பலத்த மழையால் ஏற்படக்கூடிய இயற்கை ஆபத்துகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பலத்த மழை..

இலங்கையில் பெய்யும் பலத்த மழைகாரணமாக இன்று காலை முதல் எதிர்வரும் 24 மணிநேரத்தில் இயற்கை ஆபத்துகள் பல ஏற்படக்கூடுமென ஆரம்ப எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த அளவிலான வளிமண்டல தாழமுக்கம் காரணமாக நிலவும் மழையுடனான நிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவாவில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதன் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான அளவில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

198 புள்ளிகளை பெற்றுள்ள மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி!!

சிறிசங்கர் பவினயா..

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளை பெற்றுள்ளார்.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே 198 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் அப்பாடசாலையில் 74 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தி அடைவு மட்டம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வவுனியா பாவற்குளம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!!

பாவற்குளம் மகா வித்தியாலயத்தில்..

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலய நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சி.அட்சயா 182, த.வர்சினி 175, வி.சோபிகன் 173, த.கொன்சிகா 165 ஆகிய புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களை தெரித்துள்ளனர். இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா பாவற்குளம் படிவம் 3 பாடசாலையில் 5 மாணவர்கள் சாதனை!!

5 மாணவர்கள் சாதனை..

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள பாவற்குளம் படிவம் 3 இலக்கம்-9 கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சிவசக்தி சஞ்யய் 173, பிரதீஷ்வரன் அஷ்வி 173, இந்திரகுமார் சாருஷா 166, சிவதாசன் கிசோந்தன் 161, புஷ்பராசா துரிசன் 160 ஆகிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன்,

வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் தீலிபன் கவிசாளினி 171 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியாவில் முதலிடம் பெற்ற அஸ்வின்யா : அம்மா அப்பாவைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே இலக்கு!!

அஸ்வின்யா..

எனது தாய் தந்தையரைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே எனது இலக்கு என வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா தெரிவித்துள்ளார்.

தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்தில் 196 புள்ளிகளைப் பெற்று இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா முதலிடம் பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து அம் மாணவி கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலம் தெரிவிக்கையில், நான் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற பெருமை என்னை வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், எனது பெற்றோர், அம்மம்மா மற்றும் என்னை வழிகாட்டிய ஏனைய ஆசிரியர்களையே சாரும்.

கொரோனா விடுமுறைக் காலத்திலும் கடந்த கால வினாக்கள் மற்றும் பயிற்சிகளை நிறையவே செய்தேன். அந்த முயற்சிக்கு கிடைத்தே வெற்றியே இது. இதேபோல் மாணவர்கள் கடுமையாக பயிற்சிகளைச் செய்து முயற்சி செய்தால் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.

எனது தாய், தந்தையர் வைத்தியர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றுகின்றனர். அவர்களைப் போல் வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என அந்த மாணவி மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று முதலிடம்!!

அஸ்வின்யா ஜெயந்தன்..

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில்,

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தன் தம்பதியினரின் மகளான இவர் 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடந்த பரீட்சையில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அஸ்வின்யாவிற்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

23இல் பாடசாலை மீள ஆரம்பமா? உயர்மட்டப் பேச்சுகள் நடக்கின்றன : கல்வி அமைச்சு தெரிவிப்பு!!

23இல் பாடசாலை மீள ஆரம்பமா?

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கல்வி அமைச்சு மட்டத்தில் உயர்மட்டப் பேச்சுகள் நடக்கின்றன.

அதேவேளை, மாகாணக் கல்வி அமைச்சுகள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடனும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு பேச்சுகளை நடத்தி வருகின்றது.

சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக அமுல்படுத்தி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும், கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைவடையாமல் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குறித்த திகதியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா என்பது தொடர்பில் பேச்சுகள் நடக்கின்றன.

இந்தத் தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உறுதிப்படுத்தினார். இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறினார்.

-தமிழ்வின்-

பல வருடங்களின் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்!!

பரீட்சையில் சாதனை..

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு வெளியாகிய புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியாகிய தகவலுக்கமைய 7 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் நீண்டகாலமாக எந்தவொரு மாணவரும் 200 புள்ளிகளை பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடந்த பரீட்சையில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா வடக்கில் முதலிடம்!!

ஜனுஸ்கா..

2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா அகில இலங்கை ரீதியில் இரண்டாவது நிலையைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் இம்முறையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் 232 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். 149 பேர் சித்தியடைந்துள்ளனர். புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றினர். 159 பேர் சித்தியடைந்துள்ளனர். மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவர்கள் 195 புள்ளிகள் பெற்று முன்னிலை அடைந்துள்ளனர்.

 

பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

லொஸ்லியாவின் தந்தை..

லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லொஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லொஸ்லியா. தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லொஸ்லியாவின் தந்தை மரண செய்தி தன்னை உலுக்குவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்த நிலையில், லொஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லொஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது.

எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இலங்கையில் இன்று 704 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 704 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் இணைப்பாளர்கள் எனவும் மத்திய நிலையம் கூறியுள்ளது. இவர்களுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 ஆயிரத்து 495 பேர் நோய் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.

