வவுனியா செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!!

இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் 24.01.2024 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரனிடம்...

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (25.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் தயாபரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்து முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய நபர்கள் : பொலிஸார் விசாரணை!!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற...

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு!!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது. கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு...

வவுனியாவை வந்தடைந்த மடு மாதாவின் திருச்சொரூப பவனி!!

மடு தேவாலய மாதாவுக்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது. 1924ஆம்...

வவுனியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம்...

வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்...

வவுனியாவில் 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்க கோரி சுகாதார சிற்றூழியர்கள் போராட்டம்!!

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் நேற்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால்...

வவுனியா நெளுக்குளம் பொலிசாரினால் மக்கள் நலன் கருதி விசேட பூசை வழிபாடு!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிசாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 16.01.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி...

வவுனியா – புளியங்குளத்தில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப்...

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி...

வவுனியாவில் கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று (08.01) மாலை...

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா,...

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவைகள் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும்!!

இலங்கையில்.. வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (07.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான...

வவுனியாவில் கடும் பனி : ஒளியைப் பாய்ச்சியபடி செல்லும் வாகனங்கள்!!

வவுனியாவில் இன்று (07.01.2024) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி...