வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வரலட்சுமி பூஜை வழிபாடுகள் இன்று (20.08) சிறப்பாக இடம்பெற்றது.
இந்துக்களின் விசேட விரதங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்றாகும். சுமங்கலிப் பெண்கள் தமது கணவன்மாருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், அவர்களுக்கு நலம் வேண்டியும் வரலட்சுமி விரத நாளில் அம்மனிடம் வரம் வேண்டி விரதம் இருந்து நூல் கட்டுவர்.
அந்தவகையில் வவுனியாவில் உள்ள அம்மன் ஆலயங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் வரலட்சுமி பூஜை விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலயத்தின் பிரதமகுரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்க விசேட அபிடேகம், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வரலட்சுமி விரத வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது விரதம் இருந்தவர்களுக்கு அம்மன் ஆசியுடன் நூல் கட்டும் நிகழ்வும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றிருந்தது.
இத்தாலியில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மற்றும் அவரது தாயாரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் மொன்சோ நகரத்தில் தொழில் செய்து வந்த இளைஞன் இலங்கை வந்துள்ளார். திருமணம் செய்துக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை வந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 27 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்துள்ளார்.
மகன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது தாயாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மகன் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாய் உயிரிழந்துள்ளார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இவ்வாறு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தாயும் மகனும் தங்கொட்டு வடக்கு கோனவில கிராகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாதம் உயிரிழந்த இளைஞர் திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை உபயோகித்து இணையவழியூடாக பணம் செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்க முடியவில்லை என இலங்கை வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையிலுள்ள வங்கி அட்டைகளை பாவிக்கும் தரப்பினர் இதனால் பெறும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதால் தமது நாளாந்த செயற்பாடுகளை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து இணையவழி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதனால் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்தோடு முகப்புத்தகம், வர்த்தக மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் டொலர் இருப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் , எனவே வெளிநாடுகளுக்கு டொலரை அனுப்புவதை நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேறு மாற்று வழிகளை பின்பற்றுமாறு இலங்கையிலுள்ள வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. எவ்வாறிருப்பினும் இதற்காக மாற்று வழி என்ன என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சிக்கல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி மத்திய வங்கி ஆளுனர் டீ.எம்.ஜே.வை.பீ.பெர்ணான்டோ,
“கடன் அட்டைகளிளில் கொடுப்பனவு செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எவ்வித புதிய சட்டங்களை அல்லது தடைகளை விதிக்கவில்லை. எனினும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வணிக வங்கிகளால் வழங்கப்படும் கடன் அட்டைகளை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. தற்போதைய சட்டத்திற்கமைய உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு தேவையான ஒன்றைப் பெற நீங்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தலாம்.
வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளுக்காக பொருட்களை வாங்க இதைப் பயன்படுத்த முடியாது. ஆனால் உங்கள் சொந்த உபயோகத்திற்காக ஒன்லைனில் பொருட்களை வாங்குவது மற்றும் ஒரு கல்வி நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது போன்ற சாதாரணமாக செய்யும் விடயங்களை தொடர்ந்து செய்ய முடியும். அதற்கு எவ்வித தடையும் எங்கள் சட்டங்களில் ஏற்படுத்தவில்லை.
கடன் அட்டையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மடிக்கணினியை வாங்கலாம். ஆனால் வணிக நோக்கங்களுக்காக 10 அல்லது 15 மடிக்கணினிகளை வாங்க திட்டமிட்டால், அது பிரச்சனையாக இருக்கலாம்” என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாகவும் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (20.08.2021) வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (19.08.2021) ம.ரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதுவேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார். சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 48 வயது குடும்பஸ்தரே ம.ரணமடைந்தவராவார்.
வவுனியாவில் கொரோனா தொற்றால் மூன்று பேர் நேற்று (19.08.2021) மரணமடைந்துள்ளனர். வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துளார்.
