ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உ.யிரிழப்பு : காரணம் வெளியானது!!

ஜூட் குமார் ஹிஷாலினி..

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சி.றுமி , உடலில் தீ பரவி ப.லத்த கா.யங்களுக்குள்ளாகி உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சி.றுமி ச.டலம் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் திகதி உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சி.றுமி கடந்த 15ம் திகதி உ.யிரிழந்தார். இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, உ.யிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஹிஷாலினியின் ச.டலம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பி.ரேத ப.ரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீ.க்.கா.யங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அ.திர்ச்சி ம.ரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என்.ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீ.யினால் முற்றாக எ.ரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சி.த்.தி.ர.வ.தை.க.ள், கொ.டு.மை.க.ளு.க்.கு.ம் உ.ள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பா.லி.ய.ல் ஊ.டுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

மேற்கு ஐரோப்பாவில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் : 150 பேர் பலி : 1300 பேர் மாயம்!!

மேற்கு ஐரோப்பாவில்..

மேற்கு ஐரோப்பா முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் தப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ள அனர்த்தத்தில் குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பதிவாகியுள்ள மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்திலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த நாட்டின் தென் மாகாணத்தில் பிரதமர் மார்க் ருட்டே தேசிய அனர்த்த நிலைமையை அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய தலைவர்கள் காலநிலை மாற்றம் குறித்த தீவிர வானிலைக்கு குற்றம் சாட்டியுள்ளனர். ஐரோப்பாவின் பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 106 பேர் ஜேர்மனியில் மாத்திரம் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியில் சுமார் 15,000 பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஜேர்மனிய மாவட்டமான அக்விலரில் 1,300 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மனித செயற்பாடுகளினால் தூண்டப்படும் காலநிலை மாற்றம் இதுபோன்ற மோசமான மழைவீழ்ச்சியை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு : வெளியாகியுள்ள தகவல்!!

டெல்டா மாறுபாடு..

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்ற எல்லைக்குள் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். டெல்டா திரிபுக்கு ஆளான 11 பேர் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கெத்தாராமவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியை சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு வடக்கிலிருந்து இரண்டு பேர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ருவன் விஜேமுனி கூறியுள்ளார்.

இதன்படி, கொழும்பு 01 முதல் 14 வரையிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, கொழும்பு 01, 02, 03, 05, 09 மற்றும் 14 ஆகிய பகுதிகள் அதிக ஆபத்தான இடங்களாகும். அவற்றில் தெமட்டகொட, ஸ்லேவ் ஐலேன் மற்றும் பொரல்ல ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதும், அந்தப் பகுதியில் சுமார் பத்து நோயாளிகள் இருக்கலாம், இதனால் கொழும்பு மற்றும் மன்னாரில் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இருக்க கூடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

 

அத்தையை கொ.ன்ற 24 வயது இளைஞன் : அந்த இளைஞனை து.டி து.டிக்க கொ.ன்ற மாமா : அ.திர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்..

இ.ந்தியாவில் அ.த்தையை இ.ளைஞர் கொ.லை செ.ய்.த நி.லையில், ம.னைவியை கொ.லை செ.ய்.த ந.ப.ரை க.ணவர் ப.ழி.தீ.ர்.த்.த ச.ம்பவம் அ.ப் ப.கு.தி ம.க்களிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சே.ர்ந்தவர் ராஜ்பால் முண்டா(24). இ.வ.ர் கு.டும்பத்தில் உ.ள்ள உ.றவினர்களுக்கு க.டந்த சி.ல தி.னங்களாகவே உ.டல்நலக் கு.றைவு ஏ.ற்பட்டு வ.ந்ததுள்ளது.

அதன் படி, அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த பின்சாரி தேவியை பார்த்து நீ ஒரு சூ.னியக்காரி எனக் கூறி அவரை கோ.டா.ரி.யா.ல் தா.க்.கி து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

இதையடுத்து மனைவி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட தகவல் கிராம மக்கள் மூலம் மாக்தேவ் முண்டாவுக்கு தெரியவந்தது. வீட்டிற்கு வந்த மனைவி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து தெரிந்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்.தா.ர்.

உடனே, ராஜ்பாலை வீட்டிற்கு அழைத்த மாக்தேவ் ஏன் கொ.லை செ.ய்.தா.ய் என்று கேட்டுள்ளார். அவள் ஒரு சூ.னியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொ.லை செ.ய்.தே.ன் எனக் கூறியுள்ளார்.

