வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணம் பெற்று மோசடி!!

மோசடி..

வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணம் பெற்று மோசடி இடம்பெறுவதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்கள் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா, குட்செட் வீதியில் இன்று (21.07) காலை முதல் 6 இளம் பெண்கள் வீடு வீடாக சென்று தாம் மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என பணம் பெற்றுள்ளனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டதுடன், பெண் ஒருவரையும் கைது செய்தனர்.

குறித்த 6 பெண்களில் ஒருவர் தமக்கு கீழ் 500 ரூபாய் சம்பளத்திற்கு பெண்களை திரட்டி வீடு வீடாக சென்று பணம் பெற்று அதில் தான் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் பணம் எடுத்துக் கொண்டு மிகுதிப் பணத்தை அனுராதபுரத்தில் உள்ள பெண் ஒருவருக்கு வழங்கி வந்ததாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 5 பெண்களையும் வழிநடத்திய பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார். இவ்வாறான மோசடியில் ஈடுபட்டவர்கள் தாண்டிக்குளம், கோவில்குளம், விக்ஸ்காடு, கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

வவுனியாவில் வடமாகாண பிரதம செயலாளராக நியமனம் பெற்ற சமன் பந்துலசேனவுக்கு வரவேற்பு!!

சமன் பந்துலசேன..

வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வரவேற்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இன்று (21.07) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

புதிய பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவை மாவட்ட செயலக வாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்று, மாவட்ட செயலகத்தில் கௌரவித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த புதிய வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் அரச அதிபராக கடமையாற்றினேன்.

இதன்போது அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனக்கு சிறப்பான ஆதரவைத் தந்தனர். ஊடகவியலாளரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

இதன் மூலம் மாவட்ட நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடத்த முடிந்தது. தற்போது புதிய பிரதம செயலாளராக கடமையேற்கின்றேன். அதனையும் சிறப்பாக செயற்படுத்த அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன் எனத் தெரிவித்தார்.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன் பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்!!

சமன் பந்துலசேன..

வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேனவே வடக்கின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

வெற்றிடனான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி தீர்மானம்!!

இசாலினி..

சிறுமி இசாலியின் மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த.யோகராஜா தலைமையில் இன்று (20.07) இடம்பெற்றது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர் ராஜினால் சிறுமி இசாலினியின் மரணம் தொடர்பில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.

அதில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை ஒன்று வேண்டும்.

குற்றவாளிகள் இனங்காணப்பட்டால் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் முன்மொழியப்பட்டது.

இதனை சபை அமர்வில் கலந்து கொண்ட 28 உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு ஏகமனமாக சிறுமியின் மரணத்திற்னுகு நீதி கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னையில் கு.டிப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்.று.வி.ட்.டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்.

இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு 3 வயதில் தீக்‌ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். பெயிண்டராக வேலை பார்க்கும் ரமேஷ், கு.டி.போ.தை.க்.கு அ.டிமையானார், ஊரடங்கு காலம் என்பதால் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் கு.டி.த்.துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் ச.ண்.டையிட்டுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் கவுரி. இந்நிலையில் சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் ச.ண்டை நடந்துள்ளது, ரமேஷ் வெளியிலும் சென்றுவிட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுரி, த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள முடிவெடுத்தார். இதன்படி வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் தனித்தனி புடவையில் தூ.க்கு க.யிறு கட்டியுள்ளார்.

அதில் தனது மூன்று வயது மகள் தீக்ஷிதா மற்றும் ஒன்றரை வயது மகன் அஸ்வின் இருவரையும் தானே தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.டு கொ.லை செ.ய்.துள்ளார்.

பின்னர், வே.தனை தாங்க முடியாமல் அருகில் இன்னொரு பு.டவையில் தானும் தொ.ங்கி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இந்நிலையில் நீண்டநேரம் ஆகியும் கவுரி, கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

கு.ழந்தைகளுடன் கவுரி தூ.க்கில் தொ.ங்குவதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகலவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், ச.டலங்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.

அக்காவின் திருமணத்திற்காக விற்கப்பட்ட சிறுவன் : எவ்வளவு பணத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில்..

தமிழகத்தில் அக்காவின் திருமணத்திற்காக சிறுவன் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளைந்து களைத்த நிலங்களை வளமாக்க,

புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு விளை நிலங்களில் நிறுத்தப்பட்டு, உர தேவைக்காக விவசாயிகள் இப்படி பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் கொரடாச்சேரி அருகே காவனூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒருகுழுவினர் செம்மறி ஆடுகளுடன் வந்து விவசாய நிலத்தில் ஆடுகளை களமிறக்கி அருகில் தங்கியுள்ளனர்.

அப்போது இந்த குழுவில் சிறுவர்கள் சிலர் ஆடு மேய்க்க கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளதாக திருவாரூர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் மகன் விஸ்வநாதன் கொத்தடிமையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், வீரபாண்டியன் மூத்த மகள் திருமண செலவிற்காக, விற்கப்பட்டது தெரியவந்தது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் 100,000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதால், கடந்த 7 மாதமாக விஸ்வநாதன் கொத்தடிமையாக இருந்துள்ளான்.

