இறந்த தந்தையின் கனவை நனவாக்க வைத்தியராவேன் : புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவி கிசானிகா!!

கிசானிகா..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணியா வித்தியாசாலை மாணவியான கிசானிகா லோகேஸ்வரன் தனது தந்தை இறந்து நான்கு மாதத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சாதித்துள்ளார்.

குறித்த மாணவி வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார். குறித்த மாணவி தனது தந்தையின் கனவை நனவாக்க ஒரு வைத்தியராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவியின் குடும்பத்தில் தந்தை, தாய், இரண்டு சகோதரர்கள் என 5 பேர் வசித்து வந்திருந்தனர்.

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்ட தந்தையான லோகேஸ்வரன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை கொண்டு நடத்தி தனது பிள்ளைகளை கற்பித்து வந்துள்ளார். இந்நிலையில் இவ்வருடம் தை மாதம் முதல் சுகவீனமுற்ற லோகேஸ்வரன் சிகிச்சைகள் எவையும் பலனளிக்காது 2020-05-31 அன்று உயிரிழந்துள்ளார்.

தந்தையின் இறப்பு ஒருபுறம் நாட்டில் நிலவிய கொரோனா நிலவரத்தினால் பாடசாலை கல்விகள் சீராக இடம்பெறாமை உள்ளிடட பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து கல்வி கற்ற மாணவி தந்தையை இழந்து நான்கு மாதங்களில் பல்வேறு தரப்பினரின் ஆறுதல்படுத்தலில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தார்.

குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சித்தியடைந்ததையிட்டு மகிழ்வடைவதாகவும் அதற்காக முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு தன்னை வழிநடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தனது துன்பமான சூழ்நிலையில் தன்னை ஆறுதல்படுத்தி பரீட்சை எழுத வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தனது தந்தையின் கனவை நனவாக்கி வைத்தியராக வந்து எனது மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் ம ரணத்தில் ச ந்தேகம் : இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக மீ ட்கப்பட் டுள்ளார்.

கு றித்த மா ணவன் உ யி ரை மா ய்த்துக் கொ ள்ளக்கூடிய ச ம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், ம ரணத்தில் ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கைச் சொந்த இடமாகவும், பருத்தித்துறை, துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது – 23) என்ற மாணவனே நேற்றுப் பிற்பகல் ச டலமாக மீ ட்கப்ப ட்டார்.

குறித்த மாணவன், கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழகக் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று விரிவுரைக்குச் சமுகமளிக்காததால் அவருடைய சக மாணவர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் ச ந்தேகமடைந்த சக மாணவர்கள், அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், அங்கு அவர் தங்கியிருந்த அ றை பூ ட்டியவாறு காணப்படவே, குறித்த மாணவர்கள் க த வை உ டை த் து உட்சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளங்குன்றன் ய ன்னல் க ம்பியில் க ட்டப்பட் டிருந்த க யி று ஒ ன் றி ல் தொ ங் கி ய நி லை யி ல் ச டலமாகக் கா ணப்பட்டார்

இது தொடர்பில் உடனே பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், அவரின் ச டலத்தை மீ ட் டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த மா ணவன் உ யி ரை மா ய் த் து க் கொ ள்ளக்கூடிய ச ம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், ம ரணத்தில் ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை ச டலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், க ழு த் து இ றுகியதால் ம ரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

எனினும், மா ணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் ம ரணத்தில் ச ந்தேகம் கொ ண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் ப ரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அவரது உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள உள்ள அவருடைய இல்லத்துக்கு மருத்துவபீட மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் பெற்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!!

திலிப் வெதாராச்சி..

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்றைய தினம் பச்சை மீனை கடித்து சாப்பிட்ட காணொளி உலகின் பல்வேறு பிரபல்யமான ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மீன் விற்பனை ஸ்தம்பிதம் அடைந்துள்ள காரணத்தினால் மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு சமைக்காத மீனை உட்கொண்டிருந்தார்.

கொவிட்டினால் பாதிக்கப்பட்ட மீன் விற்பனையை ஊக்குவிப்பதற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மீனை உட்கொண்டார் என ரொய்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

டெலிகிராப், நியூஸ்18, நியூஸ்டியூப், ஸ்கைநியூஸ், தி கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி, ஊடகவியலாளர் சந்திப்பில் பச்சைமீனை சாப்பிட்ட விவகாரம் குறித்த செய்திகளும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்து!!

