உருமாறிய இரண்டு கோவிட் 19 வைரஸ் திரிபுகள் ஒரே தடவையில் ஒருவருக்கு தொற்றாலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அல்ஃபா மற்றும் பீட்டா ஆகிய இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றிய பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயதான பெண் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றியவர் குறித்த இந்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றினால், ஏற்படக் கூடிய நிலைமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெல்ஜியம் நாட்டின் மருத்துவ நிபுண்கள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
வௌிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த திட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியின் பின்னர் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். ஏனைய வௌிநாட்டவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள், Bio-bubble பாதுகாப்பு முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு உள்ளீர்ப்பதற்கு விமான நிறுவனங்கள் மூலம் நிவாரணத் திட்டங்களை வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையில் லெம்டா கொவிட் மாறுபாடு பரவியுள்ளதா என ஆராயும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்டா மாறுபாட்டை விடவும் மிகவும் ஆபத்தான லெம்டா மாறுபாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அருகில் அவ்வாறான ஆபத்துக்கள் உள்ளதென பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உ.யிரிழந்த நிலையில் இ.ளைஞனின் ச.டலம் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவகுமார் கஜேன் என்பவரே ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளதாக அ.டையாளம் கா.ணப்பட்டுள்ளது.
இவர் சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்தார். குறித்த நபர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.டலமாகக் க.ண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவருடைய ம.ர.ண.ம் கொ.லை.யா? த.ற்.கொ.லை.யா என்ற கோ.ணத்தில் கொடிகாமம் பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொ.ன்.று பொது இடத்தில் வீசிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது காதலியை பார்ப்பதற்காகத்தான்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலை, தனது காதலியை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் தந்தை (46) எப்படியோ பார்த்துவிட்டார்.
ஏற்கெனவே, விடயம் தெரிந்து மகளின் காதலுக்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெரிவித்துவந்த நிலையில், வீட்டிற்கே வந்து மகளை பார்த்ததால் அவருக்கு கோ.ப.ம் தலைக்கு எறியுள்ளது.
அதனால், அந்த இளைஞரை பி.டித்து கை கா.ல்.க.ளை.க் க.ட்.டி.வை.த்.து, அ.டி.த்.து, க.த்தரிக்கோலால் உ.ட.லி.ல் பல இடங்களில் கு.த்.தி சி.த்.ர.வ.தை செ.ய்.துள்ளார். சிறிது நேரத்தில் மகளின் காதலன் இ.ற.ந்.து.வி.ட.வே, பீ.தியடைந்து நண்பரை அழைத்து உதவி கேட்டுள்ளார்.
மறுநாள் (வியாழக்கிழமை) அன்று இருவரும் சேர்ந்து இளைஞரின் ச.ட.ல.த்.தை, ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக போ.ட்டு செ.ன்றுள்ளனர்.
மறுநாள், கி.டங்கில் பி.ண.ம் இருப்பது தெரியவந்த நிலையில், பொலிஸார் அதனை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது, இ.ற.ந்.து.போ.ன இளைஞருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தொ.டர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,
பெண்ணின் தந்தையை.பொலிஸார் கை.து செ.ய்.து விசாரித்தனர். அப்போது நடந்த உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டார். பெண்ணின் தந்தை மீது வ.ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் அவருக்கு உதவியை மற்றோரு நபரை பொலிஸார் தே.டிவருகின்றனர்.
உ.யி.ரி.ழ.ந்.த இளைஞரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தங்கள் மகனுக்கு அப்பெண்ணுக்கு இடையே தொடர்பு இருந்தது பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என அவர்கள் பொலிஸிடம் கூறியுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவரை தந்தை க.ண்.டித்ததால், மாணவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாசன். இதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் அகிலேஷ் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் பாடங்களில் சரிவர கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் அகிலேஷின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவிலிருந்த தேவதாசன் உடனடியாக தனது மகன் அகிலேஷை போனில் அழைத்து பாடங்களில் கவனம் செலுத்துமாறு கோ.ப.த்துடன் க.ண்.டித்துள்ளார். இதனால் ம.ன.மு.டைந்த அகிலேஷ் வி.ர.க்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அகிலேஷ் குளிப்பதாக கூறிவிட்டு, குளியலறைக்குச் சென்று டவலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.
நெடுநேரமாகியும் அகிலேஷ் வெளியே வராததால் ச.ந்தேகமடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளியல் அறையின் க.த.வை உ.டை.த்.து பா.ர்த்தபோது அகிலேஷ் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் இ.ருந்ததை க.ண்டு அ.தி.ர்ச்.சி.ய.டை.ந்.தா.ர்.
