தமிழகத்தில், பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி அண்டா சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சக்தி என்கின்ற முனீஸ்வரன்(37). அதே பகுதியில் சக்தி வாராகி என்ற ஜோதிட நிலையத்தை நடத்தி வருகிறார்.
இவர் மேல் பெண் ஒருவர் பண மோசடி வழக்கு கொடுத்ததையடுத்து பொலிசார் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது அவர் சக்தி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். விளாத்தி குளத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனது டிவியில் பணியாற்றும்படியும் மாத சம்பளம் 25ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து ஒன்றே கால் லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி 3 லட்சம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கேட்ட போது, அந்த பெண்ணிடம் பா.லியல் சீ.ண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொ.லை செ.ய்து விடுவதாக கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்த பெண் விளாத்திகுளத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் பொலிஸார் போலி சாமியார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பெண் உட்பட மேலும் இரண்டு பெண்களை சக்தி ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிறப்பு பூஜை என்ற பெயரில் ஒரு தலையாக காதலிக்கும் இளைஞர்களிடம், காதலியை வசியப்படுத்தி தருவதாக ஏமாற்றியுள்ளார்.
பொதுமக்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை இவரது வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். மேலும் இவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மகனை அ.டித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி நெருப்பால் சூ.டு வை.த்து கொ.லை செ.ய்த தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில், மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் கடந்த பிப்ரவரி 8ம் திகதி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சி.றுவன் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்யப்பட்டு கி.டந்தான்.
பொலிசார் தீ.விர வி.சாரணை நடத்தியும் சி.றுவனின் அடையாளம் தெரியவில்லை. இதனால், ச.டலத்தின் போட்டோவை அண்டை மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போலீசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் தனலட்சுமி, பெங்களூரு பொலிஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி, தனது மகள் நதியாவின் மகன் ராகுல் (10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் கா.ணவில்லை என்று புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகைப்படத்தை பொலிசார் சரிபார்த்த போது, பர்கூரில் கொலையாகி கிடந்த சிறுவன் ராகுல் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து நடத்திய வி.சாரணையில், சி.றுவன் ராகுலை அவனது தாய் நதியா, அவரது கள்ளக் காதலன் சுனில்குமார் (30), அவரது மற்றொரு காதலி சிந்து (25) ஆகியோர் சேர்ந்து கொ.லை செ.ய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு பொலிசார் கைது செய்தனர். கைதான சுனில்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை பிரிந்து வாழ்ந்த நதியாவிற்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது.
ராகுல் குழந்தையாக இருந்த போது எங்கள் உறவுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் வளர வளர எங்களுக்கு இ.டையூறாக இருந்தான். இதனால் ஏற்பட்ட கோ.பத்தில் நானும் நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அ.டித்தும் சூ.டு வை.த்தும், கண்ணில் மிளகாய் பொடி தூவியும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்து வந்தோம்.
கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த சிறுவன் ராகுலை நான் அ.டி.த்.து கொ.ன்.றே.ன். எனது மற்றொரு காதலி சிந்துவுடன் ஒரு காரில் ராகுலின் ச.டலத்தை எடுத்து தமிழ்நாட்டில் வீசிவிட்டேன் என கூறியுள்ளார்.
இதையெல்லாம் மறைத்து தான் கொ.டூ.ர பெ.ண்ணான நதியா ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த பொலிசார் பெங்களூரு சிறையில் அ.டைத்தனர்.
கொ.லை செ.ய்யப்பட்ட சி.றுவன் ராகுலின் உ.டல் பர்கூரில் கிடந்ததால் வழக்கை பர்கூருக்கு மாற்ற பெங்களூரு பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெங்களூரு சென்று வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணயமாற்று வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சி சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்றைய தினம் திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வழங்கப்பட்ட தினசரி நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் பாரிய ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. அதற்கமைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 203 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று 202.99 ஆக குறைந்துள்ளது.
பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் நேற்று 317.47 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 282.32 ஆக குறைந்துள்ளது. யூரோவின் விற்பனை விலை நேற்று 273.52 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 243.52 ரூபாயாக குறைந்துள்ளது.
கனேடிய டொலர் நேற்று 183.38 ரூபாயாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று 163.38 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன், போகாவத்தை ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இவ்வாறு ஏற்றப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதன் பின்,
கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக இப்பகுதிக்கு 3500 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுத்த நிலையில் இன்றைய தினம் அவ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடதக்கது. இதனை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய கோவிட் நிலைமை தொடர்பில் கருத்து வொளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் தற்போது கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த அடிப்படையிலே 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தினை பொறுத்தவரையில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் வடக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள்.
அவர்களில் முதலாவது டோஸ் தடுப்பூசி 5 லட்சத்து 58 ஆயிரத்து 131 பேருக்கு இன்று வரை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்டோரின் சனத்தொகையில் 85 சதவீதமானோருக்கு முதல் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று வரை இரண்டாவதுகட்ட தடுப்பூசி இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து அறுபத்தி ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் சனத்தொகையில் 45 வீதமனோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகிறது.
நேற்று முதல் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் அதிலே கிட்டத்தட்ட 28 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.
அண்மையில் 60 வயதிற்கு மேற்பட்டோரின் இறப்பு வீதமானது அதிகரித்துச் செல்கின்றது. பெரும்பாலான இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பே அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் தடுப்பூசி எதுவும் பெறாதவர்களே அதிகளவில் இறப்புகளை சந்திக்க நேரிடுகின்றது.
அதன்காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட வர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.
அதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோரின் இறப்புகளை குறைத்துக் கொள்ள முடியும். இவை யாவும் நிறைவு செய்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நிறைவடைந்த பின்னர் 20வயதுக்கும் 30க்கும் இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது ஆரம்பிக்கவுள்ளோம்.