குஷ்பு சென்ற கார்..

நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மருவத்தூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோதியுள்ளது.

குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் குஷ்பு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சேதமடைந்த காரின் புகைப்படத்துடன் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லொறி நான் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும்.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகப்பெருமான் எங்களை காப்பாற்றி விட்டார். என் கணவர் அவர் மீது முருகப்பெருமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பார்த்துவிட்டோம என குஷ்பு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த மற்றுமொரு ஆபத்தான நோய்!!

பிபில – மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட மொனராகலை பிரதேச மலேரியா அதிகாரி வைத்தியர் கருணாசேன,

பிபில பிரதேசத்தில் குளம் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மலேரியாா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இதற்கு முன்னர் உகண்டாவில் பணியாற்றி மீண்டும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இலங்கை வந்தவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர்.

இதன் போது ஏற்பட்ட நோய் அறிகுறிகளின் பின்னரான பரிசோதனையில் மலேரியா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் மலேரியா நுளம்புகளினால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரவலாக தெரிவு செய்யப்படும் பொது மக்களிடம் இரத்த மாதிரி பெற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அங்கு மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், நுளம்புகள் ஊடாக நோய் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்தியர் கருணாசேகர தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!!

நிலநடுக்கம்..

கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 9.28 அளவில் இந்த நில அதிர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தப் பகுதில் பல தடவைகள் நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. இதனையடுத்து பாரிய அளவில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மரணம்!!

தனிமைப்படுத்தப்பட்ட பெண்..

வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி க.ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா – மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் தாயாருடன் வசித்து வந்த நிலையில் தாயார் இன்றைய தினம் உடல் நலக்குறைவால் மரணித்துள்ளார்.

மரண விசாரணையின் போது குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் மரணித்தமைக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது இரு பிள்ளைகளுக்கும், மரணித்தவரின் பேரனுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

-தமிழ்வின்-

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றுக்கு பலி!!

கொரோனா..

இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

உயர் குருதியழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ந டு வீ தியில் இ ளைஞனுக்கு நே ர்ந்த வி பரீதம்!!

மதுரையில்..

மதுரையில் மு ன் ப கை கா ரணமாக இ ளைஞர் ஒ ருவர் ம ர் ம கு ம் ப லா ல் வெ.ட்.டி.க் கொ.லை செ ய் ய ப் ப ட் ட ச ம் ப வ ம் ந டந்துள்ளது. மதுரை கீரைத்துறை ப கு தி யை சே ர்ந்த திமுக பி ரமுகர் வி.கே.குருசாமி ம ற்றும் அதிமுகவை சே ர்ந்த மு ன்னாள் ம ண்டல த லைவர் ம றைந்த ராஜபாண்டி இ ருவருக்கும் ப தினைந்து ஆ ண்டுக ளுக்கு மு ன்பு அ ரசியல் ப கை இ ருந்து ள்ளது.

இ ந்த ப கை இ ரு கு ம் ப லு க் கா ன ப கை யா க மா றி ஒ ருவரை ஒ ருவர் ப ழி தீ ர் க் க த் தொ டங்கியு ள்ளனர், இ ந்த இ ரு கு ம்பல்க ளால் இ துவரை யிலும் சுமார் 15 பே ர் கொ.லை செ ய்யப்பட்டு ள்ளனர்.

கொ.லை யி ல் ச ம்பந்தப ட்டவர்கள் கை து செ ய்யப்ப ட்டாலும் அ டுத்த டுத்த அ வர்களது ந ண்பர்கள் கொ.லை க ளி ல் ஈ டுபடுகி ன்றனர். க டந்த நா டாளுமன்ற தே ர்தலின் போ து குருசாமியின் உ றவினர் எம்.எஸ்.பாண்டி எ ன்பவரை ராஜபாண்டியின் உ றவினர்கள் வெ.ட்.டி கொ.லை செ ய் த ன ர். இ தற்கு ப ழி வா ங் க குருசாமி த ரப்பு நே ர ம் பா ர்த்து ள்ளது.

க டந்த ஞா யிறன்று ராஜபாண்டி த ரப்பை சே ர்ந்த மணிகண்டன், முனியசாமி ஆ கிய இ ருவரையும் தீ ர் த் து க ட் ட மு டிவு செ ய்துள்ளனர் குருசாமி த ரப்பு. இ வர்கள் கீழவெளி வீ தி ப கு தி யி ல் மா லை 5.30 ம ணிய ளவில் ந டந்து செ ன்று கொ ண்டிருந்த போ து, கா ரி ல் வ ந் த ம ர் ம ந ப ர் க ள் மணிகண்டன், முனியசாமியை வெ.ட்.ட வ ந் து ள் ள ன ர்.

சி று கா ய ங் க ளு ட ன் இ வ ர் க ள் த ப் பி த் து வி ட, இ வர்க ளுடன் வ ந்த அ ப்பாவி இ ளைஞரான முருகானந்தத்தை கு றிவைத்து ள்ளனர். அ வ ரை ச ர மா ரி யா க வெ.ட்.டி.ய.து ம ட் டு ம ல் லா ம ல், த லை யை த னி யா க எ டு த் து வீ சி செ ன் று ள் ள ன ர்.

அ ப் ப கு தி ம க்கள் கூ ட்டம் அ தி க ம் நி றைந்த இ டம் எ ன்பதால், இ தை பா ர்த்த ப லரும் அ ல றி ய டி த் து ஓ டி யு ள் ள ன ர். த கவலறிந்து வி ரைந்து வ ந்த போ லீசார், சி சி டி வி கா ட்சிகளை ஆ ராய்ந்ததில் கு ற் ற வா ளி க ளை க ண்டறி ந்தனர்.

இ தனைய டுத்து அ வர்கள் மீ து வ ழக்கு ப தி வு செ ய் த போ லீசார் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் : வாழ்வையே மாற்றிய ஆச்சரிய கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவில்..

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை அறிவதற்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றுக்குள் கர்ப்பப்பை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மருத்துவர்கள்.

அமெரிக்காவில் வாழும் Mikey Chanel (18) ஆணாக பிறந்தவர், ஆணாகவே வளர்க்கப்பட்டும் இருக்கிறார். வளரும்போது, ஒருவேளை தான் ஒரு திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது Mikey மனதில் வந்து போயிருக்கிறது.

இந்நிலையில்,சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார் Mikey. Mikeyக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் கருப்பை, கர்ப்பப்பை என பெண்ணுக்கான அனைத்து இனப்பெருக்க உறுப்புக்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

Mikeyயிடம் இந்த விடயத்தைக் கூற, மருத்துவர்கள் தன்னிடம் விளையாடுவதாக எண்ணியுள்ளார் அவர். ஆனால் ஸ்கேனைக் காட்டியபிறகு அது உண்மைதான் என்பதை நம்பியிருக்கிறார் அவர். அடுத்து நடந்ததுதான் முக்கிய திருப்பம்.

மருத்துவர்கள் Mikeyயிடம் அந்த பெண் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், வித்தியாசமான முடிவெடுத்தார் Mikey.

தான் சிறுவயதிலிருந்தே ஆணாக உணரவில்லை என்பதை நன்கறிந்த Mikeyக்கு எப்போதுமே குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம்.

அதுவும் தனக்கே குழந்தை பெற்றுக்கொள்ள இயலும் என்பதால், இனி பெண்ணாகவே வாழ்வது என முடிவு செய்த Mikey, செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

இருந்தாலும், அவருக்கு பெண்ணுறுப்பு இல்லை என்பதால், அவருக்கு சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறக்கும். தன்னை அவள் என்றே அழைக்கும் Mikey, இப்போதுதான் தான் ஒரு முழு பெண்ணாக உணர்வதாக தெரிவிக்கிறார்.

அவள் என்னை ஏமாற்றினாள்.. இளைஞன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

பிரணய்..

இந்தியாவை சேர்ந்த இளைஞன் கனடாவில் வசித்து வந்த நிலையில் காதலியுடன் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக உ யி ரை மா ய்த்த்துக் கொ ண்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரணய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அகிலா என்ற பெண்ணுடன் நட்பான பிரணய் பின்னர் அவருடன் காதலில் விழுந்துள்ளார்.

இருவரும் லிவிங் டு கெதராக இருந்த நிலையில் ஆகஸ்டில் இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், காதலர்களுக்குள் பி ரச்சினை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.

பிரணியின் மு ரட்டுத்த னமான நடத்தையால் தான் இருவருக்கும் பி ரச்சினை ஏற்பட்டதாக தெலங்கானா பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் பிரணய் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உ யி ரை மா ய்த்துக் கொண்டுள்ளார். இந்த தகவல் நேற்று அவர் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.

வி பரீத முடிவிற்கு முன்னர் பிரணய் எழுதியிருந்த கடிதத்தில், ஹெச் 1 விசா வந்த பின்னர் அகிலா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். அவள் என்னை ஏமாற்றி தனது முன்னாள் காதலனுடன் பேசினாள்.

தங்களின் உறவின் முறிவுக்கு அகிலாவின் பெற்றோர் தான் காரணம் எனவும் அவர்கள் தன்னை து ன்புறு த்தியதா கவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தேன், நான் எந்த தவறும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் பிரணய் ச டலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூ க்கில் தொ ங்கிய நிலையில் யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு!!

சிதம்பரநாதன் இளங்குன்றன்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்ப ட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று பிற்பகல் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் ச ந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் க தவை உ டைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மா ணவன் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில ச டலமாகக் கா ணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 வயது இளம் பெண் செய்த மோசமான செயல் : மிரண்டுபோன போலீஸ்!!

இளம் பெண்..

செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை, சினிமாவில் நடிக்க ஆசையா? என்பது போன்ற விளம்பரங்கள் வந்தால், மிக மிக எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு காரணம் கன்னியாகுமரி பெண்ணின் வாழ்க்கையில் நடந்த இந்த தில் சம்பவம்தான். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மினி.. இவருக்கு 27 வயதாகிறது.. அழகான இளம்பெண்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இவருக்கு தீரா ஆசை இருந்துள்ளது.

அப்படி இல்லையென்றால், செய்தி வாசிப்பாளராகவாவது மாறிவிட வேண்டும் என்று விரும்பி உள்ளார். எப்படியோ தன் முகத்தை இந்த உலகமே பார்க்க வேண்டும் என்ற ஆசை, கனவுகளுடன் வாழ்ந்து வந்த பெண்தான் மினி.

ஆட்கள் தேவை ஆட்கள் தேவை இதற்காக பல கம்பெனிகளில் வேலை தேடி வந்தார்.. பல நிறுவனங்களை நேரில் சென்றும் அணுகினார்.. அப்படித்தான், சில வாரத்திற்கு முன்பு OLX என்ற ஆப்பில் “சினிமா வாய்ப்பிற்கு ஆட்கள் தேவை” என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.

பிறகு அதில் இருந்த போன் நம்பருக்கு பேசினார். அப்போது பேசியவர்கள் சினிமா மற்றும் செய்திவாசிப்பு நிறுவனத்தில் ஆட்களை சேர்த்துவிடும் ஏஜென்சி நடத்தி வருவதாகவும், பிரபல செய்தி நிறுவனத்தில் வேலைபார்க்க ஆட்கள் தேர்வு நடைபெறுவதால், விருப்பமிருந்தால், பங்கேற்குமாறு மினியை கூப்பிட்டுள்ளனர்.

தனியார் ஹோட்டல் தனியார் ஹோட்டல் ஆனால், அந்த ஆபீஸ் துரைப்பாக்கத்தில் உள்ளது. அங்கு வர வழி தெரியாது என்று சொல்லவும், ஆபீஸ் அசிஸ்டென்ஸ் தீபக் என்பவரை அனுப்பி கன்னியாகுமரி பெண் மினியை அழைத்து வர வைத்துள்ளனர் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டார் மினி. அப்போதுதான் 2 பேர் அங்கு வந்தனர். ஒருவர் பெயர் பிஸ்ட்ரோ, இன்னொருவர் பெயர் தீபா. தீபா தீபா இருவரும் அந்த ஏஜென்சியின் மேனேஜர்கள் என்று சொல்லி அறிமுகமானார்கள். இன்டர்வியூ அப்போதே நடந்தது.

பிறகு அங்கிருந்த ஒரு கேமிராவை காட்டி மேக்கப், ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து பரவசமான மினியும், மேக்கப் போட தயாரானர்.