இதனால், மேலும் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த.வ.ர் ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு வீட்டில் இருந்த கோ.டா.ரி.யை எடுத்து ராஜ்பாலை த.லை.யி.ல் வெ.ட்.டி.யு.ள்.ளா.ர். த.லை.யி.ல் ப.ல.த்.த கா.ய.ம் அ.டைந்த ராஜ்பால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இந்த இரண்டு சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உ.ட.லை.யு.ம் மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்து வைத்த தந்தை : நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம் வேலூரில் 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒக்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41).

இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய 12ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு சிறிது நேரத்தில் புகார் வந்தது. அங்கிருந்து அணைக்கட்டு வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் திருமணமான மண மக்களையும், இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

41 வயதுடைய ஒருவருக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததற்காக மாணவியின் தந்தை மீதும், மணமகன் சுரேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை பொன்னுசாமிக்கு 40 வயது. அவர் தன்னை விட ஒரு வயது மூத்த ஒருவருக்கு தன மக்களை கட்டிக்கொடுத்த இந்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அவரது உறவினர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறிய பயிற்சியாளர் : நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழக்தில்..

மதுரை தெப்பக்குளம் கா.மராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவன் பிரசன்ன குமாரன். இவர் அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பூப்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக இருந்தான்.

இவன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 10-ம் வகுப்பு மா.ணவியுடன் பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறி நெ.ரு.ங்கி பழகி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.

சில மாதங்களுக்கு முன்பு, பயிற்சியாளர் பிரசன்ன குமரன், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மா.ணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மா.ணவியை பா.லி.யல் ப.லாத்காரம் செ.ய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் மா.ணவி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் போது பல்வேறு போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த மா.ணவியை மி.ரட்டி வரவழைத்து பல்வேறு தருணங்களில் மீண்டும் மீண்டும் ப.லா.த்காரம் செ.ய்.ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமியின் உடல்ரீதியான மாற்றங்களை பார்த்த ச.ந்.தேகமடைந்த தாய் அந்த சிறுமியிடம் விசாரித்த போது, காதல் என்ற பெயரில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் செய்த அ.த்.துமீறல்களை கூறி சிறுமி க.த.றியுள்ளார்.

இதையடுத்து பா.தி.க்கப்பட்ட சிறுமியின் தாய் நேரில் சென்று பிரசன்ன குமரனின் வீட்டாரிடம் தனது மகளின் வாழ்க்கையை சீ.ர.ழித்து விட்டதாக கூறி நியாயம் கேட்டுள்ளார்.

இதற்கு யார் பொ.று.ப்பு என்பதில் அவர்களுக்கு இடையே க.டு.மை.யான வா.க்.கு.வாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பா.தி.க்கப்பட்ட சி.று.மியின் பெற்றோர் மதுரை டவுன் அனைத்து ம.க.ளிர் போ.லீ.சில் பு.கா.ர் செ.ய்.தனர்.

இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ந.ட.த்திய வி.சா.ரணையில், பிரசன்ன குமரன் பா.தி.க்கப்பட்ட சி.று.மியிடம் த.வ.றாக நடந்ததை ஒ.ப்.புக் கொண்டான். அத்தோடு செவன்ஜி ரெயின்போ காலனி சினிமா படத்தில் வரும் காட்சி போன்று,

மா.ணவியின் தலைமுடி, செருப்பு, அவர் சாப்பிட்டு விட்டு போட்ட ஐஸ் கிரீம்மின் பிளாஸ்டிக் கப் போன்றவையை தனது அறையில் பாதுகாப்பாக வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.

ஒரு கட்டத்தில் மா.ணவியின் இன்ஷியலை தனது மார்பில் பச்சை கு.த்தி வைத்து கொண்டு இதயத்தில் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினான். இருந்தாலும் இறகுபந்து பயிற்சியாளர் பிரசன்ன குமரனை போ.க்.சோ ச.ட்.டத்தின் கீழ் போ.லீசார் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மா.ணவ, மா.ண.விகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் சூழலில் விளையாட்டு பயிற்சி என்ற பெயரில் மா.ண.விகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது க.டு.மையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கா.வ.ல்துறையினர் எ.ச்சரித்துள்ளனர்.

