வவுனியாவில் இசாலியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்தும் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (22.07.2021) குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் கறுப்பு முகக் கவசம் அணிந்தும், பதாதைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ‘வித்தியாவையடுத்து இசாலினியா, சிறுவர் துஸ்பிரயோகத்திற்கான முற்றுப்புள்னளி எப்போது, இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்து, இசாலினிக்கு நீதி வேண்டும், மானிடப் பண்புகள் எமது நாட்டில் மரணித்து விட்டதா’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் வீட்டில் குறைந்த வயதில் பணிபெண்ணாக வேலை செய்து மரணித்த இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும் எனவும்,

அந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தியர்கள், மரணத்திற்கு காரணமானவர்கள் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதியான விசாரணை வேண்டும் எனவும்,

இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது நாட்டில் இடம்பெறாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் சிகையலங்கார நிலையத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (21.07) வெளியாகின.

அதில் காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!!

கிணற்றிலிருந்து..

தம்புத்தேகம – குருகம பிரதேசத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவர் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது, 9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் இன்று பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது சுமார் 20 அடி ஆழமான கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மேற்கொண்ட தேடுதலின் போது, கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவத் தளபதி!!

இராணுவத் தளபதி..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் செயற்படுதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.

தளர்த்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தால் திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையேற்படலாம்.

திருமண நிகழ்வொன்றில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை விட அதிகளவானவர்கள் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே கடந்த காலங்களில் வைரஸ் பரவியது. பல பகுதிகளில் டெல்டா கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் கடமை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல்!!

இராட்சத விண்கல்..

பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் எதிர்வரும் 24ம் திகதி பூமியை அண்மித்து செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

2008 GO20 என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த விண்கல் ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக இருக்கின்றது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.

எனவே புவி ஈர்ப்பு விசைக்குள் அது வராது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தை விட 600 கி.மீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில் சீனாவில் அறிமுகம்!!

மிதக்கும் ரயில்..

சீனா மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலை அறிமுகம் செய்துள்ளதுடன், இதனை மிதக்கும் ரயில் என்றும் சீனா அழைக்கின்றது. மிதக்கும் ரயில் என அழைக்கப்படும் இந்த ரயில் சீனாவின் குயிங்டாவ் நகரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக அளவிலேயே அதிநவீன ரயில்கள் தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில்,பல நாடுகள் இரண்டு நாடுகளினதும் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், சீனா 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன மின்காந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்த ரயில் மூலம் கோவையில் இருந்த சென்னைக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

சீனாவிலே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

மேக்லேவ் எனப் பெயரிடப்பட்டுள்ள ரயில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் போக்குவரத்து வாகனம் என்ற சிறப்பை இந்த ரயில் பெறும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் மின்காந்த ரயில் தொழில்நுட்பத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகின்றது.அதாவது இதன் தண்டவாளம் மின் காந்தங்களைக் கொண்டிருக்கும்.

அதேபோல, ரயிலின் அடிப்புறமும் மின்காந்தத்தைக் கொண்டிருக்கும். காந்தத்தின் ஒரே துருவம் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், இந்த ரயில் மிதக்கத் தொடங்கும். இதன் மூலம் அதிவிரைவாக இந்த ரயிலால் செல்ல முடிகின்றது.

இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், ஷாங்காய், பெய்ஜிங் இடையேயான 1,300 கிலோ மீட்டரை வெறும் 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். இது விமானத்தை விட விரைவானதாகும்.

இரண்டு நகரங்களுக்கும் இடையே விமானத்தின் மூலம் பயணித்தால் 3 மணி நேரம் ஆகும். அதேபோல தற்போது உள்ள புல்லட் ரயில் பயணித்தால் 5.5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன்!!

நீதிபதி இளஞ்செழியன்..

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தனது மெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது, மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் 2017ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மெய்பாதுகாவலர் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் கல்லறைக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் குடும்ப உறுப்பினர்களையும் நீதிபதி இளஞ்செழியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வவுனியா உட்பட 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளே என் அப்பா சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் : ஒரு குழந்தையின் பிரார்த்தனை!!

குழந்தையின் பிரார்த்தனை..

இந்தியா சென்றுள்ள தன் தந்தை சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் என தினமும் அப்பாவின் புகைப்படம் முன் நின்று பிரார்த்தனை செய்கிறாள் ஒரு கனேடிய குழந்தை.

