பிறந்தநாளில் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலி!!

மராட்டிய மாநிலத்தில்..

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியானதுடன், ஏழு பேர் காயங்களுடன் உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

புனே-பெங்களூர் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சதாரா என்ற பகுதி அருகே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாலத்தின் மீதிருந்து, 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மதுசூதன் கோவிந்தன் நாயர் (42), அவரது மனைவி உஷா மதுசூதன் நாயர் (40), இவர்களின் மகன் ஆதித்யா மதுசூதன் நாயர் (23) ஆகியோருடன், உறவினர்களான சாஜன் நாயர் (35) மற்றும் அவரது மூன்று வயது மகன் ஆரவ் ஆகியோரும் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுடன், வாகன சாரதி உட்பட 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். மதுசூதனன் நாயரின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் உல்லாசப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்து புறப்பட்டுள்ளனர்.

மதுசூதனனின் சகோதரர், கேரளாவில் வசிக்கும் சோமசேகரனுக்கும் சனிக்கிழமையே பிறந்தநாள் என்பதால், சகோதரனை வாழ்த்த அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மதுசூதனன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை பொலிசார் சோமசேகரனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை தெரிவித்த போது மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருந்து கோவா பயணம் மேற்கொண்ட நிலையிலேயே, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

 

தீபாவளியை தொடர்ந்து மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

தீபாவளியை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் 1850 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையுடனான தங்க விலையை ஒப்பிடும் போது,

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் 51ஆயிரத்தை நேற்றைய தினம் கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நீர் மூலங்கள் மூலம் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய ஆபத்து!!

நீர் மூலங்கள்..

கொவிட் – 19 வைரஸ் பரவல் தொடர்பில் பல நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு அமைய வைரஸ் தொற்று மலம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் மூலம் பரவக்கூடும் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேத்திக விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி பாதுகாப்பானதை தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விஞ்ஞானிகள் இந்த விவகாரம் குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

அவர்களை பொறுத்தவரை, குழாய் கிணறுகள் மற்றும் நிலத்தடி மூலங்களிலிருந்து பெறும் நீரை நுகர்வுக்கு முன்னர் 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைப்பது சிறந்தது. கொவிட் – 19 வைரஸ் கழிவுநீர் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஈக்வடோர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

மற்ற நாடுகளைப் போலல்லாமல் சமூக அடிப்படையிலான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத நிலையில், நீர் ஆதாரங்கள் எளிதில் மாசுபடும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது என்று பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

பயணிகள் பேருந்துகள் தொடர்பில் கடுமையான அமுலாகும் சட்டம்!!

கடுமையான அமுலாகும் சட்டம்..

சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றாமல் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அவ்வாறான பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரம் முதல் இந்த நடை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறையை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட 5 பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான அரச விடுமுறை தினங்கள் அறிவிப்பு!!

2021ஆம் ஆண்டிற்கான அரச விடுமுறை தினங்கள் தொடர்பான தகவல்களை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பொங்கல்

ஜனவரி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை போயா தினம்

பெப்வரி மாதம் 04ஆம் திகதி வியாழக்கிழமை சுதந்திர தினம்

பெப்வரி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயா தினம்

மார்ச் மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை மஹா சிவராத்திரி

மார்ச் மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போயா தினம்

ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி

ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிங்கள, தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி புதன்கிழமை சிங்கள, தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினம்

மே மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை மே தினம்

மே மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரமழான் பண்டிகை

மே மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை வெசாக் போயா தினம்

மே மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை வெசாக் போயா தினத்திற்கு மறுநாள்

ஜுன் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை பொசோன் போயா தினம்

ஜுலை மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை ஹஜ் பெருநாள்

ஜுலை மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயா தினம்

ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுகிழமை போயா தினம்

ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நபி நாயகத்தின் பிறந்த தினம்

ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை போயா தினம்

நவம்பர் மாதம் 04ஆம் திகதி வியாழக்கிழமை தீபாவளி

நவம்பர் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை போயா தினம்

டிசம்பர் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை போயா தினம்

டிசம்பர் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நத்தார் தினம்

இவை அடுத்த வருடத்திற்கான அரச மற்றும் வங்கிகளின் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!!

உணவு தட்டுப்பாடு..

அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் வ ன்னி பா ராளும ன்ற உ றுப்பினர் மீ து இ ளை ஞ ர் கு ழு தா க் கு த ல்!!

கற்பகபுரம்..

வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இ ளைஞர் கு ழு தா க் கு த ல் மே ற்கொண் டதுடன் அவரின் வா கனத்தினையும் சே தப்படுத்தியுள்ளனர்.

இன்று (14.11.2020) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இ ளைஞர் கு ழு ஒன்று அவரின் வாகனத்தினை வ ழிமறித்து ள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீ து தா க் கு த ல் மே ற்கொண் டதுடன் அவரின் வா கனத்திற்கும் சே த ம் வி ளைவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பா துகாப்பு உத்தியோகத்தர் வானத்தை நோக்கி து ப் பா க் கி சூ டு ந டத்தியமையி னையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து த ப் பி யோ டி யு ள் ள ன ர்.

அதன் பின்னர் பா துகாப்பினை கருத்தி கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று மு றைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதினால் உடனடியாக வி சாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணொளி உதவியுடன் ச ந்தேகத்தின் பே ரி ல் இ ரு இ ளைஞர்களை கை து செ ய்துள்ளனர்.

கை து செ ய்யப்ப ட்ட இ ளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் த டு த் து வை க்கப்பட்டு ள்ளதுடன் மே லதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் கணவனிற்கு நேர்ந்த கதி : இலங்கை குடும்பம் நிர்க்கதியான நிலையில்!!

இலங்கையில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பம் ஒன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார்.

எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டெம்பர் மாதம் மரணமடைந்தார்.

இந்நிலையில், ராஜ் உடவத்த கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ராஜ் உடவத்த, வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியமையினால்,

நாடு கடத்தப்பட்டு விடுவோமா என்ற அச்சத்தில், மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர, ஏனையோர் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ராஜ் உடவத்தவும் உயிரிழந்தார், இவ்வாறு அவர் உயிரிழந்து 1 மாதத்தின் பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் தஞ்சக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இத்தீர்மானத்திற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தெரிவையும் குடிவரவு அமைச்சு வழங்கியுள்ளது.

கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனக்கு அவுஸ்திரேலிய அரசு கருணைகாட்ட வேண்டுமெனவும்,

தொடர்ந்தும் Kempsey பகுதியிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும் திருமதி உடவத்த கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரரைப் பார்த்து அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள் : தலைகீழாகப் புரண்டு போன நிஜ ஹீரோவின் வாழ்க்கை!!

மத்திய பிரேதசம்..

சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த போலீஸ் அதிகாரி இருவர் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த இருவரும், அவரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது என உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்துள்ளார்கள்.

ஆனாலும் அவரது முகத்தில் ஏதோ ஒரு கம்பீரம் இருப்பதை இரு அதிகாரிகளும் பார்த்துள்ளார்கள். பின்னர் அந்த இடத்தை விட்டு இரு அதிகாரிகளும் செல்ல தயாரான நிலையில், தங்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது.

யார் என பின்னால் திரும்பிப் பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது என யாருக்கு உணவும், உடையும் வாங்கி கொடுத்தார்களோ அந்த பிச்சைக்காரர் தான் இருவரின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார்.

உடனே அவரிடம் சென்ற இரு காவல்துறை அதிகாரிகளும், நீங்கள் யார், எங்கள் இருவரின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டுள்ளார்கள்.

அப்போது முகத்தில் தாடியுடனும்,  அழுக்கான உடையிலும் இருந்த நபர் கூறிய தகவல் இரு காவல்துறை அதிகாரிகளின் மனதைச் சுக்கு நூறாக நொறுங்கிப் போகச் செய்தது.

அவர் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய மனிஷ் மிஸ்ரா என்பதும், அவர் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் காவல்துறையையே ஒரு கலக்கு கலக்கியவர் என்பதும் தெரிய வந்தது. ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் மேலும் அதிர்ச்சி அடைய முக்கிய காரணம் என்னவென்றால்,

அவர்கள் இருவரும் மனிஷ் மிஸ்ராவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள். துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மனிஷ் மிஸ்ரா நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர் என்பதோடு, நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அதோடு நல்ல செல்வச் செழிப்போடு வாழ்ந்த நபர். சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட மனிஷ் மிஸ்ரா இப்படி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் ஏன் அவரை கவனிக்கவில்லை என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.

