42 வயது பெண்ணால் 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த இளைஞனை 42 வயது பெண் க த் தி யா ல் வெ ட் டி ய ச ம்பவம் பெரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப். 24 வயதான இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் அருகே பிரமிளா என்ற 42 வயது பெண் வசித்து வருகிறார்.

பிரமிளாவின் கணவர் ராஜேஷ் 6 ஆண்டுகள் முன்பு உ யிரிழந்துவி ட்டார். இதையடுத்து தற்போது அவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு, பிரதீப் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.

இது குறித்த தகவல் பிரதீப்பின் வீட்டாருக்கு தெரியவர, உடனே அவர்கள் மகனுக்கு வேறு ஒரு இடத்தில் அவசர அவசரமாக வேறு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூற, இருவருக்கும் அப்போதே பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இருவரும் சமரசம் ஆகியுள்ளனர். அதன் பின் இருவரும் தீபாவளியை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

இதற்கிடையில் பிரதீப்பிற்கு மீண்டும், வீட்டில் பெண் பார்க்க ஆரம்பிக்க, ஆ த் தி ர ம் அடைந்த பிரமிளா, என்னை விட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.

இப்பவே எனக்கு தாலி கட்டு, இப்படியே இந்த வீட்டிலேயே ஒன்றாக வாழ வேண்டும் என்று வ ற்புறுத்தியு ள்ளனர். இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவிக்க, ஆ த் தி ர ம் அடைந்த பிரமிளா வீட்டின் கிச்சனில் இருந்த க த் தி யை எ டுத்து, த லையிலும், மா ர்பிலும் ச ர மா ரி யா க வெ ட் ட, பிரதீப் அந்த இடத்திலே சு ருண்டு வி ழுந்தார்.

அவரின் ச த்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓ டி வ ந்து அவரை மீ ட் டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதீப்பின் பெற்றோர் பிரமிளா மீது காவல்நிலையத்தில் பு கா ர் கொ டுக்க, பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வயிறு பிளந்து… 7 வயது சிறுமியின் கல்லீரலை.. கொடூர கொ லையின் அதிர்ச்சிப் பின்னணி!!

உத்தரபிரதேச மாநிலத்தில்..

சிறுமியின் கல்லீரலை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சி று மி கொ டூ ர மா க கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர்.

கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் து ண் டி க் க ப் ப ட் ட நிலையில் சி று மி யி ன் ச டலம் மீ ட்கப்ப ட்டது. கொ டூ ர கொ லை க் கு முன்னர் சி றுமியை து ஸ் பி ர யோ க த் தி ற் கு இ ரை யா க் க மு யன்றதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. நாட்டை உ லுக்கிய இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரை பொலிசார் கை து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக பிள்ளைகள் இல்லாத தம்பதி ஒன்று, கல்லீரலை உணவாக்கினால் குழந்தை உருவாகும் என்ற மூட நம்பிக்கையால் இந்த கொ டூ ர த் தை அ ரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது.

கல்லீரலுக்காக 2 பேர் கொண்ட ஒரு கு ம்பலுக்கு முன்பணமாக இவர்கள் ஆயிரம் ரூபாய் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லீரல் கிடைத்த பின்னர், அது தொடர்பான சடங்கு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நேரம், குடியிருப்புக்கு அருகே தோழிகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுமி மா யமாகியுள்ளார். ஆனால் ஞாயிறன்று பகல் சி று மி யி ன் ச டலத்தை கிராம மக்கள் க ண்டெடுத்து ள்ளனர்.

மட்டுமின்றி, அப்போது சி று மி யி ன் வ யி று பி ளந்திருந்ததாகவும், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் கா ணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சி று மி யி ன் அண்டைவீட்டாரான அங்குல் மற்றும் பீரான் ஆகியோரை வி சாரணை செய்த பொலிசார்,

இறுதியில் அவர்கள் கு ற் ற த் தை ஒ ப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அங்குல் என்பவரின் உறவினரே கல்லீரலுக்காக பணம் அளித்ததாகவும் அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சி று மி யை க ட த் தி ச் செ ன் ற இ ருவரும், இ ர வி ல் ம து அ ரு ந் தி ய பி ன்னர், சி று மி யி ட ம் அ த்துமீற மு யன்றுள்ளனர். பின்னர் சி று மி யை கொ ன் று க ல்லீரல் உ ள்ளிட்ட உ றுப்புகளை அ ப்புறப்படுத்தி, அந்த தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

1999-ல் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில், உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பேலியகொடயில் இருந்து வீட்டுக்கு சென்ற நபர் திடீரென விழுந்து மரணம்!!

