வவுனியாவில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், 15பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முதல் ம னைவி தான் போ.யிட்டா… நீயும் போ.யிடாதனு கெ.ஞ்சினேன் : நடந்த வி.ப.ரீ.த.ம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி தன்னுடைய பழைய காதலனை மறக்காததால், அ.வரை கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தென் காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. 20 வயதான இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கண்ணனுக்கு இது 2-வது திருமணம், முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கஸ்தூரியை அவர் திருமணம் செய்துள்ளார். ஆனால், கஸ்தூரிக்கோ இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை.

இதன் காரணமாக திருமணத்திற்கு பின் கஸ்தூரி மற்றும் கண்ணனுக்கு இடையே அ.டிக்கடி பி.ர.ச்.ச.னை ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி பி.ர.ச்.ச.னை ஏற்படும் போது எல்லாம், கஸ்தூரி கோ.பித்துக் கொண்டு கீழப்புதூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கஸ்தூரி கோ.பித்துக் கொண்டு தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரை சமாதானம் செய்து அழைத்து வர பாட்டி கண்ணன் பாட்டி வீட்டிற்கு செல்ல, ஆனால், கஸ்தூரி வேலைக்கு போயிருப்பதாகவும், வீட்டிற்கு திரும்பி வந்ததும், அனுப்பி வைப்பதாகவும் கஸ்தூரியின் பாட்டி கூறியுள்ளார்.

இதை கேட்டதும், கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்த கண்ணன், பிறகு தி.டீரென இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, புளியரை சாலையில் போய் நின்றுள்ளார்.

ஏனெனில், அந்த வழியாக தான் கஸ்தூரி வீட்டிற்கு திரும்பி வருவார் என்பதால், கண்ணன் அங்கிருக்கும் லொரிகளுக்கிடையே ம.றைந்து நின்றுள்ளார்.

எதிர்பார்த்தபடியே கஸ்தூரி வந்து கொண்டிருக்க, அப்போது, இருசக்கர வாகனத்தை அவர் மீ.து மோ.திவிட்டு, கீழே த.ள்.ளி.னா.ர் கண்ணன். இதில் நி.லைகுலைந்து கீழே கஸ்தூரி வி.ழவும், அதற்குள் பை.க்கில் இருந்து ஒ.ரு பெ.ரி.ய அ.ரி.வா.ளை எ.டுத்து கஸ்தூரியை ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி.ய.தா.ல், கஸ்தூரி அந்த இ.டத்திலே து.டி.து.டி.த்.து இ.ற.ந்.தா.ர்.

அதன் பின் அவர் அங்கிருந்து த.ப்.பி.வி.ட, இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த பொலிசார், கண்ணன் அந்த பகுதியை விட்டு த.ப்.பி ஓ.டுவதற்குள் ம.ட.க்.கி பி.டித்.து.வி.ட்.ட.ன.ர்.

அவரிடம் மேற்கொண்ட வி.சாரணையில், திருமணத்திற்கு முன்னர், கஸ்தூரி, தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார். அந்த இளைஞருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இருப்பினும், அவரையே நினைத்து கொண்டிருந்தார். அவரால் மறக்க முடியவில்லை.. இந்த சமயத்தில்தான் என்னுடன் திருமணம் நடந்தது. அதன் பின்பு தான் இந்த திருமணத்தில், அவருக்கு இஷ்டம் இல்லை என்பது தெரிந்தது.

ஒரு கட்டத்தில் எங்கள் பி.ர.ச்.ச.னை.யி.ன் போது, கஸ்தூரி, நான் என்னுடைய பழைய காதலனுடன் வாழப்போவதாக கூறினார். நான் அவரிடம், ஏற்கனவே என் மனைவி பிரிந்து போய்விட்டதால், நீயும் என்னை விட்டு போய் விடாதேன்னு கெஞ்சினேன்.

ஆனால் கஸ்தூரி மு.ர.ண்.டு.பி.டி.த்.தா.ர். இந்த ஆ.த்.தி.ர.த்.தி.ல்.தா.ன் கொ.லை செ.ய்.தே.ன் எ.ன்று கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர்.

புதுப்பெண்ணை காண மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற பெற்றோர் கண்ட அ.திர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் இ.றந்து கி.டந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் அங்கிருந்து த.ப்பி ஓ.டியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்த அமீத் வர்மா. இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா பெற்றோருக்கு போன் செய்த வர்மா உங்கள் மகள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என கூறியிருக்கிறார்.

இதனால் ப.தறிய பெற்றோர் உடனடியாக மகளை காண வந்த போது அவர்களுக்கு அ.திர்ச்சி காத்திருந்தது. காரணம், அர்ச்சனா உ.டல் முழுவதிலும் கா.யத்துடன் இ.றந்து கி.டந்தார்.