கால்கரியில் வாழும் Suruchi Jaitleyயின் கணவரான Divesh, ஒரு அவசர வேலையாக இந்தியாவுக்கு சென்றார். ஏப்ரலில் புதுடில்லிக்குச் சென்ற அவர், மீண்டும் கனடா திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கிறார் Suruchi.

முதலில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra, அந்த தடை ஆகத்து மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆக, இரண்டரை மாதங்களாக கனடா திரும்பமுடியாமல் Divesh தடுமாறிக்கொண்டிருக்க, கனடாவில் Diveshஇன் மனைவி Suruchi, உடல் நலமில்லாத தன் தாய், மற்றும் மூன்று குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.

தனியாக, அலுவலக வேலை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலை, உடல் நலமில்லாத தாயை கவனிப்பது என எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் Suruchi.

கணவர் இல்லாமல் தனியாக சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறும் Suruchi, பண ரீதியாகவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தான் அவதியுற்று வருவதாகத் தெரிவிக்கிறார்.

அப்பா அருகில் இல்லாமல் குழந்தைகள் ஏங்கிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கும் Suruchi, தனது கடைக்குட்டி மகள் தினமும் அப்பாவின் புகைப்படம் முன்னால் போய் நின்றுகொண்டு, கடவுளே என் அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என பிரார்த்தனை செய்வதைப் பார்ப்பதற்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

கனடா அரசு, தன் குடிமக்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார் அவர்.

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு வழக்கறிஞரால் நடந்த வி.பரீதம் : ம.னமுடைந்த பெண் எடுத்த அ.திரடி முடிவு!!

தமிழகத்தில்..

விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணுக்கு குளிர்பானத்தில் ம.யக்க ம.ருந்தை கொடுத்த காமுக வழக்கறிஞர், ஆ.பாச ப.டம் எடுத்து வைத்து 7 இலட்சம் மி.ரட்டி வாங்கியது அம்பலமானது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் பகுதியை சார்ந்த 43 வயது பெண்மணி, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம் இருந்து விவாகரத்து பெற திருவள்ளூரில் இருக்கும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்கறிஞர் டார்ஜன் (வயது 44) என்பவரை அணுகியுள்ளார்.

வழக்கறிஞர் டார்ஜன் மணவாளநகரில் உள்ள பெரியார் தெரு பகுதியை சார்ந்தவன் ஆவான். இவன், வழக்கை நானே எடுத்து நடத்துகிறேன் என்று கூறி, வழக்கு தொடர்பான ஆவணத்தை வாங்கி பார்க்க பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான்.

அப்போது, பெண்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து, டார்ஜன் தான் வாங்கி சென்ற ஆப்பிள் குளிர்பானத்தில் தூக்க மா.த்திரையை கொடுத்து பெண்ணுக்கு குடிக்க கொடுக்கவே, சிறிது நேரத்தில் அவர் ம.யங்கியுள்ளார்.

பின்னர், மயங்கிய நிலையில் இருந்த பெ.ண்ணை கா.முகன் டார்ஜன் நி.ர்வாணமாக்கி தனது அலைபேசியில் ஆ.பாசமாக பு.கைப்படம் எடுத்து வைத்துள்ளான்.

பின்னர், ம.யக்க நிலையில் இருந்த பெண்ணை பா.லியல் ப.லாத்காரம் செ.ய்த நி.லையில், பெண் விழித்து பார்க்கையில் வழக்கறிஞர் என்ற கம்சுகனிடம் சி.க்கி பா.லியல் ப.லாத்காரம் செ.ய்யப்பட்டது உறுதியானது.

இதனால் ஆ.த்திரமடைந்த பெண் நியாயம் கேட்கவே, அவன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை காண்பித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வேன் என்று மி.ரட்டி 7 இலட்சம் பெற்றுள்ளான்.

இதனால் ப.யந்துபோன பெண்மணியும் முதலில் பணம் கொடுத்த நிலையில், மேலும் பணம் கேட்டு மி.ரட்டியுள்ளான். மேலும், தனது மனைவியை இந்த விசயத்திற்கு உடந்தையாக்கி, அவரை வைத்தும் பெண்மணியை மி.ரட்டியுள்ளான்.

இதற்கு மேல் பொறுத்தால் உ.யிரைவிட வேண்டியது தான் என எண்ணிய பெண் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதனை அறிந்த டார்ஜன் த.லைமறைவாகியுள்ளான்.

