வவுனியா விடுதியில் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த நபர் திடீரென உயிரிழப்பு!!

விடுதியில்..

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உ.யிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு – தெஹிவளையை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்கள் வவுனியா முதலாம் குறுக்கு தெருவிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் தெஹிவளையிலிருந்து வருகை தந்து தங்கியிருந்தவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து விடுதிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார்.

எனினும் நேற்று இரவு திடீரென மயக்கமுற்று தெஹிவளையை சேர்ந்த நபர் கீழே விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் 1990 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனினும் சுகயீனமுற்ற நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட முன்னரே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தெஹிவளையை சேர்ந்த ஜெகநாதன் உதயராஜ் (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்!!

பங்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படும் ஸ்ரோக் நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உடலின் ஒரு பகுதி (வலது அல்லது இடது) பகுதியாக அல்லது முழுமையாக செயலிழந்து இருப்பதை உணர முடியும்.

கைகளை அல்லது கால்களை அசைக்க முற்படும்போது தமது எண்ணத்திற்கு அவை உடன்படாததை அவதானிக்க முடியும். உதாரணமாக முழங்கையை மடிக்க முற்படும் போது அது முழுமையாக மடியாதிருப்பதையும் அல்லது பக்கவாட்டுக்கு அசைவதையும் அவதானிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட பகுதி சாதாரண பாகங்களை விட வேறுபட்டு உணரப்படும். கை மற்றும் கால் பாரமானதாகவும் விறைப்பு தன்மை உடையதாகவும் உணரப்படலாம். சிலருக்கு ஊசியால் குத்துவதை போன்ற வலியும் சிலரில் சூடாக்கவும் சிலரில் குளிராக்க இருப்பதை போலவும் உணரப்படலாம். பெரும்பாலும் இது ஒரு வலி நிறைந்த உணர்வாக இருக்கலாம்.

இவர்கள் இருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ சமநிலையாக உடலை வைத்திருப்பதில் சிரமங்களை எதிர்நோக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட பக்கமாக உடலை சமநிலையைப்படுத்த முடியாது கீழே விழுவதை போலவும் உணரப்படலாம்.

இவர்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மூட்டுக்களில் உறுதித் தன்மை குறைந்திருப்பதை உணர முடியும் மூட்டுக்களை பாதுகாக்கும் தசைகளின் உறுதித்தன்மை குறைடைவதால் இது நிகழ்கின்றது. இவ்வாறான நபர்களில் கவனயீனமாக கையாளுகையின் போது மூட்டுக்கள் பகுதியாக விலகுவது நிகழலாம். இது அதி தீவிரமான வலியை ஏற்படுத்தும்.

உதாரணமாக பாதிக்கப்பட்ட பக்க தோள்மூட்டு பகுதியை சரியான முறையில் பாதுகாக்காது அக் கையை இழுத்து நோயாளியை எழுப்புதல் அக் கையை தொங்க விட்டபடி அமர்த்தி வைத்திருத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் தோள்மூட்டு கீழ் நோக்கி விலகும். இது நோயாளிக்கு தீவிரமான இரணடாம் நிலை பிரச்சினையான Frozen shoulder என்ற தீவிர வலி நிலையினை உருவாக்கும்.

சிலரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கை மற்றும் கால்களிலில் உள்ள தசைகள் இறுக்க தன்மை கூடியதாக மாற்றமடையலாம். (பெரும்பாலும் முழங்கை, மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டுக்கள் பாதிக்கப்படும்) இதனால் அவர்களில் அசைவுச் செயற்பாடுகள் தீவிரமாக பாதிப்படையும்.

