வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் இரசாயன கலப்படம்!!

சீனியில் இரசாயன கலப்படம்..

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பக்கற்றில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமகனொருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகனொருவர், அவ் வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பக்கற்றினை கொள்வனவு செய்துள்ளார்.

வீட்டிற்கு சீனியினை எடுத்துச்சென்று அதனை பாவனைக்கு உட்படுத்திய சமயத்தில் அதனுள் ஓர் விதமான இராசயான பொருள் கலந்துள்ளதனை அவதானித்துள்ளார். இதனையடுத்து வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த வர்த்தக நிலையம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கினங்க நாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில்,

சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்ய பயன்படுத்தப்படு்ம் சிற்றிக் அசிட் எனப்படுவது தவறுதளாக சீனியில் கலந்துள்ளது. தவறுக்கு வருந்துவதுடன் குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக எம்மிடம் அதனை மீள வழங்குமாறும் தெரிவித்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் நேற்று காலை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்திருந்தனர்.

இவ்விபத்தில் பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருடன் தொடர்புகளை பேணியவர்கள் எவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அப்பகுதி சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் கொரோனா தொற்றால் மரணம்!!

க.பரந்தாமன்..

வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் – 19 தொற்றால் இன்று (16.02.2022) காலை காலமானார்.

சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (16.02.2022) பிற்பகல் பொறளை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரசாங்க பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு அரசின் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!!

அரசாங்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசின் அதிகரித்த 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன்,

சமுர்த்தி பயனாளிகளுக்கும் அதிகரித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. தனியார் துறையினருக்கும் அதிகரித்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் அதிகரிப்பு கொடுப்பனவு இது வரை வழங்கப்படவில்லை.

அத்துடன் அவர்கள் கடந்த 23 வருடங்களாக ஓய்வூதியக் கொடுப்பனவு திட்டத்தில் எந்தவித அதிகரிப்பும், மறுசீரமைப்புமின்றி இருந்து வருகின்றனர்.

அவர்களது ஓய்வூதியம் தொடர்பான சுற்றறிக்கையில் மூன்று வருடத்திற்கு ஒரு தடவை ஓய்வூதிய மறுசீரமைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த 23 வருடமாக இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்,

இதனால் பல்கலைக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் தமது ஓய்வூதியம் போதாமை மற்றும் ஏனைய அரச சலுகைளையும் பெற முடியாமலும் பெரும் துன்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் அரசாங்கத்தால் கொண்டு வருடப்பட்ட 5000 ரூபாய் அதிகரிப்பை ஏனைய ஓய்வூதியர்களுக்கு வழங்கியது போன்று, பல்கலைக்கழங்களில் பணியாற்றி ஓய்வூ பொற்றவர்களுக்கும் வழங்குவதுடன்,

தமக்கான ஒரு சீரமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தம்மையும் வாழ வழிவிடுமாறும் பல்கலைக் கழகங்களில் இருந்து ஓய்வூ பெற்றவர்கள் மேலும் கோரியுள்ளனர்.

யாழில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர் : பாராட்டும் தென்னிலங்கை மக்கள்!!

70 வயதில்..

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பட்டம் பதிவிட்டுள்ளார்.

“எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார். வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான தந்தையை பாராட்டியுள்ளார்.

எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளார் என பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

வவுனியாவில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 1 கிலோ நெல் 84 ரூபா முதல் 95 ரூபா வரை கொள்வனவு!!

நெல் கொள்வனவு..

வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தினைக் கொண்ட சம்பா நெல், கீரி சம்பா நெல், நாடு நெல் ஆகிய நெல்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

உரிய தரத்தில் உள்ள நெல் என்பன நாடு நெல் 90 ரூபாவிற்கும் , சம்பா நெல் 92 ரூபாவிற்கும் , கீரி சம்பா நெல் 95 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுவதுடன் முகவர்களிடமிருந்து சம்பா நெல் 86 ரூபாவிற்கும், நாடு நெல் 84 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 89 ரூபாவிற்கும் கொள்ளவனவு செய்யப்படுகின்றன.

அத்துடன் வாகன கூலியாக கிலோ ஒன்றிக்கு 02 ரூபா வழங்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு 0212060913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய காரியாலயத்தினர். தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வேப்பங்குளம் நெல் களஞ்சிய சாலை, மின்சார வீதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலை ஆகியவற்றில் நெல்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து இளைஞன் மரணம்

வவுனியா மரக்காரம்பளை வீதியில்

வவுனியா மரக்காரம்பளை வீதியில் இன்று (15.02.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் மோட்டார் சைக்கில் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிலை வீதியில் மற்றைய பக்கத்திலுள்ள ஒழுங்கையொன்றுக்கு திருப்ப முற்பட்டுள்ளார். இதன் போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கில் பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலின் சாரதியான அம்மன் கோவில் வீதி , பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரு மோட்டார் சைக்கிலின் சாரதிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் டெங்கு நோய் தாக்கத்தினால் 11வயது மாணவன் உயிரிழப்பு!!

அஜய்..

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாணவன் 2 ஆயிரத்து 21 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காகக் காத்திருந்து மிகச் சிறந்த புள்ளிகளைப் பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிகத் திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீர்மூழ்கி கேபள் கட்டமைப்பில் கோளாறு : கைபேசி, ப்ரோட்பேண்ட் இணைய இணைப்புகளுக்கு பாதிப்பு!!

கேபள் கட்டமைப்பில் கோளாறு..

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், உலகின் பல நாடுகளுக்கு இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள் அமைப்பானது சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பென்னாங், இலங்கை, சென்னை மற்றும் மும்பை மற்றும் ஓமானின் பர்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா ஆகிய மத்திய நிலையங்கள் ஊடாக இணைய சேவைகளுக்கான இணைப்பு வசதிகளை வழங்குகிறதாக தெரியவருகிறது.

வங்காள விரிகுடாவை அண்டிய கடற்பகுதியில் ஆழ்கடலில் பதிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி வடத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாக, அவ்வப்போது கைப்பேசி மற்றும் ப்ரோட்பேண்ட் (Broadband) இணைய இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கைப்பேசி சேவை வழங்குநர் நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த தொழிநுட்பக் கோளாறை சீர்செய்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை மதிப்பிட முடியாது எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்தில் பேஸ்புக் விருந்து : 36 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!!

பேஸ்புக் விருந்து..

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் சொகுசு வாகனங்களில் வந்தே மேற்படி விருந்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சில் 21 முதல் 24 வயதுடைய நான்கு யுவதிகளும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது. இவர்கள் அநாகரியமான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினத்தில் கூகுள் வழங்கிய வேலை.. 1 கோடி சம்பளம் : இந்தியாவையே பிரமிக்க வைத்த பெண்!!

சம்ப்ரீத்தி யாதவ்..

இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன.

இரண்டு வருடம் ஊரடங்கு காரணமாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் மந்தமாக இருந்த நிலையில், இந்த வருடம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியை சேர்ந்த மாணவருக்கு உபர் நிறுவனம் சுமார் 2 கோடி ரூபாய், அதாவது 2,74,250 டாலர் சம்பளத்தில் பணி நியமன கடிதத்தைக் கொடுத்தது.

இந்திய மதிப்பில் இது 2 கோடியைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாட்னாவை சேர்ந்த ஐடி மாணவி சம்ப்ரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

பாட்னா நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் 2021 மே மாதம் டெல்லி டெக்னாலஜி கல்லூரியில் பிடெக் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தற்போது 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்.

சம்ப்ரீத்தி யாதவின் ்தந்தை ராமசங்கர் யாதவ். இவர் எஸ்பிஐ வங்கியில் இந்திய அதிகாரியாக உள்ளார். இவரது தாயார் சஷி பிரபா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.

ஆனாலும் அவர் கூகுளில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையோடு கூகுளில் பல ரவுண்ட் இண்டர்வுயூக்களில் வெற்றிகரமாக இன்று பிப் (14) கூகுளில் வேலைக்கு சேரவுள்ளார்.

முன்னதாக, தான் கூகுள் இண்டர்வியூவின் மிகவும் பதற்றத்துடன் இருந்து வந்ததாகவும், பெற்றோர், நெருங்கிய நண்பர்களால் ஊக்குவித்ததாக தெரிவித்திருந்தார். கூகுளில் பணிக்கு சேர 50 இண்டர்வியூகளை சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நேர்காணல்களை தொடர்ந்து அவர் கேட்ட 1 கோடி சம்பளத்தை கூகுள் நிறுவனம் அவருக்கு வழங்குகிறது. தற்போது சம்ப்ரித்தி யாதவ் ரூ.1 கோடி சம்பளத்துடன் கூகுளில் இன்று பணியில் சேர்கிறார்.

இந்தியாவிலிருந்து பட்டதாரிகள் கூகுள் போன்ற பெரிய ஐடி நிறுவனங்களில் சமீப காலமாக பணியில் சேர்ந்து வருவது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதோடு, மற்ற பட்டதாரி இளைஞர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது.

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. ஒரே ஒரு ஆசை தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை -திருநம்பி ஜோடி!!

திருநங்கை -திருநம்பி ஜோடி..

காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 31 வயதான திருநம்பி மனுகார்த்திகா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக பணியாற்றிவருபவர் 31 வயதான சியாமா பிரபா.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் காதலர் தினமான வரும் 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இவர்களின் கனவே தங்களின் அடையாளத்தோடு திருமணம் செய்து மூன்றாம் பாலினத்தவர்களின் திருமணப் பதிவிலும் புதியவரலாற்றை உருவாக்குவது ஆகும்.

தங்களின் இந்த எண்ணம் குறித்து திருநம்பி மனு கார்த்திகா கூறுகையில், ‘எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு உண்டு. சியாமா மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவருக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அதிகம்.

அதுதான் அவர் மீது எனக்குக் காதலை ஏற்படுத்தியது. சியாமா வீட்டில் முத்தப் பெண். அவள் திருநங்கையாக மாறியிருந்தாலும் தன் குடும்பத்தை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொண்டாள். எந்தக் கடமையில் இருந்தும் சியாமா பின்வாங்கவில்லை.

நானும் எனது வீட்டில் மூத்தவன். சியாமாவின் குணநலன்களைப் பார்த்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பே என் காதலைச் சொல்லிவிட்டேன். ஆனால், சியாமா ஓராண்டுக்கு முன்புதான் என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

பொதுவாக திருமணத்தை பதிவு செய்யும்போது ஆண், பெண் என்ற அடையாளத்துடன் பதிவு செய்வது வழக்கம். ஆனால், நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையிலான திருமணம் என பதிவு செய்ய உள்ளோம். அப்படி நடந்தால் அது புதிய வரலாறு.

திருநங்கைகள் உரிமை சட்டம் 2014 மற்றும் திருநங்கைகள் உரிமைபாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவை மூலம் இப்படிச் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது.

நாங்கள் நினைக்கும் இந்த செயலை செய்தால் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை திருமண பந்தத்திலும் துணிச்சலுடன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகும் என நம்புகிறேன்.’ என திருநம்பி மனு கார்த்திகா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணி அமைச்சின் நடமாடும் சேவை!!

வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் வன்னியின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அவற்றிற்கு விரைவான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி அவர்கள் காணி அமைச்சர் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைபவாக, பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் எஸ். எம்.சந்திரசேன அவர்கள்,

வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய நடமாடும் சேவை ஒன்றினை வவுனியாவில் இம்மாதம் 27 ம் திகதி நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்துள்ளார்.

இதன் போது வன, வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களங்கள் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே வன்னி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வு காணப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடும் மழை : உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு!!

வவுனியாவில் கடும் மழை..

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றாகிய வவுனியா மாவட்டத்தில் உழுந்து அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பலர் உழுந்து அறுவடையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதமாக காத்திருந்து, அறுவடைக்கு தயாரான உழுந்துப் பயிர்கள் மழை காரணமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனால் பலரும் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அதிகாலையில் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு : பொலிஸார் விசாரணை!!

எரிவாயு அடுப்பு..

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகாலையில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு சமையலறையில் உணவு தயாரித்து முடிந்த பின் வீட்டார் உறங்கியுள்ளனர். இன்று (13.02) அதிகாலை 1 மணியளவில் திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரே இவ்வாறு வெடித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வரவேற்பின்போது பரிதாபமாக உயிரிழந்த மணப்பெண் : பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது. இதையடுத்து, திருமண நாளில் தனது மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின்,

உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர், “சைத்ராவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். ஆனால் விதி வேறு மாதிரியாக நினைத்துவிட்டது.

இதயத்தை நொறுக்கும் இந்த சோகத்திலும் அவரது பெற்றோர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.