வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் கு டும்ப ச ண் டை கா ரணமாக க த் தி க் கு த் து க் கு இ லக்காகி மூ வ ர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கை து செ ய்யப்படடு ள்ளதாக வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் கணவன் மனைவிக்கு இடையில் ஏ ற்பட்ட கு டும்ப த க ரா று காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ம னைவியுடன் த க ரா று தொடர்பில் கதைப்பதற்கு கணவன் பெண் வீட்டிற்கு இன்று (20.11) மதியம் சென்றுள்ளார். அங்கு இரு தரப்பும் கதைத்துக் கொண்டிருந்த போது வா ய் த ர் க் க ம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கு றித்த கு டும்பஸ்தர் த ன து ம னை வி, மா மி, மா மி யா ரி ன் தா யா ர் ஆ கியோருக்கு க த் தி யி னா ல் கு த் தி ய நி லையில் அ வர்கள் கா யம டைந்த வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கா யமடைந்த பெ ண்ணின் க ணவரான 32 வயது குடும்பஸ்தர் வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளதுடன்,
மேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள நகையகத்தில் தங்க நகைகளை களவாடிய மூன்று நபர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நகையத்தில் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு வருகை தந்த நபர்கள் அதனை சூட்சுமமான முறையில் களவாடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து நகையக உரிமையாளரினால் கடந்த 16.11.2020 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
நகையக உரிமையாளரின் முறைப்பாட்டினையடுத்து இதனை விசாரணை மேற்கொள்ள வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகவன்ன வழிகாட்டலின் கீழ்,
உப பொலிஸ் பரிசோதகர் பிரனித் திசாநாயக்க தலைமையிலான பொலிஸ் சார்ஐனாகளான திசநாயக்க, நிசாந்த, சந்தன, ரஞ்சித் பெண் பொலிஸ் கொஸ்தாபர் மதுசானி ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் பிரகாரம் களவாடப்பட்ட நகைகள் அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள நகை அடைவு நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் அதனை மீட்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு குழுவினர் நகையினை களவாடிய நபர்களையும் தலாவ பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அம்பன்தொட பகுதியினை சேர்ந்த 45வயதுடைய தாய் மற்றும் அவரின் 30 வயதுடைய மகள் மற்றும் அபரன பகுதியினை நேர்ந்த மகளின் காதலான 18 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் நாடு முழுவதும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதுடன் கொள்ளையடிக்கும் நகைகளை வேறுபகுதியில் அடைவு வைப்பதினை கடந்த பல மாதங்களான செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட 4லட்சம் பெறுமதியான 3 காப்பினையும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போலி நாணயத்தாள்களுடன் தொடர்புடைய ச ட்ட வி ரோத நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் மதவாச்சியில் கை து செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து நேற்று அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு போ லி நாணயதாள்கள் 200, நாணயம் அச்சிடும் இயந்திரம், 100 டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயதாள்கள் மூன்று மற்றும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கை ப்பற்ற ப்பட்டன.
கை து செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கை ப்பற்ற ப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.
க ள் ள நோ ட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கை து செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கை து செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நேற்று இரவு அந்த பெண் தனது இரண்டரை வயதுடைய குழந்தையுடன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் குழந்தையை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று காலை பொலிஸாரினால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25 வயதுடைய அந்த பெண் போ தை ப் பொ ரு ள் வர்த்தகத்திற்கு தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகளில் முதல் தடவையாக மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு மூன்று ஜனாதிபதிகள் சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மும்மலப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுர குணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் நிகழ்வாக சூர சம்ஹாரம் விளங்குகிறது.
இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்த ஷஷ்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போ ர் இடம்பெறுவது வழமை.
