கொலை செய்துவிட்டு இறுதிச்சடங்கில் ஓடி ஓடி வேலை செய்த பெண் : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர் சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார்.

இதையடுத்து இவர் தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் இரயில்வே துறையில் டிடிஆர்-ஆக வேலை செய்வதால், கடந்த 15-ஆம் திகதி மகன் வேலைக்காக மதுரை சென்றுள்ளார்.

அப்போது ஜாக்குலின் மேரியை வேலைக்கார பெண் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ஆம் திகதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரியின் போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் போனில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

வெகு நேரமாகியும், தாய் போன் எடுக்காத காரணத்தினால், அவர் உடனடியாக அருகில் இருக்கும் வீட்டாருக்கு போன் செய்து, தன்னுடைய அம்மாவிடம் சென்று போனை கொடுக்கும் படி கூறியுள்ளார்.

அப்போது அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, ஜாக்குலின் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பிராங்கிளினுக்கு தெரிவிக்க, அவர் தஞ்சைக்கு விரைந்துள்ளார்.

அவர் தாய்க்கு, காக்கா வலிப்பு நோய் இருப்பதால் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று கூற, பொலிசார் இதை ஒரு மர்ம மரணம் என்று வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

ஆனால், இறுதிச்சடங்கின் போது, அவர் தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவை காணமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிராங்கிளின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, அதன் பின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதால், அவருடன் இருந்த வேலைக்கார பெண்ணான ஆரோக்கிய டென்சியிடம் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது,

ஜாக்லினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும், இது குறித்து யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளை ஓடி ஓடி செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, இதை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார், ஆரோக்கிய டென்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரின் செயற்பாட்டால் வெறுத்துப்போன மனைவி திருமணமான 6 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!!

கீர்த்தனா..

தமிழகத்தில் வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் குறும்படம் எடுப்பதில் கணவன் ஆர்வம் காட்டியதால் புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார். ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் குறும்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறாய் என கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார் இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் கீர்த்தனா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

மேலும் வாழ்க்கையிவ் வெறுப்பு அடைந்த கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை உடனடியாக மீட்டு ராமசந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் கணவரின் செயல்பாடுகளால் வெறுத்துபோன இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 20 நாளில் கணவர் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த புதுப்பெண் : 21வது நாள் நேர்ந்த விபரீதம்!!

ஊர்மிளா..

இந்தியாவில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்தவர் லிலாதர். இளைஞரான இவருக்கும் ஊர்மிளா என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த நாள் முதலே ஊர்மிளாவின் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஊர்மிளா தனது தாயார் வீட்டில் இருந்த நிலையில் நேற்று கணவர் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தனது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்ட ஊர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ஊர்மிளாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். மேலும் இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த ஊர்மிளாவின் குடும்பத்தார் அங்கு வந்தனர்.

பின்னர் உயிரிழந்த புதுப்பெண்ணின் சகோதரர் ராம்ஸ்வரூப் பொலிசாரிடம் கூறுகையில், ஊர்மிளாவை அவர் கணவர், நாத்தனார் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தனர்.

அவர்களின் குணத்தை அறிந்த ஊர்மிளா அதிர்ச்சியில் இருந்து வந்தார், இந்த சூழலில் தான் அவள் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் மீதும் ஊர்மிளாவை தற்கொலைக்கு தூண்டியதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்லைன் வகுப்பிற்கு செல்வதற்கு கையடக்க தொலைபேசி இல்லாததால் தூக்கில் தொங்கிய மாணவன்!!

கவிந்து தில்ஷான்..

வாரியபொல பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் வகுப்பிற்கு செல்வதற்கு தேவையான கையடக்க தொலைபேசி இல்லாமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுளளார். 3 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தின் இரண்டாவது மகனே தற்கொலை செய்துள்ளார்.

கவிந்து தில்ஷான் என்ற 16 வயதுடைய மாணவன் தனது அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகனை தேடும் போது அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியமையினால் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒன்லைன் கற்கை நடவடிக்கை மேற்கொள்ள ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்று இல்லாதமையினாலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

மணி பவித்ரா..

டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியை நேற்றைய தினம் தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது குறித்த யுவதி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டும் யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பரீட்சைகள்..

இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இன்று(19.07) காலை அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வியமைச்சு வெளியிட்ட புதிய தகவல்!!

பாடசாலைகள்..

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையினால் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கல்வி அமைச்சர் அறிவிப்பார் என அவர் என கூறியுள்ளார். தற்போது கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர்களில் 99 வீதமானேருக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஆசிரியர்கள் 99 வீதமானோருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மாதம் 22ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து ஆசிரியர்களுககும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.

ஆசிரியர்கள் ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள் . இது மாணவர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்.

ஆசிரியர் – அதிபர் சம்பளமத்திற்கு நியாயம் கிடைக்கும். ஜனாதிபதி இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

நிலவுக்கு செல்லும் இலங்கை யுவதி!!

சந்தனி குமாரசிங்க..

டியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி வீரருக்கான பாடநெறியை கற்க புலமைப்பரிசில் கிடைத்தது.

அந்த பாடநெறியை கற்பதற்கு தனக்குள்ள பொருளாதார சிரமங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர், சந்தலிக்கு உதவிகளை வழங்கியுள்ளார்.

