வவுனியா கொந்தக்காரன்குளம் அ த க பாடசாலையின் 2020ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சுரேஷ்குமார் ஆதேஷ் 176 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையை சேர்ந்த முரளிதரன் அஸ்விகன் என்ற மாணவன் 196 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.
தான் ஒரு விமானியாக வருவதே தன்னுடைய எதிர்கால இலட்சியம் என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமையால் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தன்னுடைய இந்த வெற்றிக்காக உழைத்த பெற்றோர் அதிபர் ஆசிரியர் சக மாணவர்களுக்கு நன்றி. கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியிலும் இணையவழி வகுப்புக்களை மேற்கொண்டு தம்மை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.
மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் கல்வி கற்றால் எந்தவித சவால்களையும் வெல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இதேவேளை குறித்த பாடசாலையில் 46 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ந.அமிர்தநாதன் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. இம் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா வடக்கு வளையத்திற்கு உட்பட்ட,
வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் பாடசாலை அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலில் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் 4 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இரு மாணவர்கள் சித்தியடைந்ததுள்ளனர்.
ஏனைய இருவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஈ.தனுஜா- 173, க.மதுமிகா- 164, சி.கிந்துசன் – 149, ச.சஞ்சிவன்- 98 ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.
வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (16.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து வருகை தந்த நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக கடந்த வியாழக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
குறித்த பெண்ணிற்கு கொரோனா நோய் அறிகுறி தென்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படடு சிகிச்சை வழங்கப்பட்டதுடன், இன்று (16.11) பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படடுள்ளது. இதனையடுத்து குறித்த நோயாளரை கொரோனோ தடுப்பு வைத்தியசலைக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் சித்தி வீதம் 98 வீதமானது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 185 மாணவர்களில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் 150 புள்ளிகளுக்கு மேல் 90 மாணவர்களும் (49 %), 100 – 149 புள்ளிகளுக்கு இடையில் 82 மாணவர்களும் (44 %) , 70 – 99 புள்ளிகளுக்கு இடையில் 10 மாணவர்களும் (5.5 %) , 70 புள்ளிகளுக்கு கீழ் 3 மாணவர்களும் (1.5 %) பெறுபேற்றினை பெற்றுள்ளனர். குறித்த பாடசாலையில் அதி கூடிய புள்ளியாக 190 புள்ளிகளை ஓர் மாணவர் பெற்றுள்ளார்.
கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது. இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
இந்த யுவதிக்கு வாகனம் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லை என தெரியவந்துள்ளது.விபத்து ஏற்பட்ட உடன் வாகனத்தின் இலக்க தகடு அகற்றப்பட்டுள்ளது.
முகக்கவசத்தை கூட அணியாது பொலிஸ் அத்தியட்சகரின் மகள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யுவதியின் சகோதரர் கடந்த ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியதன் காரணமாக பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொ ல்லப்பட்டர் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி ருமணமான 2 மா தத்தில் பு து ப் பெ ண் உ யி ரை மா ய் த் து க் கொ ண் ட ச ம்பவத்தின் அ தி ர் ச் சி ய ளி க் கு ம் பி ன்னணி வெ ளியாகியு ள்ளது. சிவகங்கையை சேர் ந்தவர் கவுசல்யா (19). இ வருக்கும் பாக்யராஜ் (32) எ ன்பவரு க்கும் 2 மா தங்க ளுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது.
செ ப்டம்பர் 30 ஆ ம் தி க தி க ணவன் வெ ளியூர் செ ன்றிருந்த நி லையில், கௌசல்யா ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டா ர். கௌசல்யாவின் கை கா ல் க ளி ல் கா ய ங் க ள் இ ரு ந் த ன. வீ ட்டின் சு வர்களில் ர த் த க் க றை க ள் கா ணப்ப ட்டன.
கௌசல்யாவின் ம ர ண த் தி ல் ப ல்வேறு ச ந்தேக ங்கள் இ ருப்பதாக உ றவின ர்கள் கு ற் ற ம் சா ட் டி ன ர். இ ந்த வ ழக்கில் க டந்த ஒ ன்றரை மா த ம் ந டந்த வி சாரணையின் இ றுதியாக, கெளசல்யாவின் க ணவன் பாக்கியராஜும் அ வரது அ ண்ணி ஜோதியும் கை தாகியு ள்ளனர்.
பாக்கியராஜின் அ ண்ணன் குமார் வெ ளிநாட்டில் வே லை செ ய்து வ ருகிறார். அ தனால் அ வரது ம னைவி ஜோதி, த ன து கு ழந்தைக ளுடன் க ணவன் வீ ட்டில் வ சித்து வ ருகிறார்.
