வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!!

ஆடிப்பிறப்பு..

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் நினைவுரையினை வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியதுடன், மாணவர்களினால் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் பாடப்பட்டதுடன், சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபியும் நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம், மஞ்சுளாதேவி, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

9வது மாடியில் இருந்து விழுந்த மனைவி : கா.ப்பாற்ற போ.ராடிய கணவன் : கமெராவில் பதிவான அதிர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வா.க்குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அ.திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் கணவனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே விழுவது போன்றும் வீடியோ வெளியானது.

இதனால் அந்த பெண் யார்? என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இது கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட வா.க்குவாதத்தின் போது நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே சில காரணங்களுக்காக வா.க்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென்று அப்பெண் கீழே கு.திக்க முயன்றுள்ளார். இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அவரை கா.ப்பாற்ற மு.யன்றுள்ளார். இதனால் தன்னுடைய கையை வைத்து, அவரை பிடித்து, அவரை மேலே தூக்க முயன்றுள்ளார்.

ஆனால் இந்த முயற்சியின் போது, அவர் திடீரென்று அங்கிருந்து கீழே விழுந்தார். இதில் மனைவிக்கு த.லையில் ப.லத்த கா.யம் ஏற்பட்டுத்து, மருத்துவமனையில் மிகவும் ஆ.பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் நடந்து சென்ற இளைஞன் : திகில் சம்பவத்தின் பின்னணி!!

இந்தியா..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், காஜியாபாத் வீதிகளில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயங்கரமான சம்பவத்தில், 35 வயதான ஒருவர் தனது 65 வயதான அண்டை வீட்டாரை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் வலம் வந்த சில வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவ தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் சூரா கிராமத்தில் வசிக்கும் மாதவ் கோண்ட் என்றும் கொல்லப்பட்டவர் கரண் சிங் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்டை வீட்டார்களான இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையில் மாதவ் கோண்ட் கூறியதாவது:- கரண் சிங் ஒரு சூனியம் செய்பவர். எனது நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க வேண்டுமென்றே சிங் தனது பண்ணையில் கால்நடைகளை கட்டவிழ்த்து விடுவார்.

எனது பண்ணையில் சிங் பன்றிகளை மேயவிடுவார். அது தீண்டத்தகாததாகக் கருதப்படுவதால், முழுப் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.இது இருவருக்கும் இடையே சர்ச்சைக்கு வழிவகுத்தது என பொலிஸார் கூறினார்.

திங்கள்கிழமை மாலை, மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்ததை அடுத்து, கோபத்தின் உச்சிக்கு கோண்ட், சிங்கை கோடரியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் நடந்து, அப்பகுதியில் எல்லோரையும் பீதியை உண்டாக்கினார்.

இந்நிலையில், ஐபிசி பிரிவு 302-ன் கீழ் மாதவ் கோண்ட் காவல்துறையினறால் கைது செய்யப்பட்டார். பின்னர், கரண் சிங்கின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருமணமான நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்ற முயன்ற திருமணமான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் இருக்கும் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு விகனேஷ் என்ற 26 வயதில் மகன் உள்ளார். விக்னேஷிக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷ், பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய போது, அவருடன் பணியாற்றிய நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியைச் சேர்ந்த செல்வம் மகள் சபீனா(23) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இப்போது சபீனா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் மயிலாடுதுறையில் இருக்கும் விக்னேஷை சந்தித்த அவர், தான் கர்ப்பமாக இருப்பதால், திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி சபீனாவை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சபீனா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், விக்னேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கண்டித்த கணவன் : ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொ.டூர செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி து.டி து.டிக்க க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகனான தற்போது 37 வயது மதிக்கத்தக்க முருகனுக்கும், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வனஜாவுக்கு அப்பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவி நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இது நீடித்து வந்த நிலையில், கணவன் முருகன் இதை கண்டுபிடித்து இருவரையும் க.ண்டித்துள்ளார்.

இருப்பினும், அவர்கள் முருகனின் பேச்சை கேட்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த 6-ஆம் திகதி வனஜாவும், கிருஷ்ணகுமாரும் வீட்டின் அருகிலுள்ள மரவள்ளி தோட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதை முருகன் கையும், களவுமாக பி.டித்ததால், மனைவியை கண்மூடித்தனமாக தி.ட்டியதுடன், அ.டித்துள்ளார். இதில் ஆ.த்திரமடைந்த கிருஷ்ணகுமார், முருகனை தா.க்க, உடனே வனஜா கைலியால் கணவர் என்று கூட பார்க்காமல், முருகனின் க.ழுத்தை நெ.ரித்து து.டி து.டிக்க கொ.லை செ.ய்துள்ளார்.

அதன் பின் இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, முருகன் உ.டலை எடுத்து வந்து வீட்டின் சந்தில் போ.ட்டுள்ளார்கள். காலையில் அக்கம் பக்கத்தினர் கணவர் த.டுக்கி வி.ழுந்து இ.றந்துவிட்டார் என்று நாடகமாடி உள்ளார்.

