மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய வீடு : லண்டனில் இலங்கை குடும்பம் தீயில் கருகி பலி!!

லண்டனில்..

லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்த நிலையில், குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்னரே வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. இதில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் இன்றைய தினம் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த வீட்டினை மூன்று மாதங்களுக்கு முன்னரே 425,000 பவுண்டுகளிற்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கார் விபத்தில் மாடல் அழகிகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் : திட்டமிட்ட கொலையா? அதிர்ச்சித் தகவல்!!

கேரளாவில்..

இந்தியாவில் நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்(26). இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24)இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு.

அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் கைது செய்துள்ளது.

திடீர் திருப்பமாக 2 மாடல் அழகிகளுடம் விபத்து என்கிற பெயரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தோல்வி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வியடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளர் சு.தணிகாலசம் அவர்களினால் சபையில் இன்று (19.11) முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பாதீடு தொடர்பில் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பாதீடு சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது 26 உறுப்பினர்களைக் கெபாண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மட்டும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் 3 உறுப்பினர்களும்,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் 3 உறுப்பினர்களும், சுயேட்சை ஒரு உறுப்பினரும் என 15 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மேலதிக 8 வாக்குகளால் பாதீடு தோல்வியடைந்தது.

வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியபக் கட்சி ஒரு உறுப்பினர் நடுநிலமை வகித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர் வீதம் மூவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சந்தையின் தங்கத்தின் நிலவரம் தொடர்பில் புதிதாக வெளியான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலர்களை கடக்கவுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அதிகரிப்பு மிக சிறிய காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸ் 1863.40 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை இருளில் மூழ்குமா? அமைச்சர் கம்மன்பில வெளியிட்ட தகவல்!!

இலங்கை இருளில் மூழ்குமா?

எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு நன்மையாகவே அமையும். இதன்மூலம் அந்நியச் செலவணியை முறையாகப் பேணமுடியும்.

போராட்டங்கள் மூலம் டொலர் கிடைக்குமானால் நானும் திறைசேரிக்கு முன்னால் சென்று போராடத் தயாராகவே இருக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு வதந்திகளுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஆபத்தான புதிய கொவிட் திரிபு வைரஸ் கண்டுபிடிப்பு!!

புதிய கொவிட் திரிபு..

இலங்கையில் கொவிட் வைரஸின் புதிய டெல்ட்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளர்.
இந்தத் தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அடையாளங்காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை ஒத்த பீ.1.617.2.104 என்ற புதிய டெல்ட்டா திரிபொன்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வைரஸை விட இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நத்தார் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா?

நத்தார் காலப்பகுதியில்..

பயணங்கள் மேற்கொள்ளும் மக்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிலர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதனால் எதிர்வரும் நத்தார் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா? என்ற தீர்மானங்கள் மக்கள் கையில் உள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு பயணிப்பதனை அவதானிக்க முடிகின்றது. எப்படியிருப்பினும் இதுவரையில் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு பயணிப்பவர்கள் சுகாதார ஆலோசனைகளை மீறி செயற்படுகின்றனர்.

பாரிய அளவிலான மக்கள் ஏரிகள், குளங்கள், போன்ற இடங்களில் மக்கள் குவிந்து கிடப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. வார இறுதியில் விடுமுறைக்காக ஏதாவது பிரதேசங்களுக்கு சென்றிருந்தால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மக்களின் செயற்பாட்டிற்கமையவே எதிர்வரும் நத்தாரில் நாட்டை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி!!

வாகனங்கள்..

மீள்சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலைகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) எச்சரித்துள்ளது. அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வாகன இறக்குமதியாளர்கள் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உயிர்நாடியை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை.

கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தமக்கு சாதகமாக எந்தவொரு பெறுமதியையும் சேர்க்கவில்லை. முன்னைய பிரச்சினைகளையே தாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களின் விலை வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்றும் பொதுமக்களின் பொருளாதார நிலை குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் மெரெஞ்சிகே மேலும் தெரிவித்தார்.
மீள்சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலைகள் சமீபத்தில் 50 வீதத்திற்கும் அதிகமாக சில சந்தர்ப்பங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.