மேலும் அங்கு வர்மா உள்ளிட்ட குடும்பத்தார் யாருமே இல்லை. இது குறித்து அவர்கள் பொலிசில் பு.கா.ர் அளித்தனர். அதில், எங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி அ.டி.த்.து கொ.லை செ.ய்.து வி.ட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அர்ச்சனா ச.டலத்தை பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் சம்பவம் குறித்து வி.சாரித்து வருகின்றனர்.

நள்ளிரவில் கண்விழித்த கணவர் : காதல் மனைவி கொடுத்த பேரதிர்ச்சி : பின்பு நடந்த சோகம்!!

தமிழகத்தில்..

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி குடும்ப த.கராறில் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், உமாதேவி என்ற இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

உமாதேவிக்கு 16 வயது இருக்கும்போதே பாலகிருஷ்ணன் அவரை திருமணமும் செய்துள்ளார். இதனால் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, சி.றைத் த.ண்டனையும் அனுபவித்துள்ளார்.

இதையடுத்து, உமாதேவிக்கு 18 வயது ஆன பின்பு இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்ததோடு, தனியாக வீடு எடுத்து தங்கவும் வைத்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் கார்பென்டராக வேலை பார்த்துவந்த நிலையில், உமாதேவி வீட்டை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அ.டிக்கடி ச.ண்டை ஏற்படவே, வழக்கம் போன்று சம்பவத்தன்றும் இருவருக்கும் த.கராறு ஏற்பட்டதோடு, பாலகிருஷ்ணன் உறங்க சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இதனை கண்விழித்து பார்த்த பாலகிருஷ்ணன் தானும் உ.ளியை எடுத்து க.ழு.த்.தி.ல் கு.த்.தி த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

இவரது அ.லறல் ச.த்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீ.ட்.டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, உமாதேவியின் ச.டலத்தை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பியும் வைத்ததோடு தீவிர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தளங்களில் பொய்ப் பிரசாங்களை தடுக்க புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!!

இணையத்தளங்களில்..

இணையத்தளம் வழியாக பொய்யான தகவல்கள் தவறாக வழிநடத்தப்படும் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதற்கான சட்ட வரைவை உருவாக்குமாறு சட்டவாக்க சபையினருக்கு ஆலோசனை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உட்பட இணையத்தளங்களில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டி விபத்து : முதியவர் காயம்!!

விபத்து..

வவுனியா பட்டாணிச்சூர் மூன்றாம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (20.04.2021) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில் முதியவர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே திசையில் பயணித்த,

மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரை மோதிததள்ளியதுடன் 500மீற்றர் தூரம் பயணித்து தரித்து நின்றது.
இவ்விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் முதியவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

வவுனியாவில் இ.ளைஞர் கு.ழு அ.ட்டகாசம் : இருவர் கா.ய.ம்!!

மகாறம்பைக்குளத்தில்..

வவுனியாவில் இ.ளைஞர் கு.ழு ஒன்று வீடு பு.குந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டமையால் இருவர் கா.ய.ம.டை.ந்துள்ளதுடன் வீடும் ப.ல.த்.த சே.த.த்.தி.ற்.கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மகாறம்பைக்குளத்தில் உள்ள வீ.டொன்றிற்குள் நேற்றையதினம் இரவு வா.ள் ம.ற்றும் க.த்.தி.க.ளு.ட.ன் உ.ட்புகுந்த கு.ழுவினர் அ.ங்கிருந்தவர்கள் மீ.து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

இ.ந்த தா.க்.கு.த.லி.ல் இ.ருவர் கா.ய.ம.டை.ந்.து.ள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களும் அ.டி.த்.து உ.டை.த்.து சே.த.மா.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் அந்த கு.ழு அ.ங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுள்ளது.

தா.க்.கு.த.ல் தொ.டர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தா.க்.கு.த.ல்.தா.ரி.க.ள் கை.வி.ட்.டு சென்ற க.த்.தி ஒ.ன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீ.ட்.டு.ள்.ள.ன.ர். இந்த தா.க்.கு.த.ல் ச.ம்பவம் தொடர்பாக மேலதிக வி.சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் இடம்பெற்ற விபத்தினால் ஏற்பட்ட பெரும் பதற்றம்!!

நுவரெலியாவில்..

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19.04.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து வெலிமடை பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று அப்பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது. இதன்போது, குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி த.ப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆ.ர்ப்பாட்டம் ஒன்றை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர்.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நச்சுத் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா? தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

தேங்காய் எண்ணெய்..

சுங்கம், காவல்துறை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நச்சு தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனினும் எண்ணெய் விற்பனைக்கு அனுப்புவதில் சட்டத்தை மீறிய இறக்குமதியாளர்கள் தண்டிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் இருந்து வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இரண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், அஃப்லொடொக்சின் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை விநியோகித்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையின் துணை இயக்குநர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் சேமிப்பு கிடங்குகள் எங்கு இருக்கின்றன அல்லது தேங்காய் எண்ணெய் எவ்வாறு வைக்கப்படுகிறது என்பது குறித்து எந்த விவரக்குறிப்பும் இல்லை.