அதன்பேரில் முருகன் உ.டலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் முருகன் சாவில் ச.ந்தேகம் உள்ளது என்று முருகன் உ.டம்பில் கா.யம் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அங்கு வந்த பொலிசார்முருகனின் உ.டலை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி, மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது வனஜாவிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்ட போது, நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக தொடர்பில் இருந்து வந்தோம்.

இதையடுத்து, கடந்த 6-ஆம் திகதி நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை கணவர் கையும், களவுமாக பி.டித்ததால், அவரை க.ழுத்தை நெ.ரித்து காதலன் உதவியுடன் கொ.லை செ.ய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பின் பொலிசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரையும் கை.து செய்து சி.றையில் அ.டைத்தனர்.

குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த 30 பேர் : மீட்க போராடும் மீட்புக்குழு!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.

இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை 19 பேரை மிட்டுள்ளதாகவும், மேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 10-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவி வைத்தியசாலையில் : கணவன் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு : முல்லைத்தீவில் சம்பவம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் வீட்டில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்தம் வேறு பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில், நீதவான் பார்வையிட்ட பின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் கணவனின் அறையில் வேவு பார்த்த மனைவி : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கணவனின் அறையில்..

கணவனின் கணினியில் உள்ள தரவுகள், ஆவணங்கள், குறுந்தகவல்கள் அல்லது சேமித்து வைகக்கப்பட்டுள்ள தகவல்களை பார்ப்பதனை தவிர்க்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது தனிப்பட்ட கணினிக்குள் மனைவி சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக குற்றம் சுமத்தி கணவனினால் கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது. தனது மனைவி கணினியில் இருந்த பல்வேறு தகவல்களை தரவிறக்கம் செய்து தனது கையடக்க தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்துக் கொண்டுள்ளதாக கணவன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக மனைவி அறைக்குள் குரல் பதிவு உபகரணங்கள் உட்பட பொருத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அறை மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதும், செயலிழக்கச் செய்யப்பட்ட கணினியை வலுக்கட்டாயமாக அணுகியமையும், தனியுரிமையை மீறிய செயலாகும்.

மனைவியின் இந்த செயலால் நியாயமான உரிமையையும் நம்பிக்கையை மீறப்பட்டுள்ளதாக கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். தன்னை பிரிந்து வாழும் தனது மனைவி தனது தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகவும் எந்த அனுமதியுமின்றி தகவல்களை சேகரிக்க மனைவி தனது கணினியை செயற்படுத்திய விடயம், கணினி குற்றவியல் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் இது கடுமையான குற்றம் என்று கணவர் வாதிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டை செய்த கணவர் கொழும்பு பிரதேச அரச வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுகின்றார். அவரது மனைவி வட மாகாண அரச வைத்தியசாலையில் விசேட வைத்தியராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கணவனின் கணினியில் உள்ள தகவல்களை பார்ப்பதனை தவிர்க்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!!

அவசர அறிவுறுத்தல்..

இலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெல்டா திரிபுடனான கோவிட் – 19 பரவலை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடத்திலேயே உள்ளது. இந்த நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதன் காரணமாக தொற்றானது வேகமாக பரவக்கூடும்.

எனவே அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இல்லையெனில், மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் 10 சிறுவர்கள் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளன நிலையில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளதென வைத்தியசாலை இயக்குனர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் ரிட்ஜ்வே வைத்தியசாலையினுள் மாத்திரம் 490 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் எந்த ஒரு கொவிட் தொற்றாளரும் வைத்தியசாலையினுள் கொவிட் தொற்றுக்குள்ளாகவில்லை.

சமூகத்திலேயே அவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் கொவிட் தொற்றுக்குள்ளாகிய 10 சிறுவர்கள் இதுவரையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!!

பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி..

கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளினால் திருமண வைபவங்கள் நடைபெறுவதில்லை எனவும் இதுவே பிறப்பு வீத வீழ்ச்சிக்கான பிரதான ஏதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் 350,000 குழந்தை பிறப்புக்கள் பதிவாகும் எனத் தெரிவித்துள்ளார். எனினும், திருமண வைபவங்கள் நடாத்தப்படாத காரணத்தினால் கடந்த ஓராண்டு காலமாக குழந்தை பிறப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் காரணமாக சுமார் 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வருடாந்தம் 350,000 பிறப்புக்கள் இதனால் தடைப்படுவதாகவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வீதியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த தமிழ்ப் பெண்!!

கோர விபத்து..

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதினால் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தலம் பொலிஸ் பிரிவை சேர்ந்த குருஹன்வில்லுவ பிரதேசத்தை சேர்ந்த வைரய்யா வசுமதி என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவன் மற்றும் பிள்ளையுடன மோட்டார் சைக்கிளில் முந்தலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்திற்கு கணவன் மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் தாய் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே பலியானார். டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கிராம அலுவலர் மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி!!

கிராம அலுவலர்..

வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா- தாண்டிக்குளம் A9 வீதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் சிலர் அனுமதியின்றி சுற்றுவேலி அமைத்து வியாபார நிலையங்களை அமைத்திருந்தனர்.

