13ஆம் திகதிக்கு பின் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகுமா?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு..

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு இறுதியாக எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோவிட் தடுப்புக்கான செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடி இது குறித்து தீர்மானம் எடுத்துவரும் நிலையிலேயே நாளைய தினம் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த காலங்களில் கோவிட் மரணங்களின் நாளாந்த எண்ணிக்கை 200ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த எண்ணிக்கை 185 வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சாந்தசோலை கிராமம் அபாய கட்டத்தில் : 43 பேருக்கு கொரோனா தொற்று!!

சாந்தசோலை..

வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனா தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார பிரிவினரால் கடந்த சனிக்கிழமை (04.09.2021) சாந்தசோலை கிராமத்தில் அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நோய் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (08.09) இரவு வெளியாகின. அதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கிராமத்தில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா அபாயமுள்ள கிராமாக குறித்த கிராமம் காணப்படுவதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (08.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இரு நாட்களில் 738 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,

வவுனியா சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 8 நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் வைத்தியர் ஏ.அரங்கன் தலமையில் பட்டானிச்சிப்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் நேற்றையதினம் (07.09.2021) 308 பேருக்கும் இன்றையதினம் (08.09.2021) 430 பேருக்கும் என இரு நாட்களில் 738 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் காத்திருக்க முடியாத வயோதிபர்கள் , நோயினால் அவதியுற்றவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று தடுப்பூசிகளை சுகாதாரப் பிரிவினர் ஏற்றி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வழுக்கை த.லையை ம.றைத்து பெ.ண்களிடமிருந்து 75 ல.ட்சங்கள் மோ.சடி செ.ய்.த மா.ப்பிள்ளை!!

இந்தியா..

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டன்கி மண்டலம், கோடிகாலபுடி கிராமத்தை சேர்ந்தவன் சீனிவாஸ். ஹைதராபாத்தில் எம்.சி.ஏ. முடித்த பிறகு, கான்பூர் ஐ.ஐ. டியில் படித்து வந்த இவன் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளான். சில ஆண்டுகள் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வழுக்கை தலையில் விக் வைத்து ஸ்மார்ட் பாய் போல தன்னை போட்டோ எடுத்து அதனை பல்வேறு திருமண இணையதளங்களில் பதிவு செய்துள்ளான் சீனிவாஸ்.

இந்த பூனையும் பால்குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, வரன் தேடி தன்னை தொடர்பு கொள்ளும் இளம் பெண்களுடன் அறிமுகமாகி நெருங்கி பழகியுள்ளான்.

ஓங்கோலைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் 27 லட்சம் ரூபாயும் 2018 ஆம் ஆண்டு, நரசராப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் 40 லட்சம் ரூபாயும் வசூல் செய்து உழைக்காமல் சொகுசு வாழக்கை வாழ்ந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் அந்த பெ.ண்களை கை.விட்டு த.ப்ப மு.யன்ற போது பா.திக்கப்பட்ட பெ.ண்கள் போலீஸ் உதவியை நாட, பெ.ண்களை ஏ.மாற்றிய வழக்கில் இரு முறை கை.தாகி சிறைப்பறவையாகி இருக்கின்றான் சீனிவாஸ். ஜாமீனில் வெளியே வந்த சீனிவாஸ் மீண்டும் திருமண இணையதளங்கள் மூலம் இளம் பெண்களுக்கு வ.லை விரித்துள்ளான்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சித்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமண இணையதளத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோ.சடி செய்தான். மதனப்பள்ளியில் உள்ள மற்றொரு பெண்ணிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் ஏ.மாற்றியுள்ளான்.

பா.திக்கப்பட்ட பெ.ண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, பெங்களுரு செல்ல காத்திருந்த போது அவனை சித்தூர் போலீசார் கைது செய்தனர். ஸ்மார்ட் பாய் சீனிவாசிடத்தில் க.ஞ்சாவும் பி.டிபட்டது. அவனை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது அவனது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்துள்ளது.

அப்போது தான் அவன் வழுக்கை தலையை ம.றைத்து விக் வைத்து பெண்களை தனது காதல் வலையில் வ.ழுக்கி விழ வைத்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சினிவாசிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கழண்டு விழுந்த ஒரு விக் மற்றும் இரண்டு செல்போன்களையும் போலீசார் ப.றிமுதல் செய்தனர்.

திருமணத்துக்கு வரன் தேடும் போது மாப்பிள்ளையின் தலைமுடியை பி.டித்து இ.ழுத்து பார்க்கிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் தங்களிடம் அறிமுகமான மாப்பிள்ளை சொல்லும் தகவல்களை வி.சாரித்தாலே உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் காவல்துறையினர்

இளைஞரை திருமணம் செய்ய இரு பெண்களுக்கு இடையே போட்டி : வினோதமாக முடிவெடுத்த கிராமத்தினர்!!

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரை (Sakleshpur) சேர்ந்த 27 வயது இளைஞன், இரு இளம்பெண்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை சந்தித்து, இரட்டை வால் குருவி போல இருவரிடமும் இளைஞன் காதலை வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப, இளைஞனின் குட்டு, திருமண பேச்சுவார்த்தை எடுத்தபோது, பெண்ணின் உறவினர் ஒருவர் மூலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு இரட்டை வால் குருவியின் செட்டையை முறிக்கும் அளவுக்கு அந்த பெண்கள் கோபப்பட்டிருப்பார்கள் என நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான்.

