வவுனியாவில் 2 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மீன் சந்தைக்கு மேலும் நிதி ஒதுக்கீடு : சபையில் தீர்மானம்!!

குழுமாட்டு சந்தியில்..

வவுனியா குழுமாட்டு சந்தியில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் வவுனியா தெற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்ச ந்தைக்கு மேலும் பல ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கட்டிடம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் அமைந்துள்ளமையினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் கட்டப்பட்ட குறித்த மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்தினை அகற்றுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் விசேட சபை அமர்வு கூட்டப்பட்டது. இதன் போது மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்திற்கு மின்சாரம் மற்றும் இதர வேலைகளுக்களுக்காக மேலும் பல ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 நிமிடங்களே சபை அமர்வு இடம்பெற்றதுடன் பெருன்பான்மையுடன் நிதி ஒதுக்கீட்டுத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீன் சந்தை 20 லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டதுடன் இவற்றில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தவில்லை.

இதனையடுத்து கட்டடிடத்தின் ஏனைய வேலைகளான மின்சாரம் , நீர் வசதி ஆகியவற்றிக்காக நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமர்வில் நிதி ஒதுக்கிட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இவற்றிக்கான பணிகளை பிரதேச சபை ஊழியர்கள் மூலம் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன் இவற்றிக்கு எவ்வளவு நிதி மேலும் தேவைப்படும் என அமர்வில் ஒதுக்கிடு செய்யவில்லை என்பதுடன் குறித்த கொள்கை அடிப்படையில் தீர்மானமாவே கொண்டு வரப்பட்டுள்ளது.

இதர வேலைகளுக்கான செலவு விபரங்கள் இதுவரை மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான மதிப்பீட்டின் பின்னரே எவ்வளவு நிதி தேவை என கணக்கிட முடியும் என தெரிவித்தார்.

முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் தடை : அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

மக்காத பொலித்தீன்..

உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை மாத்திரம் விற்பனை செய்வதற்கு ஒருமாத நிவாரண காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை விற்பனை செய்வதற்காக ஒருமாத நிவாரண காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை செய்ய முடியுமாக இருப்பது மக்கும் லன்சீட் மாத்திரமாகும்.

அதேபோன்று தடைசெய்யப்படும் இவ்வாறான லன்சீட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றதா என தேடிப்பார்ப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்.

தடை உத்தரவை மீறி யாராவது அதனை உற்பத்திசெய்தல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாட்டில் நாளாந்தம் லன்சீட் பாவனை 12 மில்லியனில் இருந்து 15 மில்லியன் வரை அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதுடன் அதில் 99 வீதமானவை மீள் சுழற்சி செய்யப்படாது சுற்றுப்புற சூழலுக்கு கைவிடப்படுகின்றன.

அத்துடன் மக்கும் லன்சீட் தற்போது 10 தொழிற்சாலைகள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அந்த தொழிற்சாலைகள் மக்காத லன்சீட் உற்பத்திசெய்தால், அவர்களது அனுமதி பத்திரத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுப்போம்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்திருக்கும் நிறுவனங்களுக்கு மாத்திரமே மக்காத லன்சீட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

அதுவல்லாமல், மேலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன 8 வகையான உற்பத்திகளை தடைசெய்யும் பட்டியல் அடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு கைச்சாத்திட்டுள்ளேன் என்றார்.

இலங்கை முழுமையாக திறக்கப்படுவது தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு!!

இராணுவத் தளபதி..

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று பரவலின் தன்மையை பொறுத்த இது சாத்தியமாகும் என இன்று சிங்கள தொலைக்காட்சியில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு வெளிநாட்டு பயணிகளுக்காக நாட்டை திறக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தை திரும்பி அனுப்பிய அதிகாரிகள்!!

பேருந்தை திரும்பி அனுப்பிய அதிகாரிகள்…

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றி சென்றதன் காரணமாக குறித்த பேருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்த தவறியுள்ளனர். இதனால் குறித்த பேருந்து ஈரப்பெரியகுளத்தில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பம்!!

பரீட்சைகள்..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் NVQ Level 5/6 பரீட்சைகள் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட NVQ Level 5/6 பரீட்சைகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை (19.07.2021) ஆரம்பமாக உள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு வருகைதரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கல்லூரியின் அதிபரை அல்லது நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு!!

