திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பு சேர்ந்த மரியம் மிக்கேல் என்ற கட்டுமான தொழிலாளியின் மகள் லிசா. இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு,

என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் மார்த்தாண்டத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் லிசா கர்ப்பமானார்.

இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதில் காதல் கணவன் விஷ்ணு லிசாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த லிசாவை பெற்றோரிடமும் செல்லவிடாமல் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் மார்த்தாண்டம் வீட்டில் வைத்து லிசா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் சத்தமிட்டு காப்பாற்றுங்கள் என்று கத்தியதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 80 சதவீத தீக்காயங்களுடன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ, தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் பலர் பலி: இராணுவம் களத்தில்!!

கடும் பனிப்பொழிவு..

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் முர்ரி என்ற மலை உச்சி நகருக்கு அருகில் இன்னும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

பனிப்புயலின் போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்தார்.

முர்ரி என்பது தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வடக்கே உள்ள ஒரு மலை உல்லாச நகரமாகும். இந்தநிலையில் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவைக் காண்பதற்காக அண்மை நாட்களில் 100,000க்கும் அதிகமான கார்களில் பலர் முர்ரிக்கு சென்றிருந்தனர். இதனால் நகருக்குள் மற்றும் வெளியே செல்லும் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அந்தப் பகுதி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 15 முதல் 20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் முர்ரேயில் ஒன்று கூடினர்.

இதேவேளை பிரதமர் இம்ரான் கான், சுற்றுலாப் பயணிகளின் “சோக மரணம்” குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

முல்லைதீவில் கடலுக்குள் இருந்து மிதந்த உழவு இயந்திரத்தின் பாகங்கள்!!

புதுமாத்தளன் கடற்கரை பகுதியில்..

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் கொண்டுள்ள நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இந் நிலையில், இன்று (08.01)காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் நடு சில்லின் பெரிய ரயர்கள் இரண்டு கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08.01.2022) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,
மகிந்த , கோட்டா அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் உழைக்கும் மக்கள் நடுவீதிக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களது வயிற்றிலே அடிக்கும் அவலநிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாட்டில் பட்டினிச்சாவு ஏற்படும் அபாய நிலைமை ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது. நாட்டை கொள்ளையடித்தவர்கள், நாட்டுப்பணத்தைத் திருடியவர்கள் எல்லோரும் அதிகாரத்தில் இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஆனால் சாதாரண மக்கள் இவர்களுக்கு வாக்களித்த குற்றத்தைத் தவிர வேறொன்றுமே செய்யவில்லை. கடந்த தேர்தல் காலங்களில் கோட்டாவும், மகிந்தாவும் கொடுத்த வாக்குறுதிகளால் மக்களின் பசியினை தீர்க்க முடிந்ததா.

எனவே இராணுவ மயமாகி வரும் இந்த கொடுங்கோல் ஆட்சியினை அழித்தொழிக்க நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட முன்வரவேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உழைக்கும் மக்களை பட்டினிபோடாதே, கட்டுப்பாட்டு விலையைக் கொண்டுவா, ஊழல் பணத்தை வெளியே கொண்டுவா, உழைப்போரை வதைக்காதே, தேர்தல் வாக்குறுதி என்னாச்சு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியின் செயலாளர் சி.கா.செந்தில்வேல், கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வம் கதிர்காமநாதன், நி.பிரதீபன், வவுனியாதமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் ந.கருணாநிதி,

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் பா.நேசராஜா, சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பினர் உட்பட பொது அமைப்புக்கள் ஆதரவினை வழங்கியதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாலை ஆறு மணிக்கு முன்னதாக சமைத்து விடுங்கள் : இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை!!

மின்வெட்டு..

மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் மின்வெட்டை குறைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த சில நாட்களிலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாக கைது!!

நால்வர் கைது..