அத்துடன் பெரியார்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக வீட்டில் மரணமடைந்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கொரோனா தொற்றால் நேற்று மாத்திரம் 3 பெண்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்றபிரிவு காவல்துறையினரிடம் சமீபத்தில் பெண் ஒருவர் வினோத புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடமும், தனது தோழிகளிடமும் தங்களுக்கு அறிமுகமான தோழி ஒருவரின் பெயரில் நீண்ட நாட்களாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்து வந்த நபர்,
தனது மற்ற தோழிகளிடம் வாட்ஸ் அப் மூலம் பெற்ற அந்தரங்க தகவல்களை வைத்து மி.ரட்டி பணம் கேட்பதாகவும், தனது திருமணத்துக்கு வாந்திருந்த அந்த தோழி, திருமணமனதே தெரியாதது போல பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த தோழியின் வேறொரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது இவ்வளவு நாட்களும் எங்களுடன் அவர் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்யவில்லை என்று கூறியதால் க.டு.மையான அ.தி.ர்ச்சி உண்டனதாகவும்,
இவ்வளவு நாள் தாங்கள் யாரிடம் சாட்டிங் செய்தோம் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தோழியின் பெயரில் சாட்டிங்கில் ஈடுபட்ட நபரோ வாட்ஸ் அப்பில் பகிர்ந்த அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மி.ர.ட்டி வருவதாக புகாரில் கூறி இருந்தார்.
இதையடுத்து தோழிபோல பேசிய நபரின் செல்போனை வைத்து விசாரணையை முன்னெடுத்த சைபர் கு.ற்.ற.பி.ரிவு காவல்துறையினர் , அந்தப்பெண் மற்றும் தோழிகளிடம் வாட்ஸ் அப்பில் தோழிபோல சாட்டிங் செய்தது ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பீம்ராவ் என்பதும் ஏற்கனவே இரு திருமணங்கள் செய்துள்ள இவன் பெ.ண்.களுடன் நெ.ரு.ங்கி பழகி,
அந்தரங்க விவரங்களை தெரிந்து கொண்டு பணம் பறிப்பதற்காக, செல்போன் செயலி ஒன்றின் மூலம் கோழிகளை போல பல தோழிகளை தனது சாட்டிங் வலையில் சிக்க வைத்துள்ளான்.
‘கேர்ள் பிரண்ட சேர்ஜ்’ என்ற செல்போன் செயலி மூலம் அந்த குறிப்பிட்ட பெண்ணின் நம்பரை பெற்ற பீம்ராவ், அந்த பெண்ணின் மூலம் அவரது தோழிகளின் செல்போன் நம்பரை ஒவ்வொன்றாக பெற்று வேறு வேறு பெண்களின் பெயர்களின் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளான்.
தோழி என்ற நினைப்பில் தனது குடும்ப சூழ்நிலை மற்றும் அந்தரங்க பிரச்சனைகள் குறித்து மணம் விட்டு பேசிய பெண்களிடம் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு பெற்ற பீம்ராவ் அதனை கருவியாக வைத்து பணத்துக்காக பெண்களை மிரட்ட தொடங்கி இருக்கின்றான்.
புகார் அளித்த பெண்ணின் செல்போன் நம்பர் எப்படி கேர்ள் பிரண்ட் சேர்ச் என்ற செயலிக்கு சென்றது ? என்று விசாரித்த போது, சில மாதங்களுக்கு முன்பு இலவச விளையட்டு செயலி ஒன்றை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அந்தப்பெண் தனது தொடர்பு எண், மற்றும் செல்போனில் உள்ள விவரங்களை அந்த செயலியின் சர்வர் கையாளலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.
இதை பயன்படுத்தி அந்த நிறுவனம் டேட்டிங் செயலிகளில் இந்தப்பெண்ணின் நம்பரை பதிவேற்றம் செய்திருக்கலாம் என்று போலீசார் சுட்டிக்கட்டுகின்றனர்.
பீம்ராவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக பீம்ராவிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் அழிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அத்தியாவசியம் இல்லாத செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க அறிவுருத்தும் போலீசார், முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வளைதளங்களில் முகம் கட்டாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயரில்,
தெரிந்தவர்கள் சாட்டிங் செய்யும் நபர்களை நம்பி அந்தரங்க தகவல்களை புகைப்படத்துடன் பகிர்ந்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்று எச்சரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ப.ல.முறை பா.லி.யல் அ.த்.துமீறலில் ஈடுபட்ட இ.ளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியை சேர்ந்த 15 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சி.றுமியை கோரைக்குளத்தை சேர்ந்த 23 வயதான ஆறுமுகம் என்ற இ.ளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செ.ய்.து.கொ.ள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி,
தனது வீட்டறுகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று ப.ல.முறை பா.லி.யல் அ.த்.து.மீ.றலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சி.று.மிக்கு தி.டிரென வ.யி.ற்.றுவ.லி ஏற்பட்டது.
