மாஸ்க் போட்டதால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

கேரளா..

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஸ்வேதா என்ற பெண் வேலை செ.ய்.து வந்துள்ளார். அந்த பெண் பிஜூ என்பவரை திருமணம் செ.ய்து கொண்டு ,பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வாங்கிவிட்டார்.

பிஜுவுக்கு ஸ்வேதாவுடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவது திருமணம் செ.ய்துள்ளார். ஆனாலும் அந்த பெண் ஸ்வேதாவுக்கும் அவரின் முன்னால் கணவர் பிஜுவுக்குமிடையே அ.டி.க்.கடி மோ.த.ல் இருந்து வந்துள்ளது.

இதனால் பிஜு அவரின் முன்னாள் மனைவி ஸ்வேதாவை கொ.ல்.ல முடிவு செய்தார். அதனால் கடந்த வாரம் ஒரு க.த்.தியோடு அவர் வேலை பார்க்கும் வங்கிக்குள் வந்தார். அப்போது ஸ்வேதா லீவ் எடுத்திருந்தார்.

அதனால் அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா அமர்ந்து வேலை செ.ய்.துள்ளார்.இந்நிலையில், அந்த வங்கிக்கு வந்த பிஜூ தனது முன்னாள் ம.னைவியான ஸ்வேதா தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக த.வ.றுதலாக நினைத்து தான் மறைத்து கொண்டு வந்த க.த்.தியை கொண்டு வெ.ட்.டி.யுள்ளார்.

இந்த தா.க்.கு.தலில் அந்த பெண் ர.த்.த வெ.ள்ளத்தில் அங்கேயே ம.ய.ங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் ஸ்ரீஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிஜூவின் க.த்.தி கு.த்.து தா.க்.கு.தலில் ப.டு.காயமடைந்த ஸ்ரீஷ்மாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்போது போலீசார் அந்த பிஜூவை கைது செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாளில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கோவை..

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராம் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது மகள் சுவாதி(18). இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து அவரை சோமுராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சின்னபிள்ளை வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு இருந்த போது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அ.டி.க்.கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் சோமுராஜ்க்கு தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மகளை கண்டித்தார். பின்னர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். சுவாதியிடம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த ம.ன வே.த.னையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சுவாதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பெற்றோர் புத்தாடைகள் எடுத்து வைத்து இருந்தனர். குளித்து விட்டு அந்த துணியை அணிந்து கொண்டு வந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை 7 மணியளவில் சுவாதி குளிப்பதற்காக தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்கு சென்று கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்கப்படவே இல்லை. இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின் விசிறியில் சு.வாதி தூ.க்.கி.ல் பி.ண.மாக தொங்கி கொண்டிருந்தார். சுவாதி குளித்து முடித்து விட்டு பெற்றோர் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கொண்டு அதன் பின்னரே தூ.க்.கி.ல் தொ.ங்கியது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூர் கா.வல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ச.ம்பவ இடத்திற்கு வந்த கா.வ.ல் துறையினர் வீட்டின் அறையை உடைத்து உள்ளே சென்று தூ.க்.கி.ல் தொங்கிய சுவாதியின் உ.டலை மீட்டனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோர் க.த.றி அ.ழுதனர். பின்னர் போ.லீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கா.வல் துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சு.வா.தி தூ.க்.கில் தொங்கிய அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதனை போ.லீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், ”அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பே.ச்சை கேட்டு நடப்பேன்” என எழுதியிருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போ.லீசார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்..

உலக இந்துக்களால் இன்று (18.11.2021) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும் விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற வாகனம் விபத்து : படுகாயமடைந்த இளைஞன் மரணம்!!

விபத்து..

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தவர்களில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற இருந்த புதல்வியின் பதிவுத் திருமணத்திற்காக வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் கல்கமுக பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை (18.11) வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 உள்ளடங்களாக 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும், மூவர் கல்கமுக வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் கல்கமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வரவிருக்கும் புதிய மாற்றம்!!

வட்ஸ்அப்..

