வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகான வவுனியா நகரை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இன்று (11.01.2022) காலை வவுனியா நகரில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இச் சிரமதானப் பணியில் வவுனியா வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேரூந்து சங்கத்தினர் ஆகியோரும் இணைந்து பங்குபற்றியிருந்ததுடன் ஏ9 பிரதான வீதி, பஜார் வீதி, ஹோரவப்பொத்தானை வீதி என நகரில் பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
அத்துடன் நகரிலுள்ள அரச திணைக்களங்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சிரமதானப் பணிக்கு நகரசபையினர் வாகனங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சிற்றுண்டிகள் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலம், என்.டி.ஆர் நகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார்.
இதையடுத்து இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறக்கப்போகிறது என ரம்யாவிடம் உறவினர்கள் கூறிவந்துள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
ஆனால் உறவினர்கள் இப்படிக் கூறியதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசவத்திற்கான மருத்துவர்கள் கூறிய தேதியும் நெருங்க நெருங்க அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்குமோ என்று பயம் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் அவரது வயிற்றில் ஆண் குழந்தை இருந்ததை அறிந்து அவரின் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வீட்டில் படிப்பதற்காக வெளியே செல்கிறோம் எனக் கூறிவிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியிருக்கிறார்கள்.
ரயில் வருவதை கூட கண்டுகொள்ளாமல் தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ரயில் மோதியிருக்கிறது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் பலியாகியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சதார் காவல் நிலைய போலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரயில் மோதியதில் உயிரிழந்தது லோகேஷ் மீனா (22) மற்றும் ராகுல் என்றும் இருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது.
போட்டித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த இருவரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதன் விளைவாகவே இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது என உதவி காவல் ஆய்வாளர் மனோகர் லால் கூறியுள்ளார்.
உடற்கூராய்வுக்கு பிறகு இளைஞர்களின் சடலங்கள் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஆல்வார் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண்(18). இவர் கோவையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் புதுக்கோட்டையை சேர்ந்த வினிதா (18), என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
கடந்த, இரு மாதம் முன்பு, தனது காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து, திருப்பூர் மாவட்டம் இடுவாயில் தங்கியிருந்தார். இருநாட்கள் முன்பு, சரண் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
தற்போது படிப்பை தொடருமாறு அறிவுரை கூறிய பெற்றோர், புதுக்கோட்டை சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசி வருவதாக தெரிவித்தனர்.
இதனிடையே குடும்பத்தினர் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில், இருவரும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்துவருகின்றனர்.
உலக சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றையதினம் 1,810 டொலராக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் வெகுவாக குறைவடைந்தது. இதன்படி, கடந்த வாரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 டொலர்கள் வரை குறைந்து 1,789 டொலர்களாக ஆக பதிவாகி இருந்தது.
தங்கத்தின் இதுவரை பதிவான குறைந்த விலை இது என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இன்றைய தினம் உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
இதேவேளை, கடந்த வாரம் இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு இருந்தது. 24 கெரட் – ரூ.121,500.00, 22 கெரட் – ரூ.111,400.00, 21 கெரட் – ரூ.106,300.00, 18 கெரட் – ரூ 91,200.00.
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவேண்டாம் என பணிப்புரை விடுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மின்தடை பட்டியல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தமும்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரை தொடர்பான தகவல்களை அமைச்சர் காமினி லொக்குகே வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்காது, மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (10.01) முதல் மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரம் குறித்து இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும்,
மோதி விபத்துக்குள்ளான போதே இந்த 26 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டெங்கு மற்றும் மலேரியாவை கட்டுப்படுத்த வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பட்டானிச்சூர், வேப்பங்குளம், பட்டக்காடு ஆகிய பகுதிகளில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பு பெருக்கும் இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகர சபையின் அனுசரணையுடன் நகர உறுப்பினர்களான எம்.லரீப், அப்துல் பாரி, பொது சுகாதார பரிசோதகர் வாகீசன் ஏற்பாட்டில் பொது இடங்கள், வீதிகள், வீடுகள் என்பன பார்வையிடப்பட்டதுடன்,
அப் பகுதிகளில் காணப்பட்ட நுளம்பு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டன. அத்துடன் மலேரியா மற்றும் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வீடுகளின் அயற் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சுகாதார செயற்பாடுகளே பிரதானமானவை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இது நிறுவனங்கள், அலுவலகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களின் கட்டாய கடமையாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றின் பரவலை அடுத்து அண்டை நாடான இந்தியா உட்பட்ட நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே இலங்கையிலும் தொற்று அதிகரிக்காது என்று கூறமுடியாது. எனினும் சுகாதார சேவையினருக்கு கட்டுப்படுத்தும் அளவில் தொற்று எண்ணிக்கையை வைத்துக்கொள்ளும் போது கடும் சுகாதார நடவடிக்கைகளுக்கு செல்லத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்து வருவோரிடம் உரிய பீசீஆர் ஆவணங்கள் கோரப்படுகின்றன என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் இலங்கையில் ஐயாயிரம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை நிர்வகிக்கும் திறன் சுகாதாரத்துறையினருக்கு உள்ளது.
