வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் நாளை (10.09) வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக குறித்த நடமாடும் சேவை காலை 9 மணியில் இருந்து மாலை 3.30 வரை இடம்பெறவுள்ளது.
இதில் சிறு குற்றப்பிரிவு முறைப்பாடுகள், தொலைந்த ஆவணங்கள் பற்றிய முறைப்பாடுகள், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இணக்க சபை செயற்பாடுகள்,
கிராம அலுவலரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய மாநிலம் கேரளாவில் திருமணமான புதுமணப்பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா(25). திருமணமான இவர் சில நாட்களில் கணவரை முறைப்படி விவாகரத்து செய்தார்.
அதன் பின்னர் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ்(35) என்பவருக்கும், நிகிதாவுக்கும் கடந்த சூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அனீஷுக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததால் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
இதனால் திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதி வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கேயே தேனிலவு கொண்டாடியுள்ளனர். ஆனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு திரும்பிய நிலையில் நிகிதா நடத்தை மீது அனீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அனீஷ், நிகிதா இருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனைக் கேட்டு பயந்துபோன அனீஷ் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நிகிதா ரத்த வெள்ளத்தில் கிடைத்துள்ளார். அவரது அருகே ரத்தக்கறையுடன் அனீஷ் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நிகிதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிகிதா உயிரிழந்தார். பொலிஸார் அனீஷிடம் நடத்திய விசாரணையில், அவர் குத்துவிளக்கால் மனைவியை தலையில் பலமாக தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமணமான பத்து நாளில் புதுமணப்பெண் கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயத்தை சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் அரிசி மாவு ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் விலை குறைப்பு
இதேவேளை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டிருந்தன.
அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பொதுவாகவே மாரடைப்பு என்பது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ஏற்பட்டு வந்தது.
ஆனால் தற்போது உள்ள அதிநவீன மற்றும் வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த சேக் சஜிதா என்ற ஏழாம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சேக் சஜிதாவிடம் பாடம் தொடர்பான சில கேள்விகளை ஆசிரியர் எழுப்பியுள்ளார். அப்போது அதற்கு பதிலளித்து கொண்டு இருந்த சஜிதா திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேக் சஜிதாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மாணவி சேக் சஜிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது.
துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த பிரதேசத்தில் வாழைக்குலை மற்றும் தேங்காய் திருட்டு அடிக்கடி இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.
நேற்று (08.09) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன்,
வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன. இச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து பொலிசாரால் வாள்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னேர ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் முன் திரண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற பேபி அஞ்சு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் வளர்ந்த பிறகு கேளடி கண்மணி, பாப்கார்ன், மிலிட்டரி, அபிராமி, மதயானை கூட்டம், இந்திர விழா போன்ற ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். டைகர் பிரபாகர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.
தமிழிலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை பூமி, அண்ணாமலை, பாண்டியன், முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தான் நான்காவதாக அஞ்சுவை காதலித்து மணந்தார்.
டைகர் பிரபாகர் காதலித்த போது அவருக்கு வயது 17, டைகருக்கு வயது 48. தனது 52 ஆவது வயதில் 2001 ம் ஆண்டு டைகர் மரணமடைந்தார். இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, எனது தந்தை வயதில் இருந்தவரை காதலித்தேன்,
குடும்பத்தார் எதிர்ப்பை மீறி அவரை மணந்தேன், அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்து அவரது பிள்ளைகள் என்னை விட மூத்தவர்கள் என தெரிந்தது.
நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் காளிதாஸ் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு உடன் பணிபுரிந்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ஹானா பங்க்லோனாவை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம்- சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைந்து பொய் புகார் கூறிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலா பால் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது முன்னல் காதலர் பாடகர் பவ்நிந்தர் சிங் மீது போலீஸில் புகார் கொடுத்து அதிர விட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பாடகர் பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். ஆதாரத்தை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இரண்டாவது கணவர் தற்போது அமலா பாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர் பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடைய காதலர் குறித்தும், அவருடன் திருமணம் ஆனது குறித்தும் வெளியில் காட்டிக் கொள்ளாத அமலாபால், திருமணம் செய்தவர் மீது பாலியல் வழக்கு கொடுத்து அதிர வைத்துள்ளார்.
ஏற்கனவே பவ்நிந்தர் சிங் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது, அது போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என அமலா பால் கூறினார்.
ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் வாழாமல் பொய் புகார்களை கூறி வருவதாக தெரிவித்துள்ள பாடகர் பவ்நிந்தர் சிங், அமலா பால் தன்னை திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங்குக்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியுள்ளது.
கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் எச்சரித்ததுடன் 10,000 ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று வியாழக்கிழமை (08.09) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றுக்காக கோழி புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டனர்.
அத்துடன் உணவக உரிமையாளரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை இன்று 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளிததார்.
இன்றைய காலத்தில் நம்மில் பலரும் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். நேராக உணவகத்திற்கு சென்று உணவு அருந்தும் நேரத்தை விட, நமது வீட்டில் இருந்தபடியே உணவு வகைகளை பார்த்து ஆர்டர் செய்து உண்ணுவதால் நமது நேரமும் மிச்சமாகிறது.
இதன் காரணமாக பலரும் வீட்டிலிருந்து உணவை ஆர்டர் செய்வதையே பெரும்பாலும் விரும்பி வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் டெலிவரி செய்த ஒரு நபருக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Damien Sanders என்ற நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் Chicken Wings, Fries உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, Damien ஆர்டர் செய்த உணவும் வீடு தேடி வந்துள்ளது.
ஆனால், பார்சலை திறந்து பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இதற்கு காரணம், சிக்கன் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் எலும்புகள் மட்டுமே இருந்துள்ளது. மேலும், Fries டப்பா காலியாகவும் இருந்துள்ளது.