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி சென்ற சொகுசு காரினை ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை தொடர்பில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டர்கள் மதவுவைத்தகுளம் மற்றும் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் 4 மற்றும் 8 மாதக் குழந்தைகளும் காரில் பயணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் குறித்த 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த ஈரப்பெரியகுளம் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள மிகப்பெரிய கப்பல் : பார்வையிட படையெடுக்கும் மக்கள்!!

முல்லைத்தீவு..

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08.01) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.

சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த கப்பல் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள கப்பலை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த கப்பல் யாருடையது எங்கிருந்து வந்துள்ளது விபத்துக்குள்ளாக்கியதா ? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!!

விசேட அறிவிப்பு..

இன்று சனிக்கிழமை (08) மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (07.01) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எரிபொருளுக்கான பணம் செலுத்தப்படாததன் காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை விடுவிக்கவில்லை.

எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள பார்ஜ் மவுண்டட் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மவுண்டட் மின் உற்பத்தி நிலையம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது அதே சமயம் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் 102 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக பார்ஜ் மவுண்டட் மின் திட்டம் இன்று மீண்டும் மின்சார உற்பத்தியை ஆரம்பித்துள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஆசை ஆசையாக திருமணம் செய்துகொண்ட இளைஞன் : மறுநாளே இளம்பெண் செய்த மோசமான செயல்!!

சேலம்..

சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய சுனில் கார்த்திகேயன் என்பவர்கள் தங்களை புரோக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் தங்களிடம் 24 வயது இளம்பெண் இருப்பதாகவும், பெண் பார்க்க கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு வருமாறு கூறினர்.

இதனையடுத்து மணிகண்டனும் அங்கு சென்றார். அப்போது சபிதா என்ற பெண்ணை காண்பித்து பிடித்திருக்கிறதா? என கேட்டனர். மணிகண்டனும் பெண் பிடித்திருக்கிறது என கூறவே, அவர்கள் உடனே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 2 பேருக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருமணம் செய்து வைத்ததற்கு ரூ.1½ லட்சம் பணமும் பெற்றனர்.

பின்னர் மணமக்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, சுனில், காத்திகேயன் மற்றும் அவர்களுடன் இருந்த 2 பேர் சபீதாவுக்கு ஊர் புதியது என்பதால் நாங்களும் உடன் வருகிறோம் என்று கூறி, சேலத்திற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்த மறுநாளே சபீதாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், எங்களுடன் சபீதாவை அனுப்பி வையுங்கள் என்று 5 பேரும் மணிகண்டனிடம் தெரிவித்தனர்.

அவரும் சபீதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சென்ற பின்பு அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் கொழிஞ்சாம்பாறைக்கு சென்று விசாரித்தார்.

அப்போது, சபீதா மற்றும் அவருடன் இருந்தவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்த கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை குறிவைத்து இணைத்தளத்தில் விளம்பரம் கொடுத்து தங்களை அணுகுபவர்களின் செல்போன் எண்ணுக்கு, அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம்.

புகைப்படத்தை பார்த்து பெண் பிடித்திருந்தால் அவர்களின் முழு விவரம், வசதியானவரா? பணம் தேறுமா? என்பதை எல்லாம் அறிந்து கொண்டு போலியாக திருமணம் செய்து வைத்து பணபறிப்பில் ஈடுபடுவோம் என ஒப்புக்கொண்டனர்.

அப்படி தான் சேலத்தை சேர்ந்த மணிகண்டனையும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்து, பணம் பறித்ததாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சித்தூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உறவினருடன் சென்ற சிறுவனுக்கு திடீரென அரங்கேறிய பயங்கரம்!!

கோயம்புத்தூர்…

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த உறவினர் ஒருவர்,

தடுப்பூசி போடுவதற்காக வீட்டில் இருக்கும் ஆதார் கார்டை வாங்கி வருமாறு சரத்திடம் செல்போனில் கூறியுள்ளார். இதனால் உறவினரான குருசாமி என்பவருடன் சரத் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இவர்கள் முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது.

இதனால் படுகாயமடைந்த சரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

சாம்பல்தோட்டம்..

வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (06.01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா – சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் (வயது 34) இரண்டு பிள்ளைகளின் தந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிற்றுாழியராக கடமையாற்றி வருகின்றார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர், இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வருவதாக வீட்டிலுள்ள வயல் கிணற்றுக்கு சென்றுள்ளார் .

எனினும் பல மணி நேரமாகியும் அவர் அங்கிருந்து திரும்பிவரவில்லை. தேடிப்பார்த்தபோது அவரைக்கண்டு பிடிக்க முடியவில்லை. அயலவர்களின் , உதவியுடன் கிணற்றில் தேடியபோதும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றிலிருந்த இறைக்கப்பட்ட நிலையில் நேற்று (06) இரவு 11 மணியளவில்குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் குளித்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!

இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..

ஐக்கிய மக்கள் சக்தியின்’எதிர்க் கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் உருவாகி,

நாடளாவிய ரீதியாக செயற்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 23 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (07.01.2022) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு இரத்த மாற்று இயந்திரத்தினை வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதின், புத்திக்க பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்,

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்களான ரசிக்கா பிரியதர்சினி, பி.ஏ.கருணாதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் ,வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்!!

நகரசபை மண்டபம்..

வவுனியாவில் வரவேற்பு நடனம் வழங்குவதற்காக அழைத்து வரப்பட்ட இரு சிறுமிகளின் நடனத்தை அரங்கேற்ற முன்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமையால் சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இன்று (07.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்திற்கு வரவேற்பு நடனம் வழங்குவதற்காக வவுனியா, சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிகள் இருவர் ஐக்கிய மக்கள் சக்தியினரால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இருப்பினும் சஜித் பிரேமதாச வேறு நிகழ்வுகளுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்து குறித்த சிறுமிகளின் நடனத்தை மேடையேற்றாது உரைகளுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

எதிர்கட்சி தலைவரின் உரை முடிந்ததும் மண்டபத்தில் இருந்து அவரும் அதிதிகளும் சிறுமிகளுக்கு எதுவும் கூறாது வெளியியேறியிருந்தனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தும் மண்டபம் நிறைந்திருந்த மக்களும் வெளியேறினர். சுமார் இரண்டு மணித்தியாலயமாக நடனமாடுவதற்கு தயார் நிலையில் இருந்த சிறுமிகள் ஏமாற்றமடைந்தனர்.

இறுதியில் அங்கு நின்ற சிறுமியின் ஊரவர்கள் சிலர் பாடலை ஒலிக்கச் செய்து இரு சிறுமிகளையும் வெற்றுக் கதிரைகளுடன் காட்சியளித்த மண்டபத்தில் நடனமாட வைத்தனர்.

ஊடகவியலாளரும், அங்கு நின்ற ஒரு சிலரும் குறித்த நடனத்தை பார்த்து மனம் உடைந்திருந்த சிறுமிகளை பாராட்டி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் : பொலிஸார் விசாரணை!!

தங்கவேல் திவியா..

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் வீட்டில் தனிமையில் நின்ற யுவதி அவரது வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

தாய் , தந்தை காலை 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்து உடனடியாக மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய தங்கவேல் திவியா என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று மாலை முதல் மின் வெட்டு : மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

மின் வெட்டு..

எரிசக்தி அமைச்சு எரிபொருள் விநியோகம் செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை (07.01.2022) பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (07.01) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எரிபொருளுக்கான பணம் செலுத்தப்படாததன் காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை விடுவிக்கவில்லை.

எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள பார்ஜ் மவுண்டட் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மவுண்டட் மின் உற்பத்தி நிலையம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதே சமயம் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் 102 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

வெள்ளிக்கிழமை (07.01) மாலைக்குள் எரிபொருளை வழங்கினால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் இளஞ்செழியன்!!

நீதிபதி இளஞ்செழியன்..

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.