கிழக்கில் தமிழரால் உருவாக்கப்பட்ட உழவு இயந்திரம்!!

கோகுலராஞ்சன்..

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனிதன் ஏதோ ஒரு விதத்தில் பல்துறைசார்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றான். தற்கால கொவிட் – 19 காலத்திலும் சில முயற்சியுடையோர் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் தமது பொழுதை வீணாகக் களிக்காமல் அவற்றை மிகுந்த பிரயோசனமாகப் பயன்படுத்துபவர்களும் தற்காலத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

எனினும் கண்டு பிடிப்புக்களுக்கும், புதிய புதிய உற்பத்திகளுக்கும், இறக்குமதிகளுக்கும், சர்வதேசத்தையே நம்பியிருக்கும் நம் இலங்கையில் ஆங்காங்கே எங்கோயே மூலை முடுக்குகளில் தத்தமது திறமைகளைக் காண்பித்து,

புதிய புதிய கண்டு பிடிப்புக்களையும், உற்பதிகளையும் வெளிக்காட்டுபவர்களாக நம்நாட்டு கண்டுபிடிப்பாளர்கள், இருக்கத்தான் செய்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்திலுள்ள களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் தான் கந்தசாமி கோகுலரஞ்சன்.

சிறிய வயதிலிருந்தே தொழில் நுட்பத்துறையில் ஆர்வமான இவர், மத்திய கிக்கு நாடுகளில் கணனி திருத்துனராக தகுந்த வேதனத்திற்கு தொழில் புரிந்து வந்துள்ளார்.

தற்போது வீட்டிலிருந்து கொண்டு பல கம்பனிகளுக்கும், நிறுவனங்களுக்குமுரிய கணனிகளைப் பழுது பார்த்துக் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் அவர்,

தற்கால கொவிட் – 19 காலத்தில் கணனி திருத்தும் வேலைகள் குறைவடைந்துள்ளதால் 45 நாட்களில் சுமார் 4 இலட்சம் ரூபா செவு செய்து கழிவுப் பொருட்களைக் கொண்டு புதிய ரக உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

விவசாயக் கிராமத்தில் பிறந்ததாலும், விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளதாலும், தாம் எவரிடமும் கையேந்தாமல் விவசாயிகளுக்கு புதிய உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு,

தான் இவ் உழவு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்கு அரச அங்கீகாரம், மற்றும் பதிவுச் சான்றிழ் போன்றவற்றைப் பெற்றுத்தர அரசாங்கம் உதவவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோகுலராஞ்சன் புதிதாக வடிவமைத்துள்ள சிறியரக உழவு இயந்திரத்தை அப்பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை : வேதனையால் இலங்கை மக்களிடம் கும்பிட்டு கேட்கும் வைத்தியர்!!

கொவிட் தொற்று..

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வைத்தியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டு தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். “வைத்தியர்கள், தாதிகள் உட்பட சுகாதார பணியாளர்கள் 5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை.

அப்பா வீட்டிற்கு வர மாட்டீர்களா என பிள்ளைகள் தொலைபேசி ஊடாக கேட்கின்றார். அப்போது எங்களுக்கு ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளினால் கூறி விட முடியாது. இவ்வாறான சூழ்நிலைகளை புரிந்து மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என கும்பிட்டு கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ். சிங்கள புத்தாண்டின் போதே இறுதியாக வீடுகளுக்கு சென்றோம். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். எனினும் வீடுகளுக்கு சென்று பார்க்க முடியாத நிலைமையிலேயே உள்ளோம்.

அம்மா அப்பாவை பார்ப்பதற்கு கடந்த 6 மாதங்களாக செல்லவில்லை. உண்மையாகவே தற்போது எங்களுக்கும் மிகவும் சோர்வாக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை!!

இலங்கை..

உலகில் சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய சிறந்த முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பெயரிடப்பட்டு்ள்ளது. பிரபல ட்ரவல் ப்ளஸ் லெஷர் சுற்றுலா வழிகாட்டி சஞ்சிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மெரிடித் ஊடக குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த சஞ்சிகையில், புதிய சுற்றுலா வலயங்களின் பட்டியலில் இலங்கை 24 ஆவது இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இலங்கை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் ஒரே இடத்தை பிடித்துள்ளன.

சுற்றுலாப் பயணிகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ட்ரவல் ப்ளஸ் சஞ்சிகையானது, இவ்வருடத்துக்கான சிறந்த சுற்றுலா தளங்களை தேர்தெடுத்தெடுப்பதற்கு, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதிவரை இந்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

21ம் திகதியின் பின் நாடு திறக்கப்படுமா? ஜனாதிபதி இன்று பிறப்பித்துள்ள உத்தரவு!!

21ம் திகதியின் பின்..

செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு பின் நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் விதிக்கப்பட வேண்டிய வழிகாட்டல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன் போதே தேசிய கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் ஜனாதிபதி குறித்த அறிக்கையை கோரியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாடசாலைகளை ஆரம்பிக்க முன் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கானது நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு : சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி  : இலங்கையின் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!

நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

அதற்கமைய இன்றைய தீர்மானத்தில் நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்படும்.
தொடர்ந்து கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கமே தீர்மானம் எடுத்துள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையின் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!

முடக்கநிலை..

நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

அதற்கமைய இன்றைய தீர்மானத்தில் நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்படும்.
தொடர்ந்து கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கமே தீர்மானம் எடுத்துள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? இன்று முடிவு!!

ஊரடங்கு..

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து, இன்று (10.09.2021) முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனா செயலணியை இன்று சந்திக்கிறார். இதன்போது, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்குவது அல்லது நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஏற்கனவே அமுலில் உள்ள உத்தரவின்படி, செப்டம்பர் 13 திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (09.09) 08 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 08 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இவர்களில் 60வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் 6 நபர்களாவார்கள்.
இந்நிலையில் மரணித்த 8 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (09.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேறொரு பெண்ணுக்கு கண்முன்னே தாலி கட்டிய காதலன் : த.டுக்க போ.ராடிய காதலி செய்த துணிச்சல் செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கா.தலியை ஏ.மாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு ஓ.டிய காதலன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி ர.கசியமாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நல்லிச்சேரியைச் சேர்ந்தவர் செல்வி. 32 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கி.ரேன் ஆ.ப்ரேட்டராக வே.லை செ.ய்து வந்த செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவருக்கும் கா.த.ல் ம.லர்ந்துள்ளது. இதனால் இருவரும் பல்வேறு இ.டங்களுக்கு சு.ற்றிய நி.லையில், நெ.ருங்கி ப.ழகியுள்ளனர்.

அதன் பின் இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால், முருகன் வீட்டில் இவர்களின் காதலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் முருகன், செல்வியுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

அதன் பின் சில ஆண்டுகள் வெளிநாட்டிற்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய முருகனுக்கு, வீட்டில் பெற்றோர் பெண் பார்த்து கடந்த புதன் கிழமை திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை அறிந்த செல்வி, உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனடியாக உடனடியாக திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்வி வி.ரைந்த போது, அங்கு மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த மாப்பிள்ளை வீட்டார் அவரை உள்ளே விடவில்லை. அவர்களிடம் இருந்து வெளிவர முயன்ற அவர் ஒரு கட்டத்தில், கை.யை பி.டித்து இ.ழுத்ததாக பு.கா.ர் அளிப்பேன் என்று ச.த்தமிட்டதால், உறவினர்கள் விலகினர்.

பின்னர் அங்கு வந்த செல்வியின் சகோதரர் அவரை கை.யை பி.டித்து வ.லுக்கட்டாயமாக வெ.ளியே இ.ழுத்துச் செ.ன்றார். ஆனாலும் அங்கிருந்து செல்ல ம.றுத்து செல்வி அ.டம்பிடித்தார்.

செல்வியின் போ.ரா.ட்.ட.ம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க , மாப்பிள்ளை முருகன் திட்டமிட்டபடியே தனக்கு பார்த்த மணப்பெண்ணின் க.ழுத்தில் தாலிகட்டினார்.

அவரது திருமணம் நடந்தது தெரியவந்ததும், மீண்டும் சென்று கூ.ச்சலிட்டு செல்வி ர.க.ளை செ.ய்ததால் செந்தில்குமாரின் சென்னை காதல், இரு வீட்டார் உறவினர்கள் மத்தியில் அம்பலமானது.

அவர் தன்னிடம் முருகன் நெ.ருக்கமாக இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால், இந்த பி.ரச்சனை குறித்து காவல் நிலையத்தில் வைத்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி செல்வியையும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் சிலரையும் பொலிசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

25 முறை வீட்டை விட்டு வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவி : ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் கணவன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவியை ஏற்றுக் கொள்ள கணவன் தயாராக இருப்பதாக கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் Nagaon மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக, அந்த பெண்ணின் மாமனார் கூறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மத்திய அசாமின் Dhing Lahkar கிராமத்தில் வாசித்து வரும் பெண்ணிற்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த நிலையில், இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசியாக குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகிறது. இந்நிலையில், தற்போது அந்த பெண் வீட்டை விட்டு வெறொரு நபருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

மருமகள் குறித்து அவருடைய மாமானார் கூறுகையில், திருமணம் முடிந்ததில் இருந்து சுமார் 20-ல் இருந்து 25 முறை அவள் வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டை விட்டு ஓடிய சில நாட்களுக்கு பிறகு, ஒவ்வொரு முறையும் திரும்பி வருவாள். அவளை அவருடைய கணவர் ஏற்றுக் கொள்வார். அப்படி தான் இந்த முறையும் அந்த பெண் வேறொரு நபருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