அந்த இளைஞனை யார் திருமணம் செய்து கொள்வது என இருவருக்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டு, குடுமிப்பிடி சண்டை அளவுக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் பெரியவர்களின் சமாதானம் எடுபடவில்லை. வேறு வழியின்றி, விளையாட்டுப் போட்டிகளைப் போல டாஸ் போட்டு பிரச்சனையை தீர்க்க ஊர் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.

இந்த முடிவுக்கு 2 இளம்பெண்களும், இளைஞரும் சம்மதித்ததை அடுத்து, ஒரு சுபயோக மங்கள தினத்தில் டாஸ் போட்டுள்ளனர். பூ விழுந்த பெண்ணுக்கு ‘தல’யை திருமணம் செய்து வைக்க முடிவானது.

அப்போது டாஸில் தோற்ற பெண், ஸ்போர்ட்டிவாக வெற்றி பெற்ற பெண்ணை கட்டியணைத்து, கை குலுக்கிச் சென்றதுதான் ஹைலைட்.
சக பெண்ணிடம் கைகுலுக்கினாலும், இரட்டை வால் குருவியாக இருக்க ஆசைப்பட்ட இளைஞனுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பிறகு, பெரியவர்கள் முன்னிலையில், டாஸ் வென்ற இளம்பெண்ணுடன் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இரு இளம்பெண்கள் போட்டியில் டாஸ் போட்டு மணமகன் முடிவு செய்யப்பட்ட இந்த திருமணம், நவீன சுயம்வரமா என சமூக வலை தளங்களில் கிண்டல் எழுந்துள்ளது.

வெள்ளவத்தையில் தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை!!

வெள்ளவத்தையில்..

வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மா.ணவன் ஒருவர் த.ற்கொலை செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான ம.கன் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அவரின் தாயின் ம.ரண செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாயொருவர் மா.ரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ம.னமுடைந்த இளைய சகோதரன், வீட்டின் மின் வி.சிறியில் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளார்.

த.ற்கொலை செ.ய்து கொ.ண்டவரின் தாயின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததாக அவரது மூத்த சகோதரன் பொலிஸ் வி.சாரணையின் போது தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸை கட்டுப்படுத்த திணறும் இலங்கை அரசு : உண்மையை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!!

டெல்டா..

இலங்கையின் மருத்துவதுறை கோவிட் வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவேகமாக பரவும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையின் சுகாதார முறை திணறுகின்றது.

மருத்துவமனைகள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் இந்த தருணத்தில் இவ்வாறான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை உரிய தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கை மருத்துவமனைகள் உயிர்களை காப்பாற்றுவதற்கு பெரிதும் உதவியாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

விபத்து..

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று (08.09.2021 இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கப் ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான குருநாகல் பகுதியைச் சேர்ந்த கே.திலக்குமார என்பவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் மரணமடைந்தவர் 31 வயதான கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் நிரூபன் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கனகராயன்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கும் கொரோனா தொற்றால் மரணமடைந்த 20 பேரின் சடலங்கள்!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 20 பேரின் சடலங்கள் தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த மின் மயானத்தில் நாள் ஒன்றுக்கு 6 சடலங்களையே தகனம் செய்யக் கூடியதாகவுள்ளது. ஆனால், தற்போது வவுனியாவில் இறப்புக்கள் அதிகரித்து வருவதனால் சடலங்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மரணமடைந்த 20 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய மூன்று தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடிநிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கொரோனா தொற்றில் இருந்து விடுபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன்,

அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால விதிமுறைகளின் கீழ், அவ்வாறு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறையவில்லை என்று பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உடனடித் திட்டத்தை உருவாக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பையும் அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது.

ஆனால் சீனி விலை ஓரளவு குறைந்த போதிலும் அரிசியின் சந்தை விலை குறையவில்லை என நுகர்வோர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அரிசி சந்தையை கட்டுப்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் அரிசியை கொள்முதல் செய்து சந்தைக்கு வெளியிடுமாறும் வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமைய இன்று முதல் பொலநறுவை மற்றும் முக்கிய பல இடங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியிடம் மண்டியிட்ட தென்னாபிரிக்கா : தொடரை கைப்பற்றிய இலங்கை!!

தொடரை கைப்பற்றிய இலங்கை..

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தொடர் 1-1 என்ற சமனில் இருந்த நிலையில், தொடர் யாருக்கும் என்பதை தீர்மானிக்கு 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 203 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் துடுப்பெடுத்தாட தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 30 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த தென் ஆப்பிரிக்க அணி 125 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் வென்றது.

சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மன்த சமீர தெரிவாக, தொடர் நாயகன் விருதினை இலங்கை அணியின் சரித் அசலன்க பெற்றுக்கொண்டார்.

ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று!!

விபத்து..

வவுனியா – ஈரட்டை பகுதியில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (06.09.2021) மரணமடைந்திருந்தார்.

குறித்த இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதன் முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனாதொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது சடலத்தினை எரியூட்டும் செயற்பாட்டினை சுகாதார தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

  

வவுனியாவில் பிக்கப் வாகனம் – டிப்பர் மோதி விபத்து : இருவர் பலி!!

விபத்து..

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று (08.09.2021) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனமும் வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் கனகராயன்குளம் சந்திக்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து கனகராயன்குளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று : 16 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 178 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (07.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (07.09) 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனா மரணங்கள் இதுவாகும். இந்நிலையில் மரணித்த 16 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (07.09) 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நாள் ஒன்றில் வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் பதிவாகிய அதிகபட்ச கொரோனா மரணங்கள் இதுவாகும். இந்நிலையில் மரணித்த 16 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.