வவுனியாவில் பொலிசாரின் கட்டுப்பாடுகளுடன் ஆலயங்களில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு வழிபாடுகள்!!

தீபாவளி சிறப்பு வழிபாடுகள்..

உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் வவுனியா மாவட்டத்திலும் இன்று (14.11.2020) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவிட் -19 தொற்று காரணமாக வவுனியாவிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரித்து காணப்படுவதுடன் சில ஆலய வாயில்களையும் பொலிஸார் மூடி குறிப்பிடத்தக்களவான பக்தர்கள் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர்.

இந்து கோவில்களில் விரத நிறைவு பூசைகள் இடம்பெற்று வருவதனால் குறிப்பிடத்தக்க பொதுமக்களை தவிர ஏனையவர்கள் ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலையில் திரும்பிச் சென்றதனையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது.

மேலும் ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய கைசுத்தம் செய்வதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு வருகை தருபவர்களின் பெயர் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் வவுனியாவில் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், கந்தசுவாமி ஆலயம், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் போன்ற பல ஆலங்களில் தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

தனியாக வசித்த 45 வயது பெண்ணுக்கு நேர்ந்த ப யங்கரம்!!

சா ந் தி..

த மி ழ க த் தி ல் 45 வ ய தா ன பெ ண் ணை ம ர் ம ந ப ர் க ள் அ வ ர து வீ ட் டி ல் வை த் து கொ ன் ற ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யை ஏ ற் ப டு த் தி யு ள் ள து.

கடலூரில் உ ள்ள குருக்கத்தான் சே ரி ப குதியை சே ர்ந்தவர் சாந்தி (45). இ வ ர் ஒ ரு வா டகை வீ ட்டில் த னி யா க வ சித்து வ ந்தார். இ வரது ஒ ரே ம க ள் தி ருமணமாகி வெ ளியூரில் வ சிக்கிறார்.

சா ந் தி அ தே ப கு தி யி ல் உ ள் ள த னி யா ர் ம  ரு த் து வ ம னை யில் து ப் பு ர வு ப ணி யா ள ரா க ப ணி யா ற் றி வ ந் து ள் ளா ர். இ ந் நி லை யி ல் கோ ல ம் போ டு வ த ற் கா க கா லை யி ல் தி ன மு ம் வீ ட் டி ல் வெ ளி யே வ ரு ம் அ வ ர் நே ற் று நீ ண் ட நே ர ம் வெ ளி யே வ ர வி ல் லை. ஒ ரு க த வு ம் லே சா க தி ற ந் து கி ட ந் த து.

ச ந் தே க ம டை ந் த எ தி ர் வீ ட்டில் வ சிக்கும் பெ ண் ம ற்றும் அ க்கம்பக் கத்தினர் வீ ட்டில் வ ந்து பா ர்த்தனர். அ ப்போது சாந்தி க ழு த் த று க் க ப் ப ட் டு, வ யி ற் றி ல் க த் தி க் கு த் து கா ய த் து ட ன், அ ரை நி ர் வா ண கோ ல த் தி ல் ர த் த வெ ள் ள த் தி ல் பி ண மா க கி ட ந் து ள் ளா ர்.

ச ம்பவம் கு றித்து த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து உ ட லை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனைக்காக ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர்.

சா ந் தி யி ன் ஆ டை க ள் கி ழி க் க ப் ப ட் டு கி ட ந் த தா ல் து ஸ் பி ர யோ க ம் செ ய் து கொ லை செ ய் ய ப் ப ட் டா ரா எ ன வு ம் ம ற் று ம் கொ லை யா ளி க ள் கு றி த் து ம் வி சா ர ணை ந டை பெ ற் று வ ரு கி ற து.

ஊஞ்சலாட முயற்சித்த சிறுமிக்கு இறுதியில் நேர்ந்த விபரீதம் : யாழில் சம்பவம் : பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி!!

உயிந்தன் சாதுரியா..