இதையடுத்து மனிஷ் மிஸ்ராவை சிகிச்சைக்காக, ரத்னேஷ் சிங்கும், விஜய் படோரியாவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனிஷ், சிகிச்சையிலிருந்து தப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

காலம் சில நேரங்களில் பலரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. காசு பணத்தோடு உயரத்திலிருந்தாலும் ஒரு நொடியில் அவர்களது வாழ்க்கை மாறி விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இது.

மனைவியை வேறொரு இளைஞருடன் பேச வைத்த கணவன் : 30 வயது இளைஞனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் பேஸ்புக் காதலியை பார்ப்பதற்கு, அவருக்கே தெரியாமல் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு, பெரும் அ திர்ச்சி காத்திருந்துள்ளது. திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். 30 வயதாகும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

குறிப்பாக பேஸ்புக்கில் ஏதேனும் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால், உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் படி சமீபத்தில் அனுசுயா என்ற பெண்ணிடம் பேஸ்புக்கில் மருதுபாண்டியன் பேசி பழகிவந்துள்ளார்.

அனுசுயாவும் நாட்கள் செல்ல, செல்ல தன்னுடைய போன் நம்பரைக் கொடுத்து, பேசி வந்துள்ளார். அதன் பின் காதல் வலைவீசுவது போன்று பேசியுள்ளார். இது காதல் தான் என்று நம்பிய மருதுபாண்டியன் அவர் கேட்கும் போது எல்லாம் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

ஆனால், அவருக்கு காதலியான அனுசுயாவை எப்படியாவது பார்க்க வேண்டும்? அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவருக்கே தெரியாமல், சம்பவ தினத்தன்று அவருடைய முகவரிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டின் கதவை திறந்த பெண் தான் அனுசுயா, அவருக்கு 40 வயது இருக்கும் என்பதால், இதைக் கண்ட மருதுபாண்டி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனெனில் பேஸ்புக் புரோபைல் புகைப்படத்தில் இருந்த பெண் வேறு, இவர் வேறு என்பதால் கடும் குழப்பத்தில் இருந்துள்ளார். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் அனுசுயா தான், ஆனால் பேஸ்புக்கில் இருந்த புகைப்படம் வேறொரு பெண்ணுடையது, அழகான பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதன் பின் அதை இப்படி அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் அந்த பெண்ணின் கணவரும், தம்பியும் தான், அவர்கள் தான் இப்படி பேசி பணம் பறித்து வந்துள்ளனர். இதையடுத்து கணவன், தம்பி மற்றும் அனுசுயா மூவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அந்த பேஸ்புக் புகைப்படத்தில் இருந்தது, பிரியா என்பவரின் புகைப்படமாம், அவர் தன்னுடைய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு அவமானப்படுத்திவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுதெருவை சேர்ந்தவர் சுகுமாரின் மகள் எனவும் அரசு கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

 

கொரோனா தொடர்பில் இலங்கை மக்கள் மத்தியில் காணப்படும் மூன்று மனநிலைகள்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுதல் மற்றும் அதில் உயிரிழப்பது 0.24 வீதமாக இருந்தாலும் கொரோனா காரணமாக மக்கள் பொதுவான மூன்று மனநிலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக,

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகருமான மஹேஷ் ராஜசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதற்கு அடுத்ததாக எனக்கு என்ன நடக்கும்?. எனக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடக்கும் அவர்கள் இறந்து விடுவார்களா? என்ற இரண்டு பிரதான மனநல பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றனர்.

இந்த அச்சங்களை சரியான திசை நோக்கி சுகாதார முறைகளின்படி கையாண்டால், கொரோனா பரவுவதை குறைக்க முடியும். அத்துடன் “சுய கட்டுப்பாட்டை இழத்தால்” அதாவது எனது உயிர் தொடர்பாக என்னிடம் இருக்கும் கட்டுப்பாடு என்னை விட்டு நீங்கி விடுமா? என்பது மூன்றாவது அச்சம்,

இதற்கு பதிலளிப்பது சிரமமானது எனவும் மருத்துவர் மஹேஷ் ராஜசூரிய குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதார பாதுகாப்பு முறைகளை சரியாக பயன்படுத்துவது முக்கியமானது.

அத்துடன் கொரோனா நோய் தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல்!