ஸ்ரோக் ஆனது மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதனால் ஏற்படுகின்றது. இதன்போது இரத்தம் கிடைக்காத மூளைக் கலங்கள் இறப்பதன் மூலம் மூளையின் அப்பகுதியினால் கட்டுப்படுத்தப்படும் உடலின் அசைவு மற்றும் உணர்வு செயற்பாடுகள் பாதிப்படையும் சிலரில் பேச்சு, பார்வை புலன், ஞாபக சக்தி போன்றவையும் பாதிக்கப்படலாம். மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பாதிக்கப்பட்ட பகுதி என்பவற்றிற்கேற்ப குறித்த நபரில் வெளிக்காட்டப்படும் பாதிப்பின் அளவு மற்றும் தன்மை மாறுபடும்.

ஸ்ரோக்கின் போது பாதிப்படைந்த அல்லது சிதைவடைந்த நரம்புக் கலங்களை மருந்துகள் மூலம் மீள உயிர்ப்பிக்க முடியாது. ஆனாலும் மூளையானது பாதிக்கப்பட்ட பகுதியை மீள ஒழுங்குபடுத்தி இழந்த செயற்பாடுகளை மீள உருவாக்கிக் கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.

இது மூளையின் நெகிழ்வுத் தன்மை (Neuroplasticity) எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒழுங்கான மருத்துவ செயற் திட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட உடற் தொழிற்பாடுகளை மீள சரியான முறையில் மீண்டு கொள்ள முடியும். இச் சிகிச்சை முறைமை புனர்வாழ்வுச்சிகிச்சை முறை எனப்படும்.

ஸ்ரோக் உடலின் பல செயற்பாடுகளையும் பாதிப்பதனால் இதற்கான புனர்வாழ்வு சிகிச்சையின் போது பலதரப்பட்ட நிபுணர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகின்றது. அவர்களில் மருத்துவர்கள், தாதிகள், இயன்மருத்துவர்கள், தொழில்வழிச் சிகிச்சையாளர் பேச்சு வழி சிகிச்சையாளர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.

இயன்மருத்துவர்கள் எனப்படும் பிசியோதெரபிஸ்ட்கள் ஸ்ரோக்கினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடற்தொழிற்பாடுகள் மற்றும் அசைவுச் செயற்பாடுகள் மேலும் பாதிப்படையாது தடுப்பதுடன் சீரான முறையில் அசைவு செயற்பாடுகள் மற்றும் உணர்வுத் தன்மை முன்னேற்றம் அடைந்து நோயாளர் தமது பழைய இயக்க நிலை அடைவதை உறுதிப்படுத்துவதில் உதவுகின்றனர்.

இதன் மூலம் இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறப்பட்ட பிரச்சினைகள் நோயாளிகளில் தீவிரமடைவதை குறைத்துக் கொள்ளவும் தீவிரமான நிலையிலிருந்து முன்னேற்றம் அடைவதையும் உறுதிப்படுத்த முடியும்.

பெரும்பாலும் ஸ்ரோக் நோயாளிகளில் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின்னர் பிசியோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் நோயாளி மருத்துவ விடுதியில் உள்ள போது ஸ்ரோக்கினால் நோயாளியில் ஏற்படும் இரண்டாம் நிலை பிரச்சினைகளை தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

படுக்கை புண்களை தவிர்த்தல், DVT எனப்படும் கால்களில் குருதி உறையும் நிலையை தவிர்த்தல், மூட்டுக்கள் இறுக்கம் அடைதலை தவிர்த்தல், சுவாச பிரச்சினைகள் ஏற்படுதலை தவிர்த்தல் போன்றவற்றிற்கான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

உடல் சமநிலையை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட தசைகளின் வலுவை அதிகரித்தல், சக்கரநாற்காலி பாவனைப் பயிற்சி, நடப்பதற்கான பயிற்சி என்பன புனர்வாழ்வு சிகிச்சை நிலையம் அல்லது பிசியோதெரபி அறை போன்ற இடங்களில் இடம்பெறும் இதற்கு பரந்த இடம் மற்றும் விசேட உபகரணங்கள் தேவையாக இருக்கும்.