2018 இல் மாருதி சுசுகி வேகன் ஆர் விலை சுமார் 3.5 மில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அதன் சந்தை விலை 6 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. பிரபலமற்ற அனைத்து வாகனங்களின் விலைகளும் 25 வீதம் அதிகரித்துள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுங்கத்தினால் கைப்பற்றப்பட்ட சுமார் 700 வாகனங்கள் பொருந்தக்கூடிய வரி செலுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியில்லை என அறிவிப்பு!!

கொரோனா..

நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை உக்கிரமடைந்தால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியெதுவும் இல்லாமல் போகும் என அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் தென் மாகாணத்தில் மாத்திரமின்றி மேலும் பல மாகாணங்களிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது, இது ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்டவொரு விடயமாகும்.

எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த நிலைமை சடுதியாக அதிகரிக்குமாயின் பாரதூரமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம் : ஒரே நாளில் இத்தனை மில்லியன் வருமானமா?

மீன்கள்..

வாதுவ பிரதேசத்தில் நேற்று இரண்டு வலைகளில் சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெருமளவான மீன்கள் சிக்கியுள்ளன. நேற்று போயா தினம் என்ற போதிலும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு அதிகளவிலான மக்கள் குவிந்திருந்தனர்.

மொத்தமாக மீன்கள் கொள்வனவு செய்வதற்கு லொறி மற்றும் முச்சக்கர வண்டி வியாபாரிகளும் வருகைத்தந்துள்ளனர். அதிக விலையிலான மூன்று இனங்களைச் சேர்ந்த மீன்கள் வலையில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான மீன்கள் கிடைத்துள்ளமையினால் தாம் நீண்ட நாட்களின் பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மகனுக்கு உதவ மறுத்த பெற்றோர் : நொடிப் பொழுதில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா..

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சாய்குமார். இவர் கல்லூரியில் வேலை செய்யும் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நேற்று வெளியில் சென்றிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்ட வி.ப.த்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோ.தி இரண்டு பேர் கா.ய.மடைந்தனர். மோட்டார் சைக்கிளும் சே.த.மடைந்தது.

இந்த நிலையில் கா.ய.ம் அடைந்த இளைஞர்கள் இரண்டு பேரும் சாய்குமாரை, அவர் படித்து வந்த கல்லூரிக்கு அழைத்து வந்து அவருடன் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுபட்டனர்.

இதனால், ப.த.ற்.றமடைந்த அவர், தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த ச.ம்.பவங்களை கூறி மோட்டார் சைக்கிளை சரி செய்யவும், கா.ய.மடைந்த இளைஞர்களுக்கு வைத்தியம் செய்யவும் பணம் கேட்டார்.

ஆனால் அவருடைய தந்தை பணம் கொடுக்க முடியாது என்று கூறியதுடன், நடந்த சம்பவம் பற்றி கா.வல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று விபத்தில் கா.யமடைந்த இரண்டு இளைஞர்களிடமும் கூறினார்.

இதையடுத்து, கல்லூரி அலுவலகத்தில் சாய்குமாருடன், காயம் அடைந்த இளைஞர்கள் இரண்டு பேரும், கல்லூரி ஆசிரியர்களும் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது, சிறிது கால அவகாசம் கொடுத்தால் நான் பணம் பு.ர.ட்டி மோட்டார் சைக்கிளை சரி செ.ய்து கொடுக்கிறேன் என்றும், கா.ய.மடைந்த இ.ளைஞர்களுக்கு வைத்திய செலவுக்கு பணம் கொடுக்கிறேன் என்றும் சாய்குமார் கூறியிருக்கிறார்.

