இலங்கை செய்திகள்

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்கத் தடை!!

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். எதிர்காலத்தில் புதிதாக சிகரெட் கம்பனிகளுக்கு...

இந்த இளம் பெண்ணை தெரிந்தால் உடனடியாக அறிவியுங்கள்!!

மினுவாங்கொட பிரதேசத்தில் பணமோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை தேடி பொலிஸால் வலை வீசியுள்ளனர். குறித்த பெண் பல்வேறு தொலைபேசி விற்பனை நிலையங்களில் தொலைபேசிகளை காசோலைகள் மூலமாக வாங்கி 3,264,740 ரூபா வரை மோசடி...

சிறுவர்களை பெற்றோர்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்துங்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

  சிறுவர்கள் அவர்களின் பெற்றோருடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அதுவே சிறுவர்களுக்கான சிறந்த சூழலாகும் என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். சிறுவர்...

கணனி தகவல்களை அழிக்கும் வைரஸ் : இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை!!

மின்னஞ்சல் மூலம் தற்போது கணனி வைரஸ் ஒன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே இந்த வைரஸில் இருந்து...

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் முழு குடும்பத்தையும் இழந்து தவிக்கும் சிறுவன்!!

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு...

இலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்!!

வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. சூரியவெவ நகரத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர், தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானதாக தெரியவந்துள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் ஆணொருவருக்கு வழங்கப்பட்ட...

இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!!

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அநுராதபுரம், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...

திருவிழா மோதலில் ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!!

  ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18.04) இரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

மீதொட்டமுல்லையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் இளைஞர் உட்பட இருவர் பலி!!

அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார்...

கிளிநொச்சியில் மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்!!

கிளிநொச்சி பகுதியில் மூன்றாவது முறையாக சிறுமி ஒருவரை திருமணம் செய்யமுற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட...

நிமோனியா காய்ச்சலுக்கு இரையாகிய ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை!!

  களுவாஞ்சிகுடி, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகிழுர் கண்ணகிபுரத்தில் நிமோனியா காய்ச்சலால் ஒன்றரை மாதக் குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. கண்ணகிபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் சன்சுதி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குழந்தை சுமார் இரண்டு வாரங்களாக...

ஆசிய அளவில் இலங்கை இளைஞன் செய்த சாதனை!!

ஆசியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் இலங்கையில் இளம் வீரரான எரான் குணவர்தன வெற்றி பெற்றுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தாய்லாந்தில்...

அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் உயரமான யுவதி!!

இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை...

குழந்தையொன்றைப் பிரசவித்து காட்டில்வீசிய தாய் கைது!!

பிறந்த பச்சிளம் குழந்தையை காட்டில் வீசியெறிந்த தாயொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் அருகே மாதம்பை - ஹேனேபொல, கல்முருவ பிரதேசத்தில் வசித்த 37 வயதான திருமணமாகாத பெண்ணொருவரே இன்று (17) இவ்வாறு...

ரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

சமகாலத்தில் ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் விரும்புவதில்லை என யாழ் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் பெரிதும்...