 

நீர்வீழ்ச்சியில் விழுந்து யுவதி மாயம் : தேடும் பணிகள் தீவிரம்!!

மணி பவித்ரா..

திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலவாக்கலை, லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

97 மீட்டர் பள்ளத்திலேயே குறித்த யுவதி விழுந்துள்ளதாகவும், யுவதியை தேடி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய 3 யுவதிகளும் திம்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை திம்புளை – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : காரணம் என்ன?

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் காணப்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் ஒரு அவுஸின் விலை தற்போதுவரையில் 1820 அமெரிக்க டொலராக பதிவாயுள்ளதென வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்தமையினால் இவ்வாறு கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

எப்படியிருப்பினும் தங்கத்தின் விலை தொடர்ந்து 1800 டொலருக்கும் அதிகமாகவே காணப்படும் என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளத்தால் 300 மீட்டர் அகலத்தில் திடீரென உருவான ராட்சத பள்ளம்!!

ஜெர்மனியில்..

ஜெர்மனியில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜெர்மனில் அமைந்துள்ள ர்ஃப்ட்ஸ்டாட்- பிளெசெம் என்ற கிராமத்தில் ராட்சத பள்ளமொன்று ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன்,ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக ஜெர்மனி உள்ள நிலையில்,சமீப ஆண்டுகளில் இந்த வெள்ளம் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த திடீர் மழையால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் அருகில் இருந்த வீடுகள் அப்படியே அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பல்வேறு மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக எர்ப்ட் நதியில் வெள்ளப்பெருக்கு அபாயகரமான அளவையும் தாண்டிவிட்டது. எர்ப்ட் நதியில் பாய்ந்த வெள்ள நீரானது ர்ஃப்ட்ஸ்டாட்- பிளெசெம் என்ற கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அமைந்திருந்த சிறிய பள்ளத்தில் முதலில் பாயத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், வெள்ள நீரின் அழுத்தம் தாக்க முடியாமல், அந்த சிறிய பள்ளம் மிகப் பெரிய சிங்க்ஹோல் ஆக வெடித்துவிட்டது. தொடரும் வெள்ளம் காரணமாக அந்தக் பள்ளம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. தற்போது அந்த ராட்சத பள்ளம் சுமார் 300 மீட்டர் அகலமாக உள்ளதுடன், வாகனங்கள், வீடுகள் என்பன அந்த பள்ளத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த ராட்சத பள்ளம் அருகில் வசித்து வந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கிராமத்திற்குத் திரும்ப வேண்டாம் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனி தவிர பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளும்கூட இந்த வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவில் இதுவரை சுமார் 190 பேர் இந்த வெள்ளத்தில் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளத்தால் பல பில்லியின் யூரோ மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஜெர்மனியில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய கனமழை வெறும் இரண்டு நாட்களில் பெய்துள்ளது. அதனால் தான் இப்படியொரு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றமே இதுபோன்ற வெள்ளத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது வெள்ளம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா செட்டிகுளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்!!

பா.தியாகராசா..

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநொச்சிக்குளம் குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெரியநொச்சிக்குளம் குளத்தில் நேற்று முன்தினம் ( 1707.2021) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வள்ளம் ஒன்றில் குறிதத நபர் மீன் பிடிக்க சென்றுள்ளார். இதன் போது குளத்தின் நடுப்பகுதில் வள்ளம் நீருக்குள் மூழ்கியதனால் மரணமடைந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தில் பெரியநொச்சிக்குளம் பகுதியினை சேர்ந்த பா.தியாகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2ஆம் திருமணம் செய்து மனைவியோடு வந்த கணவனுக்கு முதல் மனைவி கொடுத்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி, காவல் நிலையத்திலே வைத்து அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் Hoshangabad-ன் Itarsi-யில் வசிக்கும் Chandrakant Rohar என்பவர் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இப்போது மீண்டும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால், விவாகரத்து செய்து கொண்ட அவரின் முதல் மனைவியோ, இந்த விவாகரத்தை நிறுத்துவதற்காக, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதற்கிடையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், இது குறித்து அப்பெண் காவல்நிலயத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட Chandrakant Rohar-ஐயும், இவரின் முதல் மனைவியையும் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, Chandrakant Rohar தான் சொல்வது தான் சரி என்பது போல் விடாப்பிடியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அவரின் முதல் மனைவி, காவல்நிலையம் என்று கூட பார்க்காமல், அவரை அடிக்கத் துவங்கினார்.

அவரை தர தரவென இழுத்து அடிக்க, இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக சண்டையை தடுத்து நிறுத்தி, இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதை சட்டப்படி சந்தித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

காணொளியை பார்ப்பதற்கு

12 மற்றும் 14 வயதான இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் : தந்தை கைது!!

இரு சிறுமிகள்..

பதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமிகளின் தந்தையான 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து, இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இருவரும் கர்ப்பம் தரித்துள்ளமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய வகை நோய்!!

கொரோனா..

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கும் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி 2 முதல் 6 வாரத்திற்குள் இந்த நோய் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையின் போது அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இடி மின்னல் தாக்கங்களிலிருந்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-தமிழ்வின்-