மரணம்…

பேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் வலயத்திலிருந்து வந்தமையினால் கொரோனா தொற்றியள்ளதா என பரிசோதிப்பதற்காக சடலம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த நபர் சென்ற வந்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முடிவுகள் கிடைத்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை மீனை சாப்பிட்டு காட்டிய முன்னாள் மீன்பிடி ராஜாங்க அமைச்சர்!!

திலிப் வெதாராச்சி..

முன்னாள் மீன்பிடி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி பச்சை மீனை சாப்பிட்டு காட்டி மீன்களை உண்ணுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதே மீனவர்களுக்காக செய்யக் கூடிய பெரிய சேவையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு மீன்களை பையில் எடுத்து வந்த அவர் பையில் இருந்து ஒரு மீனை எடுத்து பச்சையாக சாப்பிட்டு காட்டியுள்ளார். இவை புதிய மீன்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் வெளியிடப்படவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை நடைபெற்று 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அதிகாரிகள், விடைத்தாள் மதிப்பீடு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாண மாணவியர் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் பல்கலைக்கழக கற்கைகளை தொடர்வதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

பிள்ளைகளின் பெறுமதியான காலம் இவ்வாறு வீணாவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிரமமாக பெறுபேறுகளை துரித கதியில் வெளியிட்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்?

பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் திறப்பது குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த 9ஆம் திகதி அரச பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவிருந்தன.

எனினும், நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளுக்கு அமைய எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் தற்போதுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காகக் கல்விமான்கள், மருத்துவத்துறையினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.

 

வவுனியா பாவற்குளம் படிவம்-3 இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் ஐவர் சித்தி!

ஐவர் சித்தி..

நேற்று  வெளியிடப்பட்ட தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை-2020 பெறுபேறுகளின்படி வவுனியா பாவற்குளம் படிவம்-3 இல -9கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் 05 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று செட்டிகுளம் கோட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களில் 05பேர்  வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததுடன் மேலும் ஐவர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இப்பாடசாலையில்  கடந்த வருடமும் நால்வர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர் விபரம்
S.சன்ஜெய் – 173
P.அஸ்வி – 173
I.சாருசா – 166
S.கிசோந்தன் – 161
P.துரிசன். – 160

ஏனைய 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விபரம்
K.தர்சிகா. – 158
P.வட்சாயினி. – 153
I.ரோகித்மிரால் – 144
S.சன்சிகா – 135
C.T.சந்தானநாயகி -122

அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம்
சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

விமானப்படையில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் விமானிகள் : ஜனாதிபதி வாழ்த்து!!

பெண் விமானிகள்..

இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏ.டி.பி.எல் குணரட்ன மற்றும் ஆர்.ரீ. வீரவர்தன ஆகிய பெண்களே இவ்வாறு இலங்கை விமானப்படையில் முதல் பெண் விமானிகளாக தெரிவாகியுள்ளனர்.

குறித்த இரண்டு பெண் விமானிகளினதும் இந்த அடைவு ஏனைய பல பெண்கள் தங்களது கனவுகளை மெய்ப்பித்துக் கொள்வதற்கு உந்து சக்தியாக அமையும் என தாம் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் 3167 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!

வடக்கில்..

வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 158 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளார்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்று அதன் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 16.3 வீத மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டிய போதும், இந்த ஆண்டு 17.4 வீதமான மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.

வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 158 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளார்கள்.

அத்துடன், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் முன்னரை விட அதிகரித்தே காணப்படுகின்றது. இதன் மூலம் மாகாணத்தில் கல்வித் தரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது எனத் தெரிவித்தார்

புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ள மாணவர்களின் விபரம்!!

2020 நவம்பர் 15ஆம் திகதி நேற்று வெளியிடப்பட்ட, ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் மொத்தம் பத்து மாணவர்கள் 200 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பரீட்சைகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு,

எம். எஃப். முகமது அமர் – ஸாஹிரா கல்லூரி, மருதானை

ஏ.எச். சிஹாத் சண்தினு – தர்மபால வித்தியாலயம், அரவ்வல.

தெவுலி யசஸாஸ்;மி திலகரத்ன – ஸ்ரீ சுமனஜோதி ஆரம்பக் கல்லூரி, இங்கிரிய.

சஸ்மிதா குணதிலக – பண்டாரகம மத்திய கல்லூரி, களுத்துறை.

எஸ்.டி. சியதி வித்தும்ஸா – சங்கமித்த மகளிர் வித்யாலயாலயம், காலி

டபிள்யூ.ஏ தாசிந்து அவிஷான் – தங்கல்ல சிறுவர் பள்ளி, கதுருபொத.

