தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர் என்ற வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

இதேவேளை, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தால் நாட்டின் தங்கத் தொழில் சரிந்துவிட்டதாக, தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாம் கடுமையான சிக்கலில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தொழிலைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர். நாட்டில் இன்று ஒரு பவுண்டு தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூரை சேர்ந்த திறமையானவர்கள் இந்த தொழில்துறையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.

இதனால், தரமற்ற நகைகள் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தமிழ்வின்-

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு..

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வெளியிட்டதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் கணினி குற்றப்பிரிவு சந்தேகநபர்களை கடந்த வாரம் கைது செய்ததாக அவர் கூறியுள்ளார்.

வலைத்தளங்களின் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும் செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே, ராஜகிரிய, கண்டி, பிலியந்தலை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 23 முதல் 39 வயதிற்கு உட்பட்ட 4 பேர் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தண்டனைச் சட்டம் மற்றும் ஆபாச வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

இலங்கை தமிழ் மாணவன் கின்னஸ் சாதனை!!

திவ்வியேஷ்..

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் மாணவன் யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் ரஞ்சன்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்களின் மகன் திவ்வியேஷ்(16), கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண் க்ருடாஸ் ருசியானாவின் கின்னஸ் சாதனையான டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒருநிமிடத்தில் 24 பலூன்களை உடைத்ததை முறியடிப்பதற்காக திவ்வியேஷ் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

அந்த பயிற்சியின் விளைவாக, சமீபத்தில் திவ்வியேஷ் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார். கின்னஸ் சாதனை படைத்த திவ்வியேஷ் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த சந்தியா ஆகியோரை, இலங்கை தமிழர் அகதிகள் முகாம் மக்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

இலங்கையில் பலரை வியப்பில் ஆழ்த்திய பெண்மணி : 94 வயதில் செய்த சாதனை!!

94 வயதில்..

இலங்கையில் நடந்த பாலி மொழி பரீட்சையில் 94 வயதுடைய மூதாட்டி ஒருவர் சித்தியைடைந்துள்ளார்.

94 வயதுடைய எஸ்லின் லீலாவத்தி தர்மரத்ன என்ற 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இந்த பரீட்சையில் உயர் சித்தி பெற்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிய அவர் ஆரம்பம், மத்திய மற்றும் இறுதி ஆகிய மூன்று பிரிவு உயர் சித்தி பெற்றுள்ளார்.

மேலும் அவர் தற்போது பட்டம் பெறுவதற்கும் தயாராகியுள்ளார் என தெரிவந்துள்ளது. 4 பெண் பிள்ளைகளின் தாயான அவர் 94 வயதிலும் மூக்கு கண்ணாடி எதுவும் அணியாமல் பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார்.

திருமணமாகி 7 வருடங்களில் கணவர் உயிரிழந்துள்ளார். எனினும் தனி பெண்ணான நின்று தனது 4 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார். நான்கு பேரும் பட்டதாரிகளாக்கும் வரை அவர் போராடியுள்ளார்.

குறித்த பெண்மனியின் மூத்த மகள் மேல் மாகாண சுகாதார பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இரண்டாவது மகள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் போராசிரியராக செயற்பட்டு வருகின்றார்.

மூன்றாவது மகன் போராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாவலப்பிட்டிய பாடசாலை ஒன்றில் பேராசிரியராக செயற்பட்டு வருகின்றார். நான்காவது மகள் பதில் நீதவானாக செயற்பட்டு வருகிறார்.

பரீட்சை முடிவுகள் வருவதற்கு முன்னரே தான் சித்தியடைந்ததனை அறிந்திருந்த தாய் பட்டம் பெறுவதற்கான ஏனைய கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என மூன்றாவது மகள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அதிக வயதில் உத்தியோகபூர்வ பரீட்சை எழுதிய நபர்களில் முதல் 10 பேருக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பேரூந்து, புகையிரத சேவைகள்!!

பேரூந்து, புகையிரத சேவைகள்..

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளை தடையின்றி நடத்தி செல்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அந்த சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை நாளை முதல் செயற்படுத்தப்படும்.

வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில்கள் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும். அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 10ஆம் திகதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக த.மங்களேஸ்வரன் நியமனம்!!

த.மங்களேஸ்வரன்..

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்’ எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ‘இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்’ எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசிகள்!!