அதன் பின் சிறுவன் விஸ்வநாதன் அங்கிருந்து மீட்கப்பட்டு மன்னார்குடி ஆர்டிஓ அழகிரிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பின், ஆர்டிஓ கொத்தடிமையாக இருக்க வழங்கப்பட்ட லட்ச ரூபாய் கடனையும் ரத்து செய்து உத்தரவிட்டதோடு,

விஸ்வநாதனை கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும் படி உத்தரவிட்டதால், சிறுவர் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுவனை தங்க வைத்தனர்.

வவுனியாவில் சூம் வகுப்புக்களை திட்டமிட்டு குழப்பும் நபர்கள்!!

சூம் வகுப்புக்களை…

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சூம் வகுப்புக்களை சிலர் திட்டமிட்டு குழப்பி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் கொவிட் விடுமுறைக் காலத்திலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் ஆசிரியர்களால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வவுனியாவில் இடம்பெறும் சில சூம் வகுப்புக்களை, சிலர் குறித்த வகுப்பு இணைப்பை பெற்று அதற்குள் நுழைந்து அவற்றை குழப்பும் நோக்குடன் நாகரிகமற்ற வகையில் சொல்லாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சில ஆசிரியர்கள் மன உளைச்சளுக்கு உள்ளாகியுள்ளதுடன், மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை, குறித்த செயற்பாட்டால் பாதிப்படைந்த ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி வழங்களில் புறக்கணிப்பு?

கொரோனா தடுப்பூசி..

கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வவுனியா ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அனேகமான மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளில் கணிசமானவை வழங்கப்பட்டு விட்டன. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களும், 205 அதிபர்களும், 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ள நிலையில் அவர்களுக்கான தடுப்பூசிகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கொவிட் தடுப்பூசி வழங்கலில் வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வானில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை!!

வானில் வந்தவர்களால்..

வவுனியாவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (19.07) காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு வீடு நோக்கிய திரும்பிய முதிய பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் வான் அருகில் சென்ற போது அவர்கள் குறித்த பெண்ணை வானில் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். குறித்த பெண்ணை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக வானில் கொண்டு சென்ற குறித்த நபர்கள் மதியமளவில் பெண் அணிந்திருந்த 3 பவுண் தங்க காப்பை கழற்றி விட்டு பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து, தமக்கு நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று, தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட போது குறித்த பெண் சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு உட்பட 9 பவுண் நகைகளை அணிந்திருந்த போதும் வானில் கடத்தியவர்கள் 3 பவுண் காப்பினை மட்டுமே கழற்றி விட்டு பெண்ணை இறக்கி விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் விமானிகள்!!

பெண் விமானிகள்..

மன்னார் மாவட்டத்தின் முதல் பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல், காத்தான்குளம் கிராமத்தில், 1999ஆம் ஆண்டு பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல் கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் இரு தமிழ் பெண்கள் விமானியாக பயிற்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2011ஆம் ஆண்டு தொடக்கம் விமானியாக பறந்து கொண்டு இருக்கும், முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் மகளும்,

மன்னாரில் இருந்து பயிற்சி பெற்று கொண்டு 2 வருடத்தில் பயிற்சியை முடிக்கவுள்ள இம்மானுவேல் ஏவஞ்சலினாவுக்கும் அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திடீரென நிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து : காரணம் வெளியானது!!

மாகாணங்களுக்கு இடையிலான..

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்டா மாறுபாடு கிராமப்புறங்களில் பரவும் அதிக ஆபத்து இருப்பதாக கோவிட் கட்டுப்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் தேவையின்றி பயணிக்கும் மக்கள் மூலம் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ரயில்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது” என அவர் கூறியுள்ளார்.

அண்மையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்!!

டி.நெல்கா ஷிரோமாலா..

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 23ம் திகதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் முதல் இலங்கை பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை தலைமை ஆய்வாளர் டி.நெல்கா ஷிரோமாலா பெற்றுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளார்.

நெல்கா ஷிரோமாலா முதல் பெண் பொலிஸ் குத்துச்சண்டை அணி உறுப்பினராக 2002 இல் பொலிஸ் குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் பொலிஸ் அதிகாரி ஆவார்.

நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார்.

இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள் இலங்கை வங்கிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!!

இரத்தின கற்கள்..