நோயாளர்கள் மருத்துவ விடுதியில் உள்ள போது வழங்கப்படும் பிசியோதெரபி சிகிச்சைகள் நோயாளர்களில் சீரான முன்னேற்றம் ஏற்படுவதை ஊக்குவிக்கின்றது. இதில் நோயாளரின் பராமரிப்பாளரின் பங்களிப்பு பெரும்பங்கினை வகிக்கின்றது.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இயன் மருத்துவர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் குறைந்தளவு பிசியோதிரப்பிஸ்ட் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்களை பார்வையிடும் போது ஒரு நோயாளிக்கு குறைந்தளவு நேரத்தையே ஒதுக்ககூடியதாகவுள்ளது. எனவே நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிகளின் ஆரம்பகட்ட சிகிச்சையில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டிய தேவை உள்ளது.

இயன்மருத்துவர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு ஏற்ப நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட பயிற்சிகளை வைத்திய விடுதியிலும் அங்கிருந்து விடுவிக்கபட்ட பின் வீடுகளிலும் செய்வது இன்றியமையாததாகும்.

நோயாளிகளின் பராமரிப்பாளர் நோயாளிக்கு வழங்க வேண்டிய பிசியோதெரபி பயிற்சிகள் தொடர்பான பூரண தௌிவை பெற்றிருப்பதுடன் அப் பயிற்சிகளை குறித்த நேர இடைவெளியில் சிறப்பான முறையில் வழங்குபவர்களாயின் நோயாளர்களில் வேகமான முன்னேற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதில் எந்த தடையும் இல்லை.

தி.கேதீஸ்வரன்
பிசியோதெரபிஸ்ட்
மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா
077 8148351

இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

சமூக ஊடகங்களில்..

சமூக ஊடகங்களில் இலவச பரிசுகளை வழங்குவதாக கூறும் செய்திகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யாசிரு குருவிட்டகே இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இந்த மோசடிகளுக்காக பல்வேறு வலை முகவரிகள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் முத்திரை பெயர்களை பயன்படுத்துவது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த போலி செய்திகளின் மூலம், சைபர் தா.க்.கு.த.ல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் மக்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளில் ஊடுருவலாம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் தா.க்.கு.த.ல் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இதுபோன்ற போலி செய்திகளை பார்க்கும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் பொதுமக்களை அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மோப்ப நாயின் உதவியுடன் தே.டப்படும் பெ.ண்ணின் த.லை!!

பயணப்பையிலிருந்து..

பயணப்பையிலிருந்து ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட பெ.ண்.ணி.ன் த.லை.யை தே.டி தொ.டர்ச்சியான தே.டு.த.ல் ந.டவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கையில் தற்போது பெனி என்ற மோ.ப்ப நா.ய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த பெ.ண்ணின் த.லை.யை தே.டி, ச.ந்தேக ந.பரான உப பொலிஸ் பரிசோதகரின் வீடு அமைந்துள்ள ப.குதியில் சோ.த.னை ந.டவடிக்கைகள் மே.ற்கொள்ளப்பட்டுள்ளன.

படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோ.த.னை ந.டவடிக்கையின் போது பொலிஸ் நாய் பிரிவின் பெனி என்ற நாயை ஈடுபடுத்தி தே.டுதல் ந.டவடிக்கை தொடர்ந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியிலிருந்த வாழைத்தோட்டமொன்றில் இ.ர.த்.த.க் க.றை.க்.கு ஒ.த்த அ.டையாளம் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கு.றித்த கொ.லை ச.ம்பவம் தொ.டர்பான வி.சாரணைகளுக்காக டேம் வீதி பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று க.ளமிறக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழுவானது வி.சாரணைகளுக்காக நேற்று கொழும்பில் இருந்து புத்தல நோக்கி சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பிலான வி.சாரணைகள், ச.ந்தேகநபர் பயணித்த இடங்களில் இருந்து இதுவரை கிடைக்கப் பெற்ற சிசிடிவி காணொளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை குறித்த நபர் சென்றுள்ள ஏனைய இடங்களிலும் சிசிடிவி காணொளிகளை பெறுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண் ம.ற்றும் ச.ந்தேகநபர் த.ங்கியிருந்த இ.டத்தில் ஹங்வெல்ல பொ.லிஸாரால் தொ.டர்ச்சியான வி.சாரணைகள் மு.ன்னெடுக்கப்பட்டு வ.ருகின்றமை கு.றிப்பிடத்தக்கது.

வவுனியாவினை சேர்ந்த ஒருவர் நாயாற்று கடலில் சடலமாக மீட்பு!!

நாயாற்று கடலில்..

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று (07.03.21 ) ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நால்வர் குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டிருந்தனர். அதில் மூவர் கரை ஏறியுள்ளார்கள் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவரினுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வவுனியாவினை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

யாழில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியால் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட இளம் பெண்!!

பிரபா ஜனாதரி..

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார்.

குறித்த பொலிஸ் அதிகாரி வ.க்கிரமான ஆசைகள் கொண்டிருந்த நபர் என உ.யிரிழந்த பெண்ணின் தாய் கு.ற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இது தொடர்பில் குறித்த தாயார் கருத்து வெளியிடும் போது,

“கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த பொலிஸ் அதிகாரிக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவர் அவரை சி.த்.தி.ர.வ.தை செ.ய்ய ஆரம்பித்து விட்டார்.

அ.ச்.சு.று.த்.த.ல் விடுத்து என்னிடம் பேசுவதற்கு த.டை விதித்துள்ளார். எனது மகளுக்கு என்னிடம் பேச சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இ.ர.கசியமான வட்ஸ்அப் ஊடாக அழைத்த மகள், இவருடன் வாழ முடியவில்லை என்னை மிகவும் மோசமான முறையில் கொ.டு.மை.ப்படுத்துகின்றார் என கூறினார்.

த.ற்.கொ.லை செ.ய்.து கொள்வதற்கு 4 முறை மு.யற்சித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி மகள் நான்காவது முறை மேற்கொண்ட மு.யற்சியில் உ.யிரிழந்துள்ளார். பலமுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். எனினும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

மன்னாரில் புகையிரத்துடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

மன்னாரில்..

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று காலை ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி,கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் வர்த்தகராக மாறிய மகன் : தாய்க்கு செய்த கொ.டு.மை அம்பலம்!!

வர்த்தகராக மாறிய மகன்..

வெளிநாட்டில் இருந்து தாய் ஒருவர் உழைத்து அனுப்பி பணத்தை கொண்டு மகன் ஒருவர் பிரபல வர்த்தகராக மாறியுள்ளார். தேயிலை தோட்டம் ஒன்றை கொள்வனவு செய்த மகன் அந்தத் தோட்டத்தில் தனது தாயை பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தெல்தெனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த தேயிலை தோட்டத்தில் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும் தனது மகன் பெற்றுக் கொண்டுள்ளார்.

தாயின் பணத்தில் தோட்டத்தை கொள்வனவு செய்த மகன், சிறு தொகை பணத்தை சம்பளமாக வழங்கியுள்ளார். குறித்த தாயின் மூத்த மகனான தேரர் , தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கவலை வெளியிட்டுள்ளார்.

“நாள் ஒன்று 650 ரூபாய் மாத்திரமே அம்மாவுக்கு தம்பி ஊதியமாக வழங்கியுள்ளார். உணவு எதுவும் வழங்குவதில்லை. இவ்வாறு மோ.சமாக செயற்பட வேண்டாம் என அவருக்கு பல முறை கூறியுள்ளேன். எனினும் தம்பி தொடர்ந்து அவ்வாறு செய்து வருகின்றார்.

அம்மாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன்” என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று பெரும்பாலான பகுதிகளில் அடைமழை!!