தடுப்பூசிகள்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (13.07.2021) காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணிவரையில் அஞ்சலகம் (தபால் சேவை) சார்ந்தவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள தபால் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தபால் வழங்குனர்கள் என அனைவருக்கும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

துயர்பகிர்வு : திரு.குமாரசாமி பேரின்பநாதன்!!

திரு.குமாரசாமி பேரின்பநாதன்(சிறி)
மண்ணில் : 1959.07.14 || விண்ணில் :2021.07.06

வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் பெரியதம்பனை, வவுனியா கூமாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.குமாரசாமி பேரின்பநாதன் அவர்கள் 06.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னத்தங்கம், நாகம்மா தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் மருமகனும், யசிந்தா (அமுதா – ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், அன்ரன் தனுராஜ், தனுஷா,டேனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமானந்தம், காலஞ்சென்ற புஷ்பராணி, காலஞ்சென்ற பரமநாதன், பத்மராணி, கமலராணி, மங்களேஸ்வரன், கேதீஸ்வரன் (பிரான்ஸ்), வரதராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மரிஸ்ரெலா (லண்டன்), மரியகொன்செப்ரா, அன்ரன் ஜெயமலர், காலஞ்சென்ற தோமஸ் வில்லநோவா, ஜோர்ஜ் அல்வீனஸ் (பிரான்ஸ்) தனலக்சுமி, ராசினி, கனகரட்ணம், கேதீஸ்வரன், பேரின்பராணி, கீர்த்தனா (பிரான்ஸ்),கேசவராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.
0769613811

 

செல்பி மோகத்தால் புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!

நீரில் முழ்கி…

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், ‘செல்பி’ மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா – தமிழக எல்லையில் உள்ள தடா நீர்வீழ்ச்சி சுற்றுலா தளத்திற்கு சென்றனர்.

வழியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (17), பாலாஜி (24), யுவராஜ் (22) ஆகியோரை அழைத்துச் சென்றனர். கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலா தளம் மூடப்பட்டிருந்தது.

அதனால் அருகில் இருந்த தெலுங்கு கங்கா கால்வாயில் சற்று நேரம் ஓய்வெடுக்கச் சென்றனர். அப்போது யுவராஜ், செல்பி எடுக்கும்போது கால் தவறி கால்வாயில் விழுந்தார்.

இதை கவனித்த நண்பர்கள் மூன்று பேரும், யுவராஜை காப்பாற்ற நீரில் குதித்தனர். ஆனால் நீரோட்டத்தில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின், தற்போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து, பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து ம.ரணம் : வெளியான அ.திர்ச்சித் தகவல்!!

இந்தியா..

இந்தியாவில் மின்சாரம் தா.க்.கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து ம.ரணம் அ.டைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்‌ஷ்மண் அஹிர்வார்.

இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது தொட்டிக்குள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் மின்சார லைட்டை பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் திடீரென அஹிர்வாரை மி.ன்சாரம் தா.க்.கி.யுள்ளது, இதை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் அஹிர்வாரை கா.ப்.பா.ற்.ற மு.யற்சித்துள்ளனர்.

இதில் ஒருவர் பின் ஒருவரான மி.ன்சாரம் தா.க்.கி 6 பேர் உ.யி.ரிழந்துள்ளனர், இச்சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடை மாற்ற போவதாக அண்ணனை வெளியேற்றிய 12 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

ஜெயந்தி..

சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட தகராறினால் மகன் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். வெங்கம்மா வேலைக்கு சென்ற நிலையில் ஜெயந்தியும் அவரது அண்ணனும் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது உடை மாற்றவேண்டும் என்பதற்காக அண்ணனை வெளியே போக கூறிவிட்டு, சிறுமி ஜெயந்தி மின்விசிறியில் தற்கொலை செய்துள்ளார்.

வெகுநேரம் ஆகியும் தங்கை வெளியே வராததால் பதற்றமடைந்த சிறுவன், அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதவை உடைத்துள்ளனர். அப்போது சிறுமியின் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

பின்பு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் உடல் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் விசாரணையில், சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பூப்படைந்ததாகவும், மாதவிடாய் வலி தாங்கமுடியாமல் இவ்வாறான முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வவுனியாவில் இவ் வாரம் 30 வயதுக்கு மேற்பட்ட 45000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை!!

தடுப்பூசிகள்..