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால்,

தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Windowsக்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் MacOSகாக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் பிசி (WhatsApp PC) என்ற செயலி வெளியிடப்படவுள்ளதாகப் பிரபல இத்தாலிய இணையத்தளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன்ஷோட்கள் மற்றும் GIFகளை மேற்கோள்காட்டி GSMArena இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Windows 11 இன் theme ஆக உள்ள, Transparent Color Panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலியில், பயன்பாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் Notification கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலி மூலம் கணினிகளில் விரைவாக வட்ஸ்அப்பை செயற்படுத்த முடியும் எனவும், டச் டிஸ்பிளேக்கு ஏற்ற வகையில் வரைதல் அம்சம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த செயலியில் வட்ஸ்அப் கணக்கு, அரட்டைகள், Notifications உட்பட 6 பிரிவுகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி!!

மற்றுமொரு நெருக்கடி..

எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் சர்வதேச நாடுகளில் பரவியுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக டிசம்பர் மாதத்தில் கடுமையான கோவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றின் தாக்கத்தினால், பல நாடுகளில் உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், இதனால் இலங்கை போன்ற நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியாக உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே பொருட்களின் விலை குறைவடையும். டிசம்பர் மாதம் அளவில் உற்பத்தி தடைப்பட்டால் பொருட்களில் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனாலேயே ஜனாதிபதி பல பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

சாரதி அனுமதிப் பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கான தகவல் : நடைமுறைக்கு வரும் மாற்றம்!!

சாரதி அனுமதிப் பத்திரம்..

வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சை நடத்துவது தொடர்பான புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முடக்கப்படும் ஆபத்தில் இலங்கை!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் அவதானம் இன்னமும் குறைவடையாத சூழலில் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் வருத்தமடைவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் தொற்று முடிவுக்கு வரவில்லை. இந்த மரணங்கள் சாதாரண மரணங்கள் அல்ல. அங்கு குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் உள்ளனர். இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் குறித்து நாங்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த நிலைமை குறித்து அனுபவம் உள்ள போதிலும் பாரியளவிலான மக்கள் கொழும்பில் ஒன்றிணைந்தமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது ஆர்ப்பாட்டம் செய்வதற்கான நேரம் அல்லது. இந்த ஆர்ப்பாட்டம் ஊடாக கோவிட் பரவலுக்கு அவசியமான சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை செய்யாதீர்கள் என நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து வெளியான தகவல்!!

பாடசாலைகள்..

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

குழந்தைகள் மத்தியில் கோவிட் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையேயும் கோவிட் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும். பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரில் இரவு நேரத்தில் இளைஞர் குழு அட்டகாசம் : ஆசிரியர் மீதும் தாக்குதல்!!

இளைஞர் குழு அட்டகாசம்..

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (17.11.2021) இரவு வீதியில் செல்பவர்களை வழிமறித்து இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளர்.

காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியில் நின்ற இளைஞர் குழுவினர் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து குடும்பத்துடன் கொழும்பு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து : அறுவர் படுகாயம்!!

விபத்து..

புதல்வியின் பதிவுத்திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி கயஸ் ரக வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியினை சேர்ந்த இவர்கள் நேற்றிரவு (17.11.2021) வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர். இதன் போது கல்கமுவ பகுதியில்,

இன்று (18.11.2021) அதிகாலை குறித்த கயஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த அறுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 20 வயது இளைஞன் : விசாரணைகள் தீவிரம்!!

சரத்குமார்..

ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று (17.11.2021) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நிவ்வெளிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒரு ஜோடி பாதணி,ஸ்மார்ட் போன் என்பன காணப்பட்ட நிலையில், இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது குறித்த பகுதியில் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் கிடந்த ஸ்மார்ட் போன் மற்றும் பாதணியும் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் எனும் இளைஞனுடையது என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயம்!!

விபத்து..

கந்தளாய் – கொழும்பு பிரதான வீதி 87 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து சேருவில விகாரைக்கு வருகை தந்து மீண்டும் சேருவில பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பௌத்த மதகுரு உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த 7 பேரும் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய மற்றும் எழுமாறாக சில பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், வவுனியா, தாதியர் கல்லூரியில் இன்று (17.11) முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!!

விபத்து..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (17.11.2021) மாலை முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இருந்து மாத்தறை நோக்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அங்கு பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை : இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

திடீர் சோதனை..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், இருவருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (17.11.2021) தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக சுகாதாரப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முககவசம் அணியாது நின்றோர், முககவசத்தை சீராக அணியாது நடமாடியோர், சமூக இடைவெளி பேணாதோர் உள்ளிட்ட நபர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

அத்துடன், முககவசம் அணியாது பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும், முகக்கவசம் அணியாது நகரப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும் என இரண்டு பேருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.