இறந்த தந்தையை கண்முன் கொண்டு வந்த மகன் : திருமண மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில்..

கொரோனாவால் உயிரிழந்த தந்தையை மெழுகு சிலை போல் வடிவமைத்து நெகிழ வைத்துள்ளார் அவரது மகன். தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா, சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவரது தந்தையான பன்னீர்செல்வம் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என அடிக்கடி பன்னீர்செல்வம் கூறுவது வழக்கமாம்.

இதனால் தன்னுடைய திருமணத்தன்று தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார் ஆரோக்கிய இயேசு ராஜா. இதற்காக அச்சு அசலாக தந்தையை போன்றே மெழுகு சிலை ஒன்றை வடிவமைக்க ஆசைப்பட்டார், இதற்கு 5 லட்ச ரூபாய் வரை செலவானது.

அந்த சிலையை வீட்டில் வைத்து தினந்தோறும் வணங்கி சென்றார், இதற்கிடையே ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும் – ஜூலியட் லதா என்பவருக்கும் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்தன்று மண்டபத்தின் இருக்கையில் தந்தையின் சிலையை அமர வைத்து திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு விழாவும் கோலாகலமாக நடந்தது. அப்போது பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.

அதேபோல் உறவினர்களும் அந்த மெழுகு சிலை பார்த்து கண் கலங்கினர். பின்னர் அனைவரும் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காகத்திற்கு கேக் விருந்து : பதிலுக்கு காகம் செய்த வினோத செயல்!!

ட்விட்டரில்..

மக்கள் பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். உணவை பறவைகள் கொத்திக்கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு சற்று பசுமையான நினைவலைகளை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் பதிலுக்கு பறவைகள் அரிதாக சில மனதிற்கு இனிய செயல்களையும் செய்வது உண்டு. அத்தகைய ஒரு நிகழ்வை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பயனர் கொலின் லிண்ட்சே என்பவர் தனது ட்விட்டரில், தான் ஒரு கேக்கைப் பகிர்ந்துகொண்டபோது அதற்குப் பதில் காகம்தான் பரிசளித்தது. ‘நான் அதற்கு ஒரு சிறிய கேக்கைப் பகிர்ந்து கொண்டேன். அதற்கு பதிலாக எனக்கு ஒரு பரிசு கொடுத்தது.

ஒரு கல்லை தனது கூரிய அலகால், எடுத்துக்கொண்டு வந்து என் காலடியில் போட்டு நன்றி கூறும் விதம் அது நடந்துகொண்டது என்று கூறியுள்ளார். ‘ட்விட்டரில் இதய சின்னம் மற்றும் காகத்தின் பரிசுக் கல்லைக் கொண்ட காகத்தின் படத்தைப் பகிர்வதன் மூலம் அவர் இந்த வரிகளை எழுதியுள்ளார்.

பலர் அந்த ட்வீட்டை பகிர்ந்து காகத்தின் செயலை கண்டு வியந்துள்ளனர். காகங்கள் நல்ல நண்பர்கள் என்றும், தினமும் உணவளித்தால், நீங்கள் வெளியே சென்று ஆபத்தில் ஏதேனும் சிக்கினால் உங்களைக் காக்க முயற்சிக்கும் என்று லின்ஸ்டெக்கிற்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றனர்.

டீ விற்கும் இளைஞனை கரம்பிடித்த மருத்துவர்… சுவாரஸ்யமான காதல் கதை!!

காதல்..

உண்மையான காதல் மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் எதை வேண்டும் வென்று விடலாம் என பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு உண்மையான காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இந்த உண்மையான காதலுக்கு பணம், மதம், நாடு, மொழி, ஏழை, பணக்காரன் என்று எந்த ஒரு பாகுபாடும் தெரியாது.