அ தே வீ ட்டில் தா ன், பாக்கியராஜும் கெளசல்யாவும் த ங்கள் பு துக்குடி த்தனத்தை தொ டர்ந்துள் ளனர். அ ப்போது ஒ ருநா ள், பாக்கியராஜும் அ வரது அ ண்ணி ஜோதியும் த வ றா ன நி லையில் இ ருந்ததைப் பா ர்த்து கெளசல்யா அ தி ர் ச் சி யடை ந்துள்ளார்.
க ண வ னி ட ம் இ து கு றி த் து கே ட் ட போ து, தி ரு ம ண த் தி ற் கு மு ன் அ ண் ணி யு ட ன் உ ற வு இ ரு ந் த தா க வு ம் இ னி அ தை க் கை வி ட மு டி யா து எ ன வு ம் கூ றி யு ள் ளா ர். இ த னா ல் த ம் ப தி இ டை யே அ டி க் க டி த க ரா று ந ட ந் து ள் ள ன.
க ண வ னி ன் த கா த உ ற வா ல் ஏ ற் ப ட் ட ம ன உ ளை ச் ச ல், அ வ ர து வ ர த ட்ச ணை க் கொ டு மை யா ல் ஏ ற் ப ட்ட நெ ரு க் க டி ஆ கி ய வ ற் றை த் தா ங் க மு டி யா த கெ ள ச ல் யா உ யி ரை மா ய் க் கு ம் மு டி வை எ டு த் து ள் ளா ர்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய த ம்பதி தி டீரென்று வீ ட்டில் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரி டையே பெ ரு ம் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.
திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ். 70 வ யதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இ வருக்கு 64 வ யதில் சுமதி என்ற ம னைவி உள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதி நேற்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக ப ட்டாசுகளை வெ டி த் து கொ ண்டாடியு ள்ளனர். வி டிய வி டிய மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொ ண்டாடிவிட்டு வீ ட்டிற்குள் செ ன்றுள்ளனர்.
இ தையடுத்து, இ ன்று கா லை வெ கு நே ர ம் ஆ கியும், அவர்களின் வீ டு தி றக்கப்படாமல் இ ருந்ததால், ச ந்தேகம டைந்த அ வரது ம க ன் பாலாஜி க த வை தி றந்து பா ர்க்க மு யற்சித்து ள்ளார்.
ஆ னால் க தவை தி றக்க மு டியாததால், இ றுதியில் க த வை உ டை த் து செ ன் று பா ர் த் த போ து, மோகன்தாஸ் தூ க் கி ல் தொ ங் கி ய நி லை யி லு ம், அ வ ர து ம னை வி சுமதி ச ட ல மா க வு ம் வி ழு ந் து கி டப்பதை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து ள்ளார்.
இ து கு றித்து உ டனடியாக பொ லிசாருக்கு தெ ரிவிக்கப்பட்டதால், பொ லிசார் வி ரைந்து வ ந்து உ ட லை மீ ட் டு பி ரே த ப ரி சோ த னை க் கு அ னுப்பி வை த்து, வீ ட்டை சோ த னை செ ய்துள்ளனர். அ ப்போது அ ங்கு க டிதம் ஒ ன்று இ ருந்துள்ளது. அ தி ல், த ங்களது இ ந்த மு டிவிற்கு யா ரு ம் கா ரணம் இ ல்லை. எ ங்களுக்கு வா ழவே பி டிக்கவி ல்லை.
எ ங்களுடைய ம க ன், ம ருமகள், பே த்தியை வி ட்டு செ ல்வததற்குதான் க ஷ்டமாக இ ருக்கிறது. அ வர்கள் எ ங்களை கா ப் பா ற் ற நி றைய செ லவு செ ய்தார்கள் எ ன்று கு றிப்பிட்டு ள்ளனர்.
அ த ன் பி ன் ந டத்தப்ப ட்ட மு தற்க ட்ட வி சாரணை யில், சுமதிக்கு பு ற் று நோ ய் இ ருந்துள்ளது. இ தனால் ப ல நா ட்களாகவே சுமதி க டு ம் அ வ தி க் கு ள் ளா கி யு ள் ளா ர். அ வ ர் ப டு ம் வே த னை யை ச கிக்க மு டியாமல், மோகன்தாஸ் உ யி ரை மா ய் த் து க் கொ ள்ள மு டி வு செ ய்துள் ளார் எ ன தெ ரியவந்து ள்ளது.
வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில் வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
தமீம் அப்ரான் அஹமட் (170 புள்ளிகள்), அமீன் அர்ஹப் (169 புள்ளிகள்), சரூக் பாத்திமா சஜா (169 புள்ளிகள்), அமீன் அஸ்மா (162 புள்ளிகள்) ஆகிய நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் குறித்த பாடசாலையில் 35 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் அடுத்த வருடத்திற்கான விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டியொன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பாடசாலை செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதனால் அடுத்த வருடத்திற்கான விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சனி, ஞாயிறு தினங்கள் உள்ளடங்கலாக ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.
அதன் பின்னர் கல்வி பொது தாரதர சாதரண பரீட்சைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் கட்டமாக அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரையில் சனி, ஞாயிறு தினங்கள் அடங்கலாக பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.