உடனடியாக அவரை மீட்டு சி.கிச்சைக்காக கோவை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.தா.க ம.ருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உ.ட.ல் பி.ண.க் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ச.ம்.பவம் தொடர்பாக த.டா.கம் போ.லீசார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை க.ண்.டி.த்ததால் பள்ளி மாணவர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் அந்த பகுதியில் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சீதா ராஜ் – பிரேமா தம்பதியினருடைய 5 வயது பெண் குழந்தை இசக்கியம்மாள்.
3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் அங்கிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை முடிந்து வந்து உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இதனால் உடல் எடை கணிசமாகக் குறைந்து குழந்தை எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள். மேல் சிகிச்சைக்காக இசக்கியம்மாளை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில், பெற்றோரின் வறுமை அதற்குத் தடை போட்டு நிற்கிறது.
எனவே அரசோ, தனியார் அமைப்புகளோ குழந்தையைக் காப்பாற்ற உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் உடலுக்குள் ஹைட்ரோகுளோரிக், ஹைப்போகுளோரஸ் அமிலங்களை உருவாக்கி, (hydrochloric acid and hypochlorous acid) செரிமானத் தடத்தை பாதிக்கும் என்றும்,
நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, தொண்டை வலி ஏற்பட்டு உணவை உட்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கழிவறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர்கள், பினாயில் போன்றவை வீடுகள் தோறும் புழக்கத்தில் உள்ளவை.
அவற்றை குழந்தைகள் அணுக முடியாத இடங்களில் பாதுகாப்பாக வைப்பதே இதுபோன்ற விபரீதங்களில் நம்மைப் பாதுகாக்கும்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 12 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில், ஆறு பேர்களின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூவர் கா.ப்பாற்றப்பட்டு, மேலும் மூவருக்கான தே.டுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ந.டுங்கவைக்கும் இந்த சம்பவமானது அயோத்தியாவின் குப்தர்கட்டில் சரயூ ஆற்றில் நடந்துள்ளது. குளிக்க முயன்ற ஒரு குடும்பமே வி.பத்தில் சி.க்கி த.த்தளித்துள்ளது.
15 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று ஆக்ராவில் இருந்து அயோத்தியா காணும் பொருட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், சிலர் குளிப்பதற்காக சரயூ ஆற்றில் இறங்கிய நிலையில், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 12 பேரையும் இ.ழுத்துச் செ.ன்றுள்ளது.
இதில் மூவரை துரிதமாக செயல்பட்ட அப்பகுதி மக்கள் கா.ப்பாற்றியுள்ளனர். மா.யமான மூ.வருக்காக தே.டுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலம் கேரளாவில் ரூ. 30 கோடி மதிப்புள்ள 19 கிலோ திமிங்கல வாந்தியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாவட்டம் திரிசூரில், சேட்டுவாவிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள,
‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸை (Ambergris) வனத்துறை கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கேரளாவில் அம்பெர்கிரிஸ் விற்கும் ஒரு குழு பிடிபடுவது இதுவே முதல் முறை என கூறினர். கேரள வன பறக்கும் படை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் நடத்திய நடவடிக்கையின் பின்னர் மூன்று பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் திரிசூரிலிருந்து வந்த ரபீக் மற்றும் பைசல், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஹம்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கறுப்புச் சந்தையில் ஒரு குழு அம்பெர்கிரிஸ் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர். ஒரு சில வன அதிகாரிகள் சந்தேக நபர்களை அம்பெர்கிரிஸ் வாங்க விரும்புவதைப் போல அணுகி பின்னர் அவர்களைப் பிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்ரிஸ் எடை சுமார் 19 கிலோ. இது சர்வதேச வாசனை சந்தையில் (international fragrance market) அதிக விலை மதிக்கத்தக்கது.
இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அம்பெர்கிரிஸ் தயாரிக்கும் விந்து திமிங்கலங்களை (Sperm Whales) வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் விற்கும் அம்பெர்கிரிஸை எவ்வாறு பெற்றார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பொதுவாக ‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸ், பழுப்பு நிற மெழுகு பொருள், இது விந்து திமிங்கலங்களின் அடிவயிற்றில் உருவாகிறது. திமிங்கலங்களால் வாந்தியெடுக்கப்படும் இந்த பொருள் கோடிக்கணக்கில் விலைமதிக்கத்தக்கது.
மத்திய கிழக்கில் ஓமன் கரையோரப் பகுதி அம்பெர்கிரிஸுக்கு பிரபலமானது. இந்த பொருள் வாசனை திரவிய சந்தையில் தங்கத்தைப் போலவே மதிப்புமிக்கது.
இலங்கையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்துறைக்கு பாரியதொரு சவால் ஏற்பட்டுள்ளன.
தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முழுமையற்றதாக காணப்படுகிறது. இணையவழி முறையிலான கல்வி முறைமையை பாடசாலை கல்வி முறைமையுடன் ஒப்பிட முடியாது.
கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால் நிலையினை குறைந்தளவிற்கு குறைத்து கொள்வதற்காகவே இணையவழி முறைமையிலான கற்றல் இடம்பெறுகிறது. அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவை ஊடாக கல்விசார் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒளிப்பரப்பாகுகின்றன.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை மீள திறக்க எதிர்பார்த்துள்ளோம். பிரதேச தொடர்பு குழுவினர் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து முறையான அறிக்கை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிப்பார்கள்.
இதன் முதற்கட்டமாக நாடு தழுவிய ரீதியில் உள்ள 100ற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளோம்.
திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம், ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும். பரீட்சைகளை தொடர்ந்து பிற்போட முடியாது.
பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு இரண்டு மாத காலத்திற்குள் மேலதிகமான கற்றல் நடவடிக்கைகள் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நவீன சந்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார நடைமுறைகளை சீராக்குவதற்கு இரு நாட்கள் கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
நவீன சந்தை கட்டிட தொகுதியில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என்பவர்களுக்கு பி.சீ.ஆர் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கட்டிட தொகுதியில் சுகாதார நடைமுறைகள் சிலவற்றை சீராக பேணுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன. இங்கு பல நபர்கள் முகக்கவசத்தினை சீரான முறையில் அணிவதில்லை. இப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு 5 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் முன்பாக மற்றும் நடைபாதைகளில் பொருட்கள் உள்ளமையினால் தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்குறிய வசதிகள் இல்லை என்பதுடன் 2 நாட்கள் காலஅவகாசம் வழங்குகின்றோம்.
இரு நாட்களுக்குள் வர்த்தக நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவுள்ள பகுதி என்பன தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தல் கட்டாயமாகும்
வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பொருட்களை வைப்பதற்கு 1 அடி மாத்திரமே நகரசபை கட்டளை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்காக சுகாதார பிரிவினரின் வேண்டுகோளிக்கினங்க 1 1/2 அடி வரை பொருட்களை வைப்பதற்கு நகரசபையினரினால் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடான ஒரு மீற்றர் இடைவேளி பேணுதல் அவசியமாகும் இவற்றினை சீராக நடைமுறைப்படுத்தாதவிடத்து ஒற்றை எண் அடிப்படையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் (50 வீதமான வர்த்தக நிலையங்கள் ஒர் நாளைக்கு என்ற அடிப்படையில்) நடவடிக்கை எடுத்துள்ளோம்
சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் தயராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து கடும் காற்று வீசி வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் பரவலாக காற்று பலமாக வீசி வருகின்றமையினால் பாரிய மரங்கள் முறிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக சில பகுதிகளில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டியில் பயிர்களுக்கு ஏற்ற உரத்தை உடனே வழங்கு என்ற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜெ.வி.பி) என உரிமையும் கோரப்பட்டுள்ளமையுடன், சுவரொட்டிகள் கண்டி வீதி, நூலக வீதி, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என வவுனியா நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் உட்பட 3025 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இம்மாதம் 12ம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களுக்கும் 205 அதிபர்களுக்கும் 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் ஏற்றப்படவுள்ளது.
அந்த வகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 926 பேருக்கும் (நெடுங்கேனி 358 பேர், ஓமந்தை 568 பேர்) , வவுனியா தெற்கு வலயத்தில் 2279 பேருக்கும் (தெற்கு சிங்கள பிரிவு 383 பேர் , தெற்கு தமிழ் பிரிவு 1419 பேர், வெங்கல செட்டிக்குளம் 477 பேர் ) என 3205 பேர் உள்ளடங்குகின்றனர்.
வவுனியா பொது சந்தையில் 112 பேருக்கு சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பொது சந்தையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப் பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வவுனியா பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என 112 பேருக்கு சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் திருமணத்தின் போது, மணமேடையிலிருந்த மணமகனை தாய் செருப்பால் அடித்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் பவுர்வா சுமார்பூர் பகுதியில், சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கான மணமேடையில் மணமக்கள் உட்கார்ந்திருந்தனர்.
ஒரு தாமரை போன்ற செட்டிங் கொண்ட வித்தியாசமான மணமேடையில், மணமக்கள் உட்கார்ந்திருந்தனர். அப்போது திடீரென்று மணமேடையில் ஏறிய தாய் மணமேடையிலேயே மணமகனை செருப்பால் கண்ணத்தில் அறைந்த சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, மணமகனும், தன்னுடைய மகனுமான உமேஷ் சந்திரா வேறு ஜாதிப் பெண்ணை, பெண் வீட்டாரின் விருப்பதை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும்,
இவர்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்துவிட்டு, இப்போது வெறும் சடங்கிற்காக இப்படி செய்வதாகவும், இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த நான் அவனை செருப்பால் அடித்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.