எனினும் தேங்காய் எண்ணெயை நுகர்வோருக்கு அனுப்ப முடியாது என்பதுதான் நிபந்தனை. இதன்காரணமாக தேங்காய் எண்ணெய் சந்தையில் கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில்..

நாட்டில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையதள தொடுப்பு (Link) தொடர்பில் இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்கில்ஸ் புட் சிட்டி தனது 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது என்ற விதத்திலேயே இணையதள தொடுப்பொன்று பகிரப்பட்டு வருகிறது.

எனினும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இணையத்தளத் தொடுப்பானது போலியானது என கார்கில்ஸ் புட் சிட்டி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை நெஸ்லே நிறுவனத்தின் பெயரிலும் இவ்வாறான இணையதள தொடுப்பொன்று பகிரப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இவ்வாறான இணைப்புக்களை க்ளிக் செய்வதனூடாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கணினி அவசர உதவிப் பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரட்ணம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

கொரோனா தாக்கம்..

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று தாக்கமானது திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் மாத்திரம் 357 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 260 பேர் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,796ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான நிலையில் இலங்கை : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!!

வடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கோவிட் தொற்று அபாய எச்சரிக்கை

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கோவிட் வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.

இந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு : புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் இயக்குனர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் கேட்டுக்கொண்டதனை போன்று மக்கள் செயற்பட வில்லை. மக்கள் அதிகமாக ஒன்றுக்கூடினார்கள். ஒரே இடத்தில் அதிகமான மக்கள் ஒன்றுக்கூடி விருந்து வைத்து கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருந்தாலும் அவர்கள் மூலம் பலருக்கு இதன் பாதிப்புகள் உள்ளது. இதனால் எதிர்வரும் 4 வாரங்களில் இதன் ஆபத்தை அறிந்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குருணாகலை, கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தித்தவெல்காய பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனேவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

அன்னை பூபதி..

அன்னை பூபதியை நினைவில் நிறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து கா.ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வு அவர்களது போ.ராட்ட கொட்டகையினுள் இன்று (19.04.2021) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு மலர் அஞ்சலி செலுத்தியுடன் மெழுவர்த்தியும் ஏற்றிபட்டது.

வவுனியா நகரில் நீதி கோரி ஸ்ரீநகர் மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

ஸ்ரீநகர் மக்கள்..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்டபட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போ.ராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் எமது காணிகளுக்கு உறுதி கேட்டு 70 நாட்களாக சத்தியாக்கிரகம் இருக்கின்றோம் எமக்கான பதில் என்ன? என வவுனியா நகரில் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போ.ராட்டம் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றலில் இன்று (19.04.2021) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நாங்கள் மனிதர்கள் இல்லையா?, எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லையா?, ஸ்ரீநகர் மக்களுக்கான காணி உறுதிப்பத்திரத்தினை வழங்கு,

வீடற்றவர்களுக்கு வீடு வழங்கு, எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு என்ன?, இளைஞர்கள் விளையாடுவதற்கான மைதானத்தினை தந்து உதவு,

பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு பொதுநோக்கு மண்டபம் அமைத்துக்கொடு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீநகர் பகுதியினை சேர்ந்த மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் ஸ்ரீநகர் ஸ்ரீ சனசமூக நிலையத்தினர் போ.ராட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தனர்.

வவுனியா செட்டிகுளத்தில் காட்டு யானை தா.க்.கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

செட்டிக்குளம்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் காட்டு யானை தா.க்.கி இரண்டு பிள்ளைகளின் தந்தை ப.லியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கப்பாச்சிகுளத்தின் கீழ் உள்ள வயல்வெளியில் இன்று (19.04.2021) அதிகாலை இடம்பெற்ற இத் துயர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48வயதுடைய நலீம் என்பவர் கப்பாச்சி குளத்தின் கீழ் வயல் யானைக் காவலுக்கு நேற்றிரவு (18.04) சென்றுள்ளார். இன்று (19.04) காலை 9.00 மணியாகும் கணவர் வீடு திரும்பவில்லையென மனைவி வயல்வெளிக்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த நபர் யானை தா.க்.கி ச.டலமாக காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ம.ரணமடைந்தவரின் ச.டலம் பி.ரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காணாமல்போயிருந்த 2 வயது குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது!!

2 வயதான குழந்தை..

நீர்கொழும்பு – தலாஹேன பகுதியில் காணாமல்போயிருந்த 2 வயதான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக அவரது தந்தை, 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவித்ததாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தை கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அவரது தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.