எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி போடப்படும், மேலும் இந்த திட்டம் நாளை நிறைவடையும். நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இருவருக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் அவ்வப்போது மழையுடன் கூடிய காலநிலையானது தொடர்கின்றது.
இதனால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காரணமாக டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது. அந்தவகையில், வவுனியாவின் திருநாவற்குளம் மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் இருந்து இரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போதைய கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெங்கு நோய் தாக்கமும் ஏற்பட்டுள்ளதால், நுளம்புகள் பெருகாத வண்ணம் பொதுமக்கள் தமது இடங்களை சுத்தமாக வைத்திருந்து நோய் தொற்றில் இருந்து தம்மையும், அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இலங்கை மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் இருப்பதாக வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை விரும்பும் எதிர்கால தலைமுறையினர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணியகத்தின் பாடசாலை மாணவர்களின் சுகாதார பிரிவில் செயற்படும் சமூக வைத்தியர் அயேஷா லொக்குபாலசூரிய தெரிவித்துள்ளார்.
இணையம் ஊடாக கற்கை நடவடிக்கைகளின் பின்னரும் பிள்ளைகள் நீண்ட நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் 18 வயதிற்கு குறைவான பிள்ளைகள், மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்கு வரும் அளவு 20 வீதத்தில் அதிகரித்துள்ளதாக ராகம குழந்தை மருத்துவம் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் மியுரு சந்திரதாஸ தெரிவித்துள்ளார். சிறுவர்களிடையே கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குமுடிபூண்டியிலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் வசித்துவருகின்ற தமிழ் மாணவன் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறு சாதனை படைத்தவர் பதினாறு வயதான ரஞ்சன் திவேஸ் என்ற மாணவனாவார்.
உக்கிரனைச் சேர்ந்த இளம்பெண் குருடாஸ் ருசியான என்பவர் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
இதனை முறியடித்துக் குறித்த சிறுவன் ஒரு நிமிடத்தில் பின்புறமாக பலூன்களை உடைத்து சாதனைப்படைத்துள்ளார். ஐந்து வருட யோகா பயிற்சியின் விளைவாக இவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டனவற்றில் முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும், சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அவ்வாறு அணியத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டை மீண்டும் திறப்பது பொருளாதாரத்தின் முக்கிய படியாகும்.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் தற்போதைய தொற்று நோயின் நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகுமொன சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே எச்சரித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் நேற்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2021) திங்கட்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தலையில் க.ல்லைப் போட்டு கொ.ல்லும் மு.யற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் கு.ழந்தை உ.யிரிழந்ததாகக் கூறப்படும் ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது. சிறுவளையம் கிராமத்தில் கனிமொழி என்ற அந்த கர்ப்பிணிப் பெண் ஒன்றரை வயது மகன் கபிலேஷுடன் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
11 மணிக்கு திடீரென கு.ழந்தை வீ.றிட்டு அழும் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, பின்னந் த.லையில் அ.டிப்பட்டு ர.த்தம் வெளியேறியவாறு இருந்திருக்கிறது.
உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கு.ழந்தை சிகிச்சைப் பலனின்றி உ.யிரிழந்தது. கு.ழந்தை அ.டிபட்டுக் கி.டந்த இடத்தில் பெரிய கல் ஒன்று இருந்துள்ளது.
கனிமொழிக்கும் அவரது அக்காள் கணவர் பிரதாப்புக்கும் குடும்பப் பி.ரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், இரவு போ.தை.யி.ல் கனிமொழியைக் கொ.ல்.ல க.ல்லைத் தூ.க்.கி வந்தபோது,
நிலைதடுமாறியதில் கீழே விழுந்த கல், கு.ழந்தையின் த.லை.யி.ல் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதாபை கைது செய்து பொலிஸார் வி.சாரித்து வருகின்றனர்.
நாங்குநேரியில் கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொ.லை செய்து விட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டிய மனைவி அ.திரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், டா.ஸ்மாக் ம.து.பா.ன க.டையில் பா.ர் ஊழியராக பணியாற்றி வந்த முத்துகுமார்-சுமித்ரா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ம.து ப.ழக்கம் உள்ள முத்துக்குமார் நேற்று காலை வீட்டு வாசலில் வி.ழுந்த நி.லையில் இ.றந்து கி.டந்துள்ளார்.
மு.கத்தில் லே.சான கா.யம் இருந்ததால் த.வறி வி.ழுந்ததில் அ.டிபட்டு இ.றந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவரது மைத்துனர் ராஜேஷ், முத்துக்குமாரின் சா.வி.ல் ம.ர்மம் இருப்பதாக போலீசில் பு.கார் அளித்தார்.