அந்தவகையில் இன்று (20.11) வெள்ளிக்கிழமை கந்த ஷஷ்டி விரத்தின் இறுதிநாளாகும். அந்தவகையில் அந்தணச் சிவாச்சாரியார்கள் புடைசூழ, மங்கள வாத்தியங்கள் முழங்க வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சுகாதார விதிமுறைகளுடனும், குறைந்தளவிலான பக்தர்களுடனும் ஆலய வளாகத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரர்களுடன் போ ர் செய்து அவர்களை வதம் செய்து, அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
கொவிட்- 19 தாக்கம் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதினை தவிர்ப்பதற்காக வவுனியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சூரன்போர் நிகழ்த்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அசுரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுர குணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் சடங்காக சூரன் போர் விளங்குகிறது.
இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்தசஷ்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போர் இடம்பெறுவது வழமை.
அந்தவகையில் இன்று (20.11) வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விரத்தின் இறுதிநாளாகும். எனினும் சுகாதார நடைமுறை மற்றும் மக்கள் ஒன்று கூடுவதினை தவிர்க்கும் வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரன் போர் நிகழ்த்துவதற்கு வவுனியா சுகாதார பிரிவினரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டளவில் மக்களுடன் மாத்திரம் சூரன்போரை நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பிரிவினரிடம் ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதற்கும் சுகாதார பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் மேன் பவர் ஊழியர்கள் கடும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். நாளாந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஊழியர்களுக்காக இயங்கும் அமைப்பின் இயக்குனர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையை கணக்கிட்டால் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நிரந்தர தொழிலற்ற 30 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் 800 முதல் 1200 வரை சம்பளம் பெறுகின்றனர்.
எனினும் அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. தொழில் வழங்குபவர்கள் அவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதில்லை.
அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தொழில்களை இழந்துள்ளதுடன் இருப்பிடங்களையும் இழந்துள்ளனர். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் அவர்கள் இருப்பிடங்களுக்கு வர வேண்டாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் உணவு, நீர் இன்றி இரண்டு வாரங்கள் அறைக்ளுக்குள் சிக்கியுள்ளனர். மிகவும் மோசமான நிலைமைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த பட்சம் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு உதவுமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான தாயும் மகனும் தப்பியோடியுள்ளனர்.
நேற்று இரவு 9 .10 மணியளவில் இவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது. தப்பியோடிய தாயும் மகனும் ஏஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் இலக்கம் 4 அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தப்பி சென்ற இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சமூக இடைவெளியை பாதுகாத்து, சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்பட்டு 6 – 13ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை நடத்தி செல்வதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிபர்களினால் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவகர், பாடசாலை அபிவிருத்தி குழு பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் பிரநிதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை கல்வி வலையமைப்பின் இயக்குனரிடம் வழங்க வேண்டும்.
சுகாதார ஆலோசனைக்கமைய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தொடர்ந்து திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் 1 – 5 வரையிலான பாடசாலைகள் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்த பின்னர் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவின் டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் மா யமான வ ழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 45 வயதான நீரஜ் குப்தா என்பவரை நவம்பர் 14 முதல் கா ணவில்லை என குறிப்பிட்டு அவரது நண்பர் பொலிசாரை நாடியிருந்தார்.
இந்த நிலையில் நீரஜ் குப்தாவை கொ.லை செ ய் து, ச டலத்தை சூ ட்கேஸில் தி ணித்து, குஜராத் மாநிலம் பரூச் ப குதியில் ம றைவு செய்ததாக பொ லிசார் க ண்டுபிடித்து ள்ளனர்.
நீரஜ் குப்தாவின் நி றுவனத்தில் ப ணியாற்றி வ ருபவர் 29 வ ய தா ன ஃபைஸல். இ வருடன் க டந்த 10 ஆ ண்டுகளாக நீரஜ் ர க சி ய உ றவில் இ ருந்ததாக, அ வரது ம னைவியின் வா க்குமூ லம் இ ந்த வ ழக்கில் மு க்கிய தி ருப்பத்தை ஏ ற்படுத்தி யதாக கூ றப்படுகிறது.
நீரஜ் குப்தா மா யமான விவகாரத்தில் ஃபைஸல் மீ து ச ந்தேகம் இ ருப்பதாக, நீரஜின் ம னைவி அ ளித்த பு காரின் பே ரில் பொ லிசார் ஃபைஸலை வி சாரணைக்கு உ ட்படுத்தியு ள்ளனர்.
