சோகத்தில் முடிந்த திருமண மகிழ்ச்சி பேருந்து விபத்தில் 3 சகோதரிகள் பலி!!

தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளும் பலியானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியைச் சேர்ந்த எல்லையா கௌடுவின் நான்கு மகள்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே தாண்டூரில் நடைபெற்றது.

திருமண விழாவை முடித்துவிட்டு, இளைய மூன்று சகோதரிகள் — இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி நந்தினி, மூன்றாம் ஆண்டு மாணவி சாய்பிரியா மற்றும் பிளஸ் டூ மாணவி தனுஷா — ஹைதராபாத் நோக்கி பேருந்தில் பயணம் செய்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்தனர். “அதிகாலை அவர்களை பஸ்சில் ஏற்றி விட்டு வீட்டுக்கு திரும்பினேன். சில மணி நேரத்தில் டி.வியில் விபத்து செய்தி பார்த்தேன்.

என் மூன்று மகள்களையும் இவ்வாறு பிணங்களாகப் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை,” என்று தந்தை எல்லையா வேதனையுடன் கூறியுள்ளார்.

மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால் முழு கிராமமே துயரத்தில் மூழ்கியது.

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் நர்சிங் டிப்ளமா பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவருடன் அவர் ஒன்றரை வருடமாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தன்னை திருமணம் செய்யுமாறு ஹரிதா கேட்டபோது, திலீப் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிதா, வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தில் “என் மரணத்திற்கு திலீப் தான் காரணம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹரிதாவின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்தும், உறவினர்கள் உடலை பெற மறுத்து,

“திலீப்பை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம்” என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் டி.எஸ்.பி கந்தன் தலைமையில் போலீசார் சமரசம் பேசினர்

காதலனுடன் இரண்டு நாட்களில் திருமணம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் – மாரியம்மாள் தம்பதியரின் இளைய மகள் நிர்மலா (23) கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் காதல் தொடர்பை இரு குடும்பத்தாரும் ஏற்று, இன்று எல்லப்பாளையம் ஸ்ரீ வீரனார் கோவிலில் திருமணம் நடைபெறவும், ஜம்பை பகுதியில் வரவேற்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண வேலைகளுக்காக நிர்மலாவின் பெற்றோர் அந்தியூருக்கு சென்றனர். மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, நிர்மலா அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சித்தோடு போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும், நிர்மலா தன்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நடந்த இந்த துயரச்சம்பவம் குடும்பத்தாரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ வைத்துள்ளது. சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று (03.11) தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் = பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில்,

இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவன் உயிரிழந்த போது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

கம்பஹாவில் வல்பொல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து : காரும் டிப்பரும் மோதியதில் நால்வர் காயம்!!

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று (02.11.2025மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காதலனுடன் சென்ற இளம் காதலி களனி ஆற்றில் விழுந்து பரிதாபமாக பலி!!

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றின் அருகே தனது காதலன் மற்றும் மூன்று பேருடன் முச்சக்கர வண்டியை கழுவச் சென்ற பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் எடுக்க சென்ற காதலனும் காதலியும் திடீரென ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். காதலி நீரில் மூழ்கியபோது காதலன் அங்கு மீட்கப்பட்டார்.

இன்று மதியம் நீரில் மூழ்கிய பெண்ணின் உடலை மீட்பு குழுக்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடன் வந்த மற்றொரு குழுவும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணமல் போன சிறுவன் : பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!!

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடையவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மூளையை உண்ணும் அமீபா : ஆறு, ஏரி, குளங்களில் காத்திருக்கும் ஆபத்து!!

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும்.

அங்கு மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.

மூளையை உண்ணும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டது.

உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது.

இலங்கையில் இன்று தங்கம் விலை நிலவரம்!!

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினமும் (03) மாற்றமின்றி, உள்ளதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த வாரத்திலிருந்தே தங்கச் சந்தையில் அமைதி நிலவுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழில் கடைக்கு வந்த நபரின் செயலால் அதிர்ந்துபோன பெண்கள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த சென்ற நபர் நாவற்குழியில் நேற்று (02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை கடந்த 01 ஆம் திகதி அறுத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது கடையில் இருந்த இரு பெண்களிடம் நட்ப்பாக அந்நபர் உயைராடிய நிலையில் திடீரென பெண்ணி சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து வர்த்தக நிலையத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச் செயல்கள் யாழ். பொலிஸ் நிலைய பகுதிக்குள் இடத்பெற்றறிருந்ததால், சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவன் மரணம் : கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே உயிரிழந்த மாணவன் ஆவார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அற்புதராஜா கூறியுள்ளார்.

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் கைது!!

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சலியா டி. ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்னர் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதில் அவர் பெயர் பெற்றவராக இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், அமைச்சகத்தில் இது தொடர்பான பாராட்டு விழா நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம், கண்டுபிடிப்பாளர்கள் ஆணையகம் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களின் AI அடிப்படையிலான ரோபோவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிறுவன ஆதரவை உறுதியளித்தனர்.

அத்துடன் அமைச்சின் செயலாளர் முகமது நவவி, அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கோர விபத்து குறைந்தது 15 பேர் பலி!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி மாவட்டத்தின் மடோடா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததால் அங்கிருந்த பலர் உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்தவர்கள், அப்பிரதேச மக்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அத்துடன், பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்தில் அவசரகால வெளியேறும் கதவு இல்லாததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.