பி.ரேத ப.ரிசோதனை அறிக்கையில் முத்துக்குமாரின் க.ழுத்து நெ.ரி.க்கப்பட்டிருப்பதற்கான அ.டையாளங்கள் இருந்தது தெரியவந்ததால் போலீசார் வி.சாரணையை தீ.விரப்படுத்தினர். இரவு வீட்டில் தூ.ங்கியவர் மறுநாள் காலை வீட்டு வாசலிலேயே இ.றந்து கி.டந்ததால், மனைவியிடமிருந்து வி.சாரணையை தொ.டங்கியுள்ளனர்.
சுமித்ரா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், வி.சாரணையை தீ.விரப்படுத்திய போலீசாருக்கு, அவர்கள் ச.ந்தேகித்தபடியே, திருமணத்திற்கு முந்தைய காதலன் சுந்தர் என்ற கேரக்டர் கதையில் அறிமுகமாகியுள்ளது.
இதையடுத்து முத்துக்குமாரை தீ.ர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்து, நள்ளிரவு தூங்கிக் கண்டிருந்த முத்துக்குமாரின் முகத்தில் சுமித்ரா த.லையணையை வை.த்து அ.ழுத்த, சுந்தர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.துள்ளான். பின்னர் முத்துக்குமார் போ.தை.யி.ல் த.வறி வி.ழுந்து இ.றந்ததுபோல காட்ட, வாசல்படியில் உ.டலைப் போ.ட்டுள்ளனர்.
கொ.லையை அரங்கேற்றிவிட்டு, வழக்கமான சா.வு போல், குடும்பத்தார் பெயரில் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சுமித்ராவும், சுந்தரும் கை.து செய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கணவன் வாங்கிய புதிய செல்போன் வாங்கிய நிலையில், மனைவி த.ற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவரான இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் உள்ள நிலையில், சூர்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனை அறிந்த சூர்யா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் கணவன் மனைவி இடையே த.கராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோ.பித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், கணவன் வீட்டிற்கு வந்த சூர்யா தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டார்.
அவரது வ.யிற்றில் இருந்த கு.ழந்தையும் இ.றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற, சூர்யாவின் பெற்றோர் இதில் எங்களுக்கு ச.ந்தேகம் இருப்பதாக பு.கார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் இது குறித்து வ.ழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலம்பரசன் சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ வி.சாரணைக்கு பொலிசார் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் புகுந்த வீ.ட்டில் தூ.க்கிட்ட நி.லையில் க.ண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இளம் பெண் ம.ரணமடைந்துள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் மனைவி 22 வயதான அனுஜா என்பவரே சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்தவர். கடந்த மாதம் 30ம் திகதி இரவு .படுக்கையறையில் தூ.க்கிட்ட நி.லையில் அனுஜா மீ.ட்கப்பட்டார்.
ஆ.பத்தான நி.லையில் மீ.ட்கப்பட்ட அவரை கொல்லம் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அனுஜா ம.ரணமடைந்துள்ளார். மாமியாரின் து.ன்புறுத்தலே தமது மகளின் த.ற்கொலை மு.யற்சிக்கு காரணம் என குறிப்பிட்டு, அனுஜாவின் தந்தை அனில்குமார் பொலிசாருக்கு பு.கா.ர் அளித்துள்ளார்.
சதீஷின் தாயார் சுனிஜாவுக்கு எ.திராக கு.டும்ப வ.ன்முறை, து.ன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து பொலிசார் வி.சாரணை மு.ன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சதீசுக்கும் அனுஜாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில நாட்களிலேயே சுனிஜா தம்மை து.ன்புறுத்த தொ.டங்கினார் என அனுஜா பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று அனுஜாவும் சதீஷும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அனுஜா படுக்கையறைக்குள் சென்றுள்ளார். பொதுவாக, வா.க்குவாதம் ஏற்பட்ட நாட்களில் அவர் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதில்லை என்பதால் யாரும் கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், இரவு பலமுறை முயன்றும் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தூ.க்கிட்ட நி.லையில் அனுஜாவை க.ண்டுள்ளனர். இதனையடுத்து, க.தவை உ.டைத்து உள்ளே சென்ற சதீஷ், மனைவியை மீ.ட்டு ம.ருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரையின் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49), இவரது மனைவி ராணி(வயது 45). இவர்களுக்கு சுபாஷ்(22), பிரதீப்(20) என்ற 2 மகன்கள். ஒரு மகளும் உள்ளார்.
