மின் துண்டிப்பு இல்லை : வெளியானது புதிய அறிவிப்பு!!

மின் துண்டிப்பு..

இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் இன்று காலை மீண்டும் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்பட்டது. எனினும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்பட்டு மின் தடை ஏற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல அனல் மின் நிலையங்களில் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மின்தடை செய்ய பொது பயன்பாட்டு ஆணையம் நேற்று முடிவு செய்தது.

அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஏ, பி, சி, டி என நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒரு மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலகட்டத்தில் நான்கு மண்டலங்களிலும் தலா 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எரிபொருள் எண்ணெய் குறைவினால் செயலிழந்திருந்த சபுகஸ்கந்த ஏ மற்றும் பி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நேற்றிரவு எரிபொருள் கிடைத்ததால் இன்று காலை 100 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் உற்பத்திக்கு சேர்க்க முடிந்தது.

எவ்வாறாயினும், மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 350 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.

எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக் கொள்வதால் இன்று மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

மைத்திரிபால சிறிசேன..

நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த கஸ்ரத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சனையை கதைப்போம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பேச முன்னிற்போம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.02) இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்பாசனம், விவசாயம் என பல பொறுப்புக்களில் இருந்தேன்.

அதன் போது வன்னி பிரதேசத்திற்கு வந்து பல சேவைகளை செய்துள்ளேன். 2015 ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியான தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.

ஜனாதிபதியாக இருந்த போது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பினை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன்.

என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை.

அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்றுதான் பார்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளை பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்திற்கு தேவையான பெருட்களுக்கு தட்டுபாடு இருக்கவில்லை.

வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கிறார்கள். விவசாயிகளுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.

உங்களிடத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது. மின்சாரத் தடை ஏற்படுகிறது. பெற்றோலுக்கு நீண்ட வரிரைசயில் நிற்க வேண்டியுள்ளது. இப்படி பல பிரச்சனைகள் உள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாக செல்கின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள்.

உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதர கட்சிகளை இணைத்துக் கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.

நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த கஸ்ரத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சனையை கதைப்போம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பேச முன்னிற்போம்.

பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம். நாங்கள் எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்கு கொடுத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை தட்டுடிக் கேட்கப் பின்னிற்க மாட்டோம்.

உங்களுக்கு உள்ள சகல பிரச்சனைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோசமாக இல்லை. அவர்கள் சந்தோசமாக இருந்தால் தான் கட்சி, அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் சந்தோசமடைய முடியும்.

மகளுடன் பேசும் போது பல கவலைகளை கூறுகிறார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சனையாக இருக்கின்றது. கஸ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கிறார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நிமால் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பாரதி முன்பள்ளியின் பாரதி கலைவிழா -2022!!

பாரதி முன்பள்ளி..

பாரதி முன்பள்ளியின் பாரதி கலை விழா முன்பள்ளியின் அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பின் கீழ் கலைவிழா ஆரம்பமானதுடன் மங்கவிளக்கேற்றல், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி குணரட்ணம் கமலகுமார் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சிவாணி சண்முகதாஸ்,

வவுனியா இறம்பைக்களம் மகளீர் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியா டெஸ்ஷி செபமாலை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் குமாரசிங்கம் முல்லைக்குமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் கந்தையா விஜயகுமார்,

வவுனியா தெற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

33 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஹைதர் என்ற சிறுவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவனை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வந்தனர். அத்துடன், சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு என்பன தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மீட்பு பணியின் இறுதி நிமிடத்தில் சிறுவன் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டதுடன், சிகிச்சைக்காக அவரை உலங்கு வானூர்தியில் அழைத்து செல்ல முற்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்!!

யாழில்..

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அழைப்பினை மேற்கொண்ட மர்ப நபர்கள், அதிஸ்ட இலாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார். பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இதேபோல் சங்கரத்தை துணைவி பகுதியில் உள்ள ஆண் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொதி ஒன்று வந்துள்ளதாகவும்,

அதனை பெறுவதற்கு 60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியிலில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். அவரும் பணத்தை வைப்பிலிட்ட பின்னர் அந்த இலக்கத்திற்க அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் துண்டிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர்களும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத்தாலியில் இலங்கை பெண்ணை கொலை செய்த ஆவி : மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

இத்தாலியில்..

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் அருகில் உள்ளவர்களிடம் சத்தமாக கூச்சலிட்டு கூறியுள்ளார்.

சந்தேக நபரான மகன் இலங்கையின் நாத்தன்டிய பிரதேசத்தில் உள்ள தேவாலயத்துடன் தொடர்புபட்டு செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேக நபர் தனது உடலில் பேய் பீடித்துள்ளதாக கூறி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து பேய்க்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதான தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மிலான் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பொலிசாரால் 20 வயது இளைஞன் கைது!!

