வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான மகேந்திரன் கடந்த மாதம் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து வெற்றிடமாகக் காணப்பட்ட உப தவிசாளருக்கான தெரிவு இன்று (24.11.2021) காலை சபையில் போட்டிக்கு விடப்பட்டது.
இதன்போது ஈரோஸ் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தி சசிதரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டனர்.
இதன்போது சி.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக 16 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றது.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஈரோஸ் அமைப்புக்கு மூன்று வாக்குக்கள் கிடைத்தது.
சபையில் இன்று 24 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். அதில் 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐந்து பேர் நடுநிலையை வகித்தனர். ஐந்துபேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை . என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் விடுதியில் கள்ளக் காதலியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பொறியியல் ப.ட்.டாதாரி மாணவர் சிக்கி உள்ளார். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கொ.ல்.லம் பட்டறை பகுதியில் உள்ள அந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் க.ழு.த்.தை இ.று.க்கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கிடந்தார்.
அவருடன் தங்கிய க.ள்.ள.க்.காதலன் தப்பி ஓடிவிட்டதாக விடுதியில் உள்ளவர்கல் தெரிவித்திருக்கிறார்கள். த.ப்.பியோடிய அந்த நபர் யார் என்பது குறித்து போ.லீ.சார் தீ.விர வி.சாரணை நடத்தி வந்தனர்.
போ.லீ.சாரின் தொடர் வி.சா.ரணையில் கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட பெ.ண் கடலூர் மாவட்டம் அடரிகளத்தூர் காஞ்சரங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பையாவின் மனைவி சிலம்பரசி என்பதும், கருப்பையா சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் தனது 2 மகன் ஒரு மகளுடன் சிலம்பரசி வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
ராஜா அடரிகளத்தூர் என்கிற பெயரில் விடுதியில் அறை எடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அது குறித்து போ.லீசார் விசாரித்து வந்துள்ளார்கள்.
உண்மையிலேயே ராஜா என்பவர் தான் அறையில் தங்கியிருந்தாரா? அல்லது போலியாக வேறு ஏதும் பெயரை கொடுத்து இருக்கிறார்களா என்று தனிப்படை விசாரித்து வந்தார்கள். இந்த நிலையில் அது போ.லி.யான பெயர் என்பது தெரியவந்தது.
மேலும் 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டு வருவதாகத்தான் சிலம்பரசி வீட்டை விட்டுச் சென்றார் என்று உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் நகைக்காக கொ.லை செ.ய்.து.வி.ட்டு நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் என்ற கோணத்தில் போ.லீ.சார் விசாரித்து வந்துள்ளனர்.
இந்த கோணத்தில் போ.லீ.சா.ர் வி.சா.ரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சிலம்பரசி பக்கத்துவீட்டு துரை என்பவரின் மகன் இளங்கோ பொறியியல் ப.ட்.டதாரி என்பதும் அவருடன் சிலம்பரசி அ.டி.க்.கடி வெளியூர் சென்று வந்ததும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இளங்கோவை தனிப்படை போ.லீ.சார் பிடித்து வி.சா.ரணை நடத்தியதில் சிலம்பரசிக்கும் தனக்கும் க.ள்.ள உ.றவு இருந்ததாகவும் பல ஆண்டுகள் பழகி வந்ததாகவும் அதனால் அ.டி.க்கடி வெளியூர் சென்று லாட்ஜ் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
சம்பவத்தன்று தன்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.ளும்படி கேட்டு தொ.ந்.தரவு செ.ய்.து இருக்கிறார் சிலம்பரசி. முடியாது என்று சொல்லவும், அப்படி என்றால் என்னை கொ.லை செ.ய்.துவிட்டு வேறு யாரையாவது திருமணம் செ.ய்.து கொ.ள் என்று சொல்லி இருக்கிறார் சிலம்பரசி. இதில் ஆ.த்.திரமாகி, சேலையால் க.ழு.த்தில் போட்டு இ.று.க்கியதில் சிலம்பரசி உ.யி.ரி.ழந்திருக்கிறார்.
உடனே அறையை பூ.ட்டி விட்டு அங்கிருந்து த.ப்.பியோடி விட்டதாக போ.லீசாரிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இளங்கோவை செ.ய்.து நீதிமன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தி சி.றை.யில் அ.டைத்தனர்.