பி.கே. டோவிந்து சிரஞ்ச் – ஜனாதிபதி கல்லூரி, எம்பிலிப்பிட்டி.

எச்.எம்.செனுடி தம்சரா – எஹெலியகோடா ஆரம்பக் கல்லூரி

எச்.எம். தேனுஜா மனுமிதா பண்டார – சிரிபுரா ஆரம்பக் கல்லூரி, பொலன்னறுவ.

யெஹாரா யெத்மினி எபா – பெண்கள் உயர்நிலைப் பாடசாலை, கண்டி

 

மரக்கறி உட்பட பல பொருட்களை ஏற்றும் வாகனமாக மாறியுள்ள அதிசொகுதி பேரூந்து : பயணிகள் சிரமம்!!

பயணிகள் சிரமம்…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்தில் பயணிகளின் ஆசனங்களில் மரக்கறி உட்பட பல பொருட்களை ஏற்றுவதினால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கு ஆயிரத்திஇருநூறு ரூபாய் அறவிடப்படுகின்று. இருந்த போதிலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்தினை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பேரூந்தின் கீழ்ப்பகுதியில் பொருட்கள் ஏற்றப்படுகின்ற போதிலும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமையினால் பேரூந்தின் உள்பகுதிகள் , பயணிகள் ஆசனம் போன்றவற்றில் மரக்கறிகள் உட்பட பொருட்கள் ஏற்றப்படுகின்றன.

குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்து என்பதினால் மரக்கறிகளின் துர்நாற்றம் வீசுவதுடன் பயணிகள் பேரூந்தில் ஏறி இறங்குவதற்கும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

பயணிகள் பேரூந்தினை இரட்டை நோக்கு பேரூந்தாக மாற்றிய குறித்த பேரூந்து நடத்துனர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் 6 மாணவர்கள் சித்தி !!

பூவரசு ஆரம்பப் பாடசாலையில்..

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் ஆறு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அதில் நிதுஜா 181, வருணிகா – 174, சங்கீர்த்தன் 169, ஹர்சிகா 169 பிரதவணன் 168, ஸ்டீபன் – 166, ஆகிய புள்ளிகளை பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் பூவரசு ஆரம்ப பாடசாலையில் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவம் -2020!!

வவுனியா  ஸ்ரீ கந்தசாமி கோவிலின்  கந்தசஷ்டி உற்சவம் நேற்று 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை   கருத்தில் கொண்டு ஆலய தர்மகர்த்தா சபையினர், தொண்டர்கள் ஆலயத்தில் தகுந்த பாதுகாப்புடனான சுகாதார நடைமுறைகளை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்து  உற்சவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அறுவர் சித்தி!

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில்  தோற்றிய மாணவர்களில் ஆறு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு (160) மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்தோடு அதிகமான மாணவர்கள் வெட்டுப் புள்ளியை அண்மித்த அடைவு மட்டத்தைப் பெற்றுள்ளனர். அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் மூவர் சித்தி!

ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில்..

வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சையில்  மூன்று  மாணவிகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். சூ.மிதுர்சிகா 179, ம.மதுசுஜா -168, அ.சந்தியா -166 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சித்தி வீதம் 79%.

இம் மாணவர்களை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களான ர.சாதனா, டிக்சன், மற்றும் சக ஆசிரியர்களையும்,விசேட வருகை வளவாளர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

வவுனியாவில் உணவகங்களை வழமை போல செயற்பட அனுமதியுங்கள் : செந்தில்நாதன் மயூரன்!!

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உணகவங்களில் வழமைபோல அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் அமர்ந்திருந்து உணவு உண்பதற்கான நடைமுறை சுகாதாரபிரிவினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், உணவுகளை பொதிசெய்து விற்பனை செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு உணவக உரிமையாளர்களிற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் உணவருந்தச் செல்லும் பொதுமக்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் வவுனியா நகருக்கு வருகைதரும் தூர இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகங்களிற்கும் அப்பால் பொதுமக்கள் அதிகம் சென்றுவரக்கூடிய ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பல்வேறு வியாபார ஸ்தாபனங்களின் செயற்பாடுகள் வவுனியாவில் வழமைபோல இடம்பெற்று வருகின்ற நிலையில் உணவகங்களிற்கு மாத்திரம் எதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பதை சுகாதார தரப்பினரே தெளிவுபடுத்தவேண்டும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி உரிய சுகாதார பாதுகாப்புநடைமுறைகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளியை பேணி உணவகங்களின் செயற்பாட்டை வழமைபோல முன்னெடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது