எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பல ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால், ரயில் மூலம் அலுவலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச துறை ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 30 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினமும் பல ரயில் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் ரயில்களில் பயணிப்பதால், ஒரு ரயிலில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இன்று(30.06) காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழகத்துக்கு கடல் வழியாக இவர்கள் சென்றுள்ளனர். வவுனியா மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த நால்வரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார செருக்கடி காரணமாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இலங்கை மக்ள் தப்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,936 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 162,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
முல்லைதீவில் பாடசாலை ஆசிரியர்களால் மாணவிகள் து.ஷ்.பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெண்கள் க.வனயீர்ப்பு போ.ராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
இக் கவனயீர்ப்பு போ.ராட்டமானது இன்று முல்லைத்தீவு நகரப் பகுதியில் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இக் க.வனயீர்ப்பு போ.ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவிகளை பா.லி.ய.ல் து.ஷ்.பியோகம் செய்த கு.ற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில் மாணவிகளுக்கு நீதி கோரி இந்த போ.ராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பா.லி.ய.ல் து.ஸ்.பி.ரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,
கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட 5 உயர்தர மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் நேற்று முன் தினம் முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்துடன் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என குறித்த சங்கம் கூறியிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது பேருந்து கட்டணம் 22 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையிலிருந்து நாய்கள் தூக்கிச் சென்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் ஹரியானாவில் ஜூன் 25-ஆம் திகதி பானிபட்டில் உள்ள ஹார்ட் அண்ட் மதர் கேர் மருத்துவமனையில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானாவில் வசிக்கும் ஷப்னம் என்பவருக்கு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் அருகில் இருந்து பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை நாய்கள் தூக்கிச் சென்றன. அங்கு குழந்தியின் பாட்டி மற்றும் அத்தை கூட தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 2.15 மணியளவில் அவர் காணாமல் போனதை குடும்பத்தினர் கவனித்தனர். பரபரப்பான தேடுதலுக்குப் பிறகு, மருத்துவமனைக்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் ஒரு நாய் குழந்தையை வாயால் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
பின்னர் நாயிடமிருந்து குழ்நதையை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர், ஆனால் நாய் கடித்த காயங்களுடன் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
களுத்துறையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை – அளுத்கம பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் மீது லொறி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் நேற்றிரவு முதல் தர்கா நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து விட்டு, இன்று அதிகாலை மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தயாரானார்.
இதன்போது, மத்துகம நோக்கிப் பயணித்த லொறி மோதி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எரிபொருளை திட்டமிட்ட வகையில் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு சாத்தியமில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் 22ஆம் திகதியின் பின்னரே எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி வரை டீசல் இருக்காது என்றும், எதிர்வரும் 22ஆம் திகதி பெட்ரோல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வர வேண்டும் என்றார்.
டீசலை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் டீசல் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சாகல மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.
கையெழுத்து சேகரிக்கும் குறித்த நடவடிக்பை வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (29.06.2022) காலை 10.00 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.
பட்டினிச்ச் சாவைத் தடுக்க மக்களே முன்வாரீர் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கையேழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பல மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும். தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்படும்.
இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29.06.2022) மாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவர் கடந்த சனிக்கிழமை (25.06.2022) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் மாலையாகியும் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரை தேடும் பணியில் உறவினர்களுடன் இணைந்து பொதுமக்களும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர் கிடைக்காமையினால் நேற்றுமுன்தினம் (27.06.2022) மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று (29.06) மாலை குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் பொதுமகன் ஒருவர் கழிவகற்றல் நடவடிக்கைக்காக சென்ற சமயத்தில் அப்பகுதியில் சடலமொன்றினை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து இவ்விடயம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என தெரியவந்துள்ளது.
தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய நகரம் மும்பைக்கு பயணித்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. மும்பை கடற்கரையில் இருந்து எண்ணெய் உற்பத்தி நிலைய பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்று பயணித்தது. அதில் 2 விமானிகள், 7 பணியாளர்கள் என மொத்தம் 9 பேர் பயணித்தனர்.
குறித்த ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில், எதிர்பாராத விதமாக அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு பேரிடர் அழைப்பு சென்றுள்ளது. உடனடியாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கடலில் தத்தளித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நிறுவன பணியாளர்கள் என்றும், மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்க முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடல் மேல் பயணிக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்களுடன் மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் கடலில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி வேறு நபருடன் சென்றதால், உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமரேசன். இவர் பெண்ணொருவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, திருமண நிச்சயம் செய்யப்பட்டது. சூன் 23ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் திடீரென வேறொரு நபருடன் சென்றுவிட்டார்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் இவ்வாறு செய்தது, குமரேசன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், குமரேசனுக்கும் அவரது உறவுக்கார பெண்ணொருவருக்கும் ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் மன வருத்தத்தில் இருந்த குமரேசன், திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் விபரீத முடிவை எடுத்தார். வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர், மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.
இதனைக் கண்ட அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிசார் குமரேசனின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குமரேசன் தற்கொலைக்கு முன் பதிவு செய்த வீடியோவையும் பொலிசார் கைப்பற்றினர்.
அதில், ‘நான் தற்கொலை செய்து கொண்டது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னை அவள் ஏமாற்றிவிட்டு சென்றது சரிதானா? என்னை கோழை என நினைக்க வேண்டாம்.
தற்கொலை முடிவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். புதுமாப்பிள்ளை திருமணமான மூன்றே நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லங்கா ஐ. ஓ சி. நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, உந்துருளி, முச்சக்கரவண்டி, மகிழுந்து மற்றும் சிற்றூர்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
அதற்கமைய, உந்துருளிகளுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு அதிகபட்சமாக 2,500 ரூபாவுக்கும், மகிழுந்து, ஜீப் மற்றும் சிற்றூர்திகளுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாவுக்கும் மாத்திரமே லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த வரையறை பொருந்தாது எனவும் லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் கடந்த 20ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து கிடந்தனர்.
இந்த குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில் அதன் காரணமாக தற்கொலை செய்தார்களா அல்லது டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மீண்டும் உயிர்பெறலாம் என்ற மூடநம்பிக்கையில் இறந்தது போன்ற காரணத்தால் தற்கொலை செய்தார்களா என விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியை கையில் எடுத்ததாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் இதுதொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான தீரஜ் சுராவேஸ் மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
அதில் அப்பாஸ் இறந்த குடும்பத்தினரிடம் மறைக்கப்பட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறி, அதனை கண்டுபிடிக்க ரூ.1 கோடி வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி புதையலை கண்டுபிடிக்காததால் வாங்கிய பணத்தை குடும்பத்தினர் திரும்ப கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அப்பாஸ் முகமது அலி பகவான் கடந்த ஜூன் 19 ஆம் திகதி புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என கூறி ஒவ்வொருவராக மாடிக்கு வரவழைத்து விஷம் கலந்த தேநீரை கொடுத்து கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான இருவரும் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது. அனைத்து வாகனங்களுக்கும் பற்றுச்சீட்டு முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.