தொடர்மாடி குடியிருப்புக்களில்..

கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் சிலர் தொற்றா நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பதினால் நோயாளிகள் தொடர்ந்து அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முவதொர உயன, சிரி-முத்து உயன, சிரி-சந்த செவன, ரன்திய உயன, மெத்-சந்த செவன, மினி-ஜய செவன, ரன்மித் செவன, சத்-ஹிரு செவன, மாளிகாவத்தை ஆகிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழும் குடியிருப்பாளர்களில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, அதிக கொலஸ்ட்ரோல், சிறுநீரக உபாதைகள், புற்றுநோய் முதலான நாட்பட்ட வியாதிகளுடன் வாழ்பவர்கள் கூடுதல் தொற்று அபாயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இத்தகைய நோயாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டும். தாம் நீண்டகாலமாக மருந்து எடுத்து வருவதை தத்தமது வீடமைப்புத் தொகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் ஆகியோருக்கு அறிவிப்பது அவசியம். அத்துடன், பெயர் விபரங்களையும், மருந்து வகைகள் பற்றியும் தகவல் அறிவிப்பது கட்டாயமானது.

காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல் களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், மார்பு வலி முதலான அறிகுறிகள் இருந்தால், சுகாதார அதிகாரியையோ, பொதுச் சுகாதார பரிசோதகரையோ தொடர்பு கொண்டு அறிவிப்பது கட்டாயமானது. தொலைபேசி மூலம் 1999 என்ற இலக்கத்தைத தொடர்பு கொண்டும் உதவியைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 

இலங்கைக்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரின் கவனத்திற்கு!!

இலங்கைக்குள் வருவோர்..

இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையில் இருந்து வெளியேறும் சகல சுற்றுலாப் பயணிகளிடமும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக கட்டணங்களை செலுத்துமாறு கோரும் நபர்களிடம் கவனமாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்களை தவிர இலங்கைக்குள் வருகை தர அல்லது வெளியேற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எவ்விதமாக அனுமதிகளையும் வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மாற்றம் ஏற்படலாம் என கல்வியமைச்சு தகவல்!!

பாடசாலை..

சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களின் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ள என்பதை அறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இணையத்தளம் ஊடாக தகவல் பெறப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபலி பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஜி.சி.ஈ சாதாரண தர பரீட்சை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகளின் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தரம் குறைவான முகக்கவசங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையம் : சுகாதாரப் பிரிவினர் அதிரடி!!

முகக்கவசம்..

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த திடீர் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன், வாகீசன், சப்னீன் ஆகியோர் ஈடுபட்டு வவுனியா நகரிலிலுள்ள வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் போது பஜார் வீதியில் அமைந்துள்ள ஒர் வர்த்தக நிலையில் தரம் குறைவான, பாவனைக் ஒவ்வாத முகக்கவசங்களை விற்பனை செய்தமையினை அவதானித்த சுகாதார பரிசோதர்கள் அவற்றை கைப்பற்றியதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் பெயர் விபரங்களை திரட்டினர்.

மேலும் வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் 3 படிவம்(3 Layer) முகக்கவசங்களை விற்பனை விற்பனை செய்யுமாறு பணிப்புரையும் விடுத்திருந்தனர்.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் அதிரடி சோதனை : எச்சரிக்கையும் விடுப்பு!!

சுகாதாரப் பிரிவினர் சோதனை..

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுகாதார பிரிவினர் வியாபாரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கைகழுவதுக்குரிய அனைத்து வசதிகள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி, வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் சுகாதார நடைமுறை,

வர்த்தக நிலையத்தின் காசாளர் பிரிவு பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பற்றினை ஆராய்ந்திருந்ததுடன் அதனை மீறி செயற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களின் விபரங்களையும் திரட்டினர்.

அத்துடன் வீதியில் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் சேகரித்ததுடன்,

சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் சாரதி – பயணி ஆசனத்திற்கிடையே பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பவற்றினையும் பார்வையிட்டதுடன் அதனை மீறியிருந்த சாரதிகளின் பெயர் விபரங்களையும் திரட்டியிருந்தனர்.

குறிப்பாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றினையும் சுகாதார பிரிவினர் பார்வையிட்டிருந்தனர்.

இவ் திடீர் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன் , வாகீசன் , சப்னீன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.