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய நாளை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்படும் என அரச கட்சியின் பிரதான அமைப்பாளர், பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ‘’ கல்யாணி பொன் நுழைவு’’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்ட பின்னர் கொழும்பு நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனால் அதிகரித்த வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போதைய களனி பாலத்தின் கொள்ளளவு போதுமானதாக இல்லாததால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த வேளையில் 2012ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு 2013ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக அதி தொழில்நுட்ப கேபிள்களை பாவித்து புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதன் பின்னர் பழைய களனி பாலத்துக்கு அண்மையில் ஆறு தட வழிகளை கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து பேலியகொடை பாலத்தின் சந்தியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய களனி பாலம் அமைக்கும் திட்டம் ஒருகொடவத்த சந்தியிலும் மற்றும் துறைமுக நுழைவு சந்தியிலும் நிறைவடைகின்றது.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையில் கொழும்பு பக்க முடிவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்ட பாதை வரை ஆறு தடவழிகளை கொண்ட இந்த பாலம் அங்கிருந்து ஒருகொடவத்தை வரையும், இங்குருகடைசந்தி வரையும், துறைமுக நுழைவு பாதை வரையும் நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 380 மீட்டர் ஆகும். இப்பாலம் இரண்டு தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டது.
முதலாவது தொகுதியில் உருக்கினால் ஆன பாலத்தின் பகுதிக்கு 31,539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தொகுதியில் கான்கிரீட் தொங்கு பாலம் பகுதிக்கு 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின்(JICA) நிதி பங்களிப்புடன் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் ஊடாக அமைக்கப்படும் புதிய களனி பாலம் அமைக்கும் திட்டத்தில் களனி சுற்றுவட்ட பாதையை அண்டிய பிரதேசம் மற்றும் புதிய களனி பாலம் முடிவிலிருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான பாதையின் இரு மருங்கையும் அலங்கரிக்க தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட ஆல், அலரி, தேக்கு, இலுப்பை போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இவ்வாறு நடப்பட்ட மரங்களுக்கு தொடர்ந்து நீரை வழங்க நிலத்தடியிலான தானியங்கி நீர் குழாய் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய களனி பாலம் இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பு நகரின் அழகை மேலும் அதிகரிக்க உதவும் பிரதான அம்சமாக களனி கங்கையின் அழகையும், பாலத்தையும் மெருகூட்ட உல்லாசப் பயணிகளின் கருத்தை கவரும் வகையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் அதி தொழில்நுட்ப முறை குறித்து கவனம் செலுத்தி புதிய களனி பாலம் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது கு.ழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி அந்தப்பெண் இளைஞரை போனில் அழைத்துள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டில் இரவு உணவு உண்டுவிட்டு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
சாப்பிட்டு விட்டு இரவு புறப்படும்போது நானும் உன்னுடன் வரட்டுமா எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க இருவரும் ஒன்றாக இளைஞரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்றதும் த.லைவலி ஏற்பட்டுள்ளது. ம.ய.க்கம் வந்ததையடுத்து இளைஞர் உ.றங்கியுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் இடுப்பு பகுதிக்கு கீழ் வலி ஏற்பட்டுள்ளது. தூ.க்க கலக்கத்தில் கண் விழித்து பார்த்தபோது அவரது படுக்கை முழுவதும் ர.த்.த.க்கறையாக இருந்துள்ளது.
நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்துள்ளது. பின்னர் தான் தன்னுடைய பி.றப்.புறுப்பு அ.று.ப்பட்டிருப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்துள்ளார். தன்னுடன் இருந்த பெ.ண்ணை தேடியுள்ளார்.