இந்த பெருந் தொற்று காலப்பகுதியிலே இறப்புகளைத் தடுப்பதே எமது நோக்கமாக காணப்படுகின்றது. இறப்புகளைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் கட்டாயமாக தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் கூறுகிறார்கள் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுகின்றது என.
எனினும் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் தன்மை குறைவாக காணப்படுகின்றது.
அத்தோடு தடிமன் காய்ச்சலுடன் தொற்று வந்து அந்த நோய் மாறிவிடும். ஆனால் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அது இறப்பினை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை பெறுவது அவசியமாகும். இன்றுவரை தடுப்பூசியைப் பெறாதவர்கள் அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் சிலர் அலட்சியமாக செயற்படுகின்றார்கள். அதாவது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றார்கள்.
ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக இறுக்கமாக பின்பற்ற வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
அத்தோடு இயலுமானவரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிதல் வேண்டும். அத்தோடு ஒன்று கூடுகளை தவிர்த்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 11 வயதான டில்மினி என்ற சி.றுமியே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொ.ட்டில் பு.டவையில் சி.க்குண்டு, இந்த சி.றுமி உ.யிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சி.றுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல் கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த சி.றுமி நேற்றைய தினம், அறையின் கதவுகளை அடைத்து, தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சி.றுமி, மிக நீண்ட நேரம் வெளியில் வராததை அடுத்து, சி.றுமியின் சகோதரர்கள் கதவை நீண்ட நேரம் த.ட்டியுள்ளனர். சி.றுமியிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காததை அடுத்து, சகோதரர்கள் தாயிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, தாய், வீட்டின் யன்னல் ஊடாக பார்த்த போது, சி.றுமி தொ.ட்டில் பு.டவையில் தொ.ங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அதன்பின்னர், சி.றுமியின் சகோதரனை யன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி,
கதவை திறந்து சி.றுமியை தெரணியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலும், சி.றுமி உ.யிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சி.றுமியின் ச.டலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக வி.சாரணைகளை தெரணியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பெரிய வெங்காயம் சந்தைக்கு கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது.
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தம்புள்ள உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில்,
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க இறக்குமதி வரியை விதிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் உள்ள டன்சினன் பகுதியில் விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயதான இளம் யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணியளவில் விறகு வெட்ட சென்றதாக காணாமல் போன யுவதியில் தாயார் தெரிவித்துள்ளார். காணாமல் போன தனது மகள் பல நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக,
முன்னர் சில் சந்தர்ப்பங்களில் குறித்த யுவுதி காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார். இன்று பிற்பகல் வரையில் யுவதி வீடு திரும்பாத நிலையில், அருகில் உள்ளவர்களுக்கு தாயார் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து காட்டு பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது. எனினும், யுவதி குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்து 3 நாட்களில் கணவனும் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் வாகன கொள்வனவில் ஈடுபடும் மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் மாத்திரமே வாகன விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டு படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய நால்வர் கைது செய்யப்பட்டு இன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடியில் இருந்து நேற்று அதிகாலை நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதன்போது அவர்கள், முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் ரோந்து படகில் சென்ற மெரைன் பொலிஸார், குறித்த பெண்ணை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியை சேர்ந்த கஸ்தூரி என தெரியவந்திருந்தது.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் உள்ள அந்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இலங்கை வர முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல முடிவு செய்து கடந்த 4ஆம் திகதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு ராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.
பின் ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அந்த பெண் தனுஷ்கோடியை சேர்ந்த நபரொரவரிடம் இலங்கைக்கு செல்ல படகு கட்டணமாக 30,000 ரூபா கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் பாம்பன் சின்ன பாலம் கடற்கரை வர சொல்லியதால் அங்கு சென்ற அந்த பெண் கடலில் தயாராக இருந்த ஒரு படகில் புறப்பட்டு இலங்கை சென்றுள்ளார்.
கஸ்தூரியை ஏற்றிச்சென்ற படகோட்டிகள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்து விட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கஸ்தூரியை கைது செய்த மெரைன் பொலிஸார் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன்,
படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரையும் இன்று காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மேலும், வழக்கு விசாரணைக்கு பின்னர் இலங்கை பெண் உட்பட 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின் தொடராதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதியுடன் முடிவுறுத்த அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அமுலிலுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி அத்தியாவசிய சேவைகள் உட்பட்ட முக்கியமான சேவைகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதியளிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை திறப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படலாம் என குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ற போதும் வெள்ளிக்கிழமைகளில் ஜனாதிபதி தலைமையில் கூடும் கோவிட் ஒழிப்பு செயலணியானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவினை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் சங்கமங்கண்டியில் நேற்று (06.09.2021) இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. விபத்திற்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண பதிவிலக்கத்தை உடைய குறித்த முச்சக்கர வண்டியில் வாழைப்பழம் ஏற்றிவந்த நிலையிலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொத்துவில் பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
வவுனியா சுகாதாரப்பிரினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 8 நிலையங்களில் காலை 9 மணி முதல் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நிலையங்களிலும் 500 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட 500 பேருக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (06.09.2021) மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த வெளிக்குளம் பகுதியில் (வயது 52) பெண் ஒருவரும், வைரவபுளியங்குளம் பகுதியில் (வயது 85) ஆண் ஒருவரும்,
கோவில்புதுக்குளம் பகுதியில் (வயது 91) பெண் ஒருவரும் என 3 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் 54 வயது ஆண் ஒருவரும் நேற்று முன்தினம் (05.09.2021) இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (06.09) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.