சி.று.மியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி க.ர்.பமாய் இருப்பது தெரியவந்தது. இதனால் அ.தி.ர்.ச்.சி அடைந்த சி.றுமி.யின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஆறுமுகம் அ.த்.துமீறலில் ஈடுபட்டதை ஒ.ப்.புக்கொண்டார்.
இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் கா.வ.ல் நிலையத்தில் சி.று.மி அ.ளி.த்த பு.கா.ரின் அடிப்படையில் ஆறுமுகத்தை மகளிர் போ.லீ.சார் கை.து செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் சாதாரண காய்ச்சலை கொரோனா என தவறாக புரிந்து கொண்ட தம்பதி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் வசித்து வருபவர்கள் ரமேஷ் மற்றும் சுவர்ணா தம்பதினர். ரமேஷ் லொரிகளை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் மங்களூரில் உள்ள பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்கிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் அ.திர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்பதால் அவர்களின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால் அந்த தம்பதி அதற்குள் தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டனர். ஒரு கடிதத்தில் இறுதி சடங்குக்கு ஒரு லட்சம் ரூபாய் வைத்துள்ளதாகவும், தங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுமாறு எழுதிருந்தனர்.
இதையடுத்து அவர்களை மீ.ட்.டு ப.ரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தது.
சாதரண காய்ச்சலை, கொரோனா என்று எண்ணி இவர்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (19.08) மாலை குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நேற்றைய தினம் (18.08.2021) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 186 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,790ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு நேற்றைய தினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் கோவிட் தொற்றால் இன்றைய தினம் இதுவரையில் 3,793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து மேலும் 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 373,152 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா – புளியங்குளம், கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
கல்மடு கிராமத்தில் சிலருக்குக் காய்ச்சல் இருப்பதாக வவுனியா வடக்கு சுகாதார பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 35 குடும்பங்கள் உள்ளன.
அதில்19 குடும்பங்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
10 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறித்த கிராமம் முடக்க நிலையிலிருந்து விடுபடும் எனச் சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற களனி பால மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளார். புதிய களனி பாலத்தின் மேலதிக பணிகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவுதல், இரும்புப் பாலத்திற்கு நிறம் தீட்டுதல்,
புதிய களனி பாலத்திற்கு நுழைவாயிலில் வடிகால் அமைப்பை நிறைவு செய்தல், பாலத்திற்கு மின்விளக்குகள் இடல், பாதுகாப்பிற்காக இரும்பு வேலிகள் அமைத்தல் மற்றும் நிலத்தை செப்பனிட்டு அழகுபடுத்தல் ஆகியவை அடங்கும்.
அவற்றை உரிய தரத்திற்கு அமைவாக துரிதமாக நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர் பிரேமசிரிக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரை வீதியின் இருபுறமும் மரங்களை நடுவதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு தண்ணீர் வழங்க நிலத்தடி நீர் குழாய் அமைப்பை உருவாக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
குறித்த பாலம் பார்ப்பவர் கண்ணை கவரும் வகையில் அழகுற அமையப்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் 17 வயது மாணவியும் அண்மையில் கோவிட் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, இசிபதன கல்லூரியின் பதினெட்டு வயது மாணவரும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தார்.
இசிபதான கல்லூரியின் சமிதா தில்துஷன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். 2021, ஆகஸ்ட் 14 அன்று,
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வள்ளுவர்புரம் – றெட்பானா, புதுக்குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 அகவையுடைய செனவிரத்தின சமரக்கோன் என்பவரே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் வாய் மற்றும் மூக்கினால் இரத்தம் வடிந்த நிலையில், சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூலித்தொழில் செய்து வரும் இவர் றெட்பான சந்திக்கு அருகில் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான வரிசையில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த வரிசையில் நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.