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இலங்கை வங்கியின் தலைமையகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த இரத்தின கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுவத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அமைந்துள்ள கட்டடம் தாழிறங்கும் ஆபத்தில் உள்ளமையினால் அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாரஹென்பிட்டியிலுள்ள உள்ள இடத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையை நடத்தி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை உரிய முறையில் ஏற்பாடு செய்யும் வரையில் அதிகார சபையின் பொறுப்பில் இருந்த உலகின் மிக மதிப்பு மிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இலங்கை வங்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் உத்தரவுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பிற்கு மத்தியில் இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு இந்த இரத்தின கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவதானத்துடன் செயற்படுங்கள் : இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

அவதானத்துடன் செயற்படுங்கள்…

டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று என ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் மாத்திரமின்றி, புதிய நிலைமாறிய வைரஸ்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் டெல்டா தொற்றின் தாக்கம் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

போலீஸ் நிலையத்தில் கணவன் கண்முன்னே மனைவி செய்த செயலால் அதிர்ந்துபோன கணவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கூரியர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், ரூபாவதி என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ரூபாவதி, மதுவிற்கு அடிமையான என் கணவர் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். எனது தந்தை இறந்தபிறகு எனது தாய், எனக்கும் எனது சகோதரிகளுக்கும் சொத்தப் பிரித்து கொடுத்தார்.

அதில் எனக்கு கொடுத்த பாகத்தை எனது பெயரில் வீடு வாங்கினேன். அந்த வீட்டை என் கணவரின் பெயரில் எழுதாத காரணத்தால் எனது மாமியார், நாத்தனார்கள் தூண்டுதலின்பேரில் தினமும் குடித்து விட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார்.

இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். இதையடுத்து சிகிச்சை பெற்று என் அக்கா விட்டில் தங்கினேன். இதைத் தொடர்ந்து நான் வீட்டிற்கு திரும்பிய போது,

கணவர் என் தாலி உள்பட 25 சவரன் தங்க நகைகள், வீட்டு பத்திரம், என்னுடைய ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மருத்துவ சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார்.

எனது மகனையும் அவரோடு அழைத்துச் சென்றுவிட்டார். இது குறித்து கேட்ட போது அவர் தர மறுத்துவிட்டார். நான் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துவிட்டேன்,

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு ரூபாவின் கணவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், தனது மனைவி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்தார்.

தகாத உறவின் போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து பெஞ்சமின் 20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுப்பதாகவும், தனது மனைவி தகாத உறவில் இருந்தது எனக்கு தெரியாது.

கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னரே தனக்கு அனைத்து விஷயங்களும் தெரியவந்தது என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த ரூபாவதி கணவர் ஜெயபிரகாஷ் வீட்டை அபகரிப்பதற்காகவே இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ரூபாவதி கூறினார்.

மேலும் பெஞ்சமின் தனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் இருந்த உறவு 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விஷயம் என கூறினார். ஆனால், காவலர் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, அடுத்த பத்தாவது நிமிடத்தில், யாருடன் முறிவு முடிந்துவிட்டதாக கூறினாரோ, அதே பிராங்க்ளினுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தாயுடன் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற 5 வயதுச் சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் சிறுத்தை வாய்க்குள் சிக்கிய தனது 5 வயது மகளை துணிச்சலுடன் மீட்டுள்ளார் அவரின் தாயார். மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள ஜூனோனா கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு வசித்து வருபவர் தான் அர்ச்சனா.

இவர் தனது மகள் பிரஜக்தா (5)வை அழைத்து கொண்டு இயற்கை உபாதைகள் கழிக்க சென்றுள்ளார். செடிகள் நிறைந்த பகுதிக்குள் அர்ச்சனா சென்ற போது திடீரென பிரஜக்தாவின் சத்தம் கேட்டது.

வெளியில் வந்து அர்ச்சனா பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஒரு சிறுத்தை பிரஜக்தாவின் தலையை தன் வாயால் கவ்வியிருந்தது.

இதையடுத்து தனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அருகிலிருந்த மரக்கட்டையால் சிறுத்தையை அடித்து, அதனுடன் சண்டையிட்டு மகளை மீட்கப் போராடியுள்ளார்.

பின்னர் சிறுமியை விட்ட சிறுத்தை அர்ச்சனாவையும் தாக்க முற்பட்டுள்ளது. அதையும் தடுத்து, தனது மகளைப் போராடி மீட்டுள்ளார் அர்ச்சனா.

இந்த நிலையில் சிறுத்தை வாயில் சிக்கிய சிறுமி பிரஜக்தாவின் மேல் மற்றும் கீழ் தாடை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை நாளை சிறுமிக்கு நடைபெறவுள்ளது.

மருத்துவர் டடர்கர் கூறுகையில், என்னுடைய 21 வருட மருத்துவ அனுபவித்தில் சிறுத்தை வாய்க்குள் சிக்கி உயிர் பிழைத்தவர்களை கண்டது இல்லை, இது அதிர்ஷ்டம் தான் என கூறினார்.

அர்ச்சனா கூறுகையில், என் மகளை காப்பாற்ற முயன்றால் சிறுத்தை என்னை தாக்கும் என பயந்தேன். ஆனால் என் மகள் இறப்பதை நான் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும், அதனால் தான் துணிச்சலுடன் செயல்பட்டேன் என கூறியுள்ளார்.