அப்படிப்பட்ட காதல் மிகவும் மகத்தான ஒன்றாகவே பார்க்கப்படும் நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜோடி தொடர்பான செய்தி வந்து தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கிஷ்வர் ஷஹிபா என்ற பெண் ஒருவர் மருத்துவராக இருந்து வருகிறார். இவர் வேலை பார்த்து வந்த அதே மருத்துவமனையில் ஷாஷாத் என்பவர் மருத்துவர் அறைகளை சுத்தம் செய்வதும், மருத்துவர்களுக்கு டீ விற்பனை செய்யும் வேலையிலிம் ஈடுபட்டு வந்துள்ளார்.

இப்படி மருத்துவமனையில் பணியாளராகவும், டீ விற்பனை செய்யும் நபராகவும் இருந்த ஷாஷாத் மீது தான் கிஷ்வர் ஷஹிபாவுக்கு காதல் வந்துள்ளது. முன்னதாக, ஷாஷாதை முதலில் பார்த்த போது, மருத்துவமனை பணியாளராகவோ அல்லது டீ விற்பனை செய்யும் நபராகவோ ஷஹிபாவுக்கு தோன்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த தொழிலை ஷாஷாத் நடத்தி வந்ததாலும், எளிமையாக இருந்ததாலும் அவர் பால் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளார் ஷஹிபா. மேலும் அந்த மருத்துவமனையில், 3 மருத்துவர்களின் அறையை சுத்தம் செய்வதுடன் அவர்களுக்கு தேநீர் கொடுக்கும் வேலையை ஷாஷாத் பார்த்து வந்துள்ளார்.

அப்போது அவர் மீது ஏற்கனவே ஈர்க்கப்பட்ட கிஷ்வர் ஷஹிபா, போன் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார். இதன் பின்னர் இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். அப்போது ஒரு நாள், தன்னுடைய மருத்துவர் அறையில் வைத்து தனது காதலையும் ஷாஷாத்திடம் ஷஹிபா வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு பெண் மருத்துவர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதால் அதனை கொஞ்சம் கூட நம்ப முடியாத ஷாஷாத், அதிர்ந்து போனது மட்டுமில்லாமல், காய்ச்சல் வரும் அளவுக்கு வரை சென்றுள்ளது. ஷஹிபா காதலுக்கு பின்னர் ஷாஷாத்தும் சம்மதம் சொன்ன நிலையில் இருவரும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துள்ளனர்.

மேலும், தன்னுடைய சக மருத்துவர்கள் தன்னை கிண்டல் செய்வதால் வேலையில் இருந்து ஒதுங்கிய ஷஹிபா, புதிதாக க்ளினிக் ஒன்றை தொடங்கவும் திட்டம் போட்டுள்ளார்.

ஷஹிபா மற்றும் ஷாஷாத் ஆகியோர், பாகிஸ்தானின் திபால்புர் பகுதியில் ஒன்றாக இணைந்து வசித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்த உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம்!!

உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம்..

13 முதல் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம் இன்று (10.09.2022) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைத்திருக்கும் தமது உறவுகளை பார்வையிடுவதற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் அவர்களின் உறவினர்களை யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்பு நோக்கி இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் அழைத்துச் செல்கின்றனர்.

அந்த வகையில் யாழ் மாவட்டத்திலிருந்து இன்று மதியம் ஆரம்பமான பயணம் மாலை 6 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து அரசியல் கைதிகளில் விடுதலையினை வேண்டி ஆலய வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் மற்றும் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் இணைந்து அவர்களுக்கான உணவுகளையும் வழங்கியிருந்தனர்.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் விபத்து தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால்

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்குகளை தடுக்கும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இவ் செயற்றிட்டத்தின் முதற்கட்ட கருத்தரங்கு வவுனியா மன்னார் வீதியிலுள்ள காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது வீதி விபத்துக்கள் எவ்வாறு இடம்பெறுகின்றது , வீதி விதிமுறைகள் , பாதுகாப்பான முறையில் எவ்வாறு வீதியில் பயணிப்பது , மோட்டார் சைக்கில்களில் பயணிக்கும் போது தலைக்கவசத்தின் முக்கியத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாரினால் மாணவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் , விபத்து தொடர்பிலான காணோளிகளும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

இவ் கருத்தரங்களில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தியதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் விக்டர் ராஜால் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன!!

பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட கூமாங்குளம் பகுதியிலுள்ள பல பகுதிகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் விக்டர் ராஜ் நிதி ஒதுக்கீட்டில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கூமாங்குளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக காணப்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தும் செயற்பாடு பிரதேச சபை உறுப்பிர் விக்டர்ராஜ் ஒத்துழைப்பில் சபையின் மொத்தமாக நான்கு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் முதற்கட்டமாக கூமாங்குளம் மயான வீதி , முனியப்பர் கோவில் வீதி , பாண் சின்னக்குளம் வீதி , பார்த்தான் கோட்டம் ஆகிய பகுதிகளின் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட 9 பேர் பொலிசாரால் கைது!!

9 பேர் பொலிசாரால் கைது..

வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (10.09.2022) தெரிவித்தனர்.

வவுனியா, பொன்னாவரசன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று (09.09) காலை இடம்பெற்ற போது அங்கு வந்த ஒரு குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக உடனடியாக மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் காயம் காரணமாக மதியமளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 20 இற்கு மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,

அவர்களில் குறித்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி… திருமண நிகழ்வுக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்!!

கிருஷ்ணகிரியில்..

திருமண நிகழ்வுக்காக 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் விபத்துக்குள்ளானதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த வேனை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதனால் அந்த வேன் டிரைவரரும் முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மணப்பெண்ணின் தங்கை சாந்தி என்ற பெண் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் நடக்கவிருந்த திருமணமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்வுக்காக உறவினர்கள் வேனில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பூந்தோட்டத்தில் பொலிசாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!!

நடமாடும் சேவை..

பொலிஸ் தினத்தை முன்னிட்டு, வவுனியா – பூந்தோட்டத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது. வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று (10.09.2022) நடமாடும் சேவை இடம்பெற்றது.

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, மக்கள் இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றிருந்தது. மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களிற்கான சேவைகளினை பெற்றுக்கொண்டனர்.

சிறு குற்றப்பிரிவு முறைப்பாடுகள், தொலைந்த ஆவணங்கள் பற்றிய முறைப்பாடுகள், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இணக்க சபை செயற்பாடுகள்,

கிராம அலுவலரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள கூடிய வகையில் குறித்த நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, மத்தியஸ்தசபையின் உபதலைவர் அமிர்தலிங்கம் மற்றும் ஆட்பதிவு திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மீண்டும் பாணின் விலையில் மாற்றம்!!

பாணின் விலை..

கடந்த நாட்களில் பாணின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் பாணின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, சில பேக்கரி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிறையை விட குறைவான நிறையுடைய ஒரு இறாத்தல் பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து அந்த விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : திரைத்துறையினர் அதிர்ச்சி!!

தூரிகை..

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை.

இந்த நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண்… தாத்தா பட்ட கஷ்டம் பற்றி பேத்தியின் கண்கலங்கவைக்கும் பதிவு!!

பல்கலைக்கழகத்தில்..

