சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்கனும் : 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் எழுதியிருந்த கடிதம் இப்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் செயல்பட்டும் வரும் தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பூமியில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போ பாதியிலேயே போறேன்.மீண்டும் ஒரு முறை இந்த உலகில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெரிய பெண் ஆகி, நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாவில்லை.

தனது தாய், சித்தப்பா, மாமா ஆகியோரை மிகவும் பிடிக்கும், யாருக்கிட்டயும் சொல்லாம போகிறேன்,என்னை மன்னித்து விடுங்கள், இனி எந்த ஒரு பெண்ணும் தன்னை போன்று சாகக் கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கரூரில் தான் கடந்த வாரம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், சில தினங்களுக்கு முன்பு கோயமுத்தூரில் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தற்போது, மேலும் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் கணக்கெடுப்புக்காக காட்டுக்குள் சென்ற துணிச்சலான பெண் : நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பெண் வனக்காவலர் ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள கோலாரா வனச்சரகத்தில் வனக்காவலராக பணியாற்றி வந்தவர் சுவாதி துமனே.

துணிச்சல் மிகுந்த பெண்ணான இவர் நேற்று காலை 7 மணியளவில் 3 உதவியாளர்களுடன் கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்.

இதில் அவர் கோலாரா கேட்டில் இருந்து 4 கி.மீ. வரை காட்டின் மைய பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு சாலையில் பெண் புலி ஒன்று நிற்பதை குழுவினர் பார்த்தனர்.

புலி அவர்கள் நின்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் சுமார் ½ மணி நேரம் அங்கு காத்திருந்தனர். பின்னர் அடர்ந்த காட்டுக்குள் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க பின்னால் சென்றனர்.

இதை கவனித்த புலி, திடீரென வனக்காவலர் சுவாதி துமனேயை பாய்ந்து தாக்கியது. மேலும் உதவியாளர்கள் சுதாரிப்பதற்குள் புலி வனக்காவலரை அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.

பின்னர் சுவாதி துமனேயை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் புலி தாக்கியதில் பலியான பெண் வனக்காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கால்நடையாக சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தடோபா அந்தாரி புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

காதலியுடன் பேசிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

குஜராத்…

காதலியுடன் பேசிய இளைஞனுக்கு புடவை கட்டிவிட்டு, மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஜெய்ஷ் ராவல் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இ.ளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனது மகளுடனான காதலை விட்டு விடுமாறு பெண்ணின் வீட்டார், ஜெய்ஷ் ராவலை மி.ர.ட்.டியுள்ளனர்.

ஆனால், இதனை கண்டுகொள்ளாத ராவலோ, காதலியை அ.டி.க்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல காதலர்கள் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

அப்போது, இதனைப் இ.ள.ம்பெண்ணின் தாயார் பார்த்ததைக் கண்டு, ராவல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதையடுத்து, எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஆ.த்.தி.ர.மடைந்த பெ.ண்.ணின் தந்தை காளிதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ராவல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தனியாக இருந்த ராவலை வெளியே இ.ழுத்து வந்து, புடவை அணிவித்து மரத்தில் கட்டி வைத்து ச.ர.மா.ரியாக அ.டி.த்.துள்ளனர். இதில், அவர் ம.ய.க்கமடைந்த நிலையிலும், தொடர்ந்து தா.க்.கி.யு.ள்ளனர்.

இதையறிந்த ராவலின் குடும்பத்தினர், அங்கு செல்வதற்கு முன்பு, தா.க்.கு.தல் ந.டத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
மரத்தில் கட்டப்பட்டு ப.டு.கா.ய.ங்களுடன் ம.ய.க்.கநிலையில் இருந்த ராவலை அவரின் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ராவலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக அறிவித்தனர். இந்த ச.ம்.பவம் ராவலின் குடும்பத்தினரிடையே பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இந்த ச.ம்.பவம் தொடர்பாக போ.லீசார் பெண்ணின் குடும்பத்தினர் மீது வ.ழ.க்குப்பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்களான கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய 4 பேரையும் கைது செ.ய்.தனர்.