ஆனால், அதனை யாரும் ஏ.ற்றுக்கொள்ளவில்லை. இதனால், வி.ர.க்தியடைந்த சாய்குமார் தி.டீ.ரென்று கல்லூரி அலுவலகத்திலிருந்து மூன்றாவது தளத்திற்கு ஓடினார். பின்னர், அங்கிருந்து கீழே கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்து கொண்.டார்.

கீழே கு.தி.த்து ப.டுகாயமடைந்த சாய்குமாரை ஆசிரியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த ச.ம்பவம் பற்றி வ.ழ.க்குப்பதிவு செ.ய்துள்ள போ.லீசார் மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர். சாய்குமாரின் உ.டல் பிரேத பரிசோதனைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு அயல் வீட்டு இளைஞனால் நேர்ந்த விபரீதம்!!

தெலுங்கானா…

காதலிக்க மறுத்த இ.ள.ம்பெ.ண்ணை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செய்த இளைஞர் போலீசில் ச.ரணடைந்தார். தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே கோக்கன்னகர கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 20). தந்தையை இ.ழ.ந்த அஞ்சலியை தாய் லட்சுமி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

தாய் இல்லாத நேரத்தில் அஞ்சலி வீட்டில் தனியாக இருப்பதை கவனித்து அதே ஊரை சேர்ந்த வாலிபர் ராஜூ (வயது 20) அஞ்சலி வீட்டுக்கு சென்று நட்பாக பழகுவது போல் நடித்தார்.

சில நாட்களுக்கு பின் அஞ்சலியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ராஜு அ.டி.க்கடி அஞ்சலி தனியாக இருக்கும்போது வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்ட லட்சுமி அவரை கண்டித்தார்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் கிராம பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் அஞ்சலிக்கு அவருடைய தாய் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து மாப்பிள்ளை தேடி வந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்த ராஜு , அஞ்சலிக்கு போன் செய்து நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொ.ள்ள வேண்டும் என்று வ.ற்.புறுத்தியுள்ளார்.

அஞ்சலியிடம் இருந்து சா.த.கமான பதில் கிடைக்காத காரணத்தால் க.த்.தி.யுடன் அங்கு சென்ற ராஜூ அஞ்சலியுடன் க.டும் வா.க்.கு.வாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் காதலிக்க ம.றுத்ததால் ஆ.த்.தி.ர.மடைந்த இ.ளைஞர் வீட்டில் உள்ள டிவி சப்தத்தை அதிகப்படுத்தி அஞ்சலியை க.த்.தியால் கு.த்.தியும், அ.ரி.வா.ள்மனையால் தா.க்.கியும் ப.டு.கொ.லை செ.ய்.த பின் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று ச.ரண் அடைந்து விட்டார்.

அஞ்சலியை ராஜு கொ.லை செ.ய்.தது பற்றி கூலி வே.லை செய்.து கொண்டிருந்த லட்சுமிக்கு ஊர் மக்கள் தகவல் அளித்து வரவழைத்தனர். இந்த ச.ம்.பவம் ராமகுண்டம் பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் செயலால் மனமுடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஈரோடு..

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி மல்லிகா (60). இவருக்கு அமுதா (30), பூவிழி (28) என்ற மகள்கள்.

அமுதாவிற்கு, 10 ஆண்டுக்கு முன் வடிவேல் என்பவருடன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில், தனது 9 வயது மகள் தனன்யாவுடன் அமுதா வசித்து வருகிறார்.

பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக அமுதா பணிபுரிந்தார். அதே பள்ளியில் தனன்யா 5ம் வகுப்பு படித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூவிழி தி.டீ.ரென வீட்டைவிட்டு வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மல்லிகாவும், அமுதாவும் ம.ன.வே.த.னையில் இருந்தனர்.