இதனையடுத்து இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி வரையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாக பாடசாலை செயற்பாடுகள் இடம்பெறும்.
இதேவேளை,மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை பாடசாலை செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர்ந்த, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை முதலாம் கட்டமாக ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாக இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 09 ஆம் வரை சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாக இடம்பெறும். இரண்டாம் தவணை மே மாதம் 17 ஆம் திகதி ஒகஸ்ட் 25 ஆம் திகதி வரை வாரத்தில் ஏழு நாட்களும் நடைபெறும்.
அதன்பின்னர் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகள் விடுமுறை வழங்கப்பட்டு, பின்னர் ஏனைய பாடசாலைகளை போன்று மூன்றாம் தவணை செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார்.
மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அவரது உடலை, தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில், பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி, அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்த தகவல் தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டு லொஸ்லியாவின் குடும்பம் வாழ்ந்து வந்தது. யுத்த சூழ்நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி லொஸ்லியாவின் குடும்பம் பின்னரான காலத்தில் இடம்பெயர்ந்தனர்.
மிகவும் வறுமை நிலைமைக்கு மத்தியில் வாழ்ந்த மரியநேசன், குடும்பத்தின் கஷ்ட சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன், 2009ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புக்களை தேடி அவர் கனடா சென்றார்.
அப்போது லொஸ்லியா தனது இரண்டு சகோதரிகளுடனும், தாயின் அரவணைப்பிலும் இலங்கையிலேயே வாழ்ந்தார். லொஸ்லியாவின் தந்தை தனது உழைப்பில் குடும்பத்தை சிறந்ததொரு இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பல வருடங்களின் பின்னர் தனது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போதே அவருக்கு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நிகழ்ச்சிக்குள் மரியநேசன் வருகை தந்து, லொஸ்லியாவை அவேசமாக திட்டிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவமாக காணப்படுகிறது.
அது தொடர்பான காட்சியில், “என்ன சொல்லி வந்த நீ… நான் உன்னை அப்படியா வளர்த்தேன்… கதைக்கக்கூடாது..” என மரியநேசன், லொஸ்லியாவை பார்த்து கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த திரைப்பட இயக்குநர் சேரன், அவரை சமாதானப்படுத்த முயற்சித்த காட்சிகள் இன்றும் நினைவிலிருந்து நீங்காதுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த சில நிமிடங்கள் மாத்திரமே, லொஸ்லியா, தனது தந்தை மரியநேசனை பார்த்துள்ளதாக அவரது நண்பர்கள் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சென்னையில் தற்போது வாழ்ந்து வரும் லொஸ்லியா, இலங்கைக்கு வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
கொவிட் தொற்று இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் சூழலில், இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதியை கோரி லொஸ்லியா விண்ணப்பித்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து தோற்றிய 160 மாணவர்களில் 62 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அதில் மயூரன் கிரிஷிகன் என்ற மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 16 மணித்தியாலங்கள் கல்வி நடவடிக்கைகள் ஒளிபரப்பும் வகையில் ஊடகங்ளின் ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சி சேவையான Channel eyeஐ யை பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தை காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை வாரத்தின் 7 நாட்கள் முழுவதும் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி இயக்குனர் ரஞ்சித் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 4 மணி முதல் காலை 6 மணி வரை உயர்தர மாணவர்களுக்காகவும், அதன் பின்னர் ஏனைய வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை சிங்கள மொழியில் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படுகின்றது. இரண்டு வாரங்கள் முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த சேவையின் 11வது நாள் ஆங்கில மொழியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிகாக மேல் மாகாணத்தில் பிரதான பாடசாலை அதிபரின் உதவியுடன் 200 ஆசிரியர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்காக யாழ் மாவட்டத்தின் பிரதான பாடசாலைகளின் ஆசிரியர்களின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை 1377 என்ற விசேட இலக்கம் அல்லது 011-7601702 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பது என நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தடை காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என அமைச்சு கூறியுள்ளது.
மேலும் நாட்டில் தேவையான அளவுக்கு வாகனங்கள் இருப்பதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைவான வாகனங்களே கையிருப்பில் இருப்பதால், புதிய மற்றும் பழைய வாகனங்களின் விலைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் உரிய தீர்மானம் எடுக்கவில்லை என கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தொலைதூர கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உபாலி சேதர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான கலந்துரையாடல் சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இந்த வாரம் பெற்றுக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் தவணை ஆரம்பத்தின் போது ஆரம்ப பாடசாலை மாணவர்களை முதலில் அழைப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முழுமையாக இன்றி ஆரம்ப பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக பேராசிரியர் உபாலி சேதர மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
7ஆவது வருடமாக பாடசாலையின் சாதனைப் பயணம் தொடர கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் எனவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.