அரச ஊழியர்களுக்குவிடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

அரசாங்க நிர்வாகத்திற்கு எதிரான விமா்சனங்களை தடுக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக சமூக ஊடக தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச பணியாளா்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும்,

விமர்சிப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்தாபன கோவைக்கு இணங்க, அரச துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும்,

விமர்சிக்கும் பொதுத்துறைப் பணியாளா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பொதுத்துறை ஊழியர்களின் கருத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் தகவல்படி, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான விமர்சனங்கள் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமசேவகர் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம், விவசாய அமைச்சு, ரசாயன உரத்திலிருந்து சேதன உரத்திற்கு மாறும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்ததன் அடிப்படையில்,

பேராசிரியர் புத்தி மாரம்பேயை விவசாய அமைச்சகம், அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நாளை முழுமையாக ஆரம்பமாகும் பாடசாலைகள் : அதிகரித்துள்ள அபாயம்!!

பாடசாலைகள்..

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதுவரை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத தரம் ஆறு தொடக்கம் தரம் ஒன்பது வரையான வகுப்புக்கள் நாளைய தினம் முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புதிய டெல்டா திரிபின் உப பரம்பரை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளுக்குள்ளும் வெளியிலும் மாணவர்கள் கூடுவதை கட்டுப்படுத்தி,நோய் பரவுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கோர விபத்தில் ஒருவர் பலி : நால்வர் படுகாயம்!!

விபத்து..

கதரஸ்கொடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நௌபர் ஹாஜியார் என்றழைக்கப்படும் எம்.எஸ்.எம்.கரீம் வயது (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் மோதியதில் வானில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதியின் அருகாமையிலிருந்தவரே உயிரிழந்த நிலையில் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயதுக் குழந்தை பலி!!

பாலமோட்டைப் பகுதியில்..

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. இன்று (21.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை உழவு இயந்திரன் மூலம் உழுத போது இரு பிள்ளைகளையும் உழவு இயந்திரத்தின் இரு மருங்கிலும் அமரச் செய்துவிட்டு உழுதுள்ளனர்.

இதன்போது உழவு இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தை உழவு இயந்திரம் உழுத போது தவறி கிழே விழுந்து உழுது கொண்டிருந்த கலப்பைக்குள் அகப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குழந்தையை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்த போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளது. வவுனியா, பலமோட்டையைச் சேர்ந்த க.கனிசன் (வயது 5) என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பாரிய விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (21.11.2021) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் மகிழுந்துடன் மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் மோதிய கனரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் மகிழுந்து ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்து இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவ ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.

அதிகரித்த வேகம், நெரிசல் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் கிளிநொச்சியில் பதிவாகி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மரண அறிவித்தல் : கனகசபை கந்தசாமி!!

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா காத்தான் கோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகசபை கந்தசாமி அவர்கள் நேற்று (20.11.2021) சனிக்கிழமை அதிகாலை காலமானார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது 44A, காத்தான் கோட்டம் , நெளுக்குளம் வவுனியா இல்லத்தில் இன்று (21.11) காலை 10.00 மணிக்கு இடம்பெற்று தகன கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
பேரன்
பாஸ்கரன் கதீஷன் (வவுனியா ஊடகவியலாளர்)
தொடர்புகளுக்கு – 0763445678

2 குழந்தைகளுடன் தந்தை எடுத்த முடிவு : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கரூர்…

வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதுகளில் 2 பெ.ண் கு.ழ.ந்.தை.களும் இருந்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தில் ஜெகன் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகள் வியாபாரம் செ.ய்துள்ளனர். இந்நிலையில், ஜெகன் தமது இரண்டு கு.ழ.ந்.தை.களையும் அழைத்துக் கொண்டு,

சொந்த ஊரான துத்திக்குளத்திற்கு வந்துள்ளார். பின்னர், வெளியே சென்றுவருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஜெகன் கு.ழ.ந்.தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடியபோது, வீட்டின் அருகே உள்ள கி.ண.ற்றில் கு.ழ.ந்.தைகளுடன் அவர் ச.ட.லமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீசார், 3 சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வி.சா.ரணையில் ஜெகனுக்கு கடன் பி.ர.ச்சினை இருப்பது தெரியவந்தது.

