வவுனியாவில் களைகட்டிய பொங்கல் : மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு!!

வவுனியாவில் களைகட்டிய பொங்கல்..

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை ,அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (14.01.2022) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை குறைந்தளவு மக்களே பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை வழங்கி வைப்பு!!

கொவிட் பாதுகாப்பு திரை..

வவுனியா மாவட்டத்தினை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தனியார் நிதி நிறுவனத்தின் பிரதான அனுசரனையுடன் குறித்த நிகழ்வு முதலாம் குறுக்குத்தெருவில் இன்று (12.01) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கிடையே குறித்த கொவிட் பாதுகாப்பு திரையினை பொருத்தும் வகையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை குறைந்த பட்சம் தடுக்க முடியும் எனவும் அனுசரனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

வவுனியா சிறுமியர்களின் வரவேற்பு நடனம் தொடர்பில் சஜித் அறிந்திருக்கவில்லை : எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு அறிக்கை!!

எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு அறிக்கை..

வவுனியாவில் வரவேற்பு நடனமாடுவதற்கு அழைத்து வரப்பட்ட இரு சிறுமிகளின் நடனத்தை அரங்கேற்ற முன்னர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (07.01) இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் சிறுமிகளைக் கொண்ட கலையம்ச அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிந்திருக்க வில்லை என எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு அங்கமாக வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் சிறுமிகளைக் கொண்ட கலையம்ச அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை எதிர்கட்சிதர் தலைவர் அறிந்திருக்கவில்லை.

குறித்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களும், பிரதான ஏற்பாட்டாளர்களும் ஏலவே குறிப்பிட்ட கலையம்ச அரங்கேற்றம் குறித்து எதிர்கட்சி தலைவர் நிகழ்விற்கு முன்னதாகவோ அல்லது நிகழ்வின் போதேனும் அறிந்திருக்கவில்லை.

மேற்படி கலையம்ச நடன அரங்கேற்றம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கபடவில்லை. மேற்படி நிகழ்வுகள் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவையல்ல. அத்தோடு மாவட்ட மற்றும் தொகுதி மட்ட அமைப்பாளர்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் குறித்த சம்பவத்தை அறிந்ததும், சகல ஒருங்கிணைப்பாளர்களுக்கும், வவுனியா மாவட்ட மற்றும் தொகுதி மட்ட அமைப்பாளர்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவ்வாறு கலையம்ச அரங்கம் இடம்பெறுவதாக ஏற்கனவே அறிந்திருந்தால் அதனை வரவேற்பதோடு குறித்த சிறுமிகளை பாராட்டியும் அவர்களுக்குரிய கௌரவத்தையும் எதிர்கட்சித் தலைவர் வழங்கியிருப்பார். எனவே இது எதிர்கட்சி தலைவருக்கு முற்றாக அறிவிக்கப்படாத ஒரு விடயமாகும்.

மனிதாபிமானமிக்க மக்கள்சார் எதிர்கட்சி தலைவர் என்பதும், எதிர்கட்சியில் இருந்த போதிலும் குறுகிய காலத்தில் பல்வேறு மனிதாபிமான செயற்பாடுகளில் பாகுபாடற்ற விதமாக செயற்பட்டு வருகின்றார் எனவும் எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி மாயம் : பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்!!

துவிச்சக்கரவண்டி மாயம்..

வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி மாயமானமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று (11.01) காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் துவிச்சக்கரவண்டி உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் சி.சி.ரி.வி காணோளி உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் துவிச்சக்கரவண்டியினை களவாடி சென்றவரின் உருவம் சி.சி.ரி.வி காணோளியில் பதிவாகியுள்ளதுடன் அவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முடக்கப்படுகின்றதா? வெளியாகியுள்ள அறிவிப்பு!!

நாடு முடக்கப்படுகின்றதா?

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12.01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதாமாதம், நிலைமையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம். நாட்கள் மாதங்கள் வேகமாக நகர்கின்றன. அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரம்.

பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன.” “ஏப்ரல் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது, எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.

“பிப்ரவரி 1ம் திகதி நாட்டை மூடுவது குறிது எமக்கு இப்போது கணிக்க முடியாது.” “வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். ஆனால் கணிப்பது எங்களுக்கு மிகவும் கடினம்.

புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது. “இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொதுமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்.”

“நம் நாட்டில் கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஒன்றாக தொற்றிய நோயாளர்கள் இதுவரை பதிவாகவில்லை. அவ்வாறு பதிவானாலும், இது ஒரு பாரிய பிரச்சனை இல்லை.” என தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

காணாமல் போன 15 வயது சிறுமி தொடர்பில் தகவல் இல்லை : தேடும் பணி தொடர்கிறது!!

நேஹா கௌமதி ஹேரத்..

கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் மஹரகமையை சேர்ந்த 15வயதான சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிடவில்லை. குறித்த சிறுமியை கண்டு பிடிக்கும் வகையில் பொலிஸார் சிறப்பு அணி ஒன்றை அமைத்துள்ளனர்.

மஹரகம, நாவின்ன என்ற இடத்தை சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்பவரே காணாமல் போயுள்ளவராவார். இவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், இவர் 5அடி 3 அங்குலம் உயரமானவர் என்பதுடன் மெலிந்த உடலமைப்பைக் கொண்டவர் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இவரை பற்றி தெரிந்தவர்கள் – மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக 071-8591645, 011-2850222 அல்லது மஹரகம பொலிஸ் நிலையத்தின் 011-2850700 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதிக்கு நடந்த கொடூரம் : தலைமறைவாகிய இளைஞர்கள்!!

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (Miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட யுவதியினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுவதியின் தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் , அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக , வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி உறவு கொண்டுள்ளார். பின்னர், தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்துள்ளனர்.

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் , முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றையதினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந் நிலையில், குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதியை ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு : பொலிசார் தீவிர விசாரணை!!

காணவில்லை..

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய தொலைபேசி இலங்களுக்கு அறியத்தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர்.

கொழும்பில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகளாகிய குறித்த மாணவி வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் பல நூறு ஏக்கர் காடழிப்பு : பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்!!

காடழிப்பு..

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பல நூறு ஏக்கர் காடு அழிப்பு வேலைகள் நடைபெறுவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் தொடர்ந்து காடுகளை அழித்து காணி அபகரிப்பு வேலைகள் நடைபெறுவதாக கடந்த சில மாதங்களாக எனக்கு பல்வேறு நபர்களால் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதற்கமைவாக, எவருக்கும் அறிவிக்காமல் சின்னசிப்பிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு நான் இன்று (11.01) திடீர் விஜயம் மேற்கொண்டேன். அங்கு பிரதேச செயலாளரின் 2 ஹெக்டெயருக்கான அனுமதி கடிதத்துடன் 100 ஏக்கருக்கு மேல் காடழிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானித்து உடனடியாக தடுத்து நிறுத்தினேன்.

வவுனியா மாவட்ட செயலாளர், வனவள திணைக்களத்தினர் ஆகியோருக்கு தகவலையும் வீடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளேன்.

சாதாரண மக்கள் ஒரு சிறு தடியை வெட்டினால் கூட வனவள திணைக்களத்தினர் வழக்கு போடும் நிலையில் இப்படியான செயற்பாடு எப்படி நடைபெற்றது?.

அதேபோல், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதம் வழங்கிய பின் அவ்விடத்திற்கு கிராம சேவையாளர் கூட சென்று பார்க்காமல் இருந்தது ஏன்?,

பிரதேச செயலாளர் வழங்கிய கடிதத்தில் பொலிசாருக்கு பிரதி போட்டிருந்தும் ஏன் பொலிசார் செல்லவில்லை? என பொதுமக்கள் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேபோன்று, மேலும் பல ஏக்கர் காணிகள் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளருக்கு பணித்துள்ளேன்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காடுகளின் சதவீதத்தை 30 ஆக உயர்த்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சில அரச அதிகாரிகளின் துணையுடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நாட்டு நலன் கருத்திய திட்டங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதுடன், அரசாங்கதத்தின் மக்கள் நலன் கருதிய திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பதி…

திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும் நண்பர்கள் சிலருடன் இணைந்து கிணற்றுக்கு குளிக்கச்சென்றுள்ளார்.