இதனையடுத்து, காவல்துறை ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான காவல் துறையினர் டார்ஜனை தே.டி வந்த நிலையில், கொடைக்கானலில் ப.துங்கியிருந்த கா.முகனை கைது செய்து சி.றையில் அ.டைத்தனர். இது தொடர்பான வி.சாரணை நடந்து வருகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய்க்கு நேர்ந்த கொ.டூரம்!!

தமிழகத்தில்..

நெல்லை கேடிசி நகர் அருகே மனநலம் பா.திக்கப்பட்ட மகள்களால் தாய் கு.த்திக் கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை கேடிசி நகரை அடுத்த எல்ஜி நகரில் வசித்து வருபவர் உஷா (50), இவரது கணவர் கோவில் பிச்சை. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளும் பட்டதாரிகளாக இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது உஷா தனது வீட்டில் வைத்து அவர்களை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் உஷாவின் மகள் அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது தாய் இ.றந்துவிட்டார் எனவும் ர.த்தம் வருகிறது என கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த வெ.ள்ளத்தில் உஷா இருப்பதை கண்டு அ.திர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் உ.டலை கை.ப்பற்றி வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். உஷாவின் உ.டலில் க.த்தியால் கு.த்திய த.டயங்களும் க.ண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் இருந்த ம.னநலம் பாதிக்கப்பட்ட உஷாவின் மூத்த மகள் நான்தான் அம்மாவை க.த்தியால் கு.த்தினேன் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததை கண்ட போலீசார் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து த.டயங்களை சேகரித்ததோடு இரண்டு பெண் கு.ழந்தைகளின் கை ரேகையையும் சேகரித்தனர்.

உடலை உடற்கூறாய்வுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மனநலம் பா.திக்கப்பட்ட இரண்டு பெண் கு.ழந்தைகளையும் மீ.ட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

15 வயதான மூத்த மகளுக்கு தந்தை செய்த மோசமான செயல் : தந்தை தப்பியோட்டம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 15 வயது மகளை தந்தையே சீ.ரழித்த அ.திர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு முதல் திருமணம் மூலம் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இதில் மூத்த மகளை அவரின் மாற்றாந் தந்தை நேற்று ப.லாத்காரம் செ.ய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசில் பு.கார் அளிக்கப்பட்டது. பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அமர்ஜித் கூறுகையில், கு.ற்றவாளி த.ப்பித்து ஓ.டி த.லைமறைவாகியுள்ளான். அவரை வ.லைவீசி தே.டி வருகிறோம் என கூறியுள்ளார்.

உயிர் தோழியால் திருமணமான 2 மாதத்தில் புதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் உ.யிரை மா.ய்த்து கொண்டதன் அதிர்ச்சி பின்னணி வெளிவந்துள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் மணிகண்டன் (27) இவர் ஹொட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது சொந்த ஊர் ஆரணி ஆகும். கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி (21) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, நாகேஸ்வரி, அவரை கவனிக்க திருமணமான பத்தே நாளில் வேலூருக்கு சென்றுவிட்டார்.

இதன் பிறகு, கடந்த 16ம் திகதி மணிகண்டன், நாகேஸ்வரி ஆகிய இருவரும் ஆவடியில் புதியதாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர், நேற்று முன்தினம் காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓட்டல் வேலைக்கு சென்றுவிட்டார்.

அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி என்பவர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் நாகேஸ்வரி தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டிருந்தார்.

இதனை கண்டு அ.திர்ச்சி அடைந்த அவர் மணிகண்டனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ச.டலத்தை கை.ப்பற்றினார்கள். தாய் செண்பகவல்லி கொடுத்த பு.காரின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட வி.சாரணையில், நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், பெற்றோர் வ.ற்புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செய்து கொண்டார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரி தனது உயிர் தோழி மீனாவுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார் இவர்கள் இருவரும் ஒரே துணிக்கடையில் பணியாற்றியவர்கள்.

பின்னர் நாகேஸ்வரியின் தாயார் செண்பகவல்லி மீனாவிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை தனது மருமகன் கூறுவதை கேட்டு க.ண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நாகேஸ்வரியின் செல்போனை எடுத்து மீனாவின் செல்போன் என்னை பிளாக் செய்துள்ளார்.

அதன்பிறகு மீனா, நாகேஸ்வரியின் கணவர் மணிகண்டனின் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மனைவியிடம் பேச வேண்டும் எனக்கூறி கடைசியாக வெள்ளிக்கிழமை செல்போனில் பேசியுள்ளார்.

இதில் மீனா என்னால் தான் உனக்கு பி.ரச்சனை எனவும் நான் உ.யிரிழந்து விடுவேன் என கூறியதை கேட்ட நாகேஸ்வரி நீ ஏன் உ.யிரிழக்க வேண்டும் நானே உ.யிரிழந்து விடுகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்த நாகேஸ்வரி வீட்டினுள்ளே இருந்த மின்விசிறியில் பு.டவையால் தனக்குத் தானே த.ற்கொலை செ.ய்து கொண்டார் என்பதும் வி.சாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி நாகேஸ்வரியின் தாயார் செண்பகவல்லி கூறுகையில், நாகேஸ்வரியின் ம.ரணத்திற்கு மீனா தான் காரணம் என காவல் நிலையத்தில் பு.காரளிக்க முயன்றதாகவும் புகாரை எடுக்க ஆவடி காவல்துறையினர் ம.றுத்துவிட்டதாகவும் கு.ற்றச்சாட்டை முன்வைத்தார்.

தன் மகளுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது மீனாவை கை.து செய்து விசாரிக்க வேண்டும் எனவும் க.ண்ணீர் மல்க கூறினார். சம்பவம் தொடர்ந்து தீவிர வி.சாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல அ.திர்ச்சி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா மோகத்தில் இருந்த 24 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம் பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் இந்து. 24 வயது மதிக்கத்தக்க இவர், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு சென்றுள்ளார்.

அதன் பின், சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது அடையாறு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் நட்பு கிடைக்க, இவர் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் இருப்பதால், அவர்களிடம் கூறி, உடன்க்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அப்பெண், அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஒரு கட்டத்தில், இயக்குனர் ஒருவரிடம், உன்னுடைய புகைப்படங்களை காண்பிக்க வேண்டும்.

இதனால் பல வகைகளில் உன்னை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி, இந்துவை அழைத்து சென்று, தனி அறையில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி இந்துவுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

அதன் பின், இரவு நேரங்களில் இந்துவை அழைத்து சென்று, சினிமா இயக்குநர்களிடம் அறிமுகம் செய்வதாக கூறி, தனது நண்பர்களையே இயக்குநர்கள் என்று கூறி இந்துவை அறிமுகம் செய்து, அவர்களுடன் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், கடைசி வரை இந்துவுக்கு சினிமாவில் வாய்ப்பே வாங்கிதரவில்லை. இதுகுறித்து இந்து, கணேஷிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்காமல், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால்,

தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து இது குறித்து, நேற்று சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

அவர் புகார் அளிப்பதற்கு முன்பு, அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டே சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்த போது, குடியிருப்பு வளாகத்திலே மயங்கி விழ, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த தகவ உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த வந்த பொலிசார் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரின் படுக்கையறையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது.

அதில், சினிமா ஆசையில் எனது வாழ்க்கையை சீரழித்த கணேஷ் தான் என் சாவுக்கு முழு காரணம். எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்று குறிப்பிட்டு,

தற்கொலைக்கு முயற்சித்திருப்பது தெரியவந்தது. இந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

யாழில் விற்பனை செய்யப்பட்ட 5 நாட்களேயான குழந்தை : பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களேயான குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி – மந்திகை வைத்தியசாலையினால் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழந்தையின் தாய் திருமணமாகாதவர் என்பதனால் அவர் தனது சகோதரிக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

21வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்த பெண்!!

பேஸ்புக் மூலம்..

இலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் 21 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன தனது கணவர் என கூறி மனைவி தேடி வந்துள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குருவாவ, ரத்தோட்டை மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 70 கே.ஜீ.பியசேன என்ற நபரே தனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த நோயாளி உறவினர்கள் யாருமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால்,

வைத்தியசாலையின் தாதி அவர் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருந்த கணவனை அடையாளம் கண்ட அவரது மனைவி,

வைத்தியசாலைக்கு தேடி சென்றுள்ளார். காலில் பெரிய காயங்களுக்குள்ளான நபர் உரிய நினைவாற்றலில் இல்லை என்ற போதிலும்,

மனைவி அவரே தனது கணவர் என அடையாளம் கண்டுள்ளார். 21 வருடங்களின் பின்னர் தனது கணவனை தன்னுடன் சேர்க்க பேஸ்புக் உதவியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.