ஃபைஸலுக்கு சுபைர் என்பவருடன் திருமணம் முடிவான நிலையில், நீரஜ் அதை க டுமையாக எ திர்த்துள்ளார். நவம்பர் 13 அன்று ஃபைஸலின் ஆதர்ஷ் நகரில் அமைந்துள்ள வாடகை குடியிருப்பில் வைத்தே நீரஜ் கொ.லை செ ய்யப்பட்டு ள்ளார்.
திருமணம் செய்து கொள்ளக் கூடாது என க ட்டாயப்ப டுத்தவே ஃபைஸலின் குடியிருப்புக்கு நீரஜ் சென்றுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நீரஜுக்கும் ஃபைஸலுக்கும் இடையே வா க் கு வா த ம் ஏற்பட்டுள்ளது.
அ ப்போது ஃபைஸலின் கு டியி ருப்பில் இ ருந்த சுபைர் ஆ த் தி ர த் தி ல் க த் தி யா ல் மூ ன்று மு றை நீரஜை கு த் தி யு ள் ளா ர். தொ டர்ந்து நீரஜ் இ றந்ததாக உ றுதி செ ய்த பி ன்னர், க டைக்கு செ ன்று பு திதாக ஒ ரு சூ ட்கேஸ் வா ங்கி வ ந்து, ச ட ல த் தை அ தி ல் தி ணித்து,
ரயிலில் குஜராத் சென்று அங்கே பெட்டியை ம றைவு செய்து விட்டு டெல்லி திரும்பியுள்ளார். தற்போது கொ.லை.க்.கு பயன்படுத்திய க த் தி யை பொலிசார் மீ ட்டுள்ளதா கவும், வி சாரணை தொ டரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை வளர்மதி வீதியில் வசித்து வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை கிளையில் காப்பாளராகக் கடமையாற்றி வரும் தங்கராஜா அருணன் (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் தனது தந்தையை மரத்தடி பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரிவை சந்திப்போம் என்ற பயத்தில் உயிர் தோழிகள் இருவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.
இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.
தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார்.
இதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் அ திர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள கூறினார்கள்.
அதை அவர் தனது தோழியிடம் கூறினார். எனவே அவர்கள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர். வாழும்போதுதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒன்றாக சாவோம் என்றுக்கூறி அவர்கள் இருவரும் த.ற்.கொ.லை செ ய்ய முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 14-ந் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர்.
பின்னர் 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த நிலையில் பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரின் உடல்களை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உ டல் மீட்கப்பட்டது.
இதையடுத்து இருவரிம் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பொலிசார் இது தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் பணப்பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாணயத் தாள்கள், சில்லறைகள் மற்றும் காசோலை புத்தகங்கள் பயன்படுத்துவதனை முடிந்தளவு குறைக்குமாறு இலங்கை வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இணையத்தள கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அட்டை மூலம் மேற்கொள்ளப்படுப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு பழகிக் கொள்வதற்கு இது சிறந்த காலப்பகுதி என சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் சில்வா தெரிவித்துள்ளார்.
கணக்கு ஒன்று இல்லை என்ற போதிலும், நாட்டில் காணப்படும் மோசமான நிலை காரணமாக எந்தவொரு வங்கியிலும் எவ்வித வங்கி கட்டணமுமின்றி அட்டை மூலம் மக்கள் பணம் பெறுவதற்கான வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கியாளர்களின் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கடன் அட்டையின் அதிகபட்ச கடன் எல்லை முழுமை அடையும் அந்த அட்டையில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு வங்கி கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா அச்சத்தால் வெளியே செல்ல பயந்துகொண்டு வீட்டிலிருந்தபடியே ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
Michelle Leonard (42) என்ற அந்த மூன்று பிள்ளைகளின் தாய், Ocado உணவு சப்ளை நிறுவனத்தில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும், ஆவலாக அதை திறந்து பார்த்திருக்கிறார்கள் அவரது பிள்ளைகள்.
அப்போது Michelleஇன் மகனான Alfie (19), உணவுப் பொட்டலங்களுடன் மூன்று கவர்களில் ஏதோ திரவம் இருப்பதைக் கவனித்து தன் தாயிடம் கூறியுள்ளார்.
Michelle அது என்ன என்று பார்க்க, அருவருப்பாகியுள்ளது அனைவருக்கும். ஆம், அந்த உணவுப்பொட்டங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் இருந்தது சிறுநீர்! குமட்டிக்கொண்டுவர, அந்த உணவு முழுவதையும் குப்பையில் கொட்டியிருக்கிறது குடும்பம்.
ஆதாரத்துக்காக அந்த சிறுநீர் கவர்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, Ocado நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் Michelle.
உடனே அந்த நிறுவனத்தார், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தாங்கள் ஆள் அனுப்பி அந்த சிறுநீரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். எனக்கு அதெல்லாம் போதாது என்று கூறும் Michelle, இனி ஜென்மத்துக்கும் Ocado நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்யமாட்டேன் என்கிறார்.
இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார் என்பவரின் மகள் நர்மதா (20) என்ற இளம்பெண் கோயமுத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அப்போது உடனிருந்த நர்மதாவின் தோழி ஒருவர் செல் நம்பரை கொடுத்து இந்த நம்பரில் எனக்கு அடிக்கடி போன் வருகிறது நீ அவனிடம் பேசு என்று கூறியுள்ளார்.
அந்த செல் நம்பரை நர்மதா தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு போன் செய்துள்ளார். விவரம் கேட்டு போன் செய்த நர்மதாவை கோகுல் என்பவர் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். காதலில் விழுந்த நர்மதாவை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி பேசி உள்ளார்.
இதனால் திருமணத்திற்காக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறுவதற்காக பெற்றோரிடம் இந்த கம்பெனியில் வேலை கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த நர்மதா, பெற்றோருக்கு ஏதேனும் பலகாரம் வாங்கிவிட்டு வருகிறேன் என்று சென்றுள்ளார். ஆனால் அவர் அதன் பின் வீடு திரும்பவேயில்லை.
இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் இருக்க, அப்போது நர்மதா போன் மூலம், நான் வேறு ஒருவரிடம் இருக்கிறேன், என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார். பெற்றோர் இதைக் கேட்டு, மகள் எங்கிருக்கிறாள், யாருடன் இருக்கிறாள் என்ற விவரம் தெரியாமல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மீசைக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த மணிபாலன் மகன் கோகுல் (22) என்பது தெரியவந்தது.
கோகுல் என்பவன் நர்மதாவை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதல் திருமணம் செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு ஆசை தீர்ந்ததும் அவரை விரட்டி அடித்துள்ளான்.
கர்ப்பமாக இருந்த பெண் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நர்மதா மட்டுமின்றி பல பெண்களிடம் செல்போன் மூலம் கோகுல் காதல் லீலையில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
நர்மதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த போது பல இளம் பெண்கள், பள்ளி சிறுமிகள் என்று பல பெண்களிடம் செல்போனில் பேசி காதல் வலையில் விழ வைத்து அவர்களிடம் காம லீலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது குறித்து நர்மதா கோகுலிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் அம்மா அழைக்கிறார் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று ஓட்டம் பிடித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து நர்மதா உறவினர்களிடம் கூறியுள்ளார். உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கோகுலை நர்மதா உடன் வாழ வருமாறு அழைத்துள்ளனர்.
கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்னால் இப்போது வர முடியாது பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நர்மதாவிற்கு குழந்தை பிறந்தது. அதை பார்க்க வரும் படி அழைத்துள்ளனர். அப்போதும் அவர் கொரோனாவை காரணம் கட்டி பார்க்கமல் இருந்துள்ளார்.
இதனால் நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் விசாரிப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே கோகுல், வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக கூறப்படுவதால், பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.