20 வயது மகளுடன் சேர்ந்து தாய் செய்துவந்த மோசமான செயல்!!

மதுரையில்..

மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத் தொழில் செய்து வந்த காவலர் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

மதுரை நகரில் உள்ள கோ.புதூர் டிஆர்ஓ காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து சிலர் விபச்சாரத் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது. அந்த பெண் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

 

இந்த பெண்மணி வறுமையில் உள்ள ஏழை பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், சுமதிக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தேவேந்திரன்(வயது 49).

செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காசி(வயது 42) ஆகியோர் கூட்டாக சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து மதுரை நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, விபச்சார தொழிலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவர், தொழில் செய்து வந்த பெண்ணின் 20 வயது சொந்த மகள் என்ற தகவல் போலீசார் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 60 சவரன் நகைகளை திருடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

மதுரையில்..

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
சமூக வலைதங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமை பள்ளி சிறுவர், சிறுமிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

படிப்பு நேரம் போக கையில் செல்போனுடன் இன்ஸ்ட்டாகிராம் சென்று ரீல்ஸ் போடுவதையும், ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து லைக்ஸ்காக பதிவேற்றுவதையம் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ரோமியாக்கள் பலர் வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுமிகளிடமும் ஆசை வார்த்தைக்கூறி காதலில் வீழ்த்திவிடுக்கின்றனர்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞருக்கு, வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகளை திருடிக்கொடுத்த 16 வயது சிறுமியின் செயலால் பெற்றோர் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌.

இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மாயமான நகைகள் சுமார் 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகைகள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இளைஞனை கரம் பிடித்த போலந்து பெண் : அம்மி மிதித்து நடந்த கோலாகல திருமணம்!!

தமிழகத்தில்..

போலந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் மோத்தி கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், போலந்து பெண்ணான மார்த்தா அன்னா ரோசல்ஸ்காவை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவே, சென்னையில் தமிழ் கலாச்சார முறைப்படி மோத்தி கிருஷ்ணன் – ரோசல்ஸ்கா திருமணம் நடந்தது.

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தின்படி திருமணம் செய்துகொள்ள ரோசல்ஸ்கா விரும்பியுள்ளார். அவரின் விருப்பப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மாப்பிள்ளை மோத்தி கிருஷ்ணன் தாலி காட்டினார்.

தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஏராளமான உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

வவுனியா மரக்காரம்பளையில் தும்பு தொழிற்சாலை திறந்து வைப்பு!!

தும்பு தொழிற்சாலை..

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் தும்பு தொழிற்சாலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (11.09.2022) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

தொழிற்சாலையின் பெயர்ப்பலகையினை பிரதம விருந்தினர் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் தொழிற்சாலையும் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி , கிராம சேவையாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தொழிலதிபர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மரணத்திலும் இணை பிரியாத பாசமலர்கள் : கண் கலங்க வைத்த சகோதரிகள்!!

கொருக்குப்பேட்டையில்..

மரணத்திலும் இணை பிரியாத சகோதரிகளின் பாசப் பிணைப்பு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

அக்கா இறந்த செய்தியை கேட்ட தங்கை கணக்கம்மா, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.  சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் சுருண்டு விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள், கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என்று நினைத்து அனைவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். ஆனால், கனக்கம்மா அக்கா இழந்த செய்தியை கேட்டதும் உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்தது.

விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் : பொதுமக்கள் அதிர்ச்சி!!

விநாயகர்..

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம். இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும்.

இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம். இந்த நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் 4 இளைஞர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், ‘உயிரிழந்த 4 பேரும் மஹேந்தர்கரை சேர்ந்தவர்கள்.

ஜக்டோலி கால்வாயில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதைப்பொருட்படுத்தாமல் சிலையை கரைக்க அதில் இறங்கியுள்ளனர். மொத்தம் 8 பேர் நீரில் மூழ்கினர். அதில் 4 பேர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தப் பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் : மணமகளிடம் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

தமிழகத்தில்..

