திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் இளைஞன் தூ.க்கு போ.ட்டு த.ற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி.

இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உண்டு. இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் ஜெயசிங் தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்தார்.

இதன் காரணமாக ம.து கு.டி.த்.து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். மேலும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜெயசிங் தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவர் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு ஜெயசிங் தூ.க்கில் பி.ணமாக தொ.ங்கிக்கொண்டு இருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் விரைந்து வந்து ஜெயசிங் உ.டலை கை.ப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினார்கள். அப்போது திருமண ஏக்கத்தில் ஜெயசிங் த.ற்கொலை செய்து கொண்ட அ.திர்ச்சி விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் குறித்து மேலும் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.

26 வயதில் பலரை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ள மனைவி : அதிர்ச்சியில் கணவன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மூன்று ஆண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது மதிக்கத்தக்க சுஹாசினி என்ற பெண்ணுக்கும், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, அப்போது சுஹாசினி தான் ஒரு அனாதை என்று அவரிடம் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய சுனில், தன் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு சுஹாசினியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர், சுனிலிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியிருந்த சுஹாசினி, திருமணத்திற்கு பின் தன்னை வளர்த்த தாய்மாமன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரை பார்த்து விட்டு வருவதாகவும், மருத்துவ செலவிற்கு ஏதேனும் பணம் தேவைப்படும் என்பதால், ஒரு இரண்டு லட்சம் ரூபாய் தரும்படி சுனில் தந்தையிடம் கேட்டு வாங்கியுள்ளார்.

அதன் பின் இந்த பணம் வாங்கிய விவகாரம் சுனிலுக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சுனில் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாமல் திணறிய சுஹாசினி, ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் உடனடியாக சுஹாசினியின் ஆதார் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது, சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில், தான் ஏமாற்றப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து விசாரித்த போது, இந்த சுஹாசினி வினய் என்பவரை திருமணம் செய்து கொண்டு பண மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்கு ஒரு பதிவாகியிருப்பது தெரியவர, சுனில் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவரை ஒரு மாதமாக பொலிசார் தேடி வந்த நிலையில், திருப்பதி சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த போது, அவர் பொலிசாரிடம் பிடிபட்டார்.

அவரிடம், நடத்தப்பட்ட முதறகட்ட விசாரணையில் திருமணம் செய்து கொண்ட மூன்று பேரையும், இவர் ஒரே பாணியில் தான் ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், பல உண்மைகள் தெரியவரும்.

சிறுமியை விற்பனை செய்த இணையத்தள உரிமையாளரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம்!!

சிறுமி விற்பனை..

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்கு விளம்பரம் செய்வதற்காக இணையத்தளம் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தேக நபர்கள் 11 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த சந்தேக நபர்கள் 11 பேரிடம் இருந்த 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி கணக்குள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்தமை தொடர்பில் விளம்பரம் வெளியிட்ட இணைத்தளத்தின் உரிமையாளர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த ரணசிங்க ஆராச்சிகே துமிந்த சம்பத் பெரேரா மற்றும் அந்த இணையத்தளத்தின் நிதி முகாமையாளரான பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த மாகேவெலகெதர தனுக என்பவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த சம்பத் என்ற சந்தேக நபரின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் பணத்திற்கு மேலதிகமாக 12199 அமெரிக்க டொலர் நிலையான வைப்பில் இருந்ததாகவும் அந்த பணமும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளளனர்.

தொடர்ந்தும் நாட்டில் எச்சரிக்கை நிலை : செப்டெம்பரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!!

பயணக்கட்டுப்பாடுகள்..

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனினும், தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் நாட்டில் 70 வீதமான பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதுடன்,

செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும் என கோவிட் தடுப்பு செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறிச் செயற்பட்ட 900 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 413 வாகனங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 900 இவ்வாறு எச்சரிக்கப்பட்டதாக,

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் 14 நுழைவாயில்களில் சோதனை சாவடிகள் அமைத்து பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடையை மீறி எவரும் செயற்பட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..

கோவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் நாட்டிற்குள் வந்த பின் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை எனில் இலங்கையின் எந்த பாகத்திற்கும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் அவர்கள் மீண்டும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்பதற்கான ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் முக்கிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ள வைத்தியர்கள்!!

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் தனி எலும்பு முறிவு பிரிவு இல்லாத போதும், பல வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்ற நிலையிலும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையால் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சந்தருவன் பண்டார ஹெராத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ். போதனா வைத்தியசாலை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாவட்ட பொது மருத்துவமனையாக இருப்பதும் மற்றும் முழு முல்லைத்தீவு மாவட்டத்திற்குமான கவனிப்பை வழங்குவதுமான இவ் வைத்தியசாலையில் ஒரு நிலையான எலும்பு முறிவு சிகிச்சையை தொடர்சியாக வழங்க வேண்டும் என்றும்,

தற்போது வரை அது இல்லாதிருப்பது பெரும் குறைபாடாகும் எனவும் தெரிவிக்கும் வைத்தியசாலை நிர்வாகம் நாட்டில் இது வரை நிரந்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத ஒரேயொரு மாவட்ட வைத்தியசாலை முல்லைத்தீவு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ். நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் பலி : மூவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

குருநாகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாவூர்தியொன்றின் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுளள நிலையில் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை சம்பவத்தில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த நிலாந்த கோசல (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இணையவழிக் கல்வி : சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள்!!

இணையவழி கல்வி..

இலங்கையில் இணையவழியில் கல்வி பயில்வது மாணவர்களுக்குச் சவாலான ஒன்றாகக் காணப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட இடங்களிலும் இணையவழி கல்விக்கான வலையமைப்பு வசதியின்மை காரணமாக மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து கல்வி பயிலவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறான இடங்களில் மாணவர்கள் பல மையில் தூரம் சென்றும், மரங்களின் மேலும், மலைகளின் மேலும் சென்று கல்வி கற்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் சந்திப்பு!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரின் அலுவலத்தில் இன்று (15.07.2021) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றது.

நாட்டிலுள்ள பல மாவட்ட மக்களுக்கு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் 60வயதுக்கு மேற்ப்பட்ட 1000 நபர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதுடன் சுகாதாரப் பிரிவினர், அஞ்சல் சேவை, பாதுகாப்பு பிரிவினர், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகளை தவிர மேலதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவில்லை என்பதனை அமைச்சருக்கு சுட்டிக்காட்டிய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்,

திருகோணமலை மாவட்டத்தில் டெல்டா நோய் தாக்கம் காணப்படுவதுடன் அவற்றின் தாக்கத்தினை வவுனியா மாவட்ட மக்களும் எதிர்நோக்க நேரிடலாம் எனவே மக்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுத்தருமாறு கோரிக்கையும் விடுத்தார்.

கலந்துரையாடல் இடம்பெற்ற நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார பிரிவினருடன் தொலைபேசியூடாக தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடினார்.

அடுத்த இரு வாரங்களுக்குள் வவுனியா மாவட்த்திற்கு முதற்கட்டமாக தடுப்பூசிகளை வழங்குவதாக சுகாதார பிரிவினர் அமைச்சருக்கு வாக்குறுதி அளித்தனர்.

வவுனியா ஊடாக வெளி மாகாணத்திற்கு பயணித்த மூன்று பேரூந்துகள் : கொழும்பு சென்ற இரு பேரூந்துகளுக்கு அனுமதி மறுப்பு!!

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில்கள் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் சேவைகளை முன்னெடுத்திருந்தன.

எனினும் வவுனியா ஊடாக வெளி மாகாணங்களுக்கு மூன்று பேரூந்துகள் சென்றதுடன் கொழும்பு சென்ற இரு பேரூந்துகள் ஈரப்பெரியகுளம் இராணுவச்சாவடியில் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகள் இன்று காலை வவுனியா ஊடாக கண்டி மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு சென்றடைந்திருந்துடன், முல்லைத்தீவிலிருந்து கற்பிட்டி நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் சென்றடைந்திருந்தது.

எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக இரு பேருந்துகள் ஈரட்டைபெரியகுளம் இராணுவ சாவடியில் வழிமறிக்கப்பட்டு குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளிடம் வெளிமாகாணத்திற்கு செல்வதற்காக காரணத்தினை இராணுவத்தினர் கோரியுள்ளனர்.

குறித்த பயணிகள் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்தத் தவறியுள்ளமையினையடுத்து கொழும்பு நோக்கி பயணித்த இரு பேரூந்துகளும் ஈரட்டைபெரியகுளம் இராணுவ சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பேரூந்துகளில் பயணித்த பயணிகள் அவர்கள் பிரயாணத்தினை ஆரம்பித்த இடத்திலியே இறக்கி விடப்பட்டனர்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வென்னப்புவ சாலை போரூந்து கொழும்பிலிருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் இரானுவ சாவடியூடாக இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த போதிலும்,

குறித்த பேரூந்து மீண்டும் பயணிகளுடன் கொழும்பு செல்ல ஈரட்டைபெரியகுளம் இராணுவத்தினரினால் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அப் பேரூந்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலையில் தரித்து நிற்கின்றது.

வவுனியா பல்கலைக்கழகம் அடுத்த 3 வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காகவும் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும்!!

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காகவும் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும் என அதன் பீடாதிபதி கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பீடாதிபதியாக இன்று (14.07) பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்பட்டு வந்த இப் பல்கலைக்கழகம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகமாக செயற்படவுள்ளது.

அதற்கான அனுமதியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள். அத்துடன் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பீடாதிபதியாக என்னை ஜனாதிபதி நியமித்துள்ளார். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இப்பதவிக்கு நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கும் நன்றிகள்.

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழமாக உயர்வதற்கு கடினமாக பாடுபட்டேன். என்னுடைய இலக்கு எனது இந்த மூன்று வருட காலப்பகுதியில் வவுனியா பல்கலைக்கழகத்தை மேன்மேலும் தரம் உயர்த்துவதுடன், பிரதேச ரீதியான அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாரியளவிலான பங்களிப்பை வழங்குவோம்.

எமது பல்கலைக்கழகமானது ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது. 11 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வருகை தந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தும் வைக்கவுள்ளார் எனத் தெரிவித்தார்.

பெண்ணை வசியப்படுத்த நள்ளிரவில் மயானத்திற்கு சென்று எலும்புகளை எடுத்து இளைஞர் செய்த செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி. 30 வயது மதிக்கத்தக்க இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், முரளி அவ்வப்போது சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர் திசையில் பெண்கள் பேசினால், அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், ராங்கால் மூலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது.

அந்த பெண்ணிடம் மூன்று மாதங்களாக செல்போனில் பேசி வந்த நிலையில், இருவரும் நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்த முரளி, அவரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு அப்பெண் மறுத்துவிடவே, அந்தப் பெண்ணை வசியப்படுத்த திட்டமிட்டு, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி? என்று வீடியோ பார்த்து வந்துள்ளார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள எலும்புகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பொருட்களை எடுத்து சென்று, நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டின் முன் சூனிய பூஜை நடத்தி உள்ளான்.

காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இது குறித்து விசாரித்த போது, முரளி தான் அதை செய்தது என்பது தெரியவர,

உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை வைத்து முரளியை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

50 கோடிக்கு சொத்துக்கள் இருந்தும் பெண்கள் மீதான மோகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த நபருக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பல கோடிகள் சொத்துக்கள் வைத்திருந்த நபர் ஆசிரியைகளை வலையில் வீழ்த்த ரூ 10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த நிலையில் அதன் காரணமாக தற்போது ஒரு கொலைகாரனாக மாறியுள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அனிதா (40). இவர் தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த அனிதா வீட்டின் தரை தளத்தில் இருந்த அவரது அக்கா குடும்பத்தாரை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லியதோடு அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து அக்கா குடும்பத்தார் அனிதாவின் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது அறையின் கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.