கடன் பி.ர.ச்.சினை காரணமாக அவர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டாரா, வேறு காரணங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட கோணங்களில் போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

நோயாளியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை..

திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எச்.பீ.சந்ராவத்தி (52 வயது) என்ற பெண்ணே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண் தனது கணவருடன் ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வருகின்றார். அப்பெண்ணின், மகளின் மகன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சிறுவனை பார்ப்பதற்காக பேருந்திற்கு காத்திருந்த நேரத்தில்,

வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபரொருவர் இப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கின்றார். அவ்வேளையில், குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

பைஸர் தடுப்பூசி..

பைஸர் தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் மாற்று வழிகளைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பைஸர் தடுப்பூசி ஒரு RNA தடுப்பூசி, மரபணு மனித உடலில் நேரடியாக செலுத்தப்பட்ட பின்னர் அது எவ்வாறு செயற்படும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

முதன்முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசிகளில் RNA பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒரு மருத்துவ நிபுணராக தனக்கு பைஸர் தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் இருக்கின்றது.

எனவே பைஸர் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளைத் தேட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மற்றும் கிளிநொச்சியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது!!

திருட்டு..

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் இன்று (19.11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த சம்பவங்கள் தொடர்பில் வாள்களுடன் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 18 பவுண் நகை திருடப்பட்டமை,

அதனைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் ஆச்சிபுரம் பகுதியில் 10 பவுண் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டமை, சிதம்பரபுரம் பகுதியில் பல்சர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை,

இம் மாதம் உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டமை மற்றும் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்டமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் குறித்த நால்வருக்கும் தொடர்பு இருந்தமை விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 4 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 15 பவுண் நகை, முகத்தை மறைக்கும் கறுப்பு துணி என்பன மீட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (19.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு வந்த பெற்றோரான ஆசிரியர் ஒருவர் தனது மகனின் வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன்,

புகைப்படம் எடுத்ததாக குறித்த பாடசாலை அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த ஆசிரியர் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் விளக்கம் அளிப்பதற்காக சென்ற நிலையில் அங்கு இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முரண்பட்டு வாய் தர்க்கம் புரிந்துள்ளதுடன், அதிகாரிகளுடன் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் 119 பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு பொலிசார் சென்றதும் குறித்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த ஆசிரியருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆசிரியரே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபருடன் முரண்பட்டு இடமாற்றம் பெற்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : கொடும்பாவியும் எரிப்பு!!

ஆர்ப்பாட்டம்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ‘கள்ளவாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே’ எனக் கோசம் எழுப்பியவாறு வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினரை தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபனின் ஆதரவாளர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து இன்று (20.11) குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து ஊர்வலமாக பசார் வீதி ஊடாக பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் கொடும்பாவி மீதும் தாக்குதல் நடத்தி அதனை எரியூட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘கள்ள வாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே, வீண் வாய் பேச்சு சிறிதரனே 20 வருடம் ஏமாற்றியது போதாதா, கள்ளவாக்கு போட்டதை ஒத்துக் கொண்ட சிறிதரனே கல்வி பற்றி பேசுகிறாயா,

மறக்கவில்லை சிறிதரனே உன் பிரதேசவாத பேச்சை, கணனி துறையில் சாதித்த திலீபன் எம்.பியை தரக்குறைவாக பேசாதே, கள்ள வாக்கு நாயகனே உனக்கு என்ன தகுதி உண்டு திலீபன் எம்.பி பற்றி பேசுவதற்கு, சிறிதரனே அபிவிருத்தி உமக்கு மட்டும் ராஜபோக வாழ்க்கையா’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட இணைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய வீடு : லண்டனில் இலங்கை குடும்பம் தீயில் கருகி பலி!!

லண்டனில்..

லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்த நிலையில், குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்னரே வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. இதில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் இன்றைய தினம் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த வீட்டினை மூன்று மாதங்களுக்கு முன்னரே 425,000 பவுண்டுகளிற்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.