3 ஆண்டுக்கு முன் உ யி ரை வி ட் ட அ ண்ணன் : தன்னுடன் வசித்த அ ண்ணியை கொ லை செ ய் த மை த்துனன் : அ தி ர் ச் சி ச ம்பவம்!!

டெல்லி..

இந்தியாவில் அ ண்ணியை கொ லை செ ய் த கொ ழுந்தன் பொ லிசில் ச ர ண டை ந் த நி லையில் ப ர ப ர ப் பு வா க் கு மூ ல ம் கொ டுத்து ள்ளார்.

டெல்லியை சே ர்ந்தவர் ரோகித். இ வரின் மூ த்த ச கோதரர் க டந்த 3 ஆ ண்டுகளுக்கு மு ன்னர் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார் . இ தையடு த்து த ன து அ ண்ணி ம ற்றும் தா யா ரு ட ன் ரோகித் வ சி த் து வ ந்தார்.

இ ந் த நி லை யி ல் ரோ கி த் அ ண் ணி யை கொ லை செ ய் த து ட ன் கா வ ல் நி லை ய த் தி ற் கு செ ன் று அ வ ரை கொ லை செ ய் து வி ட் ட தா க தெ ரி வி த் து ள் ளா ர்.

இ தை கே ட் டு அ தி ர் ச் சி ய டை ந் த பொ லி சா ர் ரோ கி த் வீ ட் டு க் கு செ ன் று ச ட ல த் தை கை ப் ப ற் றி னா ர் க ள். பி ன் ன ர் அ வ ர் அ ளி த் த வா க் கு மூ ல த் தி ல், எ ன து அ ண் ணி க் கு இ ர ண் டு கு ழ ந் தை க ள் உ ள் ள ன ர்.

நா ன் எ ன் தா யை வி ட் டு பி ரி ந் து இ ரு க் க வே ண் டு ம் எ ன வு ம், அ வ ரு ட ன் ம ட் டு மே இ ரு க் க வே ண் டு ம் எ ன வு ம் அ ண் ணி எ ன் னை வ ற் பு று த் தி வ ந் தா ர். இ து தொ ட ர் பா க எ ங் க ளு க் கு ள் வா க் கு வா த ம் ஏ ற் ப ட் ட து.

இ த னா ல் தா ன் இ வ் வா று செ ய் து வி ட் டே ன் எ ன தெ ரி வி த் து ள் ளா ர்.

ஒரே வீட்டில் பெண் காவலருடன் வாழ்ந்த இளைஞன் : திடீரென அப்பெண்ணால் ஏற்பட்ட அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெண் காவலர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பைனான்சியர் வி ஷ ம் கு டித்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த பைனான்சியர் பரமசிவம் என்பவரின் மகன் பிரபு என்ற 25 வயது இளைஞர் திருச்சியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது, திருச்சி காவல்துறையில் பொலிசாக பணியாற்றிய வைதேகிக்கும் பிரபுவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. பிறகு, திருவாரூர் காவல் நிலையத்துக்கு வைதேகி மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, திருவாரூர் காவலர் குடியிருப்பிலேயே லிவிங் டுகெதராக பிரபுவுடன் வைதேகி இணைந்து வாழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, மன்னார்குடி காவல் நிலையத்தில் வைதேகி பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபு வைதேகியை திருமணம் செய்து கொள்ள அவரின் பெற்றேரிடத்தில் பேசியுள்ளார். வைதேகி குடும்பத்தார் திருமணத்துக்கு மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு பிறகு, வைதேகியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று பிரபுவிடத்தில் வைதேதி கூறியதாக தெரிகிறது.

இதனால் பிரபு அ திர்ச்சியடைந்த போதிலும் வைதேகியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் புரபு புகாரும் அளித்துள்ளார்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன வே தனையடைந்த பிரபு நேற்று வி ஷ ம் கு டி த் து த ற் கொ லை க் கு மு ய ன் றா ர்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, உ யிருக்கு ஆ பத்தான நிலையில் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் இருவர் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு 12ஐ சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவரும், மீகொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மற்றுமொரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது இடிந்து விழுந்த சுவர் : பரிதாபமாக பலியான சிறுவன்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் தற்காலிக வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்தேங்கியுள்ளது. இதன்காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் பலவீனமடைந்து உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது உடைந்து விழுந்துள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் வெள்ளநீர் தேங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசின் காலத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படாமையினாலேயே நிரந்தர வீட்டுக்குள் செல்ல முடியாது போயுள்ளதாகவும், நிரந்தர வீடு அமைப்பதற்கான மிகுதி பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து!!

புகையிரத சேவை ரத்து..

இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளிலேயே பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க விடுமுறை தினங்களான வார இறுதி நாட்களில் இவ்வாறு பயணிகள் புகையிரத சேவைகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ற போதும் எதிர்வரும் 16ஆம் திகதி வழமை போன்று பயணிகள் புகையிரத சேவை நடைபெறும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள்!!

உதவித் திட்டங்கள்..