மேலும் 5 ஆயிரத்து 579 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலகம் முழுவதும் 5 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 13 லட்சத்து 20 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று கோடிய 79 லட்சத்து 62 ஆயிரத்து 321 பேர் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளன

ஆடை இல்லாமல் புகைப்படம்.. காதலின் பெயரில் 19 வயது இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொ ள்ளையிட்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட கும்பல் ஒன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மற்றும் 21 வயதான அல்த்தாஃப் ஆகியோரே தற்போது பொலிசாரிடம் சி க்கியவர்கள் என கூறப்படுகிறது.

இடப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரை சேரநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புக்கு அழைத்து வந்து, நி ர் வா ண மா க பு கை ப் ப ட ம் எடுத்துள்ளது இந்த கும்பல்.

பின்னர் மி ர ட் டி, அவரிடம் இருந்த மொபைல்போன் உள்ளிட்ட தங்க நகைகளையும் கொ ள்ளையிட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்து த ப் பி ய இ ளைஞர் நேரடியாக காவல் நிலையம் சென்று பொலிசாரிடம் நடந்தவற்றை பு கா ரா க அளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த வி சாரணையிலேயே ரிஸ்வானா மற்றும் அல்த்தாஃப் ஆகிய இருவரும் சி க் கி ய தா க பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இளைஞரிடம் இருந்து கொ ள்ளையிட்ட பொருட்களை பொலிசார் மீ ட்டுள் ளதுடன், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின!!

பரீட்சை பெறுபேறுகள்..

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய்த் தொற்று அனர்த்தம் காரணமாக இம்முறை பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 வருட காதல் : போனில் வந்த அதிர்ச்சித் தகவல் : இளைஞர் எடுத்த வி பரீத முடிவு!!

சந்தோஷ்..

தான் காதலித்த பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்ததால் மனமுடைந்த இ ளைஞன் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட சோ க சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரியின் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் சந்தோஷ்(வயது 26). கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இவரும், கேரளாவை சேர்ந்த சுவேதா என்ற உறவுக்கார பெண்ணும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

போனிலேயே இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 8ம் தேதி சந்தோஷை தொடர்பு கொண்ட சுவேதா, வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது என சுவேதா கூற, ம னமுடைந்து போனாராம் சந்தோஷ். அன்றிலிருந்தே சோ கமாக இருந்த சந்தோஷ், எ லி ம ருந்தை சா ப்பிட்டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

இவரை மீ ட் டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார். இந்த விடயம் தொடர்பாக காவல் துறையினர் வி சாரணை செய்து வருகின்றனர்.

இலங்கைக்குள் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. இதன்போது கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்,

கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண்,கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண்,கொழும்பு – 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண்,கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண் என மரணங்கள் பதிவாகியுள்ளன.

இரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்ற தாயார் : 25 வயது மகளுக்கு நேர்ந்த வி பரீதம்!!

சஹானா..

இ ந் தி யா வி ல் ஓ டும் இ ர யி லி ல் இ ரு ந் து ஆ ற் றி ல் கு தி த் து இ ள ம் பெ ண் உ யி ரை மா ய் த் து கொ ண் ட ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யை ஏ ற் ப டு த் தி யு ள் ள து. பெ ங் க ளூ ரு வி ல் இ ரு ந் து சி வ மொ க் கா வு க் கு நே ற் று மு ன்தி ன ம் மா லை 5 ம ணி க் கு ஜ ன ச தா ப் தி இ ர யி ல் பு ற ப் ப ட் ட து.

அ ந்த ர யில் நே ற்று மு ன்தி னம் இ ர வு 10 ம ணியளவில் சிவமொக்கா ப ழைய இர யில் நி லையத்தில் இ ருந்து பு திய ர யில் நி லையம் நோ க்கி செ ன்று கொ ண்டிரு ந்தது.

அ ந்த ர யில் துங்கா ஆ ற்றின் பா லத்தில் செ ன்று கொ ண்டிருந் தபோது, தி டீரென ர யிலில் இ ருந்து ஒ ரு இ ளம் பெ ண் ஆ ற்றில் கு தித்துவி ட்டார். இ தனால் அ தி ர் ச் சி அ டைந்த ப யணிகள் உடனடியாக ர யிலை நி றுத்தினர்.

இ ரு ப் பி னு ம் அ ந் த ர யி ல் ட வு ன் ர யி ல் நி லை ய த் தி ற் கு வ ந் து தா ன் நி ன் ற து. பி ன் ன ர் அ ந் த இ ள ம் பெ ண் ணி ன் தா ய் ர யி ல் வே பொ லி சா ரி ட ம் மு றை யி ட் டா ர்.

அ வ ர் க ள் ஆ ற் றி ல் அ ந் த பெ ண் ணை நே ற் று மா லை 6 ம ணி வ ரை தொ ட ர் ந் து தே டி ன ர். ஆ னா லு ம் அ ந் த இ ள ம் பெ ண் கி டை க் க வி ல் லை.

இ தற்கிடையே போ லிசார் ந டத்திய மு தற்க ட்ட வி சாரணையில் ஆ ற்றில் கு தி த் த து பெங்களூருவைச் சே ர்ந்த சஹானா (24) எ ன்பது தெ ரியவ ந்தது. சஹனாவின் தா ய் சுஜாதா ஆ வா ர். சஹானா ஆ டிட்டர் தே ர்வுக்கு ப யிற்சி பெ ற்று வ ந்தார்.