இளைஞன் கைது..

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. வீடு புகுந்து இடம்பெற்ற இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடி வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான (37348) திஸாநாயக்க, (61461) திலீப், (36099) விக்கிரமசூரிய, பொலிஸ் கொன்ஸ்தாபிள் (91792) தயாளன் உள்ளடங்கிய குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனைடிப்படையில் குறித்த இரு திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்திசாலையின் புதிய பணிப்பாளராக ஜே.எம்.நிலக்ஸன் நியமனம்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன் படிப்புக்காக சென்ற நிலையில் வைத்தியசாலையில் நிலவும் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு வவுனியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஜே.எம்.நிலக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவிட் வவுனியா மாவட்டத்தினை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில் அதனை கட்டுப்படுத்துவதற்காக,

தடுப்புசிகள் வழங்கல் , சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதர்களுடன் இணைந்து மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறப்பாக செயற்பட்டு வைத்தியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மீனின் வயிற்றில் காணப்பட்ட பொருட்கள்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மீன்களில் இருந்து துர்நற்றம் வீசியதால், மீனை வெட்டுவதை காணொளியில் பதிவு செய்ததாக இந்த மீனை உணவுக்காக கொள்வனவு செய்த மட்டக்களப்பை சேர்ந்தவர் கூறியுள்ளார்.

மீனின் வயிற்றில் இருந்து உலோக பொருட்கள், சிரின்ஜ் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்படுவது காணொளி காட்சியில் காணப்படுகிறது.

இப்படியான ஆரோக்கியமற்ற மீன்களை உணவுக்கு எடுப்பதால், பொது மக்கள் புற்று நோய் போன்ற பல நோய்களுக்கு ஆளாகி வருவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் முகாமையாளர் டோர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உட்பட மக்காத பொருட்கள் பாதுகாப்பின்றி, கடல் உட்பட சுற்றாடலுக்குள் வீசப்படுவதால், மீன்கள், வன விலங்குகள் உட்பட பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

அத்துடன் கோழி, மீன்பிடி, இறைச்சி போன்றவற்றை உணவுக்கு பயன்படுத்தும் மனிதர்களும் இதன் மூலம் பல உடல் நல தீங்குகள் ஏற்படுவதுடன் நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்படும் அதியுச்ச அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.20 டொலர்கள் அதிகரித்து, 1874.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

மேலும், தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை – 125, 500 LKR, 22 கரட் தங்கத்தின் விலை – 116, 100 LKR.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் கிடைக்காத நீதி!!

ஹரிஸ்ணவி..

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை.

இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர் . ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம்.

இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .

வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணம் : விளக்கம் கோரியது சுகாதார அமைச்சு!!

சிசு மரணம்..

வவுனியா வைத்தியசாலையில் சிசு ஒன்று மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ், வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் 2020 டிசம்பர் 14 ஆம் திகதி பிறந்த குழந்தை ஒன்று மரணமடைந்திருந்தது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையின் கவனக்குறைவினாலேயே தனது குழந்தை மரணமடைந்ததாக ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகம் என்பவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன், சட்ட நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் (பொது செய்திகள்) மல்காந்தி ராஜபக்சவிடமிருந்து சுகாதார அமைச்சுக்கு விளக்கம் கோரியும், விசாரணை அறிக்கை கோரியும் கடிதம் அனுபப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சினால் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துச் சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மருத்துவ அலட்சியத்தால் தனது குழந்தை இறந்தது என கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு கோருவதுடன், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பிரச்சினை தொடர்பான அறிக்கையை மல்காந்தி ராஜபக்சவிற்கு பிரதியுடன் எனக்கு அனுப்பவும்.

மேலும், இந்த விடயங்களின் முன்னேற்றத்தை சுகாதார அமைச்சு வாராந்தம் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அல்லது அதற்கு முன்னர் ஒவ்வொரு விடயத்தின் முன்னேற்றத்தையும் மேலதிக செயலாளரின் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதனை அதிக முன்னுரிமையாக கருதுங்கள் எனவும் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அதிக சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் செய்திகள் வெளியாகியுளள நிலையில் இவ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மணிகண்டன் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் பிராந்திய காரியாலயம் திறந்து வைப்பு!!