கொவிட்19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வவுனியா பிரதேச செயலகத்தால் இன்று(12.11.2020) வழங்கி வைக்கப்படது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக நாடாளவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலக புரிவுக்குட்டபட்ட பண்டாரிக்குளம், வேப்பங்குளம், ரகுபாக்கம், சாளம்பைக்குளம், பம்பைமடு உள்ளிட்ட பகுதிகளில் 93 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றது.

முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான
சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் 93 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக மிகுதி 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி!!

செட்டிகுளம் பிரதேச சபை..

சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் 03, ஐக்கிய தேசியக் கட்சி 02, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01, பொதுஜன பெரமுன 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்திருந்தது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று (12.11) நடைபெற்ற நிலையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன ஒன்று சேர்ந்து 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து பாதீட்டை தோல்வி அடையச் செய்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், பாதீட்டுக்கு எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இலங்கைக்குள் இதுவரை 612 பொலிஸார் கொரோனாவால் பாதிப்பு!!

கொரோனா..

பொலிஸ் திணைக்களத்தில் பரவி வரும் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 612 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 விசேட அதிரடிப் படை உறுப்பினர்களும் அடங்குகின்றனர் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 91 பொலிஸாருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும் : டொக்டர் ஹரித அளுத்கே!!

உடலில் வலி..

உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பொறுப்புக்கள் குறித்து டொக்டர் அலுத்கே விளக்கியுள்ளார்.

நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டால் வலிகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் வரையில் காத்திருக்காது, வலி ஏற்படும் போதே வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தங்களது உடல் சாதாரண நிலையில் இருக்கும் போதே ஏதேனும் வலி ஏற்பட்டால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது எனவும் டொக்டர் அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனிமேல் 55 வயதுக்குப்பின் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே முடியாது : யோசனை முன்வைப்பு!!

55 வயதுக்குப்பின்..

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை உகவங்கப்படலாம் என்று அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 19ஆவது அரசமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் குறைந்த வயதெல்லையாக இருந்த 30 வயது, 36ஆக மாற்றப்பட்டது.

இருப்பினும் 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த வயதெல்லையை மீண்டும் 30ஆக மாற்றியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசியலைமப்பில் அதிகூடிய வயதெல்லை என்று குறிப்பிட்டிருக்கவில்லை. இந்தநிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி அரசு கருத்து வெளியிட்டு வருகின்றது.

இதில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் அதிகூடிய வயதெல்லையை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த யோசனைக்கு அரச உயர்பீடமும் இணங்கியுள்ளது என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றாளர்கள் வீட்டில் உயிரிழப்பதற்கான காரணத்தை வெளியிட்ட வைத்தியர்கள்!!

கொரோனா தொற்றாளர்கள்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஆயுள் காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்களின் ஆயுள் காலம் அவ்வாறு குறைய கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 60 வயது கடந்தவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் உயிரிழப்பதற்கு கவனக்குறைவே முக்கிய காரணம் என வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வெளிநாடுகளில் வாழும் 98 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சவுதி அரேபியாவில் 35 இலங்கையர்கள் உயிரிழந்துள்ள நிலையில் குவைத்தில் 21 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும் பிரித்தானியாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா இரண்டு இலங்கையர்களும், பஹ்ரேன், ஜோர்தான், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஆபத்தான கட்டத்தில் கொழும்பு : 26 வீதமான மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம்!!

கொழும்பு..

நேற்று வரையில் கொழும்பு நகர எலலைக்குள் கொரோனா தொற்றுக்குளளான 3217 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளாக கொழும்பு நகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகர எல்லைக்குள் 26 வீதமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சீன துறைமுகத்தில் 52 பேரும், துறைமுக நகரத்தில் 32 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பரவலாக மேற்கொள்ளப்பட்ட PCRபரிசோதனை முடிவுகளில் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. நகர எல்லைக்குள் 6 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகுவதற்கு வாய்ப்புள்ளது.

கொழும்பு நகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் நேற்று 635 கொரோனா நோயாளர்கள் பதிவு : 5 பேர் மரணம்!!

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் நேற்றையதினம் மொத்தமாக 625 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15340 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று இறுதியாக கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் 316 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் தொற்றினால் 45 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி வரையில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு விமானப் பயணிகள்!!

விமானப் பயணிகள்..

வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் துபாய், எதியோப்பியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட விமான பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று (11.11.2020) பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 15 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு வவுனியா, பம்மைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானப்படைத்தளம் மற்றும் பெரியகாடு இராணுவ முகாம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் தனிமைப்படுத்தல் மையத்திற்கு இராணுவத்தால் அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வெளிநாட்டு பயணிகள் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

கொரோனா..

கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹரகம அபேக்சா புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்ததன் பின்னர் மேற்கொண்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு கொவிட-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது.

லியூகேமியா மற்றும் சுவாசப்பையில் ஏற்பட்ட கோளாறு என்பனவே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த மரணம் கொவிட்-19னால் ஏற்பட்ட மரணம் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளது.