ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : விருச்சிக ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை 2021-ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெற்றி நடை போடுவீர்கள்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். குறிப்பாக நிலுவையில் இருந்த கடன் தொகைகள் தீரும் யோகமும் உண்டு. உங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பார்.

கேது பகவான் முதல் வீட்டிலும், ராகு 7-வது வீட்டிலும் அமர்ந்திருப்பார்கள். மற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும். இந்த கிரக நிலையின் அடிப்படையில் உங்களுக்கு உரிய பலன்களை இனி காண்போம்.

குடும்பம் : விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நிறைய சவால்களை எதிர் கொள்வீர்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோருடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. அடுத்து வரும் காலகட்டத்தில் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பார்கள்.

உடன்பிறப்புகளோடு இணக்கமாக செல்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய யோகம் உண்டாகும். அவ்வபோது குடும்பத்தில் குதூகலத்துடன் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆண்டின் இறுதியில் உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் சனி பகவான் 3 வது இடத்தில் அமர்ந்திருப்பதால் நீங்கள் அதிகம் உழைப்பை கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். உங்களுடன் போட்டி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

எனவே சோர்வு ஏற்பட்டாலும், சோம்பலைத் தவிர்த்து உற்சாகத்துடன் நீங்கள் பணி புரிந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். ஆண்டின் நடுப்பகுதியில் பண ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

புதிய முயற்சிகளை அந்நேரத்தில் தள்ளிப் போடுவது உத்தமம். ஆண்டின் இறுதியில் நல்ல அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஆண்டின் இறுதியில் அதற்குரிய சாதகமான பலன்களை காணலாம்.

இடமாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலம் உங்களுக்கு சுமூகமாக செல்லும். அதன் பிறகு ஆண்டின் இறுதியில் நல்ல மாற்றங்களும், அதிர்ஷ்டங்களும் ஏற்படலாம். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும்.

பொருளாதாரம் : பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் இவ்வாண்டு விருச்சிகம் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரித்தாலும், பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும்.

வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு வர இருக்கும் விரயங்கள் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

பெண்களுக்கு : விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். மே மாதத்தில் சில தேவையில்லாத மன கஷ்டங்களை சந்திக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அக்டோபர் மாதத்திற்கு பின்னர் அதாவது ஆண்டின் இறுதிக்கட்டத்தில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு பலமாக அமையக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள்.

பரிகாரம் : குடும்பத்துடன் இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தால் மிகவும் நல்லது. வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வைக்க தோஷங்கள் நீங்கும். உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்யுங்கள், நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : துலாம் ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

2021ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள நிச்சயமாக எதிர்பார்ப்பு இருக்கும். 2020 போல் எந்த ஆண்டும் உங்களுக்கு இருந்திருக்காது.

2021இல் உங்களுடைய ராசிப்படி சனி பகவான் நான்காவது வீட்டில் இருந்து கொண்டே பத்தாம் வீட்டை பார்வையிடுகிறார். செவ்வாய் பகவான் ஏழாவது வீட்டிலும், ராகு எட்டாவது வீட்டிலும், கேது இரண்டாவது வீட்டிலும் அமர்ந்து கொண்டிருப்பார்கள்.

மற்ற கிரகங்கள் அவ்வபோது பெயர்ச்சி ஆகி கொண்டே இருப்பார்கள். ஆக உங்களுடைய ராசிக்கு நல்லதும், கெட்டதும் சேர்ந்தே நடக்கும். ஒரு வகையில் நல்லது நடந்தால் இன்னொரு வகையில் கெட்டதும் கூடவே வரும்.

குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அவ்வபோது மனஸ்தாபங்களும் வந்து போகும். சகோதர சகோதரிகளின் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் பழையபடி ஒன்றாக இணைவார்கள்.

உங்களுக்கு வாழ்க்கை துணையாக இருப்பவர்களே உங்களுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவார்கள். பழைய பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் புதுப்பிக்கும் வகையில் வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது உங்களுடைய ராசிக்கு 10-வது வீட்டில் வரும் பொழுது தேவையில்லாத பிரச்சினைகள் தலைதூக்கும்.

உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாத மனக்கசப்புகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் மரியாதையும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் லாபம் பெறுவதில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஆண்டின் கடைசி மாதங்களில் நல்ல லாபம் நீங்கள் காணலாம்.

உத்தியோகம் : உத்தியோகத்தை பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக அமையாவிட்டாலும், ஏப்ரல் மாதத்தில் வரும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நன்றாகவே இருக்கும்.

நீங்கள் எதிர் பார்க்கும் இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் தொந்தரவு நீங்கி, புதிய வாய்ப்புகளை அவர்களிடமிருந்தே பெறுவீர்கள்.

பொருளாதாரம் : துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் தொடக்கத்தில் இறக்கத்துடன் காணப்பட்டாலும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் ஏற்றத்துடன் இருக்கும்.

எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதற்கு முன்னர், முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

பெண்களுக்கு : பெண்களுக்கு ஆண்டின் இறுதியில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகளும் வந்து சேரும். இல்லத்தரசிகளுக்கு இதுவரை இருந்து வந்த சோர்வு நீங்கி, புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பணத்தை முதலீடு செய்வதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

பரிகாரம் : துலாம் ராசியில் பிறந்தவர்கள் பசுமாட்டிற்கு தீவனம் கொடுத்து வர நன்மைகள் நடைபெறும். பித்ரு பூஜைகளை முறையாக செய்து வர நல்ல பலன்கள் உண்டாகும். வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வர சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்வது பாவத்தை நீக்கி, அதிர்ஷ்டம் உண்டாக வழி வகுக்கும்.

இந்த 2021 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : கன்னி ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

கன்னி ராசிக்காரர்களுக்கு 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற ஆர்வம் நிச்சயம் இருக்கும். இதுவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த 2020ஆம் ஆண்டு முடிந்த நிலையில் இனி வரும் காலங்களில் வசந்தம் வீசுமா?

என்கிற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த உங்களுடைய ராசிக்கு ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சனி பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பார். ராகு, கேது முறையே 9 மற்றும் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பார்கள். குரு பகவான் ஐந்திலிருந்து பின்னர் பெயர்ச்சியாகி 6 மற்றும் 7வது இடத்தில் இந்த வருடம் இருப்பார்கள். இந்த கிரக அமைப்பின்படி திடீர் அதிர்ஷ்டங்களும், எதிர்பாராத தோல்விகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து 5-ஆம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் குடும்பத்தின் மீது இருக்கும் பற்றும் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அவர்களுக்கென தனியாக நேரம் செலவிட்டால் வர இருக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதலை உண்டாக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஈகோ, போட்டி, பொறாமை எல்லாம் வீட்டிற்கு வெளியே தான், உள்ளே அல்ல என்பதை உணர வேண்டும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் சுபகாரிய விஷயங்களெல்லாம் நடைபெறும் யோகம் உண்டு. மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

நீங்கள் வெவ்வேறு துறைகளில் இருக்கும் நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் அமையும். அவர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்ல அபிப்ராயம் உண்டாகும்.

தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் ஒருசிலருக்கு கையெழுத்தாக கூடிய யோகம் உண்டாகும்.

உத்தியோகம் : உத்தியோகத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்களை பெறுவீர்கள். பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறுசிறு சண்டை சச்சரவுகளும், தேவையற்ற பிரச்சினைகளும், அதனால் வரும் மன உளைச்சலும் பாதிப்புகளை உண்டாக்கும்.

வார்த்தைகளை விடுவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உங்களுடைய நல்ல குணத்தை கூட திரித்து தவறானவர்களாக காட்டி விடக்கூடிய அபாயம் உண்டாகும் என்பதால் அதிக அளவு பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுடைய புதிய புதிய முயற்சிகளுக்கு வரவேற்புகள் ஏற்படும்.

பொருளாதாரம் : கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்கு நல்ல திறமை உண்டு. ஆண்டின் தொடக்கத்தில் பண ரீதியான விஷயத்தில் பெரும் சிக்கல்களை சந்தித்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு சிறப்பாகவே அமைய இருக்கிறது.

திடீர் அதிர்ஷ்டங்களும், யோகங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையலாம். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு : பெண்களைப் பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். இதுவரை உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் தடைபட்டு இருந்த சுபச்செய்தி ஒன்று கிடைக்கும் யோகமும் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் : கன்னி ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மனை வணங்கி வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலும் உங்களால் முடிந்த ஏழை முதியவர்களுக்கு சிவப்பு நிறத்தில் வஸ்திர தானம் செய்யுங்கள். எதிர்பார்த்தவை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

இந்த 2021 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : சிம்ம ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

சிம்ம ராசிக்காரர்கள் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற பயத்தில் இருக்கலாம். உங்கள் ராசிப்படி 2021இல் சனி பகவான் ஆறாம் வீட்டிலும், செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டிலும், குரு பகவான் ஏழாவது வீட்டிலும் இடம் பெயருவார்கள்.

நிழல் கிரங்களான ராகு மற்றும் கேது முறையே 6 மற்றும் 4 ஆகிய இடங்களுக்கு பெயர்ச்சி அடைவார்கள். இது போன்ற கிரக அமைப்பில் உங்களுடைய வாழ்க்கைத் துணையாக இருக்கும் நபர்களுடன் நல்ல புரிதல் உண்டாகும்.

குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அதுவரை சண்டை, சச்சரவுகளோடு இருந்தாலும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நிம்மதியான சூழல் உண்டாகும்.

உற்றார், உறவினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. அவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் உண்டாகும்.

உங்களுடைய அன்பான குடும்பத்திற்காக சிறிது நேரத்தை கூடுதலாக செலவிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையான நெருக்கத்தை அதிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் இடைவெளி மன அமைதியை கெடுக்கலாம்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் ராகுவின் பார்வையால் உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நயமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவீர்கள்.

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து எதிரிகள் பொறாமை படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இதனால் தேவையில்லாத புதிய பிரச்சனைகளும் உருவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

செவ்வாய் பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய பணிகளில் சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும். எதிர்வரும் சவால்களை கூட திறமையாக கையாளுவீர்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செவ்வாயின் இட மாற்றத்தினால் சில இடையூறுகள் ஏற்பட்டு மறையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

உத்தியோகம் : உத்தியோகத்தை பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்கள் நிறைய அலைச்சல்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் குரு பகவான் சேர்ந்து இருப்பதால் நிறைய பிரச்சனைகளை கொடுப்பார்கள்.

கிரகப் பெயர்ச்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் வரை சுமாரான பலன்கள் இருக்கும். ஆண்டின் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நல்ல படியாக நடக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு ஆண்டின் இறுதியில் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கும்.

பொருளாதாரம் : பொருளாதாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் பலன்களும் இருக்கும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவினங்களும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும், ஏப்ரல் மாதம் கூடுதல் பலன்கள் உண்டாகும். பணம் பல வழிகளில் வந்தாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் நிச்சயம்.

பெண்களுக்கு : பெண்களைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஒருவிதமான பதற்றத்துடன் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்லதொரு மாற்றம் உண்டாகும்.

உடல் நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. சத்தான உணவு பழக்கத்தால் மருத்துவ ரீதியான வீண் விரயங்களை தவிர்க்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம். இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

பரிகாரம் : சனிக் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்து வர நல்லதெல்லாம் நடக்கும். வியாழன் கிழமையில் மரங்களை நடுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற நல்ல காரியங்களை செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

இந்த 2021 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

கொழும்பில் வீடு வாங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு : இன்று முதல் சலுகை கடன் திட்டம்!!

சலுகை கடன் திட்டம்..

அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 6.25 வீத சலுகை வட்டியின் கீழ் விசேட கடன் வழங்கப்படவுள்ளது.

நிதி அமைச்சின் தகவலுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைய, வீடுகள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்பு உட்பட பிரதேசங்களில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்த யோசனை முறைக்கு முன்னிலை வழங்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள முழுமையான கடன் தொகை 10 மில்லியன் ரூபாயாகும்.