தம்பி செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடுவதை கண்டு தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்,

இடுப்பில் கேன் கட்டுக்கொண்டு கலையரசி நீச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கேன் நீச்சல் அடிக்க தொந்தரவாக இருப்பதாக நினைத்து அதனை கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு நீரில் மூழ்கிய கலையரசி வெளியே வராததால் அச்சமடைந்த அவரது தம்பி செல்வம் மற்றும் சக நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து தேடியும் கலையரசியை கண்டுபிடிக்க முடியாததால் திருப்பத்தூர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலையரசியை சடலமாக மீட்டனர். சடலத்தை கைப்பற்றிய கந்திலி காவல்நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் தெரியாமல் விளையாட்டாக கிணற்றில் குளித்த இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

விருதுநகர்..

விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் – கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

மனைவி கற்பகம் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சூழலில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கண்ணன் கற்பகத்தை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.

இதையடுத்து கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை,

மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 சிறுமிகள் பரிதாபமாக பலி… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.

வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி. இந்த மூன்று சிறுமிகளும் திலகவதியுடன் சேர்ந்து நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அருகே இருந்த குட்டை கிணற்றில் மூன்று பேரும் குளிக்கச் சென்றனர்.

அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலகவதி கிராம மக்களிடம் கூறினார்.

உடேன போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகன்!!

புத்தளம்..

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் மது போதையினால் மாமனாரை தாக்கி மருமகன் கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருடமன்று குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினமே விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நாளை பல இடங்களில் மின்தடை : விபரம் உள்ளே!!

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (12.01) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரவப் புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, றம்பைக்குளம், மகாபகல அளுத்வத்த, புபுதுகம, குருக்களூர், மன்னார் வீதி, முகத்தான்குளம் 1 ஆவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் : உலக சாதனையாளன் பி.லவனீஸ்!!

லவனீஷ்..

படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில் உலக சாதனை படைத்த பிரபாகர் லவனீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிக்கும் பிறந்த மண்ணிக்கும் பெருமை சேர்த்து தந்தமைக்காக பிறந்த மண்ணில் அவரை பாராட்டும் வைபவம் ஒன்று சமூக சேவையாளரும் மலையக அரசியல் அரங்கத்தின் பிரதான அமைப்பாளருமான ஆர்.செந்தூரனின் ஏற்பாட்டில் கொட்டகலையில் நேற்று மாலை (10.01) நடைபெற்றது.

இதில் பாராட்டு பெற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரபாகர் லவனீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். விபரம் தெரிந்த வயதில் இருக்கும் போது எனது தாத்தா ஒரு உலக உருண்டையினை கொண்டு வந்து அதில் உள்ள உலக நாடுகளை அடையாளம் காணுவதனை எனக்கு கற்றுத்தந்தார்.

அதனை கருத்தில் கொண்டு நான் உலக நாடுகளை அடையாளம் காணுவதில் உலக சாதனையினை படைத்துள்ளேன். இதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது இன்னும் சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆர்வமும் தோன்றுகிறது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் கல்வி சமூத்தினராலும்,பிரதேச நலன் விரும்பிகனாலும் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பலரால் வாழ்த்துரைகளும் வழங்கப்பட்டன.

கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவனீஷ் மிக இள வயதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் சாதனையை படைத்துள்ளார்.

அதி வேகமாக உலக நாடுகளை உலக வரைப்படத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளார். அதற்காக 3 நிமிடங்கள் 16 செக்கன்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் மட்டும் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவனீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இங்கு உரையாற்றியவர்கள் உலக சாதனை என்பது ஒரு சாதாரண விடயமல்ல இவ்வாறு உலக சாதனை படைக்கக்கூடியவர்கள் எமது மண்ணில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் முன்வருதற்கும் எமது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதற்கும் இவ்வாறான பாராட்டுக்கள் அவசியமாகும்.

இது இத்துடன் நின்று விடாது திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறானவர்களை பாராட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையினையிட்டு பெருமையடைவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

இவ் கௌரவிப்பு விழாவுக்கு ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் பகுதி நேர விரியுரையாளர் செல்வராஜ், கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் முன்னாள் வர்த்தக சங்க தலைவர், சமூக சேவையாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள் அவரது பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் போன சிறுமி : பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

நேஹா கௌமதி ஹேரத்..

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

பெயர் :- நேஹா கௌமதி ஹேரத், வயது :- 15, சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்குல உயரம், இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரீசேட் மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை,

சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645, மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700.