கலாநிதி த.மங்களேஸ்வரன்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் இன்று (14.07) காலை 8.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நிலையில்,

வவுனியா பூங்கா வீதியில் இருந்து மேளதாள வாத்தியத்துடன் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் பல்கலைகழகத்தின் நிர்வாகப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு பதிவாளர் முன்னிலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயம், கந்தசாமி ஆலயம், பிரதான பள்ளிவாசல், நகரப் பன்சலை ஆகியவற்றுக்கு சென்று மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்தையும், பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்’ எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ‘இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்’ என செயற்படவுள்ளதுடன்,

எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வருகை தந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

அடிக்கடி தொலைபேசியில் உரையாடிய மகள் : தாயால் பறிபோன உயிர்!!

தமிழகத்தில்..

காரமடை அருகே தலையில் கல்லை போட்டு மகளை படுகொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணுவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி நாகமணி (வயது 47). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் மகாலட்சுமி என்கிற நதியா (31). நடராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

நதியாவுக்கும் கோவையை அடுத்த தடாகத்தை சேர்ந்த சரவண குமாருக்கும் இடையே திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து அந்தப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

அவர் வீட்டில் இருந்தபோது குழந்தைகளை சரிவர கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நதியாவை மாமியார் கண்டித்து உள்ளார். இருந்தபோதிலும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நதியாவுக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் நான் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய அவர் அங்கிருந்து நதியாவை துரத்திவிட்டதாக தெரிகிறது.

இதனால் தாய் நாகமணி வீட்டிற்கு சென்ற நதியா, நடந்ததை கூறி அழுதார். பின்னர் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். அப்போதும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை. அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

ஏற்கனவே செல்போனில் பேசியதால்தான் மாமியார் துரத்தி விட்டார், இங்கு வந்தும் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறாயா என்று நாகமணி நதியாவை கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர் தனது தாயை தாக்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக நாகமணி அந்தப்பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர்கள் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி வைத்தனர். இதையடுத்து நாகமணி தனது வீட்டிற்கு சென்று நதியாவுடன் தங்கி இருந்தார்.

அப்போது இரவில் நதியா செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப் படுகிறது.

பின்னர் நள்ளிரவில் நதியா தூங்க சென்றார். ஆனால் நாக மணி தூங்காமல் மகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் பார்த்தபோது நதியா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்.

என்னை அடித்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா என்று எண்ணிய நாகமணி, ஆத்திரம் தாங்காமல் வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை எடுத்து அவர் தலையில் போட்டார்.

இதில் தலை நசுங்கி நதியா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே நாகமணி தனது சகோதரி மற்றும் உறவினர் வீட்டிற்கு சென்று மகளை கொன்று விட்டதாக தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நதியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகளை கொன்ற தாய் நாகமணியை கைது செய்தனர். பெற்ற மகளை தாயே தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குளத்தில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் : சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர் அடுத்துள்ள கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

இவரது மகன்கள் தினேஷ் குமார்(12) மற்றும் அவரது தம்பி அஸ்வின் குமார்(10) ஆகிய இருவரும், இன்று காலை அவர்களது விவசாய நிலத்தின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததை அடுத்து ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது குள்த்தின் கரையோரம் குழந்தைகள் இருவரும் இருவரது துணிகள் இருந்துள்ளது.

இதில் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் குளத்தில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது நீரில் தினேஷ் குமார் முதலில் சிக்கி உள்ளார். பின்னர் மேற்கொண்டு தேடும்போது அஸ்வின்குமார் என்பவரது உடலும் சிக்கி உள்ளது.

பின்னர் இது குறித்து அரகண்டநல்லூர் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்தப் போலிசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை க.டத்திய பாட்டி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

இந்தியாவில்..

பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.டத்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தே.டி வருகின்றனர். இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.டத்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான அளவில் நடைபெற்றுள்ளன.