எனினும் அந்த நிலைமைக்கு செல்லாமலிருக்க சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் டென்னிஸ் வீரர் நொவெக் ஜோக்கோவிக் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று ஏன் இலங்கையிலும் கொரோனாக் கட்டுப்பாட்டு விடயத்தில்,
கடுமையான தீர்மானங்களை எடுக்கமுடியாதுள்ளது என்று எமது செய்திச்சேவை கேட்ட கேள்விக்கு பதிலளித்த, ஹேமந்த ஹேரம், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் கொள்கைகள் அதற்கு இடம் தராது என்று குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு உதாரணங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் சில பொது இடங்களில் முகக்கவங்களை அணியாமல் பலர் செயற்படுவதாக தெரிவித்த அவர்,
பொது இடங்களுக்கு செல்வோர் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்லவேண்டும் என்ற நடைமுறை வர்த்தமானி பிரகடனத்தின் பின்னரே உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்
புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18).
கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் குத்துச்சண்டை (பாக்சிங்) போட்டியில் பங்கேற்க அதே கல்லூரியில் பயிலும் 17 மாணவிகள், 4 பயிற்சியாளர்களுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு புதுவைக்கு வந்துள்ளார்.
கொரோனா கட்டுபாடுகள் காரணமாக போட்டி ரத்தானதை அடுத்து, மாணவிகள் புதுவையில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர்.
அதன் பின்னர் நேற்று மாலை புதுச்சேரி கடற்கரைக்கு வந்து தலைமை செயலகம் எதிரே கடலில் செயற்கை மணல்பரப்பில் இறங்கி விளையாடினர். இதில் பயிற்சியாளர் மற்றும் மாணவிகள் சிலர் கடலில் குளித்தனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பயிற்சியாளர் கோவையை சேர்ந்த கனேஷ்வரன் (வயது 25), மாணவிகள் அமிர்தா, பூமதி ஆகியோர் சிக்கினர்.
அவர்கள் 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி அபாயக்குரல் எழுப்பினர்கள். இதனை கண்டவுடன் கரையில் இருந்த சகமாணவிகள், பயிற்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர்வாசிகளும் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுவை பெரியகடை போலீசார், கடலோர காவல்படை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் பயிற்சியாளர் கனேஷ்வரன், மாணவி அமிர்தா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மாணவி பூமதியை கண்டுபிடிக்கமுடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சில நிமிட தேடலுக்கு பின் பூமதியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பூமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக புதுச்சேரி பெரியகடை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் மூழ்கி மாணவி உயிரழந்த சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37).
இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் பூர்ணகோகுல்(10) ஆகிய மூவரும் நென்மேனியில் உள்ள வைப்பாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது பூர்ணகோகுல் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்ற கேசவன் மற்றும் விஜயலட்சுமி இருவரும் சென்றுள்ளனர்.
இதில் மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பார்த்து கிராம மக்கள் உதவியுடன் மூன்று பேரின் உடல்களையும் சடலமாக மீட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த இருக்கன்குடி காவல்துறையினர் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நென்மேனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்தும் பணத்தை அச்சிடுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 1.3 ட்ரில்லியன் ரூபாய் பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் அதிகளவில் பணத்தை அச்சிட்டு வந்தமையே பண வீக்கம் அதிகரிக்க காரணம் என பல தரப்பினர் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இதனிடையே அடுத்த மாதத்திற்குள் வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கம் அண்மையில் அறிவித்த நிவாரணப் பொதியை வழங்க 230 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதுடன் அந்த பணத்தில் ஒரு தொகை தேசிய பணச் சந்தையில் பெற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லயனூர் மூர்த்தி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ். இவரது வீட்டின் எதிரே சங்கர்- ரமணி தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.
இதில் வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்த ரமனியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள் அசாருதீன், தமிழ் ஆகியோர் மது அருந்தி விட்டு ரோட்டில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாகவும், இதனை சதீஷ் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா தனது அக்காவின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷை கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக குத்தி விட்டு சென்றுள்ளனர்.
கத்திக் குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த சதீஷை அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சதீஷின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய தம்பதியினர், ராஜா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
இதில் கொலை செய்யப்பட்ட சதீஷ்க்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு தொழில் நிமித்தம் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்வதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளதுடன்,தனது வீட்டிற்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தான் வவுனியாவிற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வராத நிலையில், இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாலுசுந்தரம் சுதர்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0767700438 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.