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சி க்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சி றுமி உ யிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உ யிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த உயிந்தன் சாதுரியா என்ற ஏழு வயதான யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி இந்த சிறுமி ஊஞ்சலாடுவதற்காக மரத்திலிருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது கயிறு தவறுதலாக சி றுமியின் க ழுத்தில் சி க்கிய நிலையில் அவர் ஏறி நின்ற கதிரையும் சரிந்துள்ளது.  இதனால் சிறுமி நிலை தடுமாறி விழுந்ததில் கயிறு கழுத்தினை இறுக்கியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த தாய், மகள் கயிற்றில் தொ ங்கிக் கொண்டிருப்பதனை கண்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிறுமி உ யிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இ றப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகருக்குள் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது : ஜயருவான் பண்டார!!

கொரோனா பரவல்..

கொரோனா பரவல் கொழும்பு நகர சபை எல்லைக்குள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை மீறி சென்று, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு இன்றிய கொத்தணிகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டிற்குள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் அடிப்படையில் 15 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சரியான முறையில் பரிசோதனைகளை நடத்தினால், இந்த எண்ணிக்கை இதனை அதிகமாக இருக்கக்கூடும். இதுவரை உலகில் பரவிய தொற்று நோய்களால் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்தில் இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் இறக்கவில்லை எனவும் ஜயருவான் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் மேலும் 5 பேர் உயிரிழப்பு : அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண்,

இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் மற்றும் 64 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. மேலும் இலங்கையில் தொடர்ச்சியாக கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றமை.

கல்கிசை வீதியில் விழுந்து மரணித்த வயோதிபர்!!

கல்கிசை..

கல்கிசை பிரதேசத்தின் காலி பிரதான வீதியின் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து ஒருவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கல்கிசை தர்மபாலராம பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அந்த நபரின் மரணம் தொடர்பாக கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் இப்படியான மரண சம்பங்கள் நடந்துள்ளன. இந்த மரணங்களுக்கான சரியான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் பரவி வருவது மற்றும் இந்த வைரஸ் காரணமாக தொடர்ந்தும் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி வீதிகளில் நிகழும் மரணங்கள் தொடர்பில் சாதாரண மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் உடலில் 27 நாட்களாக தங்கியிருந்த கொரோனா வைரஸ்!!

கொரோனா வைரஸ்..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தில் 27 நாட்களின் பின்னரும் வைரஸ் இருந்ததாக அவுஸ்திரேலிய ஆய்வு குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்திக்கா வித்தானகே இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். அதற்கமைய கொரோனா வைரஸ், சடலத்தில் அல்லது அதற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பேராசிரியர் இது தொடர்பில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பலராலும் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இனம், பேதம் மற்றும் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தி, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலம் தொடர்பில் மாற்று தீர்மானங்கள் எடுக்காமல் விஞ்ஞான ரீதியாக கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களின் தகனங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விஞ்ஞான ரீதியாக பதிலளித்தவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலம் புதைப்பதற்கு தகுதியானதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தாண்டவம் : ஒரு வாரத்தில் மாத்திரம் 24 பேர் பலி!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 24 பேர் பலியாகியுள்ளனர். இதன்படி கடந்த 5ஆம் திகதி ஐந்து பேரும், 6ஆம் திகதி ஒருவரும், 7ஆம் திகதி நான்கு பேரும்,

8ஆம் திகதி இரண்டு பேரும், 9ஆம் திகதி இரண்டு பேரும், 10ஆம் திகதி மூன்று பேரும், 11ஆம் திகதி ஐந்து பேரும், இன்று இரண்டு பேரும் என மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் 16 ஆண்களும், 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 12 பேர் (6 ஆண்கள், 6 பெண்கள்) 60 வயதைக்கடந்தவர்கள். இலங்கையில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரைக் காலத்தில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5022 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

 

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை!!

முகநூலில்..

தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பினர் இந்த படங்களை தவறாக பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உண்டு என இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் (ITSSL) தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சிலர் தங்களது படங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

முகநூல் ஊடாக ஐந்து வித்தியாசமான படங்களை வெளியிடும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது புகைப்படங்களை பிரசுரிக்கும் நபர்கள் பிரைவெசி செட்டிங்கில் (privacy settings) நண்பர்களுக்கு மட்டும் என்பதனை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

பப்லிக் ( ‘public’) என்ற அடிப்படையில் இந்த படங்களை பகிர்வதன் மூலம் சைபர் குற்றவாளிகள் இந்த படங்களை பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த படங்களை பயன்படுத்தி வேறும் சமூக ஊடக வலையமைப்புக்களில் புதிய போலியான ப்ரோபைல்கள் (profiles) உருவாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் ட்ரெண்ட் செய்யப்படும் எந்தவொரு சவால் என்றாலும் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் கோரியுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளருடன் வன்னி இராணுவ கட்டளைதளபதி பிரியந்த பெரோரா சந்திப்பு!!

பிரியந்த பெரோரா..

புதிதாக கடமையினை பொறுப்பேற்ற வன்னி பிராந்திய புதிய இராணுவ கட்டளைத்தளபதி பிரியந்த பெரோரா மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று 13.11.2020 காலை மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வன்னியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பாக வன்னி பிராந்திய புதிய இராணுவ கட்டளைத்தளபதி பிரியந்த பெரோராவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,

வன்னியில் உள்ளது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் உள்ளனர். கொரோனா தொற்று தற்போதைய தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்காக கொழும்பு முழுவதிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை!!

தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில்..

ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13.11.2020) காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று இலங்கையில் மிக தீவிரமாக பரவி வரும் நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலிருந்து அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தொற்று பரவிவருகின்றது இந்த நிலையில் வவுனியா மாவட்ட மக்களுக்கு நாம் தெரிவித்து கொள்வது என்னவென்றால்,

சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தற்போது பண்டிகை காலமாக இருக்கின்ற படியால் அதாவது தீபாவளி பண்டிகை அதேபோல்,

கந்தசஷ்டி விரதம் மற்றும் இந்துக்களின் கௌரிக் காப்பு விரதம் என்பன தற்காலத்தில் இடம்பெறவுள்ளமையால் மக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் தங்களுடைய வழிபாடுகளை வீடுகளில் இருந்தவாறு செய்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் இந்த பண்டிகைக்காலத்தில் வழமை போன்று வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பொருட்கொள்வனவு செய்வது போன்ற விடயங்களில் ஈடுபடுவோர் அவற்றை மிக கவனமாக செயற்படுத்த வேண்டும்.

அதிகமாக ஒன்று கூடாது தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் அதாவது குடும்பத்தில் ஓரிருவர் மட்டும் சென்று தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்.

ஆகவே மாவட்டத்தின் சீரான இயக்கத்திற்கும் மக்களுடைய மேலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே இந்த கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த பண்டிகைக்கான பொருள் கொள்வனவு மற்றும் பண்டிகை கொண்டாடுவதை மிக அவதானமாக செய்ய வேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

வவுனியாவில் கொரோனா அச்சத்திலும் தீபாவளிக்கு தயாராகும் மக்கள்!!

வவுனியாவில்..

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நாட்டில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் வவுனியாவில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நகரில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் (14.11.2020) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை புத்தாடை வியாபாரங்கள் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மிகமிகக் குறைந்தளவிலான மக்களே தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையில் வெளிமாவட்ட மக்களும் வவுனியா நகரில் புத்தாடை கொள்வனவிற்கு வருகை தருகின்ற போதிலும் தற்போதைய கோவிட் – 19 சூழ் நிலையில் வவுனியா மாவட்ட மக்கள் மாத்திரமே புத்தாடை கொள்வனவு செய்வதினை காணக்கூடியதாவுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பப் படிவங்களுடன் குவிந்த இளம் தொழில் முயற்சியாளர்கள்!!