குறித்த கடனை மீள செலுத்த வழங்கப்படும் காலம் 25 வருடங்களாகும். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியில் இந்த கடன் செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : கடக ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

2021ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். சனி பகவான் ஏழாம் வீட்டிலும், ராகு மற்றும் கேது முறையே ஐந்து மற்றும் மூன்றாவது வீட்டிலும் இருப்பார்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் கிரகம் பத்தாவது வீட்டிலும், பின்பு அடுத்தடுத்த வீடுகளிலும் பெயர்ச்சி ஆகிறார். இந்த கிரக அமைப்பில் இருப்பதால் உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாக போகிறது.

குடும்பம் : குடும்பத்தை பொறுத்தவரை கடக ராசிக்காரர்கள் நிறைய சவால்களை எதிர் கொள்வீர்கள். சனி பகவானுடைய பார்வை உங்களது ராசியில் இருந்து நான்காவது வீட்டை நோக்கி இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிறு விஷயத்தை கூட, வாக்குவாதங்கள் செய்து, பேசி பேசியே பெரிதாக்கி விடுவார்கள். கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

செவ்வாய் பகவானுடைய பார்வையும் நான்காம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுத்தால் நல்லது நடக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், சிறப்பான வேலை வாய்ப்பும் அமையலாம். ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் இறுதியிலும் அனுகூலமான பலன்களை கொடுத்தாலும், நடுப்பகுதியில் இருக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறைந்து முன்னேற்றத்திற்கு நல்ல வழி கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்து அதிக லாபங்களை காண்பீர்கள்.

உத்தியோகம் : கடக ராசிக்காரர்களுக்கு உத்தியோக ரீதியான விஷயத்தில் அதிகம் நிதானத்துடன் இருக்க வேண்டிய காலமாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கவனம் தேவை.

ஆண்டின் தொடக்கத்தில் சுமூகமாக சென்றாலும், பின்வரும் காலங்களில் வம்பு வழக்குகளையும், வாய்த் தகராறுகளையும் எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வீண் பழியை சுமப்பதற்கு சந்தர்ப்பங்கள் அமையலாம். எனவே எச்சரிக்கையுடன் செயலாற்றுவது மிகவும் நல்லது. எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

பொருளாதாரம் : பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிகம் வரும் பணத்தை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்காமல் உபயோகமான விஷயங்களை செய்வதும், வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்பதும், வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவதும் நல்ல பலன் தரும். அரசாங்கத் துறையில் வரவேண்டிய பலன்களும் அனுகூலமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன்கள் படிப்படியாக குறைந்து விடும்.

பெண்களுக்கு : கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடியும் வாய்ப்புகள் உண்டாகும். எதையும் போராட்டத்தை சந்தித்த பின் தான் வெற்றி கிடைக்கும்.

போராடுவதற்கு முதலில் மனோதிடத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்புகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்க திட்டம் தீட்டுவீர்கள். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.

பரிகாரம் : கடக ராசியில் பிறந்தவர்கள் கணபதியை வழிபட்டு வர நன்மைகள் பிறக்கும். உங்களுக்கு வரக்கூடிய நோய்கள் தீர குரு பீஜ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, வழிபாடுகள் செய்து வரவும். சிவப்பு நிற தானியங்களை தானம் செய்தால் யோகம் பெறலாம்.

2021 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இலங்கையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயக் குற்றி!!

20 ரூபாய் நாணயக் குற்றி..

இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் 20 ரூபா நாணயக்குற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய 20 ரூபா நாணயக் குற்றிகள் மூவாயிரம் இன்று வெளியிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : மிதுன ராசி!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

2021 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பார். சனிபகவான் எட்டாவது வீட்டிலும், ராகு-கேது ஆறு மற்றும் இரண்டாவது வீட்டிலும் அமர்ந்திருப்பார்கள்.

செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் இருந்து ஆண்டின் இறுதியில் ஐந்தாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இவ்வாறு இருக்கும் கிரக நிலையில் மிதுன ராசிக்காரர்கள் நிறையவே ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

குடும்பம் : குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமைய இருக்கிறது. இதுவரை பிரிந்து இருந்த குடும்பங்கள் கூட ஒன்று சேர்வதற்கான அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.

எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் எல்லாம் 2021 ஆம் ஆண்டில் நிச்சயம் நடைபெறும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண யோகங்களும் கைகூடி வரும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களும் திருமண பந்தத்தில் இணைவார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஒற்றுமைக் குறைவு தளர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். ஈகோ பார்க்காமல் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்வது மன அமைதியைக் கொடுக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கடினமான உழைப்பே வெற்றிக்கு காரணமாக அமையப் போகின்றது. நீங்கள் எந்த அளவிற்கு உங்களுடைய உழைப்பை மூலதனமாக போடுகிறீர்களோ அதே அளவிற்கு வெற்றியும் நிச்சயமாக கிடைக்கப் போகிறது.

வெற்றியை நோக்கிய பயணத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் சோர்வடையாமல் வீர நடை போடுவது நன்மைகளை கொடுக்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சீர் செய்ய புதிய யுத்திகளை கையாள்வது முன்னேற்றத்தை கொடுக்கும்.

உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் ஏழாவது வீட்டில் அமரும் புத பகவானால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

ஆனால் இறுதியில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றத்தை பெறலாம். உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய காலமாக அமையப் போகிறது. முன்கோபத்தை தவிர்த்து, சாதுரியமாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத் தான்.

பொருளாதாரம் : பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். இருப்பினும் நீங்கள் அதனை திறம்பட கையாளுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானம் சிறப்பாக இருக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது உத்தமம். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகளால் ஆபத்தை சந்திக்கலாம்.

பெண்களுக்கு : மிதுன ராசியில் பிறந்த பெண்கள் குடும்பத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு போராடுவார்கள். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் சுறுசுறுப்புடன் செயலாற்ற முடியும். உங்களுடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை நீங்கள் உணரும் காலமாக அமையப் போகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் : தோஷ நிவர்த்திக்கு நவகிரக பரிகாரத்தை செய்வது நல்ல பலன் தரும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி பூஜை செய்து வர பணவரவு சிறப்பாக இருக்கும். ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

2021 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தேசியக் கொடி!!

புத்தாண்டை முன்னிட்டு..

புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிகவும் உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கையின் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் தேசியக் கொடிகள் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, ஜப்பான் மற்றும் தென் கொரியா தங்களது புத்தாண்டை இரவு 7 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) கொண்டாடியதால் முதலில் அந்நாட்டு கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் இரவு 8 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிப்படுத்தப்பட்டதுடன், இரவு 9 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இரவு 10.30 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) இந்திய மற்றும் இலங்கை நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் கொடிகள் இரவு 11 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிபடுத்தப்பட்டன.

இதேவேளை, அதிகாலை 4 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பிரேசில், கனடா, அமெரிக்கா, சிலி, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் அதிகாலை 5 மணிக்கு காட்சிப்படுத்தப்படும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : ரிஷபம்!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா? ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சி ஆவார். ராகு கேது முறையே 1 மற்றும் 7 ஆகிய இடங்களில் இருப்பார்கள்.

செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலிருந்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கப் போகின்றார். மேலும் அவ்வாண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய ராசியின் நான்காம் வீட்டை அவர் பார்வையிடுவார்.

இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற இறக்கத்துடன் இருக்கப் போகின்றது. இன்பம் வந்தாலும் அதிகமாகவும், துன்பம் வந்தாலும் அதிகமாகவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்ப்புகளை நீக்கி, வருவது வரட்டும் என்கிற மனப்பான்மை இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாகும்.

குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு வர இருக்கும் இந்த ஆண்டு நல்ல பலன்களையே கொடுக்கும். அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதனால் பெரிய பாதிப்புகள் ஒன்றும் உண்டாகப் போவதில்லை.

குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உருவாகும். இதுவரை எலியும், பூனையுமாக இருந்தவர்கள் கூட நட்புறவாக மாறிவிடுவார்கள்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த உங்களுடைய தொழில் படிப்படியாக முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் உண்டு.

வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சனி பகவான் அமர இருக்கும் இடம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரும் பாதிப்புகள் ஒன்றும் ஏற்படாது. வருட இறுதியில் புதிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் நோக்கிய பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் எளிதாகக் கிடைக்கும்.

இதனால் ஊதிய உயர்வும் சாதக பலனையே கொடுக்கும். தீய நண்பர்களின் சகவாசத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். நீங்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு எப்பொழுதும் மன்னிப்பு என்பதே கிடையாது. செய்த தவறுக்கு உரிய பலனையும் அனுபவிப்பீர்கள்.

பொருளாதாரம் : செவ்வாய் பகவான் 12 இல் இருப்பதால் தாராள தன வரவு விரயம் ஆகிக் கொண்டே இருக்கும். ஒருபுறம் பணம் வந்து கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் வேறு வழியாக சென்று கொண்டே இருக்கும்.

நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அதனை தவிர்க்க இயலாது. திடீர் தனவரவு அதிர்ஷ்டம் தரும் வகையில் இறுதியில் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

பெண்களுக்கு : ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இவ்வாண்டு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் பிரகாசிக்க நினைக்கும் பெண்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் கிரகங்களின் ஆட்சி பலத்தால் வெற்றியைக் காண்பீர்கள்.

வாழ்க்கையில் இதுவரை பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி அடுத்த படிக்கு முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற உணவுகளை தவிர்த்து நல்ல உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உற்சாகம் நிச்சயம் உண்டாகும்.

பரிகாரம் : பித்ரு பூஜைகளை சரியாக நிறைவேற்றுவதும், குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நினைத்தது நடக்க சனிக்கிழமைகளில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள் நல்லது நடக்கும்.

பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார வழிமுறைகளுடன் விசேட வழிபாடுகள்!!

விசேட வழிபாடுகள்..

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களுடன் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டு புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் காலையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரச ஊழியர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றனர்!!

அரச ஊழியர்கள்..

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 8.50 மணிக்கு மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேனவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள் : மேஷம்!!

ஆங்கிலப் புத்தாண்டு 2021 பலன்கள்..

கடந்த வருடம் போல் எப்போதும் உலக மக்கள் துயரத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். உலகின் மிக மோசமான வருடமாக இருக்கும் 2020 கடந்த நிலையில், புதிய 2021 ஆம் ஆண்டை பற்றிய பயமும் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டாவது உலக மக்களுக்கு சுபீட்சத்தை தருமா? என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது என்று கூறலாம். அவ்வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான பலன்களை 12 ராசியில், முதலாவதாக இருக்கும் மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இதுவரை மனம் தளர்ந்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் மனோதிடம் அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தை விட, இறுதியில் உங்களுக்கு நல்ல நேரம் ஆனது ஆரம்பிக்கும்.

உங்கள் ராசிக்கு ராகு, கேது முறையே 2-வது மற்றும் 8-வது வீட்டில் அமர போகின்றார்கள். அதே போல் சனிபகவான் 10-ஆம் இடத்திலும், குரு பகவான் 11-ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆவார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே செவ்வாய் பகவான் உங்களுடைய சொந்த ராசிக்கு வருவதால் நல்ல பலன்களும் உண்டாகும்.

குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே உள்ளன. வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நலமாகும்.

ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே ஆரோக்கிய ரீதியான அக்கறை கூடுதலாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதால் இல்லத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். மனதிற்குப் பிடித்த வரன்கள் அமையக்கூடிய யோகம் உண்டு. உங்கள் காதல் திருமணத்தை நோக்கிய பயணத்தில் செல்லும்.

வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இறங்கி இருந்த முன்னேற்றத்தை மீண்டும் மேலே தூக்கி செல்ல நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரிய சூழ்நிலைகளையும் நீங்கள் அவர்களுக்கு உருவாக்கி தர வேண்டும். உங்கள் ராசிக்கு சனி பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் திடீர் வாய்ப்புகள் வந்து சேரும். வருகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

உத்தியோகம் : மேஷ ராசியில் பிறந்த உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ஓரளவுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் போன்றவற்றில் சாதகப் பலன்கள் கிடைக்கும்.

மேலதிகாரிகளுடன் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். சக பணியாளர்களிடத்தில் இருந்து வந்த குழப்பங்களும் தீரும். புதிய வாய்ப்புகள் தட்டிப் போகவும் சந்தர்ப்பங்கள் அமையலாம். எனவே புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும்.

பொருளாதாரம் : பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையை உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் எளிதாக சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்வது மிகவும் நல்லது. குரு பகவான் 11-ஆம் இடத்திற்கு வரும் பொழுது பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவார்.

பெண்களுக்கு : மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு உறுதியான முடிவுகள் எடுக்கும் திறன் வளரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை மன உளைச்சலில் இருந்தாலும், அவை படிப்படியாக மாறி தெளிவான சிந்தனையைக் கொடுக்கும்.

குடும்பத்தில் வேலை பளு அதிகரிப்பதால் உடல் அளவிலும், மன அளவிலும் சோர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் நிறைய பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொள்ளலாம்.

பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

அன்று சாதாரண ஆசிரியராக இருந்து பெரும் கோடீஸ்வரர் ஆன நபர் : திடீரென 1 லட்சம் கோடி ரூபாயை இழந்த பரிதாபம்!!

ஜாக் மா..

சீன அரசின் நடவடிக்கைகளால், அலிபாபா நிறுவனர், ஜாக் மாவின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவடைந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன், சாதாரண ஆசிரியராக இருந்தவர், ஜாக் மா. இவர், வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்கும், அலிபாபா நிறுவனத்தை துவக்கியதன் மூலம், குறுகிய காலத்தில் சீனாவின் பெருங் கோடீஸ்வரராக உருவெடுத்தார். இவரது சொத்து மதிப்பு, 4.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

இரு மாதங்களுக்கு முன், வலைதளத்தில் நிதிச் சேவைகளை வழங்கும் ஆன்ட் நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், ஜாக் மா, 2.62 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டார்.

இதையடுத்து, சீன அரசு விழித்துக் கொண்டது. ஆன்ட் மூலம், ஜாக் மா, அரசு வங்கித் துறையை ஆட்டம் காண வைத்து விடுவார் என அஞ்சியது. அதனால், ஆன்ட் பங்கு வெளியீட்டிற்கு சீன அரசு தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, அலிபாபா, டென்சன்ட் நிறுவனங்கள் கடந்த காலத்தில் கையகப்படுத்திய நிறுவனங்களின் வரலாறை தோண்டி எடுத்து, சட்ட மீறல்கள் நடந்துள்ளதாக கூறி, அபராதம் விதித்தது.

ஜாக் மா, சீனாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவங்களால், ஜாக் மா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, இரண்டு மாதங்களில், 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

அவருடைய சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவடைந்தது. எனினும், அவர், தற்போது, 3.62 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன், ‘போர்ப்ஸ்’ இதழின், உலகின், 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வ.ய.து சி.று.மி.க்.கு காதல் வலை வீ.சி.ய கா.வ.ல.ர் : தா.ய் க.ண்.டி.த்.த.தா.ல் எ டுத்த வி பரீத மு டிவு!!

சென்னையில்..

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மணிசங்கர் (22), இவர் ஆ.யுதப்ப.டை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மணிசங்கர் தனது குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே கு.தி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றார்.

உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீ.ட்.டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எ லும்பு மு றிவுடன் ஆ.பத்தான நிலையில் இருந்த மணிசங்கரை மேல் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வி.சாரணை நடத்தினர். அதில், மணிசங்கர் வசித்து வரும் குடியிருப்பில் ஆ.யுதப்ப.டை பெண் காவலர் ஒருவர் வசித்து வருகிறார்.

அவரது 15 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். சி.று.மி.யி.ன் அழகில் மயங்கிய மணிசங்கர், தினமும் பின் தொடர்ந்து காதல் வலை வீசியுள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலை சி.று.மி.யி.ட.ம் கூறியுள்ளார். அதற்கு சி.று.மி மறுப்பு தெரிவித்ததுடன், தனது தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

உடனே ஆ.யுதப்ப.டை பெண் காவலர் மணிசங்கரை அழைத்து க.ண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிசங்கர் அப்போது ரசாயனத்தை கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

அதன் பிறகும், சிறுமி வீட்டில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், மணிசங்கர் பின் தொடர்ந்து காதல் தொ.ல்.லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் சி.று.மி, மணிசங்கர் காதலை ஏற்று கொள்ளவில்லை. வழக்கம்போல் கடந்த 26ம் தேதி தனது காதலை சி.று.மி மற்றும் அவரது தாயிடம் கூறியுள்ளார்.

அதற்கு பெண் காவலர், எனது மகளுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. அவள் பள்ளி படிப்பே இன்னும் முடிக்கவில்லை. அவளை நிம்மதியாக படிக்க விடு.

அப்படியே இருந்தாலும் உனக்கு எனது மகளை நான் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். ஏன் தேவையில்லாமல் எனது மகளை பின் தொடர்ந்து தொ.ல்.லை கொடுத்து வருகிறாய் என்று தி.ட்.டி.ய.தா.க கூறப்படுகிறது.

இதனால், ம.ன.மு.டை.ந்.த மணிசங்கர் த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து வி.சாரித்து வருகின்றனர்.

மி.ரட்டிய தம்பதி மீது திடீரென பற்றிய தீ : நேர்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரி..

வீட்டுப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எ.திர்ப்பு தெரிவித்து உடலில் பெ.ட்ரோல் உற்றிய நபர்கள் திடீரென்று எ.ரிந்து உ.யி.ரை.வி.ட்.ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை ஒட்டிய கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அடுத்த நெல்லிமூடு பகுதியை சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு பரிதாபகரமாக ப.லியாகினர்.

45 வயதான ராஜன் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய அம்புலி என்பவருமே இவ்வாறு ப.லியாகினர். கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந் நிலையில் வீட்டு நிலம் தொடர்பாக பக்கத்து வீட்டு காரர் வசந்தா என்பவருக்கும் ராஜனுக்கும் நீண்ட நாள் பி.ரச்சனை இருந்துள்ளது.நிலப் பி.ரச்சனை நீதிமன்றம் வரை செல்ல நீதிமன்றத்தில் ராஜனுக்கு எ திராக தீர்ப்பு வந்துள்ளது.

இதை தொடர்ந்து நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் பொலிசாருக்கும் வருவாய் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜனின் வீட்டை ஜப்தி செய்ய அதிகார்கள் வந்துள்ளனர்.

ஆனால் அதற்கு எ திர்ப்பு தெரிவித்த ராஜன் தனக்கு மேற்முறையீடு உள்ளது என்றும் உடனே வீட்டை காலி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டதுடன், தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் உடனே வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளனர்.

ம.னமு.டைந்த ராஜன் வீட்டில் இருந்த பெ ட்ரோலை தன்மீதும் மனைவி மீதும் உற்றிக்கொண்டு கையில் லைட்டர் ஒன்றையும் வைத்துக்கொண்டு தீ வைத்து கொள்வதாக அதிகாரிகளை மி.ரட்டியுள்ளார்.

தீவைக்க முயன்ற ராஜனை தடுக்க காவலர் ஒருவர் முயன்ற போது தீ தவறி தம்பதியர் மீது பற்றியது. இதில் ப.டுகாயமடைந்த ராஜனும் , அப்புலியும் 70 சதவீதம் தீக் கா.யங்களுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை தொடர்ந்து வந்தநிலையில் திங்கள் அன்று காலை ராஜன் உ யிரிழந்தார். அம்புலியும் அன்று இரவே உ யிரிழந்தார். ராஜன் கொடுத்த ம.ர.ண வாக்குமூலத்தில் அதிகாரிகளை மி.ரட்டவே இது போன்று செய்ததாகவும்,

ஆனால் தவறாக தீ பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காவலர்கள் தீயை தட்டிவிட்டதால் தான் தனது தாய், தந்தை இ.றந்ததாக ராஜனின் மகன்கள் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எந்த நிலத்திற்காக ராஜன் போ.ரா.டி உ.யிர்விட்டாரோ அதே இடத்தில் தம்பதியரின் உ.டல்களை ஊர்மக்கள் அடக்கம் செய்துள்ளனர். ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை தடுக்க நினைத்து தீபற்றி தம்பதியர் உ.யிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.