அப்போது, தீபா, “மேக்கப் போடும்போது கழுத்தில் தங்க நகை எதுவும் வேணாம்” என்று சொல்லி உள்ளார். பாத்ரூம் பாத்ரூம் உடனே மினி அந்த நகையை கழற்றிவைத்துவிட்டு, முகம் கழுவ பாத்ரூமுக்குள் சென்றார். அப்போது தீபா & கோ, பாத்ரூமிலேயே மினியை வைத்து பூட்டி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, டிவியையும் சத்தமாக வைத்துவிட்டு, அங்கிருந்து த ப்பிவிட்டது.

இதன்பிறகுதான், மினி அ தி ர்ந்து போனார். அங்கிருந்து அவர் ஓட்டல் ஊழியர்களால் மீ ட்கப்பட்டு, து ரைப்பாக்கம் போலீசில் புகார் தந்தார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான், அவர்கள் 2பேரும் தம்பதி என தெரியவந்தது.

தீபா தம்பதி தீபா தம்பதி பாலவாக்கம் குப்பம் பகுதியில் 2 பேருமே ப துங்கியிருந்தனர். இவர்கள் தேனியை சேர்ந்தவர்களாம். விளம்பர மோசடியில் ஈடுபட்டு பணம், நகை பறிப்பதுதான் இவர்களின் வேலையாம்.

இதே இதில் தீபாதான் கொஞ்சம் ஸ்பெஷல். 8 வருஷத்துக்கு முன்பு இவர் ஒரு போலீஸ். சென்னை திருவான்மியூர், நீலாங்கரை ஸ்டேஷனில் ஊர் காவல்படையில் பணிபுரிந்தவர்.

ஆனால் அந்த காசு பத்தாமல், பணம் சம்பாதிக்கும் இப்படியெல்லாம் விளம்பரம் தந்து இளம்பெண்களை குறிவைத்து வந்துள்ளார்.. தொடர்ந்து தீபா தம்பதியிடம் வி சாரணை நடக்கிறது.

13 வயது சிறுமியை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் திருமணம் செய்த 48 வயது விவசாயி!!

48 வயது விவசாயி..

பிலிப்பைன்சில் 13 வயது சிறுமியை 48 வயது ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்சின் Maguindanao-வில் இருக்கும் Mamasapano-வில், கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி 13 வயது சிறுமி, 48 வயது நபரை திருமணம் செய்யும் படி நிர்பந்திக்கப்படுகிறார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுமியின் பெயர் குறிப்பிடவில்லை.

சிறுமியை திருமணம் செய்த நபரின் பெயர் Abdulrzak Ampatuan எனவும், இது அவருக்கு ஐந்தாவது திருமணம் எனவும், திருமணம் செய்த சிறுமி வயதில் குழந்தை இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், Abdulrzak Ampatuan சிறுமியின் 20 வயதில் குழந்தை பெற திட்டமிட்டுள்ளார். ஒரு குழந்தையை நாம் திருமணம் செய்கிறோமே என்ற எந்த ஒரு வருத்தமும், அவரிடம் காணப்படவில்லை.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில், குறிப்பாக இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட Maguindanao-வில், ஒரு மைனர் பெண் மாதவிடாய் ஆன போதும், குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

குழந்தைத் திருமணங்கள் சிறுமிகளின் உடல்நலம், கல்வி மற்றும் வாய்ப்புக்கான உரிமைகளை மீறுவதாக லண்டனைச் சேர்ந்த பிரச்சாரக் குழு பெண்கள் கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் மோசமாக மாறிய நடிகர் தவசி : அதிர்ச்சியில் திரையுலகம்!!

நடிகர் தவசி..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி.

இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் முற்றிலும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.

மேலும் சிகிச்சைக்காகவும் உதவியை நாடியுள்ளார் நடிகர் தவசி. இந்த நிலையில் பல்வேறு நடிகர்கள் இவருக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : பிரதமர் மஹிந்த அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்காக வங்கிகள் மூலம் வழங்கப்படும் வீட்டுக் கடன் மற்றும் முற்பண நிதியின் கீழ் வழங்கப்படும் வீட்டு சொத்து கடனிற்கு 7 வீத வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.