ஆனால் அவர் வீட்டில் இல்லை. உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய இல்லை. இதனையடுத்து போனை எடுத்து அந்தப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போனை எடுத்த பெண் என்னை மன்னித்துவிடு மன்னித்துவிடு எனக் கூறியுள்ளார். பிறகு தான் தன்னுடைய நிலைக்கு இந்தப்பெண் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்த அந்தப்பெண் அவரை மீட்டு சிகிச்சைக்காக ம.ரு.த்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அதன்பின்னரே கா.வல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப்பெற்றுக்கொண்ட கா.வ.லர்கள் இதுகுறித்து வ.ழ.க்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
த.லைமறைவாக உள்ள அந்தப்பெ.ண்.ணை தேடி வருகின்றனர். கா.வ.ல்துறையினரின் முதற்கட்ட வி.சா.ரணையில், இ.ளைஞரும் அ.ந்.தப்பெண்ணும் மிகவும் நெ.ருக்கமாக பழகிவந்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செ.ய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார். தன்னை திருமணம் செ.ய்துக்கொள்ள அந்தப்பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு இளைஞர் மறுக்கவே அந்தப்பெண் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உணவில் ம.ய.க்க மருந்து கலந்து கொடுத்திருக்கலாம் என போலீஸார் ச.ந்தேகிக்கின்றனர். இ.ளைஞருக்கு வீட்டில் நடந்தது எதுவும் நினைவில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23.11) தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் கிழக்கில் நிலவும், வளிமண்டல குழப்பம் காரணமாக அதிக மழை பெய்துள்ளது. இந்த வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பின்னர் வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படும் நிலை குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர்.
மீண்டுமொரு முடக்க தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும். எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம்.
தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு கோருகிறேன்.
உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாது முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படலாம். அனுமதி பெறாமல் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்று. அதற்கான சுகாதார வழிகாட்டல்களை மாத்திரமே வெளியிடப்பட வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற கோர சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பத்தையடுத்து கிண்ணியாவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த பகுதியில் அமைதி நிலையை பேணும் வகையில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப்படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வவுனியா, காத்தார் சின்னக்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தமது காணிக்கான உறுதிப்பத்திரங்களின்றி கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரினதும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காணியற்ற மக்களுக்கு காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கல் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கிராமத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் இருந்த 26 குடும்பங்களுக்கு அவை வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், குறித்த கிராமத்தில் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், கிராம அலுவலர் எஸ்.தர்சன்,
அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் கே.டினேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா நகரசபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர் ச.தனுஸ்காந்தின் மனைவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு இன்று (22.11) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் நகரசபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பபிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் Poojappura பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். 29 வயது மதிக்கத்தக்க இவர் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியை சேர்ந்த ஷீபா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.
ஆனால், ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதை மறைத்து அருண் குமாருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம், அருண்குமாருக்கு சமீபத்தில் தெரியவர, அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் அவரை ஷீபா மிரட்டு வந்துள்ளார். இதனால், அருண் குமார் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது, ஷீபாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால், சில தினங்களுக்கு முன்பு அருண் குமாரை தொடர்பு கொண்ட ஷீபா, தனக்கு 2 லட்சம் ரூபாய் தந்தால் ஒதுங்கி கொள்வதாக கூறியுள்ளார். வேறு வழியின்றி, கடந்த16-ஆம் திகதி அருண் பணத்துடன் வருவதாக கூறியுள்ளார்.
அதன் படி தொடுபுழா அருகே அடிமாலியில் உள்ள தேவலாயத்தின் அருகில் ஷீபாவை அருண் குமார் சந்தித்து பேசினார். அப்போது, திடீரென ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அருண் குமார் முகத்தில் வீசினார். ஷீபாவின் முகத்திலும் ஆசிட் பட்டது. இதனால், ஷீபா அங்கிருந்து தப்பி விட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி.யில் பதிவாகியுள்ளது.
அதில் ஆசிட் பட்டு வலியால் அருண்குமார் துடி துடிக்கிறார். அதன் பின் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோனது. ஆசிட் வீசிவிட்டு தப்பிய ஷீபாவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரை உ.யி.ருடன் புதைத்து கொ.லை செ.ய்.த ம.னைவியை பிடித்து போ.லீ.சார் விசாரித்தபோது, கணவனின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறேன். அவர் ஜீவசமாதி ஆக வேண்டும் என்று சொன்னார் அதனால் அவரின் விருப்பத்தையே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்று சொல்லி அ.திர வைத்திருக்கிறார். சென்னையில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகரில் வசித்து வந்தவர் நாகராஜ். 60 வயதான நாகராஜுக்கு 45 வயதில் லட்சுமி என்ற ம.னைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருந்துள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். 25 வயதான மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
குறி சொல்லி சாமி ஆடுவதுதன் நாகராஜின் தொழிலாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதியன்று நாகராஜுக்கு தி.டீ.ரென்று நெ.ஞ்.சு வ.லி ஏற்பட்டிருக்கிறது.
