ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!!

இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி..

இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மழையுடனான வானிலை நிலவியமையினால்,

போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 226 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு எதிராக 9 வருடங்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் போட்டி ஒன்றில் வெற்றி ஒன்றை கண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா, இலங்கையுடனான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று (23.07.2021) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா ஶ்ரீநகர் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியா முல்லைத்தீவு உட்பட பல இடங்களில் டெல்டா வைரஸ் தோற்றாளர்கள் அடையாளம்!!

டெல்டா வைரஸ்..

இலங்கையில் கோவிட் உருமாறிய திரிபான டெல்டா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் பல பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், கொலன்னாவை, கோட்டே, நவகமுவ, மாஹபாகே, அங்கொடை,

இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆடி மாதம் மணப் பெண்ணை வீட்டுக்கு அனுப்ப மறுத்த பெற்றோர் : கணவன் செய்த விபரீத செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி ஆடி மாதம் சோக கீதம் பாடியதால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்.

இவரது மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார். திலீபனும், அதே பகுதியை சேர்ந்த மருத்துவரான 27 வயது பெண் திவ்யா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் குடும்பத்தினர் மருமகளை அழைத்து வருவதற்காக திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் புதுப்பெண்ணை அவர்கள் அனுப்பாத நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதில், மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை தனது வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

தகவலறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திலீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம் பெண்ணை முதல் கணவர் ச.ரமாரியாக வெ.ட்டி கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (28).

இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவிற்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(30) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

திருமணம் முடிந்து இருவரும் 6 மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சங்கீதாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதன் படி, பொன்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவருடன் கல்லூத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கணவர் பொன்ராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது,காலை 10 மணியளவில் சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர, வீட்டின் முன்பக்க அறையில் சங்கீதா ர.த்த வெ.ள்ளத்தில் இ.றந்து கி.டப்பதைக் கண்டு கடும் அ.திர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் இன்று காலை கல்லூத்துவிற்கு வந்து,

திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி அக்கம் பக்கத்தில் சங்கீதாவின் முகவரியை கேட்டுள்ளார். இதையடுத்து, சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற அவர்,

தான் மறைத்து வைத்திருந்த அ.ரிவாளால் அவரை சரமாரியாக வெ.ட்டி து.டி து.டிக்க கொ.லை செ.ய்து வி.ட்டு அங்கிருந்து த.ப்பியுள்ளார். பொலிசார் த.லைமறைவாக இருக்கும், கண்ணனை தே.டி வ.ருகின்றனர்.

எனக்கு கிடைக்காத பெண்ணை யாரும் திருமணம் செய்யக்கூடாது : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.

இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருடைய மனைவி மகேஸ்வரி, மகள் தனலட்சுமி (22). பட்டதாரி. மகேஸ்வரியின் தாய் வீடு, குன்னம் அருகே கொளப்பாடி கிராமத்தில் உள்ளது.

தனலட்சுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அருண்பாண்டியன்(30). இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

அருண்பாண்டியனின் தாய்-தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற தனலட்சுமியை பார்த்த அருண்பாண்டியன், அவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது கையில் தனலட்சுமியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமி வீட்டிற்கு அருண்பாண்டியன் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார்.

அப்போது, அருண்பாண்டியன் தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்ததால், அவருக்கு பெண் தர முருகேசன் மறுத்துள்ளார். இந்நிலையில் கொளப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நடக்கிறது.

இதற்காக நேற்று மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரை, அவர்களது உறவினரான ஆகாஷ்(22) தனது மோட்டார் சைக்கிளில் அல்லிநகரத்தில் இருந்து கொளப்பாடிக்கு அழைத்து வந்தார்.

இதற்கிடையே மருதையன் கோவிலில் தனலட்சுமியை, அருண்பாண்டியன் பார்த்துள்ளார். அப்போது, தனக்கு தர மறுத்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், தனலட்சுமியை கொலை செய்ய அருண்பாண்டியன் முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து தனது கோழிப்பண்ணையில் பாம்பை குத்திக்கொல்வதற்காக வைத்திருந்த ஈட்டி போன்ற சுருக்கி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், தனலட்சுமியை பின்தொடர்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அருண்பாண்டியன் தான் வைத்திருந்த சுருக்கியால் தனலட்சுமியின் இடதுபுற முதுகில் குத்தினார். இதில் தனலட்சுமி படுகாயம் அடைந்து துடிதுடித்தார். இதையடுத்து அவரை அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதற்கிடையே தனலட்சுமியை கொலை செய்ததால் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்று எண்ணிய அருண்பாண்டியன், மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றிவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தங்கையின் கணவர் செய்த மோசமான செயல் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தங்கையின் கணவரால் தான் தற்கொலை செய்கிறேன் என வீடியோ வெளியிட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இறந்துள்ளார்.