குறித்த காணியில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி வவுனியா பிரதேச செயலாளர் தலையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்று கட்டப்பட்ட வியாபார நிலையங்களை அகற்றியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவின் கிராம அலுவலர் மீது நேற்றைய தினம் ( 15.07.2021) நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கிராம அலுவலரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கிராம அலுவலர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்ற 4 சிறுமிகளுக்கும் தாய்க்கும் நடந்த விபரீதம்!!

கும்மிடிப்பூண்டி..

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர்.

சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நீரில் மூழ்கி சிறுமிகள் தத்தளிக்கவே, காப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் ஆழத்தில் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் சடலங்களாக மீட்டனர்.

திட்டிய புதுமனைவி : யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்!!

திட்டிய புதுமனைவி..

புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ்.

இவர் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோக நிர்வாகியாக பணியாற்றி வந்தார் .அவர் சமீபத்தில் வகாட் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு வருமாணம் போதவில்லை.

இதனால் அவரின் புது மனைவி அவரை திட்டிக்கொண்டேயிருந்தார். அதனால் அவர் வீட்டுக்கு வீடு உணவு டெலிவரி செய்யும்போது பல பெண்களின் கழுத்திலிருந்த தங்க செயினை அறுத்துள்ளார்.

இதற்கிடையே கடந்த வாரம் வகாட் பகுதியில் ​​போலீஸ் கான்ஸ்டபிள்கள் நிதின் செங்ஜே மற்றும் விஜய் காம்பயர் ஆகியோர் ஸ்கூட்டரில் யாதவ் சுற்றி வருவதைக் கவனித்தனர். எனவே அவரை அந்த போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது போலீசார் யாதவிடம் நடத்திய விசாரணையின் போது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் புனேவில் ஏழு இடங்களில் இருந்து121 கிராம் தங்கச் சங்கிலிகளைப் பறித்ததாக போலீசாரிடம் கூறினார்.

சங்கிலி பறிப்பதைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் ஒரு யூ-டியூபில் பல சங்கிலி பறிக்கும் வீடியோக்களைப் பார்த்து இதை கற்றுக்கொண்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர் : எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அக்கா தங்கை இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் கிடைத்துள்ளது.

அதன் பின், சகோதரிகள் இருவரையும், செந்தில்குமார் தன்னுடைய மயக்கும் பேச்சால், அவர்களை மயக்கி இருவரிடமும் அடிக்கடி ஒன்றாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு திடீரென்று செந்தில்குமார், நாம் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டாமல் இருக்க வேண்டும் என்றால், பணம், நகை வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், அவர்களும், பல்வேறு கட்டங்களாக 40 சவரன் நகை, 25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பின்னும் தொடர்ந்து பணம் கேட்டு செந்தில்குமார் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சகோதரிகள், இது குறித்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பொலிசார் செந்தில்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 2014 ம் ஆண்டு இணையதள சாட்டிங் மூலம் திருப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் சாட்டிங் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். கோவையில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதுடன் ஒன்றாகவும் இருந்துள்ளனர்.

அதனை செந்தில்குமார் இளம் பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. கணவர் வீட்டிற்கு சென்றதால் செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

ஒரு நாள் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது தனது தங்கையின் செல்போனில் இருந்து செந்தில் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் இளம்பெண்ணின் தங்கையுடனும் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவரையும் வெளியிடங்களுக்கு அழைத்து ஒன்றாக இருந்ததுடன் அதனையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அதன் பின் அவருக்கும் திருமணம் நடை பெற்றது.

இந்தநிலையில் சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர்களது கணவன்கள், 2 பேரிடமும் விசாரித்த போது செந்தில்குமாருடன் பேசி வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் 2 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் சகோதரிகளை தொடர்பு கொண்டு பேசி, உங்களது ஆபாச புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு தேவையான பணத்தை தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளான். அவர்களை நம்ப வைக்க ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார்.

தான் பேசுவது தெரியாமல் இருக்க மாற்றுக்குரலில் பேசியுள்ளார். இது குறித்து சகோதரிகள் 2 பேரும் செந்தில்குமாரிடம் கூறவே அவர் திருப்பூருக்கு புறப்பட்டு வந்ததுடன், நகை, பணத்தை கொடுங்கள்.

அதனை மிரட்டிய நபரிடம் கொண்டு சென்று கொடுத்து ஆபாச படங்களை அழிக்குமாறு கூறி விட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சகோதரிகள் 2 பேரும் தங்களிடம் இருந்த 40 பவுன் நகை மற்றும் 25ஆயிரம் பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். இப்படி பலமுறை சகோதரிகள் இருவரிடமும் மாற்றுக்குரலில் பேசி மிரட்டி நகை, பணத்தை பெற்றுள்ளார்.

பல முறை வீட்டிற்கு வந்து நகை,பணத்தை வாங்கி சென்றதால் அவர் மீது சகோதரிகள் 2 பேருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகே செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் மாற்றுக்குரலில் பேசி தங்களிடம் நகைபணம் பறித்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது இருக்கும் பெண்கள் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.