மழை..

இலங்கையில் இன்றுமதியம் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் பொலன்னருவ மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கடும் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலையில் பல மழை பெய்யும். மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.

வவுனியாவில் க.ஞ்சாவுடன் கை.து செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து க.ஞ்சா பொதிகள் மீ.ட்பு!!

ஸ்ரீராமபுரம் பகுதியில்..

வவுனியா – மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடொன்றில் ம.றை.த்.து வை.க்கப்பட்ட நிலையில் நேற்று க.ஞ்.சா பொ.திகள் மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.

கடந்த மாதம் 5ஆம் திகதி வவுனியா – ஹெப்பிட்டிகொலாவ விசேட ப.டையினருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து ஈரட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ.தனையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பட்டா வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 18.270 கிலோ கிராம் க.ஞ்.சா பொ.தி கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் க.ட.த்.தி செ.ன்ற மூ.வரும் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

கை.து செ.ய்யப்பட்ட மூ.வரிடமும் தொ.டர்ச்சியாக மே.ற்கொள்ளப்பட்ட வி.சாரணையில் மகாறம்பைகுளம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த (வயது 65) ச.ந்தேகநபரின் வீட்டில் மே.லதிகமான க.ஞ்.சா பொ.திகள் ம.றை.த்.து.வை.க்கப்பட்டு இருப்பதாக வி.சாரணையில் தெ.ரியவந்துள்ளது.

கு.றித்த ந.பர் வ.ழங்கிய தகவலினை அடுத்து நேற்று ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள கு.றித்த ந.பரின் வீ.ட்டில் ஈரட்டை பொலிஸாரால் மே.ற்கொள்ளப்பட்ட சோ.தனையில் ம.றை.த்.து வை.க்கப்பட்டிருந்த நிலையில் 6.540 கிலோ கிராம் க.ஞ்.சா பொ.திகள் ஈரட்டை பொலிஸாரால் மீ.ட்.க.ப்பட்டுள்ளன.

வவுனியாவில் து.ப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது..

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அ.திரடிப் ப.டையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அ.திரடிப் ப.டையினரிற்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவில் விசேட சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே வவுனியா – பாலமோட்டை வயல் பகுதியில் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ச.ட்டவிரோத து.ப்பாக்கி (இடியன்துப்பாக்கி) கை.ப்பற்றப்பட்டுள்ளதுடன், ச.ந்தேகநபரை கைது செய்த விசேட அ.திரடிப் ப.டையினர் அவரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே கை.து செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து : 35 பேர் காயம்!!

விபத்து..

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் வைத்து குடைசாய்ந்துள்ளது.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து இன்று காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலை நிராகரித்ததால் முகத்தை இழந்த பெண்ணை மீண்டும் தேடி வந்த காதல் : நெகிழவைக்கும் ஒரு சம்பவம்!!

பிரமோதினி..

ஒரு சிறுமியாக இருக்கும்போது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த சி.றுமியின் மு.கத்தில் அ.மிலத்தை வீசிச்சென்றார் ஒரு இளைஞர்.

இந்தியாவின் ஒடிஷாவில் வாழும் பிரமோதினி என்ற அந்த சி.றுமியின் முகம் சி.தைந்துபோனதோடு, அவரது பார்வையும் பறிபோய்விட, இருளிலேயே வாழ்ந்துவந்தார் அவர்.

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரமோதினியைத் தேடி காதல் வந்தபோது, அவர் அதை நிராகரிக்கவில்லை. பிரமோதினி (28) சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய ஒருவரின் நண்பர் சரோஜ் சாஹூ (29).

அவர் தன் நண்பருடன் மருத்துவமனைக்கு வந்தபோது பிரமோதினியை சந்தித்திருக்கிறார். பிரமோதினியை கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையையே விட்டிருக்கிறார் சாஹூ.