50 பவுண் நகையுடன் வந்த மணப்பெண் : மணமகன் கூறிய ஒற்றை வார்த்தையால் நடந்த சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் நிலையில், மணமகன் ஒருவர் தனது மனைவி அணிந்துவந்த நகையினை பெண்வீட்டாரிடமே கழட்டி கொடுக்க கூறியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ் (28), நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டினர் எற்கனவே வரதட்சணை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண் வீட்டினர் சுருதிக்கு சீதனமாக 50 பவுண் நகை அணிந்து வந்துள்ளதை அவதானித்த மணமகன், தனது கொள்கையே வரதட்சணை வாங்க கூடாது என்பது தான்.

மணமகளிடம் உனக்கு விருப்பம் எனில் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீசின் செயலை அனைவரும் பாராட்டி வருவதோடு, சமூகவலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

இலங்கையில் உயிரிழந்த பின்னரும் இருவரை காப்பாற்றிய பெண்!!

கண்டியில்..

கண்டியில் மூளை சாவடைந்த பெண்ணினால் 2 பேர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தந்தையை இழந்த இரண்டு பிள்ளையின் தாய் மூளை சாவடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவரது உடற்பாகங்களை தானம் செய்ய பிள்ளைகள் நடவடிக்கை எடுத்ததாக கண்டி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பதென்ன, காவத்தை பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மகளும் 17 வயதுடைய மகனுமே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் உடலில் விஷம் கலந்தமையினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் 45 வயதுடைய தாயின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடற்பாகங்கள் இருவருக்கு தானம் செய்து அவர்களின் உயிரை காப்பாற்ற பிள்ளைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று முன்தினம் காலை இந்த உடற்பாகங்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற்பட்டு கேகாலை மற்றும் மீமுரே பிரதேசங்களை சேர்ந்த இருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டின் முக்கிய புள்ளியை அடையாளம் காட்டிய 15 வயது சிறுமி!!

இணையத்தளம் ஊடாக..

இலங்கையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர், விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று ப.லாத்காரம் செய்த கு.ற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டு வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம் பிணையளித்தது.

நேற்றைய தினம் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் து.ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அவரை அடையாளம் காட்டியதாக வழக்கு விசாரணையின் போது மேலதிக நீதிவான லோச்சனீ அபேவிக்ரம திறந்த மன்றில் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தறகே முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையளித்தது.

இலங்கையில் பாரதூரமான நிலை ஏற்படலாம் : டெல்டா திரிபு தொடர்பில் கடும் எச்சரிக்கை!!

டெல்டா திரிபு..

கோவிட் வைரஸின் திரிபான டெல்டா தொற்றிய 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திரிபு தொற்றிய பலர் சமூகத்திற்குள் இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களிடம் நடத்திய பரிசோதனையில் இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காணப்படும் நிலைமையில், டெல்டா திரிபு பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்டா திரிபு மிக வேகமாக பரவும் என்பதால் சுகாதார வழிக்காட்டல்களை கடைப்பிடிக்கவில்லை என்றாால், பாரதூரமான நோய் பரவல் ஏற்படலாம் என தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு நாட்டில் பரவும் ஆபத்து அதிகம் இருப்பதால், சுகாதார வழிக்காட்டல்களை கடைபிடிக்க வேண்டியது அத்தியவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெல்டா திரிபு தொற்றிய 11 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் மரணம்!!

பெண் மரணம்..

பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரியப்படுத்திய போதிலும் பொலிஸ் அதிகாரிகள் அதனை கண்டுக் கொள்ளாமையினால் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கமைய ஒரு தரப்பினர் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த பெண் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் தொடர்பில் உயிரிழந்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தனக்கு சுகயீனமாக உள்ளதென கூறிய போதிலும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பேலியகொட, கெமுனு மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை : பொலிஸார் அறிவிப்பு!!

முகக்கவசம்..

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பின் பல்வேறு சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடுவது தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும். அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

எனவே முகக்கவசம் அணியாது சன நெரிசல் மற்றும் பொதுவெளியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

முகக் கண்ணாடித்திரை மட்டுமே அணிவது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல்!!

முகக் கண்ணாடித்திரை..