நேற்று காலையில் நீண்ட நேரமாக மல்லிகா வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. ச.ந்.தே.க.ம.டைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஒரு அறையில் மல்லிகாவும், மற்றொரு அறையில் அமுதா, தனன்யா ஆகியோரும் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொங்கி கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து பெருந்துறை போ.லீ.சார் விரைந்து வந்து 3 பேரின் உ.ட.லையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அ.ரசு மருத்துவக்கல்லூரி ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போ.லீ.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து விசாரித்ததில், பூவிழி, காதலனுடன் ஓட்டம் பிடித்ததும், இதனால் ஏற்பட்ட ம.ன வே.த.னை.யில் த.ற்.கொ.லை செ.ய்.ததும் தெரியவந்தது. தொடர்ந்து வி.சா.ர.ணை நடத்தி வருகிறார்கள்.

மாஸ்க் போட்டதால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

கேரளா..

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஸ்வேதா என்ற பெண் வேலை செ.ய்.து வந்துள்ளார். அந்த பெண் பிஜூ என்பவரை திருமணம் செ.ய்து கொண்டு ,பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வாங்கிவிட்டார்.

பிஜுவுக்கு ஸ்வேதாவுடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவது திருமணம் செ.ய்துள்ளார். ஆனாலும் அந்த பெண் ஸ்வேதாவுக்கும் அவரின் முன்னால் கணவர் பிஜுவுக்குமிடையே அ.டி.க்.கடி மோ.த.ல் இருந்து வந்துள்ளது.

இதனால் பிஜு அவரின் முன்னாள் மனைவி ஸ்வேதாவை கொ.ல்.ல முடிவு செய்தார். அதனால் கடந்த வாரம் ஒரு க.த்.தியோடு அவர் வேலை பார்க்கும் வங்கிக்குள் வந்தார். அப்போது ஸ்வேதா லீவ் எடுத்திருந்தார்.

அதனால் அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா அமர்ந்து வேலை செ.ய்.துள்ளார்.இந்நிலையில், அந்த வங்கிக்கு வந்த பிஜூ தனது முன்னாள் ம.னைவியான ஸ்வேதா தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக த.வ.றுதலாக நினைத்து தான் மறைத்து கொண்டு வந்த க.த்.தியை கொண்டு வெ.ட்.டி.யுள்ளார்.

இந்த தா.க்.கு.தலில் அந்த பெண் ர.த்.த வெ.ள்ளத்தில் அங்கேயே ம.ய.ங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் ஸ்ரீஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிஜூவின் க.த்.தி கு.த்.து தா.க்.கு.தலில் ப.டு.காயமடைந்த ஸ்ரீஷ்மாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்போது போலீசார் அந்த பிஜூவை கைது செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாளில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கோவை..

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராம் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது மகள் சுவாதி(18). இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து அவரை சோமுராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சின்னபிள்ளை வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு இருந்த போது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அ.டி.க்.கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் சோமுராஜ்க்கு தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மகளை கண்டித்தார். பின்னர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். சுவாதியிடம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த ம.ன வே.த.னையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சுவாதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பெற்றோர் புத்தாடைகள் எடுத்து வைத்து இருந்தனர். குளித்து விட்டு அந்த துணியை அணிந்து கொண்டு வந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை 7 மணியளவில் சுவாதி குளிப்பதற்காக தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்கு சென்று கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்கப்படவே இல்லை. இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின் விசிறியில் சு.வாதி தூ.க்.கி.ல் பி.ண.மாக தொங்கி கொண்டிருந்தார். சுவாதி குளித்து முடித்து விட்டு பெற்றோர் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கொண்டு அதன் பின்னரே தூ.க்.கி.ல் தொ.ங்கியது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூர் கா.வல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ச.ம்பவ இடத்திற்கு வந்த கா.வ.ல் துறையினர் வீட்டின் அறையை உடைத்து உள்ளே சென்று தூ.க்.கி.ல் தொங்கிய சுவாதியின் உ.டலை மீட்டனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோர் க.த.றி அ.ழுதனர். பின்னர் போ.லீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கா.வல் துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சு.வா.தி தூ.க்.கில் தொங்கிய அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதனை போ.லீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், ”அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பே.ச்சை கேட்டு நடப்பேன்” என எழுதியிருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போ.லீசார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்..

உலக இந்துக்களால் இன்று (18.11.2021) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும் விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.