வவுனியா மாவட்டத்தில் கடந்த வாரம் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. அதன் இரண்டாம் கட்டமாக சில தினங்களில் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 45,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வைத்தியர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி இரானுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கேமந்த பண்டார முயற்சியினால் வவுனியா சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் 45,000ற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வவுனியா மாவட்டத்திற்கு எடுத்து வருவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் முதன்மை அடிப்படையில் மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் மற்றும் திகதிகள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மனைவி கூறிய ஒரு வார்த்தையால் திருமணமான ஒன்றரை மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன்.

இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மடியாடா என்ற கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23-ந் திகதி கோத்தகிரியில் வைத்து திருமணம் நடந்தது.

பின்னர் இருவரும் கோவைக்கு வந்து குடும்பம் நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஆர்த்தி, எனக்கு பெற்றோர் நினைவாகவே இருக்கு, அவர்களை பார்க்க வேண்டும் போல உள்ளது, எனவே தன்னை கோத்த கிரிக்கு அழைத்து செல்லுமாறு கணவரிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து ரஞ்சித்குமார் தனது மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் நான் இங்கு ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன் என்று ஆர்த்தி கூறியதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து அவர் தனது மனைவியை அங்கு விட்டுவிட்டு கோவை திரும்பினார். பின்னர் ஆர்த்தி தனது கணவருக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார்.

அதன்படி ரஞ்சித்குமார் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் தனது மனைவியிடம் கோவைக்கு செல்லலாம் என்று கூறி உள்ளார். அதற்கு ஆர்த்தி, தனது பெற்றோரை விட்டு பிரிந்து வர விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார்.

அந்த வார்த்தையை கேட்டு மனமுடைந்த ரஞ்சித்குமார் விஷம் வாங்கி குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் குடும்பமாக சேர்ந்து செய்த கொலை : கொ.டூரமாக கொ.ல்லப்பட்ட மகன்!!

கண்டியில்..

கண்டியில் இளைஞன் ஒருவரை குடும்பமாக சேர்ந்த தா.க்கி கொ.லை செ.ய்தமை பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மினிபோ, ஹசலக, அத்தேஎல பகுதியில் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் இணைந்து கொ.டூரமாக தா.க்கியதில் இளைஞன் உ.யிரிழந்துள்ளார்.

28 வயதான சுனில் நிஷங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உ.யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 08ஆம் திகதி உ.யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இறந்தவரின் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை வி.ளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று(12.07.2021) மதியம் இந்த கொடூர சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் தலைமறைவாகி உள்ளார்.

இருவரும் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண் மீண்டும் பெற்றோரிடமே சென்று விட்டார். அண்மைய காலமாக அவர் பெற்றோருடனேயே வாழ்ந்து வருகிறார்.

விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்துள்ளார். புலோலியை சேர்ந்த அந்த ஆண், கமநல சேவைகள் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவர் ஏற்கனவே சிலரை வாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மதியம் அந்த பெண், மத்தொனியிலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளுடன் வெளியில் வந்துள்ளார். அப்போது, தனது கணவன் அங்கு வருவதை அவதானித்து, ஏதோ விபரீதம் நடக்கப் போவதை ஊகித்து, வேகமாக சென்றுள்ளார். ம.து.போ.தை.யி.ல் வந்த கணவன் அவரை விரட்டியுள்ளார்.

நடு வீதியால் மனைவியை விரட்டிச் சென்று, சட்டையை எட்டிப்பிடிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். வீதியில் விழுந்த பெண்ணை வாளால் வெட்டியுள்ளார்.

ஒரு வெட்டு மாத்திரமே அந்த பெண்ணில் விழுந்தது. அதற்குள் அந்த பகுதியில் நின்றவர்கள் துரிதமாக செயற்பட்டு, வாள்வெட்டு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணிற்கு இடுப்பில் வாள் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னரும் அந்த நபர், தாக்குதல் நடந்த இடத்திற்கு வாளுடன் இரண்டு முறை வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்ற போதும், அவர் வீட்டிலிருக்கவில்லை. அவரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

A9 வீதியில் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வானுடன் மோதிய கனரக வாகனம்!!

விபத்து..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் மீது கனரக வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு வேளையில் முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வான் முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியூடாக பயணித்த கனரக வாகனமொன்று வானுடன் மோதியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது வானில் சிலர் இருந்துள்ள போதும் அவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த விபத்து சம்பம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.