முகக்கண்ணாடித்திரை மட்டுமே அணிவது கோவிட் வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் படுவந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் வைரஸ் பரவாமல் இருக்க முக்கவசத்தை சரியாக அணிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு மேலதிகமாக ஒரு முகக்கண்ணாடித்திரை பாதுகாப்பு கருதி மட்டுமே அணியப்படுவதாக படுவந்துடுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஒரு முகக்கண்ணாடித்திரையை மட்டுமே பொதுவில் அணிவது தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுவதாகும் என்று படுவந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் Solaris Energy தனியார் நிறுவனத்தினால் 255 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!!

உலர் உணவு பொதிகள்..

வவுனியாவில் இயங்கி வருகின்ற Solaris Energy Pvt Ltd தனியார் நிறுவனத்தின் ஊடாக கோவிட் -19 பயணத்தடையால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குப்பட்ட 255 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Solaris Energy pvt Ltd (சூரிய கலம் மின்பிறப்பாக்கி விற்பனை) தனியார் நிறுவனத்தின் வவுனியா மாவட்ட கிளை மக்களின் நலன் சார் பல்வேறு சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமையுடன் அதன் ஒர் பகுதியாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகிளங்குளம்,

கற்பகபுரம், சாம்பல்தோட்டம், பாலாமைக்கல், கன்னாட்டி, கிடாச்சுரி, மணிபுரம், பட்டக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 255 குடும்பங்களுக்கே இவ்வாறு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மக்களுக்கான உலர் உணவு பொதிகளை கிராம சேவையாளர்கள் , சமூக ஆர்வளர்கள், நிறுவன ஊழியர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

அத்துடன் குறித்த தனியார் நிறுவனத்தினால் ஒட்டிசுட்டான் பகுதியில் 100 பயனாளிகளுக்கும் மற்றும் வன்னேரிக்குளம் பகுதியில் 70 பயனாளிகளுக்கும் 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சியைக் கண்டித்தும், பொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (17.07) இடம்பெற்றது.

புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களின் பங்களிப்புடன் வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ‘அரசே பொருட்களின் விலையேற்றத்தை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், போராடும் மக்கள் மீது பொலிசாரை ஏவாதே,

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, இலங்கையின் கடல் வளத்தை அழிப்பதற்கு துணை போகாதே, உரத்தடையை நீக்கு, விவசாயிகளுக்கு உடன் தீர்வு தா, பெண்கள் மீதான சுமைகளை அகற்று, அந்நிய வல்லரசுகளின் ஆதிகாரத்திற்கு இடமளிக்காதே’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், விலையேற்றத்தைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கருத்துரைகளும் இடம்பெற்றன. இதில் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கெண்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுமாறு பொலிசார் அறிவுறுத்தியதுடன், அமைதியான முறையில் போராட்டத்தை கண்காணித்தனர்.

வவுனியா கற்குளத்தில் 9 வயது சிறுவனின் உயிரை பலியெடுத்த கற்குவாரியை மீண்டும் ஆரம்பிக்க திட்டம் : மக்கள் எதிர்ப்பு!!

கற்குவாரி…

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்குளம் 2ம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள கற்குவாரியில் கல் உடைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினையடுத்து குறித்த வேலைத்திட்டத்தினை உடனடியான நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கற்வாரியில் கல் உடைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதனையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்துள்ளாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் குறித்த கற்குவாரி இயங்கிய சமயத்தில் இவற்றிற்கு அருகேயிருந்த வீடுகள் பல சேதமடைந்திருந்துடன் கற்குவாரியில் தவறி வீழ்ந்து 9வயது சிறுவன் உயிரிழந்ததுடன் இவற்றிக்கு அருகாமையில் முன்பள்ளி, ஆலயம் என்பனவும் அமைந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கற்குவாரி இயங்குவதற்கு பல தடவைகள் முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் கற்குவாரியினை இயக்குவதற்குறிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே உடனடியாக கற்குவாரி மீள செயற்பட முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஆசிகுளம் கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

இக் கற்குவாரி முன்னர் செயற்பட்ட காலத்தில் கற்குவாரிக்கு அருகேயுள்ள வீடுகள் சேதமடைந்திருந்துடன் வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டாத மக்கள் எனக்கு பல தடவைகள் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இக் கற்குவாரி மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் எனக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பிரதேச செயலாளருக்கும் தகவல் வழங்கியுள்ளேன்.

அத்துடன் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்றிட்டமும் எமது கிராமத்தில் முன்னெடுக்க அனுமதி வழங்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.