சனி, ஞாயிறுகளில் கிர்க்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகனின் நண்பர்களால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது என்ற ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் கணவர் பெரும்பாலும் எந்தவொரு விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கு சில மனைவிகள் சம்மதிக்காமல் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞன்.. நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இளைஞரான அவர் கடந்த 7ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து அவரது மூளை செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலைத் தானமாக வழங்கினால் சிலருக்கு மறுவாழ்க்கை அளிக்க முடியும் என கூறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தோஷின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், நுரையீரல், 2 கருவிழிகள் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டு சென்னை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு 8 பேருக்கு அவரின் உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்க்கை கிடைத்துள்ளது. மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதி வழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

தேசிய கல்வியல் கல்லூரியில்..

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு அமைதி வழி கல்வித்திட்டம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளே இருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை திருப்தி போன்ற ஆற்றல் மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தன.

குறித்த கற்கை நெறியைபூர்த்தி செய்திருந்த ஆசிரிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி பொன்னையா சத்தியநாதன், விரிவுரையாளர்களான ரி.லிங்கேஸ்வரி, பி.ஜெயச்சந்திரன், அமைதிவழி கல்வித்திட்ட இணைப்பாளர்களான குகானந்தராஜா கீர்த்திகா, விமலநாத சர்மா, ஜே.ஜெயந்தினி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஒரே ஊரைச் சேர்ந்த தோழிகள்… குட்டையில் குளித்தபோது விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

ராசிபுரத்தில்..

ராசிபுரம் அருகே மழை நீர் குட்டையில் மூழ்கி இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற ஜனனி மற்றும் ரட்சணாஸ்ரீ ஆகிய பள்ளி மாணவிகள் 2 பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதி சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி (14) 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8 ம் வகுப்பு படித்து வந்தார்.

இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பலகானூர் அருகே உள்ள குட்டையில் வீட்டிற்கு தெரியாமல் 2 மாணவிகளும் குளிக்க சென்றுள்ளனர். அங்கு சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் அப்பகுதியில் நாய் ஒன்று நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் கரையின் மேலே துப்பட்டா உள்ளதை கண்டு உள்ளே யாரோ மூழ்கி உள்ளதை அறிந்ததால் ஊர் பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலத்தை ஊர் பொதுமக்கள் மீட்டெடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் சுகவனன் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு மாணவிகளின் உடலையும் மீட்ட காவல்துறையினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஒரே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோழிகளுடன் சுற்றுலா சென்ற தூரிகை.. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தற்கொலையா? வெளியான தகவல்!!

தூரிகை..

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடிகரும், பாடலாசிரியருமான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தூரிகையின் இந்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பில் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூரிகையின் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர் என்றும், அதன் காரணமாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திருமணம் வேண்டாம் என துணிச்சலாக கூறும் தைரியமான பெண் தூரிகை, அவர் எப்படி இந்த காரணத்திற்காக தவறான முடிவை எடுத்திருப்பார் என பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திரையுலகில் பலருடன் நல்ல நட்பில் இருந்து வந்த தூரிகை, கடந்த மாதம் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளார். பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தூரிகை பகிர்ந்திருக்கிறார்.

எனவே அவரது தற்கொலைக்கான உண்மையான காரணத்தை பொலிசார் கண்டறிய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மின்வெட்டு நேரம் 12 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் அபாயம் : இ.மி.ச பொறியியலாளர் சங்கம்!!

மின்வெட்டு..

அக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூடிய விரைவில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை கொண்டு வருமாறு கூறினோம்.

தற்போது இருப்பில் காணப்படும் நிலக்கரி தொகையானது எதிர்வரும் அக்டோபர் 20 – 25ஆம் திகதி வரையிலேயே போதுமானது. அதன் பின்னர் மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு கட்டாயமாக நிலக்கரிகள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “நிலக்கரி கொள்வனவுக்கான மனுக்கோரல் ஒன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம். 4.5 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரி தொகைக்கான மனுக்கோரல் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கோரலை விரைவில் செயற்படுத்தவில்லை எனின் உரிய நேரத்திற்கு நிலக்கரி தொகையை கொண்டு வர முடியாது.

அத்துடன் குறைந்தபட்சம் அக்டோபர் 20ஆம் திகதியளவிலாவது குறித்த நிலக்கரி தொகை எமக்கு கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் நுரைசோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று தொகுதிகளின் செயற்பாடுகளையும் இடைநிறுத்த நேரிடும்.