அப்போது தன் ம.னைவியிடம் தான் சாகப் போவதாகவும் தன்னை வீட்டின் கொ.ல்.லை புறத்தில் உள்ள குழியில் புதைத்து ஜீவ சமாதி ஆக்கி விடுமாறும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்டு சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார் அவரது மனைவி லட்சுமி.
இதை எடுத்து ம.னை.வி லட்சுமி , கணவன் நாகராஜை குழிக்குள் பிடித்து உட்கார வைத்து மண்ணை அள்ளி மூடி விட்டதாக சொல்கிறார். வீட்டில் தந்தையை காணாததால் மகள் தமிழரசி எங்கே என்று தேடிய போது, முதலில் சொல்லத் தயங்கிய தாய் , பின்னர் விவரத்தைச் சொல்ல, ஜீவசமாதி அடைந்தரா? தந்தையா? என்று அ.தி.ர்ந்து போன தமிழரசி,
பெரும்பாக்கம் போ.லீ.சில் பு.கா.ர் அளிக்க, அவர்கள் வந்து மகள் அளித்த பு.காரின் பேரில் தாய் லட்சுமியிடம் வி.சா.ரித்தபோது கணவரின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றி இருக்கிறேன்.
அவர் தான் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று சொன்னார் என சொல்ல போலீசாரும் அ.தி.ர்ந்து போயிருக்கிறார்கள். ஆனாலும் ச.ந்.தேகத்தின் பேரில் போலீசார் லட்சுமியிடம் துருவித்துருவி வி.சா.ரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் , வருவாய்துறை அ.திகாரிகள் முன்னிலையில் நாகராஜ் உ.டலை தோ.ண்டி எடுத்து பிரேத பரிசோதனை செ.ய்ய இருக்கிறார்கள். பிரேத பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.
முதல் திருமணத்தை மறைத்து காதலனை 2வதாக திருமணம் செய்த பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். தமிழகத்தின் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான சிவமுனியப்பன் ஒரு தனியார் நிறுவன தொழிலாளி.
இவர் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார்நகரில் வசித்து வருகிறார். சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 20வயதான சவுமியா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
ஆனால் அந்த சௌமியா ஏற்கனவே ஒருவரை கல்யாணம் செய்து ஒரு கு.ழ.ந்தையும் பெற்றுவிட்டு தனியாக வாழந்து வந்தார் .இதை அந்த பெண் மறைத்து விட்டு அந்த காதலனை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொண்டார்
சில நாட்கள் சந்தோஷமாக போன அவர்கள் வாழ்வில் தி.டீ.ரென்று புயல் வீசியது .அந்த சௌமியா தனது முதல் திருமணத்தையும் கு.ழ.ந்.தையையும் மறைத்து கணவனை ஏ.மாற்றி கல்யாணம் செய்து கொண்டதால் அவர் மனசாட்சி உறுத்தி சில நாட்களுக்கு முன்பு வி.ஷ.ம் கு.டி.த்.து விட்டார்.
இதையறிந்த அந்த கணவன் அந்த மனைவியை வைத்தியசாலைக்கு தூ.க்.கி சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை ப.ல.னின்றி அவர் உ.யி.ரிழந்தார். பின்னர் இது பற்றி போ.லீ.சார் வ.ழக்.கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1846 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1861.10 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான அறிக்கைக்கமைய, தங்கத்தின் விலையில் சற்று வீழச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பன்னாலையை சேர்ந்த 37 வயதுடைய இரத்தினசிங்கம் ராசகாந்தன் என்பவரே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (22.11) முன்னெடுத்து துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்று சூடுவெந்தபுலவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் இருந்து மறுபக்கம் திரும்ப முற்பட்ட போது முச்சக்கர வண்டியின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், நோயாளர் காவு வண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த உளுக்குளம் பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.