ஆனால் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரை சேர்ந்த பாட்டி ஒருவர் தன்னுடைய மகள் வயிற்றுப் பேத்தியை மகன் வழி பேரனுக்கு திருமணம் முடிப்பதற்காக க.டத்திச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் க.டத்தப்பட்ட சி.றுமிக்கு வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சானூரை சேர்ந்த நந்தினி 14 வயது சி.றுமியின் பாட்டி வகுளம்மா. சி.றுமி நந்தினி வகுளம்மாவின் மகள் வழி பேத்தி ஆவார்.

வகுளம்மாவின் மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணாவிற்கு திருமணம் முடிப்பதற்காக 14 வயது சி.றுமி என்றும் பாராமல் தன்னுடைய சொந்த பேத்தியை வகுளம்மா நான்கு நாட்களுக்கு முன் ரகசியமாக க.டத்தி சென்றுவிட்டார்.

அப்போது முதல் அவருடைய மகன் ஆதிநாராயணன், மருமகள் லிங்கம்மா பேரன் முரளி கிருஷ்ணா ஆகியோரையும் கா.ணவில்லை.

இதுதொடர்பாக க.ட.த்தப்பட்ட சி.றுமியின் தாய் அளித்த பு.காரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வகுளம்மா க.ட.த்தப்பட்ட சி.றுமி நந்தினி, ஆதிநாராயணன், லிங்கம்மா, முரளி கிருஷ்ணன் ஆகியோரை தீ.விரமாக தே.டி வருகின்றனர்.

இறந்து கிடந்த மனைவி : பக்கத்திலேயே தூங்கிக்கொண்டிருந்த கணவன் : உறவினர்கள் கண்ட காட்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி உயிரிழந்து கிடக்க, பக்கத்திலேயே கணவன் படுத்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கரூரின் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ள நிலையில், மாலதி மாயனூரில் உள்ள தாய் தமிழரசியின் வீட்டில் மகன் ஆசித்துடன் வசித்து வந்தார்.

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தனசேகரன், அவ்வப்போது வந்து மனைவி, பிள்ளையை பார்த்து செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று தனசேகரன் வந்தபோது, கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தனசேகரன் போ.தை.யி.ல் இருந்ததாக தெரிகிறது, இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து ஆசித் அழுதுகொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மாலதி சடலமாக கிடந்துள்ளார், பக்கத்திலேயே தனசேகரன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த போலீசார், மாலதி உயிரிழந்த கிடந்த அறையில் உள்ள மின்விசிறியில் மாலதியின் துப்பாட்டா மாட்டியிருந்ததை பார்த்தனர்.

இதனால், மாலதி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும், அவரது உடல் தரையில் கிடந்தது எப்படி என சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, போதையில் இருந்த தனசேகரனை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு : நடந்தது என்ன? ஒரு எச்சரிக்கை செய்தி!!

நிவேதிதா..

இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கி வந்தார்.

அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், நிவேதிதா மூச்சு விட சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். வழியில் கண் திறந்து தனது தாயை பார்த்தார்.

பின்னர் அவளுடைய தாய் அவளிடம் கிண்டர் ஜாயை வாங்குவதாக சொன்னாள். அப்போது நிவேதிதா தலையாட்டினாள். அதற்குள் அவள் கண்ணை மூடி சரிந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். உயிரிழந்த நிவேதிதாவின் உடல் வீட்டு வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

இலங்கையில் 109வது பிறந்த நாளை கொண்டாட தயாராகும் 6 பிள்ளைகளின் தாய்!!

ஜோன் நோனா..

நுவரெலியா, கினிகத்தேன கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது 109 பிறந்த நாளை கொண்டாட தயாராகியுள்ளது.

1912ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்தில் பிறந்த ஜோன் நோனா என்ற பெண் தனது 16வது வயதில் திருமணம் செயதுள்ளார்.

கணவர் உயிரிழந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேன பிரதேசத்தில் குடியேறியுள்ளார். மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான அவரது மூத்த மகனுக்கு தற்போது 88 வயதாகின்றது.

இந்த நிலையில் இரண்டாவது மகனுக்கு 78 வயதாகின்றது. மூன்றாவது மகனுக்கு 75 வயதாகின்றது. நான்காவது மகளுக்கு 70 வயதும், ஐந்தாவது மகளுக்கு 67 வயதும் ஆறாவது மகளுக்கு 64 வயதாகின்றதென தெரியவந்துள்ளது.