இருவருக்குமான பழக்கம் காதலாக மாற, இருவர் குடும்ப சம்மதத்துடன் இம்மாதம் 1ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அவர்களது திருமணத்தில், ஆ.சி.ட் வீ.ச்சினால் பா.திக்கப்பட்டு மீண்டு வாழும் ஆறு பேர் உட்பட, 1,000 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

தனக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை வந்தபோதுதான் தான் முதன் முதலாக சாஹூவைப் பார்த்ததாக தெரிவிக்கிறார் பிரமோதினி.

நான் இருக்கும் வண்ணமாகவே அவர் என்னை நேசிக்கிறார் என்று கூறும் பிரமோதினி, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அவர் எப்போதும் சொல்வதுண்டு என்கிறார். கணவனும் மனைவியுமாக, ஆ.சி.ட் வீ.ச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்கள்.

வெளிநாட்டில் வசித்த இந்தியருக்கு லொட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பணம்!!

சிவமூர்த்தி கிருஷ்ணப்பா..

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பணம் பரிசாக விழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி கிருஷ்ணப்பா.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரியை கிருஷ்ணப்பா வாங்கி வந்தார்.

நமக்கு பெரிய அதிஷ்டம் அடிக்காதா என நினைத்திருந்தவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதன்படி லொட்டரியில் ரூ 24 கோடியை அள்ளியுள்ளார் கிருஷ்ணப்பா.

அவர் கூறுகையில், என் சொந்த ஊரில் குடும்பத்தாருக்காக பெரிய வீடு கட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களின் வருங்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பேன். எனக்கு பரிசு விழுந்தது என்பதை முதலில் நம்பவில்லை, பின்னரே நம்பினேன் என கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் : த.ப்பியோடிய பயணிகளால் குழப்பநிலை!!

வெள்ளவத்தையில்…

கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக ப.ரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்க்கையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளவத்தை, W.D சில்வா மாவத்தைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் வாகனத்தின் சாரதி ஹொக்கி ஸ்டிக் ஒன்றுடன் தனது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.

பேருந்து சாரதி உரிய முறையில் வாகனம் ஓட்டவில்லை எனவும், தனது சமிக்ஞைகளை கவனிக்காமல் பேருந்து ஓட்டியமையினாலும் மோட்டார் வாகன சாரதி கோ.பமடைந்துள்ளார். அத்துடன் பேருந்து சாரதிக்கு நடு வீதியில் வைத்து அ.ச்சுறுத்தும் வகையில் மோட்டார் வாகன சாரதி செயற்பட்டுள்ளார்.

பேருந்தினை க.டுமையாக தா.க்.கி.யு.ள்.ள.து.ட.ன் சா.ரதிக்கு அ.ச்.சு.று.த்.த.ல் வி.டுத்துள்ளார். இதனால் அ.ச்சமடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிமையினால் ப.ரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.

அமெரிக்காவில் உயர் விருது வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!!

ரனிதா ஞானராஜா..

இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் அதி உயர் விருது வென்றுள்ளார். தைரியமான சர்வதேச பெண் என்ற விருது சட்டத்தரணியான ரனிதா ஞானராஜா என்ற இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அரச அ.ச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நாட்டில் ஒடுக்கப்பட்ட, பா.திக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்து வந்தார்.

வலிந்து கா.ணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பு கூறல்களை உறுதி செய்யவும், ப.யங்கரவாத த.டைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்காகவும் ரனிதா குரல் கொடுத்து வருகின்றார்.

போர் காரணமாக தனிப்பட்ட ரீதியில் பா.திக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் குரல் கொடுத்து வருகின்றார்.

உலகின் தைரியமான பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதல் பெண்மணி டொக்டர் ஜில் பெய்டன் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளார்.

இணைய வழி மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட உள்ளதுடன், இந்த நிகழ்விற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தனி பிலிங்கன் தலைமை தாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.