அனிதாவின் உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தப்போது அனிதா முகத்தில் ரத்தக்காயங்களுடன் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் கதவை உடைத்து அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார் அனிதாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து அதில் பலமுறையும் சம்பவம் நடந்த நேரத்தில்,

கடைசியாகவும் பேசியிருந்த காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டை அரிசி ஆலையின் உரிமையாளரும் அரசு பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியருமான சுதாகர் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் பேராசிரியை அனிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது. உயிரிழந்த அனிதாவும், சுதாகரும் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றும் போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.

அனிதா தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணி மாறுதல் அடைந்த பின்னும், இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. அனிதா மட்டுமல்லாமல் மேலும் சில ஆசிரியைகளுடனும் சுதாகர் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சுதாகருக்கு சொந்தமாக அரிசி ஆலையும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வசதியும் இருந்தாலும்,

ஆசிரியைகளுடன் பழகி காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, சுதாகர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

வேறு சில ஆசிரியைகளிடம் சுதாகருக்கு இருந்த தொடர்பு குறித்து அறிந்த அனிதா, சுதாகரிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நீண்ட நாளாக தொடர்பில் உள்ள தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் சுதாகரை அனிதா வற்புறுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 9ஆம் திகதி அனிதாவுக்கும், சுதாகருக்கும் மீண்டும் இது தொடர்பாக சண்டை வந்தது. அதில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அனிதா சுதாகரிடம் தப்பிக்க எண்ணி தன் அறையினுள் சென்று உள் பக்கமாக பூட்டிக் கொண்டு தனது உறவினர்களை செல்போனில் உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கோடீஸ்வர ஆசிரியர் சுதாகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பல கோடிகளுடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்த சுதாகர் பெண்கள் மீதான தவறான சபலத்தால் தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

உன் தங்கையை கொலை செய்துவிட்டேன் : மச்சானுக்கு போன் போட்டு சொன்ன நபர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. புவவேஸ்வரி அடிக்கடி அவரது அக்கா கணவருடன் போனில் பேசி வந்துள்ளார்.

இதுபிடிக்காத நித்தியானந்தன், புவனேஸ்வரியை கண்டித்துள்ளார், இருந்தாலும் போனில் பேசுவதை தொடர்ந்துள்ளார். சம்பவதினத்தன்றும் போனில் பேசியுள்ளார், இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த நித்தியானந்தன், கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியுள்ளார். தொடர்ந்து புவனேஸ்வரியின் சகோதரனுக்கு போன் செய்து மச்சான் உன் தங்கச்சியை கொன்று விட்டேன் என போனில் கூறியுள்ளார்.

இதனையடுத்து நேராக கிண்டி காவல்நிலையம் வந்து நித்தியானந்தன் சரணடைந்தார். புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், நித்தியானந்தனும் புவனேஸ்வரியின் அண்ணனும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. நித்தியானந்தன் பெண் கேட்டு வந்ததால் தனது தங்கையை நண்பருக்கு திருமணம் செய்துவந்துள்ளதும், சந்தேகத்தால் தற்போது கொலையில் முடிந்ததும் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில் அவர் பெயர் அனிதா (32) என்பதும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனையில் அனிதா 6 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் அனிதாவின் ஆண் நண்பர் பிரபீஷ் மற்றும் அவரின் மற்றொரு காதலியான ரஜானி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பொலிசார் கூறுகையில், அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சில காலத்துக்கு முன்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அனிதாவுக்கு பிரபீஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கர்ப்பமான அனிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் தான் ரஜானி என்ற இன்னொரு பெண்ணை பிரபீஷ் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து கடந்த 9ஆம் திகதி ரஜானி வீட்டுக்கு வருமாறு அனிதாவிடம் பிரபீஷ் கூறியுள்ளார். அங்கு அனிதாவும், பிரபீஷும் ஒன்றாக இருந்த போது திடீரென பிரபீஷும், ரஜானியும் அனிதாவின் கழுத்தை நெரித்து சேர்ந்து கொன்றுள்ளார்.

பின்னர் அனிதாவை தூக்கி தண்ணீர் நிறைந்த உப்பங்கழியில் இருவரும் சேர்ந்து போட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் பிரபீஷுக்கு 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.