அத்துடன் டேமினுக்கு வந்த பார்சலில் ஒரு கடிதமும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. டேமினுக்கு உணவு டெலிவரி செய்த நபர் தான் அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், “என்னை மன்னிக்கவும். நான் உங்கள் உணவை சாப்பிட்டு விட்டேன். நான் மிகவும் பசியில் இருந்தேன். எனக்காக நீங்கள் பணம் செலுத்தியதாக கருதி கொள்ளுங்கள். இந்த வேலையை நான் விடப் போகிறேன்” என அந்த கடிதத்தில் டெலிவரி ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டேமின். மேலும், அந்த டெலிவரி ஊழியர் பற்றியும் சில கருத்துக்களை அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், ஒரு சிலர் இந்த வீடியோவை டேமினே உருவாக்கி இருக்கலாம் என குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் சிலர், டெலிவரி ஊழியர் குறித்தும், டேமினுக்கு நடந்த செயல் குறித்தும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் எட்டு மணித்தியால மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது.
உரிய காலத்திற்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 08 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிலக்கரிக்காக 6 மாதங்கள் காத்திருக்க முடியாது. நிலக்கரி கிடைக்கவில்லை எனில் மின்விநியோகத்தை 24 மணித்தியாலங்கள் வழங்க முடியாது.
யாராவது உதவினால் மட்டுமே நிலக்கரி பெற முடியும். போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பதனை விட்டுவிட்டு தேவையான பணத்தை கண்டுபிடிக்கும் வழியை தேடுவதே முக்கியமாகும். இல்லையெனில் தினசரி 8 மணித்தியால மின்தடையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார்.
எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரியும் பிரவீன் குமார்.
இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன்-செல்வராணி தம்பதியினரின் மகன் ஆவார். உதவி மேலாளராக பணிபுரியும் பிரவீன் குமார் தென்கொரியா நாட்டை சேர்ந்த சேங்வாமுன் என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் வாணியம்பாடி-க்கு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரப்படி மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர்.
பலரை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை அபகரித்து சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கடுவெல பொலிஸார் நேற்று (07.09) கைது செய்துள்ளனர்.
மல்வான பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை கைதான சந்தேக நபர் கடுவலை, நவகமுவ, மாலபே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிஎம் இயந்திரங்ளில்,
பணம் எடுக்க முற்பட்டபோதும் அது கைகூடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கணவனை பிரிந்து மனைவி தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இந்த கொலை அரங்கேறியுள்ளது.
மனதைப் பார்த்து காதலிப்பவர்களை விட, அழகு, அந்தஸ்தை பார்த்து காதலிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்து வருகிறது, அதிலும் காம இச்சையை தீர்த்துக் கொள்ள காதலிப்பவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம் என சொல்லலாம். காரணம் திருமண மான ஒரு சில ஆண்டுகளிலேயே காதல் தம்பதியர் பிரிந்து தவறான உறவில் ஈடுபடுவதுதான் காரணம்.
இந்த வரிசையில் திருமண உறவில் நம்பிக்கை இழந்த மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டம் பாக்காரபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அதே பகுதியைச் சேர்ந்த ரெட்டம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் அதையெல்லாம் மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரெட்டம்மா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில ஆண்டுகள் வரை அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே கடந்தது.
தற்போது அவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார், கடந்த சில ஆண்டுகளாக கணவர் ஸ்ரீகாந்த் மீது மனைவி ரெட்டம்மாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
அதன்விளைவாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில்தான் காதல் மனைவியின் ரெட்டம்மாவுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது.
இதனால் கணவனுடன் சண்டையிட்டு ,பிரிந்து தனியாக வீடு எடுத்து ரெட்டம்மா வசித்து வந்தார். திருமலையில் உள்ள பல கடைகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான் காதலன், ரெட்டம்மாவை அடிக்கடி சந்தித்து வருவதாக கணவன் ஸ்ரீகாந்துக்கு தகவல் கிடைத்தது.
அடிக்கடி சொந்த ஊருக்கு கள்ளக்காதலன் வந்து செல்வது ஸ்ரீகாந்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரையும் தீர்த்துக்கட்ட ஸ்ரீகாந்த் முடிவு செய்தார், வீட்டில் தனியாக இருந்த மனைவியின் ரெட்டம்மாவிடம் சென்று ஸ்ரீகாந்த் தகராறில் ஈடுபட்டார்.
அதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை கரகர வென அறுத்து கொலை செய்தார், ரெட்டம்மா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார், பின்னர் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடினார், ரெட்டம்மாவின் வீட்டிற்குள் தெருநாய்கள் சென்றுவருவதை கண்ட அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்,
அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார், அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து கணவன் ஸ்ரீகாந்தை தேடி வருகின்றனர்.
திருமணம் நடந்து 2 மாதங்களே ஆகும் நிலையில், மனைவியை கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 35). இவருக்கும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா (வயது 25) என்ற இளம்பெண்ணும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது.
இவர்களுக்கு திருமணம் முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வர்க்கலை பகுதிக்கு இருவரும் வந்திருந்தனர். இங்கு அவர்களது வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் இருவருக்குள்ளும் முற்றிப்போக,
ஆத்திரமடைந்த அனீஷ், அருகிலிருந்த விளக்கை எடுத்து தனது மனைவி நிகிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தின் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து நிகிதாவின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நிகிதாவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினால் தான், அனீஷ் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இறந்துபோன நிகிதாவின் கணவர் அனீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதங்களில் ஏற்பட்ட சண்டையில் கணவர் மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.