தனது நான்காவது மகளுடன் வசித்து வரும் தாய்க்கு 109வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது 6 பிள்ளைகளையும் வளர்த்த தாயை 6 பிள்ளைகளும் தங்களால் முடிந்தளவு நன்றாக பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம் பெண் : அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த பரிதாபம்!!

சாதனா..

தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.

இவரது மகள் சாதனா வயது (20). 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக சாதனா தீபமங்கலம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு உள்ள உறவினர் இளையபாரதி கிரிஜா தம்பதியின் வீட்டில் தங்கிய போது 2 வயது குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடிய பின்னர் வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

பின்னர் அந்தக் குழந்தையின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் காணவில்லை என குழந்தையின் பெற்றோர், சாதனா தான் நகையை எடுத்து இருக்க வேண்டுமென கிராம மக்கள் முன்பாக அவரை சோதனை செய்துள்ளனர்.

இதனால் சாதனா அழுதுகொண்டு நான் நகையை எடுக்கவில்லை என கைகூப்பி மன்றாடினார் என கூறப்படுகிறது. மேலும் சாதனாவின் தந்தை செந்தில்குமாருக்கும் தொலைபேசி மூலம் உங்கள் மகள் நகையைத் திருடி விட்டதாக கோபத்துடன் பேசியுள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் முன்னிலையில் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்தி விட்டதால் அவமானம் தாங்க முடியாமல் அந்த இளம்பெண் சாதனா மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.

மாலை 5 மணி வரை தனது மகள் சாதனாவை காணவில்லை. அதனை அடுத்து தந்தை சாதனாவுக்கு தொலைபேசி மூலம் பேசியதில் நான் மணக்கால் அயம்பேட்டையில் தான் உள்ளேன் என கூறியதனை அடுத்து சாதனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தந்தை செந்தில் குமார்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சாதனா தொடர்ந்து வாந்தி எடுத்ததை அடுத்து பதறிப்போன பெற்றோர்கள் சாதனாவிடம் கேட்டபொழுது தான் எலி பேஸ்ட் உண்டு விட்டதாக பெற்றோர்களிடம் கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சாதனாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் ஒருவார கால சிகிச்சையில் இருந்த சாதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் சாதனாவின் உறவினர்களான இளையபாரதி (28) ஐயப்பன் (30) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான் கிராமத்தில் சிறுமி ஒருவருடன் நீண்ட நாட்களாகப் பழகிவந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த 5ஆம் திகதி குறித்த சிறுமி வீட்டில் தனிமையிலிருந்த சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்குத் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கிராமத்தின் சமூக அமைப்புக்களால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குறித்த இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஐயன்கன் குளம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்க டொலரின விலை..

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.89 ரூபாயாக பதிவாகியுள்ளது. நாட்டில் தற்போது வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகளின் பண பரிமாற்ற வீதம் அதிகமாக இருப்பதாகவும், அமெரிக்க டொலர்கள் கறுப்பு சந்தையில் மிக உயர்ந்த மட்டத்தில் வர்த்தகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நிதி சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இரண்டு முகக் கவசங்கள் அணிவது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

முகக் கவசங்கள்..

ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது பொறுத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முகக் கவசத்தை சரியான முறையில் அணிவது மாத்திரமே அவசியமாகும். தாம் அணிந்திருக்கும் முகக் கவசம் உரிய முறையில் முகத்துடன் இறுக்கமாக இல்லை என யாருக்காவது உணர்ந்தால் அவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் முகக் கவசத்திற்கு வெளியே ஒரு சாதாரண துணி முகக் கவசத்தை மாத்திரமே அணிய வேண்டும்.

ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளே ஒரு செர்ஜிகல் முகக் கவசம் வெளியே ஒரு N95 முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறையும் ஏற்கத்தக்கது அல்ல.

நாம் அணிந்திருக்கும் ஒரு முகக கவசம் முகத்தை மறைத்து நன்கு இறுக்கமாக உள்ளதா என்பதனையே உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இறுக்கமாக இல்லை என உணர்ந்தால் மாத்திரம் வெளியே ஒரு துணி முகக் கவசத்தை அணியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-