இதனால் அனல் மின் உற்பத்தி முழுமையாக இடைநிறுத்தப்படும். அதன் பின்னர் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தியே மின் உற்பத்தி செய்ய முடியும்.

இதன்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மழைவீழ்ச்சி குறைவடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் மின் துண்டிப்பு நேரமானது 10 அல்லது 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர் : வெற்றிவாகை சூடிய இலங்கை அணி!!

ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர்..

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது​.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வெற்றிக்கொண்டது.

ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.

நடிகை ராஷ்மிகாவிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்.. அதிர்ச்சியடைந்த நடிகை!!

மும்பையில்..

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஹிந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று மும்பையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்ய நடிகை ராஸ்மிகா சென்றுள்ளார். அங்கு கூட்டத்திலிருந்த ரசிகர்கள் இவருடன் கைகொடுத்தும் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

அப்போது ரசிகர்களில் சிலர் ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் ராஸ்மிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பவுன்சர்களை மீறி ரசிகர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு வயது குழந்தைக்கு திருமணம் : 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

ராஜஸ்தானில்..

1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், சிறுமி நீதிமன்றத்தை நாடினார்.

வியாழக்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். தாத்தா இறந்த பிறகு, சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் போது கிராமத்து சிறுவனுடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு திருமணத்தை நடத்தி முடிக்க உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் செவிலியராக ஆசைப்படும் சிறுமி, தனது கனவுகளுக்கு உறவினர்கள் தடையாக இருப்பதாகக் கூறி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். திருமணத்திற்கு சிறுமி சம்மதிக்காததால், ஜாதி பஞ்சாயத்து, அவரது உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்டவும் உத்தரவிட்டது.

குழந்தை திருமண நடைமுறை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றும், அதை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அந்தப் பெண் முன் வந்து தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.

செவிலியராக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் இனிமேல் அதில் கவனம் செலுத்துவேன் என்றும் அந்த பெண் மேலும் கூறினார்.  “இன்று எனது பிறந்தநாள். எனக்கு 21 வயதாகிறது. இந்த தீர்ப்பை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பிறந்தநாள் பரிசாக பார்க்கிறேன்” என்று சிறுமி கூறினார்.

மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற காதலன்… நின்றுபோன திருமணம்!!

சென்னையில்..

தண்டையார் பேட்டையில் மணமகனிடம் தாலியை பறித்து மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தண்டையார் பேட்டை, நெடுஞ்சசெழியன் நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரேவதி(20). , நேதாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (25).

இவர் மரைன் என்ஜினீயர். இவர்களுக்கு, பெரியோர்கள் சம்மதத்துடன், நான்கு மாதம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை, நேதாஜி நகர் முருகன் கோவிலில் இருவருக்கும். திருமணம் நடக்க இருந்தது.

இரு வீட்டாரும் கூடி இருந்தனர். முகூர்த்தம் 6 முதல் 7.30 மணி குறிக்கப்பட்டிருந்தது. மாலையில் வரவேற்பு நிகழச்சிகக்கான ஏற்பாடும் தடல் புடலாக நடத்த இருந்தன. முகூர்த்த நேரம் நெருங்கியது. மணிகண்டன் கையில் ஐயர் தாலி எடுத்து கொடுத்தார். அவர் ரேவதி கழுத்தில் கட்டுவதற்கு சென்றார்.

ரேவதியும் தலை குனிந்தபடி இருந்தார். அந்த நேரத்தில். வாலிபர் ஒருவர் மணமேடைக்கு பாய்ந்து மணிகண்டன் கையில் இருந்த தாலியை பறித்து அந்த தாலியை ரேவதி கழுத்தில் கட்ட முயற்சித்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆர்.கே நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் சதீஷ் (23) என தெரிந்தது. ரேவதி சதீஷ் கடை ஒன்றில் வேலை பார்த்தபோது, இருவரும் காதலித்ததாக தெரிகிறது.

ரேவதி வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டார். திருமணத்திற்கு வந்த சதீஷ், ரேவதி தனக்கு தான் என இப்படி செய்துள்ளார். இந்த சம்பவத்தால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டனர்.