களது பெற்றோர் ஒப்புதலும் கிடைத்தது. பட்ரிசியா இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.

இதை தனது காதலனிடம் தெரிவித்தார். அதன்படி இவர்களது திருமண ஏற்பாடு மணமகனின் சொந்த ஊரான‌ வாலாஜாவில் செய்யப்பட்டது. இதற்காக மணமகள் பட்ரிசியா நைஜீரியாவில் இருந்து தனது அண்ணன் சிபுஸேர்வாலண்னைடன்எஜெ என்பவருடன் நேற்று முன்தினம் வாலாஜா வந்தார்.

அங்குள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு மணமக்கள் வரவேற்பு மேளதாளத்துடன் நடந்தது. இதையடுத்து நேற்று காலை திருமண விழா சிறப்பாக நடந்தது.

கைகளில் மெஹந்தி, வளையல்கள் அலங்கரிக்க புடவை உடுத்தி மணமேடையில் அமர்ந்த பட்ரிசியாவின் கழுத்தில் தாலி கட்டி மணமாலை சூடினார் திருமால்பிரசாத். கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்த்தூவி இருவரையும் வாழ்த்தினர்.

திருமால்பிரசாத் கூறுகையில், நான் காதலிக்கும்போதே பட்ரிசியாவிடம் என் பெற்றோரும், என் அக்காவும் வீடியோ அழைப்பில் பேசுவார்கள். தமிழ் மொழியை பேசவும், படிக்கவும் தற்போது கற்று கொண்டுள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய பெண்… உயிரிழந்த பின் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

விபத்தில்..

விபத்தில் மூளை செயலிழந்த பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 5 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கலைச் செல்வி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் இறந்துபோன நிலையில் கலைச் செல்வி கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி, இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்திருக்கிறார் கலைச் செல்வி. உடனடியாக அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அவருடைய மூளை செயலிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து மருத்துவர்கள் கலைச் செல்வியின் உறவினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

அப்போது அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் உடல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளின் பட்டியலை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் கலைச் செல்வியின் 2 கண்கள், 2 சிறுநீரகம்,

கல்லீரல், இதயம் ஆகியவற்றை தானமாக பெற்று சென்னை காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, வேலூர் தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்புடன் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கலைச்செல்வியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் இழந்த வாழ்க்கையை திரும்பப் பெற்றிருக்கின்றனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

உயிரிழந்த மகனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சடலத்தை உப்புக் குவியலில் வைத்த பெற்றோர் : பின்னர் நடந்தது என்ன?

இந்தியாவில்..

இந்தியாவில் உயிரிழந்த 10 வயது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுவான் என நம்பி 8 மணி நேரம் உப்புக் குவியலில் சடலத்தை பெற்றோர் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் உலகம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறி வருகிறது. இருப்பினும், சில இடங்களில், பண்டைய மூடநம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்னும் நிலவுகின்றன.

அப்படியொரு சம்பவம் தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் நடந்துள்ளது. சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குட்டையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலத்தை மீட்டுக் கொண்டு வரும் போது, சடலத்தை உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். ஏனெனில் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களை உப்புக்குள் வைத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என நம்பினர்.

இதையடுத்து தன்னுடைய மகன் திரும்ப உயிர் பெற்று விடுவான் என்ற நம்பிக்கையில் பெற்றோர் நூறு கிலோவுக்கு மேல் உப்பை கொண்டு வந்தனர். பின்னர் சுரேஷின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர்.

ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்த பாடில்லை. சுமார் எட்டு மணி நேரம் இப்படியே வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெற்றோரிடம் பேசினார்.

பின்னர் சிறுவன் உயிர் பிழைக்கமாட்டான் என்பதை அவர்கள் உணர்ந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிக்கடி திட்டிய அப்பா.. மகன் எடுத்த விபரீத முடிவு.. கதறிய தாய் செய்த காரியம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வியாசர்பாடியில்..


சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியின் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 55). இவர், ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரகுநாதனின் மனைவி பெயர் இளவரசி. மேலும், இவர்களின் ஒரே மகன் தான் சுசில்.

பி காம் படித்துள்ள சுசில், கொடுங்கையூர் பகுதி அருகே அமைந்துள்ள நடனப் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, நடன பள்ளியில் உள்ள வகுப்புகள் முடித்து விட்டு வீடு திரும்பும் சுசில், இரவு நேரங்களில் பெரும்பாலும் தாமதமாகவே வருவதை பழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், சுசிலின் தந்தையான ரகுநாதன், இரவு நேரங்களில் தாமதமாக வீடு திரும்பி வருவதற்கு அவரை திட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, தந்தை மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், சமீபத்தில் தனது அறைக்குள் சென்ற சுசில், திடீரென விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, நீண்ட நேரமாக மகன் சுசில் அறையில் இருந்து வெளியே வராததால், தாய் இளவரசி பதாற்றம் அடைந்துள்ளார். இதன் பின்னர், அவரது அறைக்குள் சென்று பார்த்த இளவரசிக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுசிலை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். மகனின் நிலையை அறிந்ததும் கண்ணீர் விட்டு கதறித் துடித்துள்ளார் இளவரசி.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற இளவரசி, மகனின் அறைக்கு சென்று அவரை போலவே விபரீத முடிவையும் எடுத்துள்ளார். சுசிலின் நிலையால், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உடைந்து போன நிலையில், இளவரசி எடுத்த முடிவும் அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மகன் விபரீத முடிவை எடுத்ததால், வேதனையில் இருந்த தாயும் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் கனமழையால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

வெள்ளத்தில்..

தொடர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சித்தாபுரா பகுதியில் வசித்து வரும், அகிலா( 23) என்ற இளம்பெண் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போல தனது பணி முடிந்து நேற்று மாலை சுமார் 6:30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த சுற்று வட்டார பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்பொழுது அகிலா தனது இரண்டு சக்கர வாகனத்தில் தட்டு தடுமாறி வீடு திரும்பி கொண்டிருக்கும் போது சாலையில் சித்தாபுர மயூரா பேக்கரி அருகே சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.

இதனால் சாலையில் விழுவதை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் அருகில் இருந்த மின் கம்பத்தை தாங்கிப் பிடித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மீது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அகிலா துடிதுடித்து கீழே விழுந்தார்.

இதை கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்திற்கு பெங்களூர் மாநகராட்சியும் பெங்களூர் மின் பகிர்மான துறையுமே முழு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!!

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை..

இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது.

புதிய தீர்மானத்திற்கமைய, வருடாந்த வருமானம் 1.2 மில்லியனில் இருந்து 06 மில்லியன் ரூபா வரை வருமான வரியாக 6 சதவீதம் மற்றும் 05 மில்லியனில் இருந்து 10 மில்லியன் வரை வருமான வரி 12 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி 10-15 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டவர்களுக்கு 24 சதவீதம் மற்றும் 15-20 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டவர்களுக்கு 30 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 20 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் வருமானத்தில் 36 சதவீதம் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த வரி வரம்புகள் விதிக்கப்பட்டன, ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தத்தில், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வருமான வரி வரம்பு ஆண்டு வருமானமாக 03 மில்லியனாக மாற்றப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இந்த வரித் திருத்தம் கட்டாய சரத்தான மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற கார் விபத்து!!

கார் விபத்து..

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (07.09.2022) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் வீதியை விட்டு விலகியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற போதும் சம்பவத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.