இதில் பிரதீப்புக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணமாய் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் படுஜோராக நடந்து வந்த நிலையில், நேற்று மாலை பிரதீப் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கவேண்டும் எனக்கூறி, பணம் கேட்டு தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் இளங்கோவன் பணம் தர முடியாது என மறுத்ததுடன், நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்கிறாயே என திட்டியுள்ளார்.
அதற்கு, பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று பிரதீப் கூறி வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்தாராம். இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீப் அங்கிருந்த கோடரியை எடுத்து இளங்கோவனை வெட்ட முயன்றார். அதை இளங்கோவன் பறித்து திருப்பி தாக்க முயன்றதாகவும், அப்போது பிரதீப் கழுத்தில் கோடரி வெட்டியதாகவும் தெரியவருகிறது.
இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரதீப்பை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குபதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், இளங்கோவனை கைது செய்தனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட செல்வதற்கு உறவினர்கள் ஒருவர் மாத்திரம் பார்வையிட தக்கமுறையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று கடுமையாக உள்ள காலத்தில் நோயாளிகள், பார்வையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரதும் நலன், பாதுகாப்பு கருதி இந் நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்வதுடன், நோயாளர்கள் மருத்துவ ஆலோசனை தேவைப்படுமிடத்து தவறாது எவ்வித அச்சமுமின்றி வைத்தியசாலையை அணுகமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத் தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்ப்பது அவர்கள் நலனிற்கு உகந்த செயலாகும்.
எமது மக்கள் பெருமளவில் தடுப்பூசிகளை பெற்று வவுனியா மாவட்டம் பாதுகாப்பானதாக உறுதிப்படுத்தப்படும் வரையில், வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட செல்வதற்கு ஒர் நேரத்தில் ஒர் உறவினர்கள் மாத்திரம் செல்வதற்கு மக்களின் பூரண ஆதரவை வைத்தியசாலை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அதிகளவான கொரோனா தடுப்பூசிகளை மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
வறுமையான சிங்கள குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்குவதற்கு வீடு ஒன்று இல்லாமல் சிரமப்பட்ட குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பத்தினர் வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான முழுமையான செலவை ஏற்றுள்ளனர்.
ரிப்கி மர்சுக் என்பவரும் அவரது குடும்பத்தினருமே இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளதாக புத்தியாகம தம்மசேன தேரர் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான விடயங்களை தெரிவித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “முஸ்லிம் மதத்தவரான ரிப்கி மரசுப் குடும்பத்தினரின் உதவியுடன் சிங்கள குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளது. கடவுளின் ஆசிர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இனவாத முரண்பாடுகள் காணப்பட்ட போதும் இவ்வாறான செயற்பாடுகள் அவற்றை இல்லாமல் செய்வதாக சிங்கள மக்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உதயசூரியன் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர்ப்பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாணவன்,
நேற்று(10) இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் செல்வதாகச் சென்ற மாணவனைக் காணவில்லை என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கிணற்றில் குளிக்கச் சென்று உடைகள் கிணற்றடியில் காணப்படுகின்றது கிணற்றடிக்குச் சென்று மாணவன் மீண்டும் வீட்டுக்கு வந்து சவர்க்காரம் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் உள்ளது. இந்நிலையில் மாணவனுக்கு என்ன நடந்தது என்று பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
குறித்த மாணவனைக் கண்டவர்கள் 0770871475 தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹபரன பிரதான வீதியில் சிறிய லொறியொன்றின் இயந்திரம் சடுதியாக இயங்காது நின்ற நிலையில் அவ்வழியாக வீதிக்குச் சென்ற காட்டு யானை குறித்த லொறியினை இரண்டு தடவைகள் தள்ளி இயங்கச் செய்யும் அபூர்வ சம்பவக் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
கந்தளாய் பகுதியிலிருந்து தம்புள்ளைக்கு பொருட்கள் ஏற்றுவதற்காகச் சென்ற சிறிய லொறியொன்றே இவ்வாறு ஹபரன வீதியின் இடையில் நின்று விட்டது.
உதவிக்கு யாருமில்லாத நிலையில் காட்டு யானையொன்று வீதிக்குச் சென்ற போதே அவ் யானை லொறியினை தள்ளி இயங்கச் செய்வதற்கு உதவியமையினால் வாகனம் அவ்விடத்திலிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது.
இக்காட்சியினை பின்னால் வாகனமொன்றிலிருந்த இளைஞர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியினை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அக்காட்சி தற்போது வைரலாக பரவி வருகின்றது.