சம்பவ தினமான செப்டம்பர் 4-ஆம் திகதி, டிரைவரான அந்த பெண்ணின் கணவர் வேலை முடிந்து திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. தன்னுடைய மூன்று மாத குழந்தையை அருகில் உள்ள வீட்டில் கொடுத்துவிட்டு, ஆட்டிற்கு புல் பிடிங்கிவிட்டு வருவதாக கொடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டின் உள்ளே கணவன் பார்த்த போது, வீட்டில் இருந்த 22,000 ரூபாய் மற்றும் சில தங்க ஆபரணங்களை அவர் எடுத்து மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அவர் யாருடன் சென்றிருக்கிறார் என்பது தெரியவில்லை, அதே சமயம் அவர் மீண்டும் வந்தால் கணவர் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, கூறியுள்ளார். மேலும், அந்த பெண் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், திருமணத்திற்கு பின் அந்த பெண் பல ஆண்களுடன் முறையற்ற பழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!!

எரிவாயு..

கடந்த மாதமே விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பைக் கோரியுள்ளது லாப்ஸ் நிறுவனம். கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என லாப்ஸ் நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபா காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

கோவிட் தொற்று உறுதியான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!

மூன்று குழந்தைகள்..

கோவிட் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த விடயத்தை கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்கு இலக்கான குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தாயும், மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கி..

கோவிட் 19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகை கால எல்லையை (2021.08.31 வரை) எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிவரை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் மத்திய வங்கி கோரியுள்ளது.

இந்த சலுகைகள், பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு 2022 ஜனவரி முதல் தொடர்ந்து தங்கள் நிலுவைச் தொகைளைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கைப்பேசி, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 623 பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய தீர்மானம்!!

623 பொருட்களின் இறக்குமதி..

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள்,

புடவைகள், உதிரிப்பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிகப்படியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி சந்தையின் உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை மாறி ஒப்படைத்ததால் ஏற்பட்ட குழப்பம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (9.9) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த செவ்வாய் கிழமை (07.09) நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா என்பவர் மரணமடைந்துள்ளார். நேற்று (08.09) புதன் கிழமை தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த சண்முகலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து இருவரையும் அவர்களது உறவினர்கள் வைத்தியசாலையில் பார்வையிட அனுமதிக்கப்படாத நிலையில்,

இறுதியில் அவர்கள் மரணமடைந்த செய்தியே அவர்களுக்கு கிடைத்தது. சண்முகலிங்கம் என்பவரின் குடும்பத்தினரை அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வைத்தியசாலை தரப்பினர் அழைத்திருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தவரின் உடலை தகனம் செய்வதற்காக பெட்டி மற்றும் ஆடைகளை வாங்கிச் சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதன்போது சண்முகலிங்கத்தின் குடும்பத்தினர் தம்மிடம் காட்டப்பட்ட சடலத்தை பார்வையிட்ட போது அது வேறு ஒரு நபருடையது என்பது தெரியவந்துள்ளது.

தமது உறவினர் இல்லை என அவர்கள் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சடலம் யாருடையது என தேடியபோது செல்வராஜா என்பவருடையது என தெரியவந்துள்ளது. செல்வராஜாவுக்கு பதிலாக அவர்களது உறவினர்களிடம் சண்முகலிங்கம் என்பரது சடலம் வழங்கப்பட்டு அது அப்போது எரியூட்டப்பட்டிருந்ததுடன்,

செல்வராஜாவின் குடும்பத்தினர் சண்முகலிங்கத்தின் சடலத்தை அடக்கம் செய்து விட்டு அதன் அஸ்தியை இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனால் சண்முகலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் தமது உறவினரின் சடலம் தேவை என வைத்தியசாலையில் முரண்பட்டதுடன், இறுதியில் செல்வராஜா குடும்பத்தினரிடம் சண்முகலிங்கத்தின் அஸ்தியை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இதனையடுத்து செல்வராஜாவின் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று மீண்டும் மயானத்திற்கு சென்று தகனம் செய்ய இணங்கினர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கணவனை காணாத மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் இறுதியாக அவரது உடலை கூட எரியூட்ட முன் ஒரு தடவை பார்வையிட முடியாமல் வைத்தியசாலை செய்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளதுடன்,

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பலரும் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி கிரியைகளைக் கூட செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன் அவர்களை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, ஒரு தவறு நடந்து விட்டது. தற்போது உறவினர்களுடன் கலந்துரையாடி அஸ்தியைப் உரியவர்களிடம் பெற்றுக் கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.