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நிலையில், இது தொடர்பாக அவர் பகிர்ந்த Linkedin பதிவு ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Juhi Kore என்ற இந்திய இளம்பெண் ஒருவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Comparative Social Politics டிகிரியை முடித்துள்ளார். தொடர்ந்து, சமீபத்தில் பட்டமளிப்பு விழாவில் ஜூஹி கோரே கலந்து கொண்டு தான் பட்டம் பெற்றது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தன்னுடைய பதிவில் தனது தாத்தா கல்வி பெற எப்படி போராடினார் என்பது பற்றியும் சில உருக்கமான கருத்துக்களை தனது பதிவில் ஜூஹி கோரே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த ஜூஹியின் பதிவில், “1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆனால், இங்குள்ள அனைத்து குடிமகன்களுக்கும் சுதந்திரமாக வாழ வழி கிடைக்கவில்லை. அப்படி மகாராஷ்டிராவில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த இளம் சிறுவன் ஒருவரை இரண்டு காரணங்களால் அவரது குடும்பத்தினர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் அவர் எப்படி நடத்தப்படுவார் என்ற காரணத்திற்காக பயந்த அவரின் குடும்பம், பள்ளிக்கு அனுப்பவில்லை. இனியொரு காரணம், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரை வேலைக்கும் அனுப்பியது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஜூஹியின் தாத்தா, அதிகாலை 3 மணிக்கு எழுந்து வேலைக்கு செல்லவும், அதன் பின்னர் காலையில் செல்லவும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி உள்ளார். ஆனால், பள்ளிக்கு சென்ற ஜூஹியின் தாத்தாவை பள்ளியில் உட்கார கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்த ஜூஹியின் தாத்தா, ஆங்கிலம் கற்று இளங்களையில் சட்டப் படிப்பும் முடித்துள்ளார். இறுதியில், அரசு உயர் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார் ஜூஹியின் தாத்தா.

கல்வியின் முக்கியத்துவத்தை தனக்குள் தனது தாத்தா விளைத்ததாகவும், தான் பட்டம் பெற்றதை தற்போது பெருமையுடன் வெளிப்படுத்துவதாகவும் ஜூஹி கோரே குறிப்பிட்டுள்ளார்.

தனது தாத்தா நினைத்தது போல படிக்க முடியாமல் சிரமப்பட்டு அதில் வெற்றி கண்ட நிலையில், தற்போது பட்டம் பெற்றுள்ள பேத்தி, தாத்தாவை நினைவு கூர்ந்த சம்பவம் தொடர்பான பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தனியாக இருந்த ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற சக ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பத்தூரில்..

நீண்ட நேரமாகியும் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வராத காரணத்தினால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த ஆசிரியைகளுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரையரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ரஞ்சிதத்தின் மகள் வெளியூரில் வங்கி ஒன்றி பணிபுரிந்து வந்தாகவும், அவரது மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

தலைமை ஆசிரியை என்பதால், பள்ளியில் உள்ள சாவிகள் அனைத்தும் ரஞ்சிதத்திடம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பள்ளிக்கு ஆசிரியை வராததால் சக ஆசிரியர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர்.

ஆனால் பலமுறை போன் செய்தும் எடுக்காததால், நேரில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், பின்பக்க கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் உயிரிழந்து கிடந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம் கழுத்தில் கிடந்த நகை மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரை விட்ட நடனக் கலைஞர்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோகம்!!

காஷ்மீரில்..

ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடனம் அடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். முதலில் அனைவரும் அவர் விழுந்தது நடனத்தின் ஒரு பகுதி என நினைத்துள்ளனர். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் அப்படியே இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மற்ற கலைஞர்கள் அவரின் அருகே சென்று பார்த்தபோது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்த மகன்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை மகன் முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை இறந்து விட்டார்.

வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம் அக்கம் பக்கத்தினர் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.

அதற்காக தன் தாயின் உடலை ஒரு வீல் சேரில் அமர்ந்திருப்பது போல் வைத்து உடலை சுற்றி துணியால் கட்டினார். பின்னர் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றார்.

பொழுது விடிவதற்குள் உடலை எடுத்து சென்ற முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே சுடுகாட்டின் அருகே உள்ளவர்கள் பார்த்த போது இறந்த மூதாட்டியின் உடல் வீல் சேரில் எடுத்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சுடுகாட்டிற்கு வந்த பராமரிப்பாளர் பார்த்து அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இது போன்று வீல் சேரில் உடலை கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார். அப்போது தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று கூறினார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார்.

வார இறுதியில் மின்வெட்டு இடம்பெறுமா : வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாளை (10.09) மற்றும் நாளை மறுதினம் (11) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, செப்டெம்பர் 12 ஆம் திகதி 01 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்,

1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.