பிரதேச செயலகத்தில்…

காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

100000 இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்படிவம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதித்திகதி 15.11.2020 உடன் நிறைவுக்கு வருகின்றது.

இதனையடுத்து இன்றையதினம் (13.11.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் 300க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்படிவத்தினை ஒப்படைப்பதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கோவிட் – 19 மற்றும் மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் செயலக வாயிலில் நின்று இலவச விண்ணப்டிவங்களை விநியோகம் செய்ததுடன் நிரப்பட்ட விண்ணப்படிவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

வாழ்வளித்த கனடாவுக்கு வித்தியாசமாக நன்றியைக் காட்டிய பெண் : மூன்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தது இப்படித்தான்!!

மினு பாட்டியா..

தனக்கு புது வாழ்வளித்த கனடாவுக்காக எதையாவது செய்ய விரும்பிய இந்தியப் பெண் ஒருவர் செய்த செயல், மூன்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.

2010ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்த மினு பாட்டியா, 2015இல் கனேடிய குடிமகளானார்.

தன்னை இரு கரம் நீட்டி வரவேற்று வாழ்வளித்த கனடாவை கௌரவிப்பதற்காக எதையாவது செய்ய முடிவு செய்த கால்கரியில் வாழும் மினு, கனேடிய கொடி ஒன்றை கைகளால் பின்னத் தொடங்கினார்.

ஸ்வெட்டர் பின்னுவது போல் 2016ஆம் ஆண்டு கொடி ஒன்றைப் பின்னத் தொடங்கினார் மினு. கஷ்டப்பட்டு, 18 மாதங்கள் கைவலிக்க உழைத்து அவர் அந்த கொடியை செய்து முடித்தார்.

74 சதுர மீற்றர் பரப்பளவும் 60 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்ட கொடி அது. அந்த கொடி பல கனடா தின நிகழ்வுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பல சாதனைகளை முறியடித்து வருகிறது அந்த கொடி.

லிம்கா சாதனையாளர்கள் புத்தகம், ஆசிய சாதனையாளர்கள் புத்தகம் மற்றும் இந்திய சாதனையாளர்கள் புத்தகம் ஆகிய மூன்று சாதனை புத்தகங்களில் அந்த கொடி இடம்பெற்றுள்ளது.

கருவளையத்தை நீக்க விஷப்பாம்பை முகத்தில் தேய்த பாம்பாட்டி : அதிர்ச்சியில் பயந்து ஓடிய இளைஞர்கள்!!

பாம்பாட்டி..

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் கருவளையத்தை நீக்குவதாக ஆசை வார்த்தை கூறி விஷபாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரேசன் என்ற பாம்பாட்டி ஒருவர் திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் குமரேசன் கருவளையத்தை இருந்த இடம் தெரியமால் நீக்குவதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள மக்களை நம்ப வைத்துள்ளார். இதனை மக்கள் நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்துள்ளனர்.

அப்போது அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதற்கு அவர்களது முகத்தில் தேய்த்தார்.

இதனை பார்த்த பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சில இளைஞர்கள் பயந்தும் ஓடியுள்ளனர்.

அதுமட்டுமின்றி குமரேசன் அந்த பாம்பு சிகிச்சையுடன் நின்று விடாமல் மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த டிப்சும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.

வவுனியா செட்டிகுளத்தில் இறந்த நிலையில் யானையின் உடல் மீட்பு!!

செட்டிகுளத்தில்..

வவுனியா, செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் இன்று (12.11) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில் உள்ள குளத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வயல் வேலைக்கு சென்ற விவசாயிகளே இறந்த யானையின் உடலை கண்டு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

அருகில் இருந்த காட்டில் இருந்து வயல் பிரதேசத்திற்குள் நுழைந்த குறித்த யானை பூச்சித் தாக்கம் காரணமாக இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த யானையின் உடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.