கைக் குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லி க்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட பிரேதத்தை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் அதிக அளவுக்கு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும்,

தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் ஜோசப்பை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனையை தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்னால் அதிபர், ஆசிரியர்களின் தொழிற் சங்கங்களின் கூட்டிணைவில் இன்று (23.07) குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிபர், ‘ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு வேண்டும், கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, இலவசக் கல்வியை சிதைக்காதே, கொத்தலாவ பல்கலைக்கழகத்தை நிறுத்து’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர மணிக்கூட்டு கோபுர சந்தி வரை சென்று அங்கிருந்து கண்டி வீதி ஊடாக வவுனியா தெற்கு வலயக் கல்வி பணமனை வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கண்டி வீதி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அதனால் எமது தொழிற்சங்க போராட்டங்கள் தொடரும். இலவசக் கல்வியை ஒழிந்து கல்வியில் இராணுமயமாக்கலை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.

அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பெருளமளவான அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமையால் கண்டி வீதி போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பாதிப்படைந்திருந்தது. பின்னர் பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்திருந்தனர்.

வவுனியா நகரில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு : விசேட அதிரடிப்படையினர் சோதனை!!

மர்ம பொதியால் பரபரப்பு..

வவுனியா நகரில் காணப்பட்ட மர்ம பொதியால் பதற்றநிலை ஏற்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வருகை தந்து சோதனை நடத்தினர்.

வவுனியாவில் அமைந்துள்ள கொப்பேகடுவ சிலைக்கு முன்பாக இன்று (23.07) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

போராட்டம் முடிவடைந்து சிறிது நேரத்தில் குறித்த பகுதியில் இருந்த கொப்பேகடுவா சிலை முக்பாக இராணுவ சீருடையில் தயாரிக்கப்பட்ட பை ஒன்று காணப்பட்டது.

இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் குறித்த மர்ம பொதி அருகில் எவரும் செல்ல விடாது பாதுகாத்தனர்.

அதன்பின்னர், விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிக்க செய்யும் பிரிவினரை வரவழைத்து, குறித்த சிலை அருகில் இருந்த வர்த்தக நிலையங்களை சிறிது நேரம் மூடியதுடன், கண்டி வீதி ஊடான போக்குவரத்தையும் 20 நிமிடங்கள் தடை செய்து குறித்த பொதியை குண்டு செயலிழக்க செய்யும் கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த பொதியில் ஆலய துண்டு பிரசுரங்களும், அதிஸ்டலாப சீட்டுக்களும், வேறு தாள்களும் காணப்பட்டன. அதனை மீட்ட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்தனர். இதனையடுத்து நகரம் வழமைக்கு திரும்பியிருந்தது.

வவுனியாவில் கறுப்பு யூலையை நினைவு கூர்ந்தும் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

கறுப்பு யூலையை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் இன்று காலை (23.07) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், அடக்கு முறைகளால் மக்களை அடக்க நினைக்காதே, இராணுவத்தின் கைகளில் கொடுக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே,

பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்கப்படுவாய், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், 1948 முதல் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி காண்டீபன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ச.தனுஸ்காந், கட்சியின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் ஹிசாலியின் மரணத்திற்கு நீதிகோரி கையெழுத்துப் போராட்டம்!!

கையெழுத்துப் போராட்டம்..

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியதீன் வீட்டில் மரணித்த சிறுமி ஹிசாலியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்காக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா இலுபையடிச் சந்தியில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.07) காலை முதல் மதியம் வரை இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணி புரிந்து மரணமடைந்த ஹிசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை இடம்பெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தின் பின் அதன் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கையெழுத்திட்டனர்.

மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் : அரசாங்கம் அறிவிப்பு!!

போக்குவரத்து சேவைகள்..

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

தீவிர கோவிட் வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒருசில அத்தியாவசிய காரணங்களுக்கு மாத்திரம் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சந்தை வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

பிசிஆர் பரிசோதனை..

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இன்று காலை (23.07.2021) இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள சிகையலங்கார செய்யும் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டு முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களை தாமாகவே முன்வந்து பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் : அஜித் ரோஹண எச்சரிக்கை!!

அஜித் ரோஹண..

கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வரும்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் குழுமாட்டு சந்தியில் 2 மில்லியன் செலவில் கட்டப்பட்ட சந்தை மக்கள் பாவனைக்கு!!

சந்தை மக்கள் பாவனைக்கு..

வவுனியா குழுமாட்டு சந்தியில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் வவுனியா தெற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ்,

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கட்டிடம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் அமைந்துள்ளமையினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் கட்டப்பட்ட குறித்த மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்தினை அகற்றுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த சந்தையினை பிரதேச சபையினர் மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளதுடன் குழுமாட்டு சந்தியில் வீதியோரத்தில் மீன் வியாபாரம் மேற்கொள்ள தடையும் விதித்துள்ளனர்.

வவுனியா சந்தை உள்வட்ட வீதி சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர கோரிக்கை!!

அவசர கோரிக்கை..

வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களை தாமாகவே முன்வந்து பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றும் மூவர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த சிகையலங்கார நிலையம் தொற்றாளர்கள் அடையாளம் காணும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்திருந்தது.

இந்நிலையில், குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு பலர் சென்று வந்துள்ளனர். அவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்படக் கூடிய அபாய நிலை உள்ளதால்,

கடந்த 10 நாட்களுக்குள் குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு சென்று வந்தவர்கள் தாமாகவே முன்வந்து சுகாதார திணைக்களத்தில் பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டு தமது பாதுகாப்பையும், குடும்பத்தினதும், சமூகத்தினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.