நெளுக்குளம் பகுதியில்…

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குப்பட்ட நெளுக்குளம் பகுதியில் மணிகண்டன் போக்குவரத்து சங்கத்தின் பிராந்திய காரியாலயம் இன்று (16.02.2022) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சாரதிகளின் நலனை கருத்தில் கொண்டு மணிகண்டன் போக்குவரத்து சங்கம் இயங்கப்படவுள்ளதுடன்,

இனிவருகின்ற காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு சங்கம் சார்பில் நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னெற்றுவதற்குறிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவதற்காக இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சங்கத்தின் பிராந்திய காரியாலயத்தினை நடா வெட்டி திறந்து வைத்ததுடன் நிகழ்வுகள் இனிதே இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தின் உரிமையாளர் சு.இராஜேஸ்வரன் , வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா,

நெளுக்குளம் கிராம சேவையாளர் சாந்தரூபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட பாரவூர்தி சங்கத்தினர், பொதுமக்கள் , பேரூந்து சாரதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கணவரின் தகாத பழக்கம் : ஒருநொடியில் பிள்ளைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் தகாத பழக்கத்தால், குடும்பமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32), இவரது மனைவி பெயர் மரகதம் (வயது 30).

இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர், வீட்டுக்கு அருகிலேயே சொந்தமாக பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் பிரபாகரன்.

இந்நிலையில் தனது உறவினரின் அலுவலகத்துக்கு பிரபாகரன் அடிக்கடி சென்று வந்துள்ளார், அங்கு வேலை பார்த்த பெண் ஒருவருக்கும், பிரபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

போனில் அடிக்கடி பேசி வந்த இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர், தனியாக வீடு எடுத்து வசிக்கவும் தொடங்கியுள்ளனர். இதுபற்றி உறவினருக்கு தெரியவர, பிரபாகரின் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் பிரபாகரனிடம் சண்டையிட்டுள்ளார். எனினும் தொடர்ந்து இரவு நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரபாகரன்.

இந்த விவாகரம் பெரிதாக மரகதம் கோபித்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தும் பிரபாகரன் தன்னுடைய பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம், தன்னுடைய குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார். தனக்கு நீச்சல் தெரியும் என்பதால், தான் பிழைத்த விடக் கூடாது என்பதற்காக, தன்னை இறுக்கமாக கயிற்றினைக் கொண்டு கட்டியுள்ளார்.

பின்னர், கயிற்றின் மறுமுனையை கல் ஒன்றில் கட்டி வைத்து விட்டு, கிணற்றில் குதித்துள்ளார் மரகதம். இதில், நீரில் மூழ்கிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மறுநாள் காலை, பிரபாகரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகளை அங்கு காணவில்லை.

தொடர்ந்து, அப்பகுதியில் தேடி பார்த்த போது, அங்குள்ள கிணற்றில், மனைவி மற்றும் குழந்தைகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கே உடைந்து அழுத பிரபாகரன், பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, மரகதம் மற்றும் ஒரு குழந்தைகளின் உடலை மீட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசாரும் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கணவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி செய்த கொடூர செயல்!!

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சசிகலாவுடன் உள்ளனர்.

இந்நிலையில் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நரேஷ்குமார், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சசிகலாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கடைசியில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி ஆத்திரம் வீட்டில் இருந்த ஆயுதத்தைக் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து, சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, மருத்துவமனையில் இருந்த சசிகலா தலைமறைவாகிவிட்டதால் அவரை பொலிசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காதலர் தினத்தில் கணவருக்காக பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த மனைவி!!

கேரளாவில்..

இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் கணவருக்கு தனது கல்லீரலை மனைவி தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ் (42) இவரது மனைவி பிரவிஜா (39). சுபீஷுக்கு கல்லீரலில் பிரச்சனை இருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சுபீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சமீபத்தில் கூறினர். அப்போதுதான் தன் காதல் கணவருக்கு தனது கல்லீரலையே தானமாக வழங்க பிரவிஜா முடிவு செய்துள்ளார்.

இது குறித்த பரிசோதனைக்கு பின்னர் அவரின் கல்லீரல் சுபீஷுக்கு பொருந்தும் என தெரியவந்தது. இதனையடுத்து காதலர் தினமான நேற்று காலை 6 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கி 17 மணி நேரம் வரை நடந்தது.

முதலில் பிரவிஜாவின் 40 சதவீத இடது பக்க கல்லீரல் நீக்கப்பட்டு சுபீஷுக்கு பொருத்தப்பட்டது. அடுத்த 48 மணி நேர சிகிச்சை சுபீஷுக்கு முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சையின் அடுத்த முக்கியமான கட்டம், புதிதாக மாற்றப்பட்ட கல்லீரலுடன் அவரது உடலின் மற்ற பாகங்களை ஒத்துழைக்க வைக்கும் சிகிச்சையாகும். 29 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழ இந்த கல்லீரல் மாற்று சிகிச்சையை செய்துள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் கேரளாவிற்கு முக்கிய மைல்கல் இது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.